CATEGORIES
பெண் எஸ்.ஐ., காவலர் விபத்தில் உயிரிழப்பு
மதுராந்தகம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் குற்றவாளியைப் பிடிக்க மோட்டார் பைக்கில் சென்றபோது கார் மோதியதில் பெண் காவல் உதவி ஆய்வாளர், முதல்நிலை பெண் காவலர் ஆகியோர் கார் மோதியதில் உயிரிழந்தனர்.
திருவொற்றியூர் தனியார் பள்ளியில் மீண்டும் விஷவாயுக் கசிவு?: பள்ளிக்கு விடுமுறை
தனியார் பள்ளியில் திங்கள்கிழமை மீண்டும் விஷவாயுக் கசிவு ஏற்பட்டதையடுத்து மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். மேலும் வாயுக்கசிவுக்கான காரணம் தெரியும் வரை பள்ளிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
கொளத்தூரில் புதிய உள்கட்டமைப்பு வசதிகள்
கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட இடங்களில் புதிய உள்கட்டமைப்பு வசதிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்: அரசு அழைப்பு
முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.
துறைமுகங்களில் ரூ.187 கோடியில் உள்கட்டமைப்புத் திட்டங்கள்
அமைச்சர் சர்வானந்தா சோனோவால் தொடங்கி வைத்தார்
படிக்கவும், பணிபுரியவும் மிகக் குறைந்த கட்டணத்தில் தனி இடவசதி
முதல்வர் படைப்பகத்தை திறந்து வைத்தார் மு.க.ஸ்டாலின்
சொந்த ஊர்களிலிருந்து சென்னை திரும்பியவர்களால் 2-ஆவது நாளாக கடும் போக்குவரத்து நெரிசல்
தீபாவளி முடிந்து சொந்த ஊர்களிலிருந்து சென்னை திரும்பியவர்களால் இரண்டாவது நாளாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
விளையாட்டுப் போட்டிகளில் மரணம்; இழப்பீடு வழங்க திட்டம் வகுக்க ஆலோசனை
விளையாட்டுப் போட்டிகளின் போது ஏற்படும் அசம்பாவிதங்களால் பாதிக்கப்படுவோருக்கு இழப்பீடு வழங்குவது குறித்து திட்டம் வகுக்க தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.
உத்தரகண்ட்: பேருந்து விபத்தில் 36 பேர் உயிரிழப்பு
உத்தரகண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில், தனியார் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து திங்கள்கிழமை விபத்துக்குள்ளானது; இதில் 10 பெண்கள் உள்பட 36 பேர் உயிரிழந்தனர்; 26 பேர் காயமடைந்தனர்.
கனடா: ஹிந்துக்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல்
கனடாவில் ஹிந்து கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்து பக்தர்கள் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தினர்.
திமுகவை அழிக்க நினைக்கும் புதிய கட்சிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின்
குளிர்காலத்தில் மாரடைப்பு பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு
குளிர்காலத்தில் முதியவர்களுக்கு மாரடைப்பு பாதிப்பு ஏற்படும் விகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
தீபாவளி விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்: கடும் போக்குவரத்து நெரிசல்
தீபாவளி முடிந்து சொந்த ஊர்களிலிருந்து சென்னைக்குத் திரும்பி வருபவர்களால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா 2-ஆம் நாள் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதர்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா 2ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை, சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி- தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளினார்.
குன்னூரில் கனமழை: மண் சரிவு, மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக மழை பெய்து வந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கனமழை பெய்தது. இதனால் குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் காட்டேரி உள்ளிட்ட சில இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மரங்களும் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபர் தேர்தல்: 6.80 கோடி பேர் முன்கூட்டியே வாக்களிப்பு
அமெரிக்க அதிபர் தேர்தலையொட்டி முன்கூட்டியே நடைபெற்ற வாக்குப்பதிவில், 6.80 கோடிக்கும் அதிகமான அமெரிக்கர்கள் வாக்களித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அகதிகள் முகாம் மீது மின்னல் தாக்கி 14 பேர் உயிரிழப்பு
உகாண்டாவில் அகதிகள் முகாம் மீது மின்னல் தாக்கி 14 பேர் உயிரிழந்தனர். 34 பேர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானுக்கு ஜெர்மனி ரூ.182 கோடி நிதியுதவி
பாகிஸ்தானுக்கு 20 மில்லியன் யூரோவை (சுமார் ரூ.182 கோடி) ஜெர்மனி நிதியுதவியாக அளிக்க இருக்கிறது.
