CATEGORIES
புதுக்கோட்டை வட்டார விவசாயிகள் உடனடியாக பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தல்
புதுக்கோட்டை வட்டாரத்தில் நிவர் புயல் மற்றும் கனமழை காரணத்தினால் பயிர் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஆடு வளர்ப்பில் பொலிகிடாக்களின் முக்கியத்துவம்
விவசாயிகள் நல்ல தரமான ஆட்டுப் பண்ணையை உருவாக்கப் பெரிதும் துணை புரிவது அப்பண்ணையில் உள்ள தரமான பொலி கிடாக்களும் பெட்டை ஆடுகளும் ஆகும்.
கிராமங்கள் மற்றும் விவசாயிகளை தற்சார்பாக்க கூட்டுறவு அமைப்புகள் பங்காற்ற வேண்டும்
வேளாண் அமைச்சர் தோமர் பேச்சு
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு விளக்குகள் தயாரிக்கும் பணி தீவிரம்
கார்த்திகை தீபத்திருநாள் வருகிற ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.
அதி தீவிர புயலாக மாறி கரையைக் கடக்கிறது நிவர்
நிவர் அதி தீவிர புயலாக மாறி, புதுச்சேரிக்கு அருகே மரக்காணம் பகுதியில் கரையைக் கடக்கத் தொடங்கியது. மணிக்கு 145 கி.மீ. வரை பலத்த காற்று வீசியது.
1 லட்சத்து 60 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை. நிவர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த காற்றழுத்த தாழ்வு நிலை தீவிர புயலாக மாறியுள்ளது.
உரிய விலையின்றி குப்பைக்கு போகும் தக்காளிகள்
தேனி மாவட்டம் சின்னமனூரில் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காததால் விற்பனைக்கு கொண்டு வந்த தக்காளியை விவசாயிகள் குப்பையில் கொட்டிச் சென்றனர்.
மேற்பனைக்காடு கிராமத்தில் நெல் சாகுபடிப் பயிற்சி
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டார விவசாயிகளுக்குத் தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் நெல் சாகுபடி நுட்பங் கள் குறித்து பயிற்சி மேற்பனைக்காடு கிராமத்தில் இரா. சுருளிமலை, வேளாண்மை துணை இயக்குநர் தலைமையில் திங்கட்கிழமை நடைபெற்றது.
சம்பா நெல் பயிரில் பூச்சி, நோய் தாக்குதலை கட்டுபடுத்திட விவசாயிகளுக்கு ஆலோசனை
கந்தர்வகோட்டை வட்டாரத்தில் நடப்பு சம்பா பருவத்தில் சாகுபடி செய்துள்ள நெல்லில் ஆணைகொம்பன் ஈ மற்றும் பாக்டீரியல் இலை கருகல் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும் அவைகளை கட்டுப்படுத்துவதற்கு வேளாண்மை உதவி இயக்குநர் அன்பரசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது : ஆணை கொம்பன் ஈ நடவு செய்து 35 முதல் 40 நாள் வயதுடைய நெற்பயிரில் மஞ்சள் கலந்த பழுப்பு நிறமுடைய கொசுவைப் போன்ற பூச்சியினம் இலையின் அடிப் பகுதியில் முட்டைகள் இடுகிறது.
நாட்டுக் கோழி வளர்ப்பில் தொழில் முனைவோரை ஊக்குவிக்க மானியம்
நாட்டுக்கோழி வளர்ப்பு மூலம் தொழில் முனைவோரை ஊக்கு விக்க ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 100 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, மானியம் அளிக்கப்பட உள்ளது. இதற்கு தகுதியுடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.
சம்பா நெற் பயிரில் பாக்டீரியா இலைகருகல் நோய் கட்டுப்படுத்திட வேளாண்மை இணை இயக்குநர் ஆலோசனை
புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது நிலவும் மேக மூட்டமான வானிலை மற்றும் இரவில் அதிக பனிப் பொழிவு காரணமாக சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிரில் பாக்டீரியா இலை கருகல் நோய் தாக்குதல் ஆங்காங்கு காணப்படுகிறது.
நீர் பனியால் பூச்செடிகள் கருகாமல் இருக்க நடவடிக்கை
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடர் மழை பெய்தது. இதனால் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு பகலில் வெயிலும், இரவில் கடுங்குளிரும் நிலவி வந்தது. ஊட்டியில் கடந்த வாரம் திடீரென உறைபனி தாக்கம் காணப்பட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் நீர் பனி மற்றும் உறைபனி இல்லாமல் இருந்தது.
உலக வங்கியுடன் இணைந்து நீர்வள நிலவளத்திட்டம் விவசாயிகள் பயனடைய வேண்டுகோள்
மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் அமைந்துள்ள வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக வங்கி நிதியுடன் நீர்வள நிலவளத் திட்டம் செயல்பட்டு வருகிறது.
அதிதீவிர புயலாக மாறுகிறது நிவர் இன்று மாலை கரையைக் கடக்கிறது?
