CATEGORIES
Kategorier
நடிகர் தர்ஷனுக்கு 6 வார கால இடைக்கால ஜாமீன்; உயர்நீதிமன்றம் உத்தரவு
கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கன்னட நடிகர் தர்ஷனுக்கு 6 வார கால இடைக்கால ஜாமீன் வழங்கி கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீக்கிய பிரிவினைவாதிகளைக் குறிவைக்க உத்தரவிட்டார் அமித் ஷா - கனடா அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு
கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகள் குறிவைத்து வன்முறை, மிரட்டல் மற்றும் உளவுத் தகவல்கள் சேகரிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டதாக, அந்நாட்டின் வெளியுறவுத் துறை இணையமைச்சர் டேவிட் மோரிசன் குற்றஞ்சாட்டினார்.
மிகுந்த ஆபத்தான பொருளாதார நிலையில் இந்கியா: காங்கிரஸ்
இந்தியா தற்போது மிகுந்த ஆபத்தான பொருளாதார நிலையில் இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
அதிருப்தி வேட்பாளர்கள் விலக காங்கிரஸ் வலியுறுத்தல்
மகாராஷ்டிரத்தில் காங்கிரஸ் அதிருப்தி வேட்பாளர்கள் அனைவரும் வேட்புமனுவைத் திரும்பப் பெற்று போட்டியில் இருந்து விலக வேண்டும் என்று அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் ரமேஷ் சென்னிதலா வலியுறுத்தியுள்ளார்.
மேம்பாலத்துக்காக மரங்களை அகற்ற எதிர்ப்பு: மறுபரிசீலனை செய்கிறது அஸ்ஸாம் அரசு
அஸ்ஸாமில் மேம்பாலம் அமைப்பதற்காக நூற்றாண்டு பழைமை வாய்ந்த மரங்களை அகற்றுவதற்கு எதிர்ப்பு எழுந்ததையடுத்து, மரங்களை அகற்றும் முடிவு குறித்து மறுபரிசீலனை செய்ய உள்ளதாக முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.
திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய தலைவர் பி.ஆர். நாயுடு
திருமலை திருப்பதி தேவஸ்தான வாரியத்தின் புதிய தலைவராக 'டிவி 5' நிறுவனர் பி.ஆர். நாயுடுவை ஆந்திர மாநில அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது.
பெட்ரோல், டீசல் கமிஷன் அதிகரிப்பு; சில்லறை விலையில் மாற்றமில்லை
மத்திய அரசுக்குச் சொந்தமான எரிபொருள் விற்பனை நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விற்பனை முகவர்களுக்கு அளிக்கும் கமிஷன் தொகையை அதிகரித்துள்ளன. எனினும் பெட்ரோல், டீசல் விலையை அந்த நிறுவனங்கள் மாற்றவில்லை.
ஜாமீன் உத்தரவு பிறப்பித்த 6 மாதத்துக்குப் பிறகு பிணையப் பத்திரம் தாக்கல் செய்யுமாறு கூற முடியாது
'வழக்கில் ஜாமீன் உத்தரவு பிறப்பித்த 6 மாதத்துக்குப் பிறகு பிணையப் பத்திரம் சமர்ப்பிக்கக் கூறுமாறு குற்றச்சாட்டுக்கு உள்ளானவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
பிரிட்டன் அரசருக்கு பெங்களூரில் சிகிச்சை
பிரிட்டன் அரசர் சார்லஸ் தனிப்பட்ட சிகிச்சைக்காக பெங்களூரு வந்து சென்றதாக பக்கிங்காம் அரண்மனை புதன்கிழமை தெரிவித்தது.
கைதிகள்-வழக்குரைஞர்கள் சந்திப்பு விவகாரம்: ஆய்வு செய்ய குழு அமைத்து உயர்நீதிமன்றம் உத்தரவு
சிறைக் கைதிகளை சந்திக்கச் செல்லும் வழக்குரைஞர்களுக்கான வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய பார் கவுன்சில் மற்றும் வழக்குரைஞர்கள் சங்கங்கள் பிரதிநிதிகளை நியமித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மகாராஷ்டிரம்: ஆளும் கூட்டணியில் பாஜக, எதிரணியில் காங்கிரஸ் அதிக இடங்களில் போட்டி
மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில், ஆளும் கூட்டணியில் பாஜகவும் (148), எதிரணியில் காங்கிரஸும் (103) அதிக இடங்களில் போட்டியிடுகின்றன.
தீபாவளியை கொண்டாட சொந்த ஊருக்கு புறப்பட்ட மக்கள் பேருந்து - ரயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்
தீபாவளி பண்டிகையைக் கொண்டாட சென்னை, திண்டிவனத்திலிருந்து புதன்கிழமை பொதுமக்கள் பெருமளவில் புறப்பட்டதால் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் எழுச்சி: பிரதமர் மோடி பெருமிதம்
பாதுகாப்புத் துறை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் இந்தியா எழுச்சி கண்டு வருகிறது; இதற்காக ஒவ்வொரு இந்தியரும் பெருமை கொள்ளலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இணையவழியில் "என்டிஏ" தேர்வுகள்: உயர்நிலைக் குழு பரிந்துரைக்க முடிவு
தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் 'நீட்' (மருத்துவப் படிப்புக்கான தகுதி காண் நுழைவுத் தேர்வு) உள்ளிட்ட போட்டித் தேர்வுகளை இணையவழியில் நடத்த வேண்டுமென மத்திய அரசுக்கு பரிந்துரைக்க உயர்நிலைக் குழு முடிவு செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஒளித் திருநாளில் புது சபதம் ஏற்போம்!
இன்று தீபாவளித் திருநாளாக மலர்ந்திருக்கிறது. இளங்காலை எழுந்து, எண்ணெய் தேய்த்து வெந்நீராடி, திருவிளக்கேற்றித் தெய்வம் தொழுது, புத்தாடை உடுத்தி, இனிப்புகளையும் வாழ்த்துகளையும் இதமாகப் பரிமாறிக் கொள்கிறோம். பட்டாசுகள் வெடித்தும், மத்தாப்புகள் கொளுத்தியும் குழந்தைகளோடு குதூகலிக்கிறோம். தீபாவளி காணுகிற தம்பதியரை வாழ்த்தியும், நம்மிலும் மூத்தோரை வணங்கியும், இளையோருடன் அன்பு பாராட்டியும் மகிழ்கிறோம்.
சர்தார் படேலை பிரதமர் கொண்டாடுவது ஏன்?
சர்தார் வல்லபாய் படேலின் தியாக மனப்பான்மை குறித்து நாம் சிந்திக்க வேண்டும். 1946-ஆம் ