CATEGORIES
ஆசிரியை வீட்டில் 25 பவுன் நகை, ரூ.1 லட்சம் திருட்டு
ஜெயங்கொண்டம் அருகே ஆசிரியை வீட்டில் கதவின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை ரூ.1 லட்சத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
போலியோ சொட்டு மருந்து முகாம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 1234 போலியோ சொட்டு மருந்து மையங்கள் 4912 சுகாதார நிலையங்கள் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை வட்டார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட பள்ளிகளில் நடைபெறும்.
போலியோ சொட்டு மருந்து முகாம்
சிதம்பரத்தில் அனைத்து ரோட்டரி சங்கங்கள், சிதம்பரம் நகராட்சி மற்றும் தமிழக அரசின் சுகாதார துறை ஆகியவற்றின் சார்பில் சிதம்பரம் நகர்புர சுகாதார மையத்தில் நடைப்பெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமினை சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் துவக்கி வைத்தார்.
நெல்லையில் ஆர்ப்பாட்டம்
நெல்லை சுத்தமல்லி ஏர்வாடியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் எதிரொலியாக எல்லைகள் மூடல்: வாகன வாகன போக்குவரத்து கடும் பாதிப்பு
டெல்லியில் விவசாயிகளின் தொடர் போராட்டம் எதிரொலியாக எல்லைகள் மூடப்பட்டு வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்புகள், கடும் குளிர், காற்று மாசு ஏற்பட்டு காற்றின் தர குறியீடு மிக மோசமடைந்த பிரிவில் உள்ளது மற்றும் விவசாயிகளின் போராட்டம் ஆகியவற்றால் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.
நெல்லையப்பர் கோவிலில் தெப்ப திருவிழா
நெல்லையப்பர் கோவிலில் நடந்த தெப்ப திருவிழா நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
வாகா முதல் கன்னியாகுமரி வரை - பெண்கள் பங்கேற்ற விழிப்புணர்வு கார் பயணம் நிறைவு
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி எல்லையில் தொடங்கிய கார் பயணம் கன்னியாகுமரியில் நேற்று நிறைவடைந்தது 32வது தேசிய சாலை பாதுகாப்பு வார விழா நாடு முழுவதும் நடந்து வருகிறது.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி
தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தின் ஒரு பகுதியாக, எமதர்மன் வேடம் அணிந்து, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொழுநோய் விழிப்புணர்வு
கடலூர் தலைமை அரசு மருத்துவமனையில் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு நடைபெற்றது.
தீயணைப்பு பாதுகாப்பு உபகரணங்களை ஆய்வு செய்த டிஜிபி சைலேந்திரபாபு
தமிழக தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் தீ என்னும் புதிய செயலி கடந்தாண்டு துவக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் கோயிலில் வளைகாப்பு திருவிழா
திருச்சி உறையூர் சாலை ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ குங்குமவல்லி சமேத அருள்மிகு ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ குங்குமவள்ளிக்கு 71 ஆவது ஆண்டு வளையல் காப்பு திருவிழா நடைபெற்றது.
தைப்பூச விழாவில் விமான அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்
திருவண்ணாமலை அடுத்த நெய்வாநத்தம் கிராமத்தில் நடைபெற்ற தைப்பூச விழாவில் செக்கிழுத்தும், முதுகில் அலகி குத்தி முருகருக்கு மாலை அணிவித்தும், கொதிக்கும் எண்ணெய்யில் வடை சுட்டும் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றினர்.
குறுந்தொழில் முனைவோர் சிறப்பு திட்டம் துவக்கம்
சிறப்பு திறனுடையோர் குறுந்தொழில் முனைவோர் சிறப்பு திட்டத்தை கடலூர் சார் ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
6 தொகுதிகளுக்கும் நாடார் வேட்பாளர்கள் நாடார் மக்கள் பேரவை தீர்மானம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு தொகுதிகளுக்கும் நாடார் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும் என்று நாடார் மக்கள் பேரவை சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தியாவில் புதிதாக 11,427 பேருக்கு கொரோனா தொற்று: 118 பேர் உயிரிழப்பு
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த அறிக்கையை இன்று காலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டது. இந்த தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,07,57,610 உயர்ந்துள்ளது.