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலவிய ஆழ்ந்த காற்ற ழுத்தம், நிவர் புயலாக தீவிரமடைந்துள்ளது. இது மாமல்லபுரம் புதுச்சேரி இடையே இன்று (நவ.25) மாலை தீவிர புயலாக கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஆட்சியர்களுக்கு உத்தரவு
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தகவல்
ரேலியா அணை உபரிநீரை சேமிக்க தடுப்பணை கட்ட பொதுமக்கள் எதிர்பார்ப்பு
குன்னூர் அருகே பந்துமி என்ற வனப்பகுதியில் ரேலியா அணை உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த அணையின் உயரம் 43.7 அடி ஆகும்.
பருத்தி, மக்காச்சோளம் மறைமுக ஏலத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு
பெரம்பலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் புதன்கிழமை தோறும் நடைபெறும் பருத்தி, மக்காச்சோள மறைமுக ஏலத்தில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சத்தியமங்கலத்தில் வாழைத்தார் விலை சரிவு
சத்தியமங்கலம் வட்டாரத்தில் வாழைத்தார் விலை சரிவடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைத்துள்ளனர்.
நாட்டுக்கோழி வளர்க்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க ஆட்சியர் அழைப்பு
நாட்டுக்கோழி வளர்க்க ஆர்வமுள்ள விவசாயிகள் நவம்பர் 27ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆட்சியர் த.ரத்னா தெரிவித்துள்ளார்.
30ம் தேதிக்குள் நெல் பயிருக்கு பயிர் காப்பீடு செய்ய வேண்டுகோள்
திருப்பூர் மாவட்டம் காங்கயம் வட்டாரம் நத்தக்காடையூர் குறு வட்டத்திலுள்ள மரவபாளையம், கீரனூர், நால்ரோடு, பரஞ்சேர்வழி, மருதுறை, நத்தக்காடையூர், முள்ளிபுரம், பழைய கோட்டை, குட்டப் பாளையம், பாப்பினி ஆகிய பத்து கிராமங்களில் திருத்தியமைக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள், நவம்பர் 30ம் தேதிக்குள் திங்கள்கிழமை) பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும், காப்பீடு செய்ய கடைசி நாள் வரை காத்திருக்க வேண்டாம் எனவும் காங்கயம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மு. ரவி தெரிவித்துள்ளார்.
நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தில் பயன்பெற அழைப்பு
நாட்டுக்கோழி வளர்ப்புத் திட்டத்தில் பயன்பெற ஆட்சியர் சு.மலர்விழி அழைப்பு விடுத்துள்ளார்.
2 நாட்களுக்குள் பயிர்க்காப்பீடு செய்யவும் வேளாண் துறை அறிவுறுத்தல்
விவசாயிகள் தங்களுடைய பயிர்களை 2 நாட்களுக்குள் காப்பீடு செய்ய வேண்டும் என தமிழக வேளாண்துறை செயலர் ககன்தீப் சிங் பேடி அறிவுறுத்தியுள்ளார்.
ஹைட்ரோகார்பன் திட்டம் தொடர்பாக அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்
வைகோ வலியுறுத்தல்
மஞ்சளாறு அணை கரையோர மக்களுக்கு இறுதிக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
தேனி மாவட்டம், தேவதானப்பட்டியில் உள்ள மஞ்சளாறு அணையின் மொத்த உயரம் 57 அடி ஆகும். இந்த அணையின் மூலம் திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் 5,200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. அணையில் இருந்து பாசனத்திற்காக அக்டோபர் மாதம் 15ந் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால் இந்த வருடம் அணைதிறப்பு தாமதமாகி வந்தது.
சொட்டுநீர்ப் பாசன நிதியிலிருந்து வட்டி மானிய கடன்
தமிழகத்துக்கு ரூ.1357.93 கோடி ஒப்புதல்
விலை வீழ்ச்சியால் மஞ்சள் ஏலம் நிறுத்தம்
கடும் விலை வீழ்ச்சியால் மஞ்சளை ஏலத்துக்கு கொண்டு செல்ல விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால் பெருந்துறை, கோபி மஞ்சள் சந்தைகளில் 2 நாள்களாக ஏலம் நடைபெறவில்லை.
கண்ணன்கோட்டை -தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம் உள்துறை அமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்
நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி பங்கேற்பு
பூண்டி ஏரியிலிருந்து புழல் ஏரிக்கு தண்ணீர் திறப்பு
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரியில் மழைநீர் மற்றும் கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பெறப்படும் தண்ணீர் ஆகியவை சேமித்து வைக்கப்படுகிறது. இந்த தண்ணீர் புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு தேவைப்படும் போது திறந்து விடப்படுவது வழக்கம்.
வைகை அணை நீர்மட்டம் 6 அடி உயர்வு
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழைபெய்தது. மாவட்டத்தில், வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்பான வருசநாடு மலைப் பகுதியில் பெய்த கன மழையால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், முல்லைப்பெரியாறு, கொட்டக்குடி ஆறு, சுருளியாறு ஆகியவற்றில் நீர்வரத்து ஏற்பட்டதால், வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.
வரும் 30ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டுகோள்
இராமநாதபுரம் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தில், விவசாயிகள் நவம்பர் 30ம் தேதிக்குள் (திங்கள்கிழமை) பதிவு செய்து கொள்ள வேண்டும் என, ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.