CATEGORIES
கடலூர் மாவட்டத்தில் பொதுகணக்குக்குழு வருகை குறித்து முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுகணக்குக்குழு வருகை தொடர்பான முன்னோடி கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் நடைபெற்றது.
ஆரல்வாய்மொழி தெற்கு மலை வனப்பகுதியில் காட்டு தீ
பூதப்பாண்டி வனச்சரகத்திற்குட்பட்ட ஆரல்வாய்மொழி தெற்கு மலைப்பகுதியில் ஏராளமான குரங்குகள், காட்டு பன்றி, மிளா போன்ற வனவிலங்குகளும் மேலும் அதிகமான மரங்களும் உள்ளன.
டெல்லி எல்லைகளில் கடுங்குளிர், தூறலுக்கு மத்தியிலும் 72வது நாளாக விவசாயிகள் போராட்டம்
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி எல்லையில் 72ஆவது நாளாக விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்
நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசிவரும் கல்யாணராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக்கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் மாவட்ட தலைவர் சகோ.
தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி
ராமநாதபுரம் அரசினர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாக நடைபெற்ற தொழில் நெறி பழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை ராமநாதபுரம் சார் ஆட்சியர் டாக்டர் சுகபுத்ரா, துவக்கி வைத்து, கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு பாராட்டினார்.
நாகையில் மத்திய குழு ஆய்வு: ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை
கடந்த ஜனவரி மாதத்தில் பருவம் தவறி பெய்த தொடர் மழையால் டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள், உளுந்து, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் கடுமையாக பாதிக்கப் பட்டன.
சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்திற்கு சான்றிதழ் வழங்கல்
கொரோனா காலத்தில் சிறப்பாக பொதுமக்களுக்கு உதவிய சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத்திற்கு World Book of Records London சான்றிதழ் வழங்கப்பட்டது.
தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு முறைக்கு எதிரான வழக்குகளை வேறு வழக்குகளுடன் சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு
தமிழகத்தில் கல்வி நிலையங்கள் உள்பட 69% இட ஒதுக்கீட்டைக் கடைப்பிடிக்கும் முறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அரசியல் சாசன பாதுகாப்பு முறைப்படி தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு ஒதுக்கப்பட் டுள்ளது. அதற்கான தனி ஆணையமும் அமைக்கப்பட் டுள்ளது, மேலும் குடியரசு தலைவர் ஒப்புதலுடன் நடைமுறைப் படுத்துவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ரிஷி ஹெல்த்கேர் இயற்கை மருத்துவ மையம் திறப்பு
இயற்கை சார்ந்த மருத்துவத்திற்காக கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு தமிழக மக்கள் சென்று வருகின்றனர் .
முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு விரைவில் கொரோனா தடுப்பூசி
அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
மழை, வெள்ள பாதிப்பு - புதுக்கோட்டையில் மத்தியக்குழு ஆய்வு
கடந்த ஜனவரி மாதம் தமிழகத்தில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்யும் பணியை மத்தியக்குழு இன்று தொடங்கியுள்ளது.
ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்
பாளையங்கோட்டையில் அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டம் நடத்தினர்.
குமரியில் மனித நேய வாரவிழா
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக, மனித நேய வாரவிழாவினை முன்னிட்டு, ஆதிதிராவிடர் நல மற்றும் பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளி மாணவ, மாணவியர்களிடையே நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரிசுகளை வழங்கினார்கள்.
தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா விழிப்புணர்வு
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில் அருகே வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கடலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் உத்தரவின்படி 32 வது தேசியசாலை பாதுகாப்பு மாத விழா விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி நடைபெற்றது.
சட்டப்பேரவையில் 3ம் நாளான இன்று ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு விவாதம்
தமிழக சட்டப்பேரவையின் 3ம் நாளான இன்று, ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு விவாதம் நடைபெறும்.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழா
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வீரங்குப்பம் கிராமத்தில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு எருது விடும் விழா நடைபெற்றது போட்டியை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.சி.வில்வநாதன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
உலக சுகாதார அமைப்பின் தவறான இந்திய வரைபடம்: நாடாளுமன்றத்தில் விளக்கம்
உலக சுகாதார அமைப்பு தனது வலைதளத்தில் வெளியிட்டுள்ள தவறான இந்திய வரைபடத்திற்கு நாடாளுமன்றத்தின் மக்களவையில் இன்று விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. இதுபற்றி மத்திய உள் விவகார அமைச்சகத்தின் இணை ணை மந்திரி பேசும்பொழுது, உலக சுகாதார அமைப்பின் வலைதளத்தில் வெளியான தவறான இந்திய வரைபடத்திற்கு உயர்மட்ட அளவில் இந்தியா சார்பில் அந்த அமைப்பிடம் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பு
பேரறிஞர் அண்ணா 52வது நினைவு நாளை முன்னிட்டு புதுச்சேரி மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாநில கழக செயலாளர் வழக்கறிஞர் வேல்முருகன் தலைமையிலும், கழக அமைப்பு செயலாளர் பி.எஸ்.அருள் முன்னிலையிலும் புதுச்சேரி வெங்கடசுப்பா ரெட்டியார் சதுக்கத்திலிருந்து ஊர்வலமாக சென்று அண்ணா சாலையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பழனி கோவில் யானை உள்பட 13 பேருக்கு கொரோனா பரிசோதனை
வருகிற 8ந்தேதி புத்துணர்வு முகாம் தொடங்க உள்ளதை முன்னிட்டு பழனி கோவில் யானை கஸ்தூரி உள்பட 13 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
ஆண்டிபட்டியில் போஸ்டர் ஒட்டுவதில் அதிமுக, சசிகலா ஆதரவாளர்கள் மோதல்
ஆண்டிபட்டியில் போஸ்டர் ஒட்டும் தகராறில் அ.தி.மு.க சசிகலா ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலை போலீசார் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
40 ஆண்டுகளுக்கு மேலாக எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளராக இருந்த கேப்.ராமகிருஷ்ணன் காலமானார்
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மெய்க்காப்பாளராக 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியவர் கே.பி.ராமகிருஷ்ணன். சினிமாவில் சண்டைப்பயிற்சி கலைஞராகவும், எம்.ஜி.ஆர் இரட்டை வேடத்தில் நடித்த அனைத்து படங்களிலும் அவருக்கு டூப் போட்டு நடித்தவர் இவர்தான். ஒரு சில படங்களில் நம்பியாருக்கும் டூப் போட்டு நடித்தார்.
தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தின் ஒரு பகுதியாக சாலைப் பாதுகாப்பு-உயிர் பாதுகாப்பு என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்களுக்கு கட்டுரை போட்டி
தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தின் ஒரு பகுதியாக, சாலைப் பாதுகாப்பு-உயிர் பாதுகாப்பு என்ற தலைப்பில், கல்லூரி மாணவர்களுக்கு நேற்று கட்டுரை போட்டி நடைபெற்றது.
புதிய பயணியர் நிழற்குடை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா
காட்டுமன்னார்கோயில் சட்ட மன்ற தொகுதி, ஆயங்குடி ஊராட்சியில் சட்ட மன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.5.00 லட்சம் மதிப்பீட்டில் புதிய பயணியர் நிழற்குடை அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்து, கழக அமைப்பு செயலாளர், காட்டுமன்னார்கோயில் சட்ட மன்ற உறுப்பினர் முருகுமாறன் தலைமை ஏற்று அடிக்கல் நாட்டினர்.
நெல்லை கலெக்டர் அலுவலகத்தை அரசு பள்ளி மாணவிகள் முற்றுகை
இலவச மடிக்கணினி வழங்கக்கோரி அரசு பள்ளி மாணவிகள் நெல்லை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் விருது - பொற்கிழி வழங்கும் விழா
புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் திருவள்ளுவர் விழா மற்றும் திருவள்ளுவர் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழ்ச் சங்கத் தலைவர் முனைவர் வி.முத்து தலைமை தாங்கினார்.
திருமண விழாவில் நெகிழ்ச்சி தந்தை சிலையுடன் மேடைக்கு வந்து தங்கைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சகோதரி
பட்டுக்கோட்டையில் நடந்த திருமண வரவேற்பு விழாவில் தந்தை சிலையுடன் மேடைக்கு வந்த மூத்த சகோதரி தனது தங்கைக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தது உறவினர் களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தாளவாடி அருகே வனச்சாலையில் சிறுத்தை நடமாட்டம்
தாளவாடி அருகே வனச்சாலையை சிறுத்தை கடந்த சம்பவம் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளிடம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலூர் ஆட்சியரிடம் மனு
சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்கத் தின் சார்பாக, கடலூர் புதுப்பாளையம் பகுதியில் உள்ள அப்துல்கலாம் நகரில் 14 ஏக்கர் அரசுக்கு சொந்தமான இடத்தை புதுப்பாளையம் விஸ்வகர்மா என போலியான சங்கத்தினை பயன்படுத்தி அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களிடம் 50 ஆண்டு காலங்களாக போலியான ஆவணங்களை வைத்து பாவாடை ஆ ச்சாரி என்கின்ற நபர் ஆக்கிரமிப்பு செய்து, 50 ஆண்டு காலமாக அங்கு வசிக்கும் பொதுமக்களிடம் வரிவசூல் செய்து வருகிறார்.
தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கிட அனுமதி
தமிழகத்தில் 195 தனியார் மருத்துவமனைகளுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்தது
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து, ஒரு சவரன் ரூ.36,760க்கு விற்பனையாகிறது.