Essayer OR - Gratuit
நீத்தாரை வழியனுப்பும் நல்லுள்ளம்
Tamil Murasu
|March 22, 2025
மரணத்துடன் மாந்தரின் வாழ்வு முற்றுப்பெறுகிறது. ஆனால், ஒருவர் மரணம் அடைந்தபிறகுதான் இவரின் பணி தொடங்குகிறது.
-

இறந்தவரின் நினைவுகளை வாழ்நாளெல்லாம் சுமக்கவிருக்கும் குடும்பத்தினருக்கு உறுதியான கடப்பாட்டுடன் நீங்கா நினைவுகளை ஏற்படுத்தித் தருகிறார், நியூ இந்தியன் காஸ்கெட் சர்விசஸ் நிறுவனத்தின் இறுதிச்சடங்கு நடத்துநர் ரா.துர்கா தேவி.
தமது தந்தை க.ராஜேந்திரன் தொடங்கிய இந்நிறுவனத்தில் 17 வயது முதல் பணியாற்றி வருகிறார் திருமதி துர்கா.
“உயிருடன் இருப்பவர்களை மகிழ்வுறச் செய்வதற்கு பல வழிகள் உண்டு. பிறந்தநாள் உள்ளிட்ட வேறு எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அவரவருக்குப் பிடித்தமான செயல்களைச் செய்துகொடுக்க இயலும்.
“ஆனால், இறந்தவர்களை நினைத்து இருப்பவர்கள் துயருறும்போது அவர்களை ஆறுதல் அடையச் செய்வது கடினமான காரியம்.
“அந்தத் தருணத்தில் இறந்தவர்களைக் கண்ணியமாக வழியனுப்பும் வாய்ப்பு மட்டுமே எஞ்சியிருக்கும் என்பதால் அதனைக் கடமையாக முடிப்பது இறுதிச்சடங்கு நடத்துநர்களைச் சேர்ந்தது.
“இத்தகைய பொறுப்பை வேறு எந்தத் துறையும் வழங்காது என்பதால் இத்துறையில் நீடிக்கிறேன்,” என்றார் துர்கா.

பெண்கள் பரவலாகக் காணப்படாத துறையாக இது கருதப்பட்டாலும், இத்துறையில் தொடர்ந்து பணியாற்றி வருவதற்கான காரணங்களுடன் தாம் எதிர்கொள்ளும் சவால்களை துர்கா விவரித்தார்.
“தொடக்கத்தில் இவ்வேலையைச் செய்தபோது பயம் ஏற்பட்டதுண்டு. குறிப்பாக, இறந்தவர்களைக் குளிப்பாட்டுவது, திருப்புவது, உடுத்துவது என்று பலமுறை கலக்கமடைந்திருக்கிறேன்,” என்று கூறிய திருமதி துர்கா, ஒருவர் உயிர் நீத்த அடுத்த நொடியிலிருந்து பணிகள் துவங்குவதால் தாம் சந்திக்கும் முக்கிய சவாலே உணர்வுகள் சார்ந்தது தான் என்றார்.
Cette histoire est tirée de l'édition March 22, 2025 de Tamil Murasu.
Abonnez-vous à Magzter GOLD pour accéder à des milliers d'histoires premium sélectionnées et à plus de 9 000 magazines et journaux.
Déjà abonné ? Se connecter
PLUS D'HISTOIRES DE Tamil Murasu

Tamil Murasu
தீபாவளிக்கு வெளியிடத் தயாராகும் சூர்யாவின் 'கருப்பு'
'ரெட்ரோ' படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்துள்ளார். இப்படம் சூர்யா நடிக்கும் 45வது திரைப்படமாகும்.
1 min
July 26, 2025

Tamil Murasu
துவாஸ் இரண்டாம் இணைப்பைச் சுற்றி நீர் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம்: என்இஏ
விபத்து காரணமாக ஜோகூரில் துவாஸ் இரண்டாம் இணைப்புக்கு அருகே லாரி ஒன்றிலிருந்து ரசாயனம் இருந்த கொள்கலன் கடலுக்குள் கவிழ்ந்தது.
1 min
July 26, 2025

Tamil Murasu
இரண்டாவது நாளாகத் தொடரும் தாய்லாந்து-கம்போடியா சண்டை
கம்போடியாவும் தாய்லாந்தும் நேற்று (ஜூலை 25) மேற் கொண்ட தாக்குதல்களில் பீரங்கிகள் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min
July 26, 2025

Tamil Murasu
ஸ்வேதாவுக்கு அரசாங்கச் சேவை உபகாரச் சம்பளம்
தேசியச் சுவர்ப்பந்து வீராங்கனை ஸ்வேதா சிவகுமார், 18, சிங்கப்பூரை விளையாட்டில் பிரதிநிதிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், நாட்டிற்குச் சேவையாற்றவும் விரும்புகிறார். அவருக்கு அந்த வாய்ப்பளித்துள்ளது, அரசாங்கச் சேவை ஆணையத்தின் (பிஎஸ்சி) உபகாரச் சம்பளம்.
1 min
July 26, 2025
Tamil Murasu
தாய்லாந்து: எல்லைப் பூசலில் பாதிக்கப்பட்டோருக்கு நிதி
தாய்லாந்து-கம் போடிய எல்லையில் மூண்ட பூசலால் பாதிக்கப்பட்ட தனி நபர்களுக்கும் அதிகாரிகளுக்கும் தாய்லாந்து அரசாங்கம் விரிவான உதவித்தொகுப்புத் திட்டத்தை அறிவித்துள்ளது.
1 min
July 26, 2025
Tamil Murasu
வீவக மறுவிற்பனை வீட்டு விலை உயர்வு மெதுவடைகிறது
வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) மறுவிற்பனை வீடுகளின் விலை இந்த ஆண்டு இரண்டாம் காலாண்டில் 0.9 விழுக்காடு அதிகரித்தது. இந்த வளர்ச்சி விகிதம், முதல் காலாண்டில் பதிவான 1.6 விழுக்காட்டைவிடக் குறைவாகும்.
1 min
July 26, 2025

Tamil Murasu
இந்தியா-இங்கிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்
95 விழுக்காடு இந்திய வேளாண் பொருள்களும், 99 விழுக்காடு இந்திய கடல்சார் உணவுப் பொருள்களும் வரியின்றி இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பை இந்தியா - இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வழிவகை செய்கிறது என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
1 min
July 26, 2025

Tamil Murasu
சினிமாவிலிருந்து விலகி ரூ.1,200 கோடி சம்பாதித்த நடிகை
திரை உலக நடிகர், நடிகைகள் தொழில் அதிபர்களாகவும் மாறி வருகிறார்கள்.
1 min
July 26, 2025

Tamil Murasu
புதிய தொண்டூழியர் நிர்வாகப் பிரிவைத் தொடங்கும் தற்காப்பு அமைச்சு
சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகள் ஆகியோரோடு வெளிநாட் டினரையும் நாட்டின் தற்காப்பில் ஈடுபடுத்தும் வகையில் தற்காப்பு அமைச்சு புதிய தொண்டூழியர் நிர்வாகப் பிரிவைத் தொடங்கும் என அறிவித்துள்ளார் தற்காப்பு அமைச்சரும் பொதுச் சேவை களுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான சான் சுன் சிங்.
1 min
July 26, 2025
Tamil Murasu
நேருவுக்குப் பின் நரேந்திர மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, வெள்ளிக்கிழமையையும் (ஜூலை 25) சேர்த்து 4,078 நாள்கள் அப்பதவியை வகித்துள்ளார்.
1 min
July 26, 2025