வெள்ளத்தால் 200 பேர் உயிரிழப்பு: ஸ்பெயின் அரசர் மீது சேற்றை வீசிய மக்கள்
ஸ்பெயினில் வெள்ளத்தில் சிக்கி 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிடச் சென்ற அந்நாட்டு அரசர் மீது அதிருப்தி காரணமாக பொதுமக்கள் சேற்றை வீசி அவரைத் தூற்றினர்.
வெற்றிப் பாதைக்கு திரும்பும் முனைப்பில் சென்னை-ஜாம்ஷெட்பூர் இன்று மோதல்
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) தொடரின் ஒரு பகுதியாக திங்கள்கிழமை ஜாம்ஷெட்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் ஜேஎஃப்சி-சிஎஃப்சி அணிகள் மோதுகின்றன.
யு 19 உலக குத்துச்சண்டை: 4 தங்கம், 8 வெள்ளியுடன் இந்தியா அபாரம்
யு 19 உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 4 தங்கம், 8 வெள்ளி, 5 வெண்கல பதக்கங்களுடன் அபார வெற்றி கண்டுள்ளது.
100 வயதைக் கடந்த வாக்காளர்கள் 2.5 லட்சம் பேர்!
அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 47,392 பேர்; தமிழகத்தில் 16,306 பேர்
அரையிறுதியில் எஸ்ஆர்எம் ஐஎஸ்டி, வேல்ஸ், மங்களூரு, மைசூர் பல்கலை
தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆடவர் கபடிப் போட்டியில் அரையிறுதிக்கு எஸ்ஆர்எம் ஐஎஸ்டி, வேல்ஸ், மங்களூரு, மைசூர் பல்கலைக்கழகங்கள் தகுதி பெற்றுள்ளன.
3-0 என இந்தியாவை ஒயிட் வாஷ் செய்தது
நியூஸிலாந்து வரலாற்று வெற்றி
சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி: நாளை தொடக்கம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், எம்ஜிடி, செஸ் பேஸ் சார்பில் சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டிகள் வரும் செவ்வாய்க்கிழமை, நவம்பர் 5-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறவுள்ளது.
வந்தே பாரத் மீது கல்வீச்சு; நடவடிக்கை எடுக்க சந்திரசேகர் ஆசாத் எம்.பி. வலியுறுத்தல்
உத்தர பிரதேசத்தின் நாகினா தொகுதி எம்.பி.யும், ஆசாத் சமாஜ் கட்சி (கன்ஷி ராம்) தலைவருமான சந்திரசேகர் ஆசாத், தான் பயணித்த வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசப்பட்டதாக ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
சவூதி அரேபியாவில் வேலைவாய்ப்பு: இந்திய பெண்கள் ஆர்வம்!
சவூதி அரேபியாவில் உள்ள ஊக்குவிக்கும் பணிச் சூழலால் இங்கு வேலைவாய்ப்பைத் தேடும் இந்திய பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அந்த நாட்டின் மனிதவள மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
‘பாஜக ஆட்சிக்கு வந்தால் ஜார்க்கண்டில் பட்டினிச் சாவு நிகழும்’
ஜார்க்கண்டில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பட்டினிச் சாவுகள் நிகழும் என்று அந்த மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்தார்.
கோயில் திருவிழாவுக்கு செல்ல ஆம்புலன்ஸ்: மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மீது வழக்கு
திருச்சூர் பூரம் திருவிழாவில் பங்கேற்க ஆம்புலன்ஸை தவறாகப் பயன்படுத்தியதாக மத்திய சுற்றுலா, பெட்ரோலிய துறை இணையமைச்சர் சுரேஷ் கோபி உள்பட மூவர் மீது கேரள காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்தியா-சீனா உறவில் முன்னேற்றம்: ஜெய்சங்கர்
கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா-சீனா மேற்கொண்ட படை விலக்கலால் இருதரப்பு உறவில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.