10 மாதங்களுக்கு பிறகு ராமேசுவரம் கோவிலில் தீர்த்த கிணறுகளை திறக்க அனுமதி
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் கடந்த மார்ச் மாதம் 23ந் தேதி முதல் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. கோவிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளும் மூடப்பட்டன.
அரசு தொட்டில் குழந்தை திட்டத்தில் ஆண் குழந்தை சேர்ப்பு
மாவட்ட சமூக நல அலுவலர் கந்தன் மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
காஷ்மீரில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் திருமலை திருப்பதி கோயில்
கன்னியாகுமரி, ஜன.28காஷ்மீரில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் திருப்பதி கோயில் அமைக்க அம்மாநில அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்று திருமலை திருப்பதி தேவஸ் தான சேர்மன் சுப்பாரெட்டி மற்றும் உறுப் பினர் சேகர்ரெட்டி ஆகியோர் கூறினர்.
சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் நிறைபுத்தரிசி பூஜை
குமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சுசீந்திரம் தாணுமாலயன் சாமி கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் நிறைபுத்தரிசி பூஜை வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.
கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் வருஷாபிஷேக விழா
கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.22 கோடி செலவில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கட்டப்பட்டு உள்ளது.
மனைவி பிரிந்த சோகத்தால் 18 பெண்களை கொலை செய்த கொடூர கொலையாளி கைது
மனைவி பிரிந்த சோகத்தால் 18 பெண்களை கொலை செய்த கொடூர சீரிய கொலைகாரனை ஐதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.
வேதா நிலையத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்க வேண்டும்: தமிழக அரசு முறையீடு
ஜெயலலிதா நினைவு இல்லத்தில் பொது மக்கள் பார்வையிட அனுமதிக்கக் கோரி தமிழக அரசு சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிக்பாஸ் தர்ஷனுக்கு ஜோடியாகும் லாஸ்லியா
மலையாளத்தில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி சூப்பர்ஹிட்டான படம் ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25. இப்படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இதில் பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பதோடு, தர்ஷனின் தந்தை கதாபாத்திரத்திலும் நடிக்க உள்ளாராம்.
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி எம்.பி.க்களுக்கு முக்கிய பதவி
அமெரிக்காவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பி.க்களான பிரமிளா ஜெயபால் மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் இரு முக்கிய நாடாளுமன்ற குழுக்களில் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லையில் புதிய பாலம் சாலை விரிவாக்கப்பணி கடைகள் இடித்து அகற்றம்
நெல்லையில் புதிய பாலத்தை திறப்பதற்கும் சாலை விரிவாக்க பணிகளுக்கு இடையூறாக இருக்கும் நகர் புற வேளான் விரிவாக்க நிலையம் உள்ளிட்ட 32 வணிக நிறுவனங்களை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றும் பணி நடந்தது.
நினைவு இல்லமானது வேதா நிலையம்
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்
சென்னை உயர்கல்வி மன்றத்தில் ஜெயலலிதாவின் முழு உருவச்சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்
தமிழக உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவச்சிலையை முதலமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
சேவூர் அருகே மொண்டிபாளையம் பெருமாள் கோவில் தேரோட்டம்
சேவூர் அருகே மொண்டிபாளையம் பெருமாள் கோவில் தேரோட்டம் சிறப்பான முறையில் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி செயலராக அறவாழி நியமிக்கப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி செயலராக நா.அறவாழி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம் ஊராட்சி செயலராக பணியாற்றிவந்த பொ.ந.செ.சரண்யா தேவி வேலூர் மாவட்ட ஊராட்சி செயலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி செயலராக நா. அறவாழி நியமிக்கப்பட்டார்.
தைப்பூச திருவிழாவையொட்டி வடலூர் சத்திய ஞானசபையில் நடந்த ஜோதி தரிசனம்
தைப்பூச திருவிழாவையொட்டி வடலூர் சத்திய ஞானசபையில் இன்று காலை 6 மணிக்கு ஜோதி தரிசனம் நடந்தது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.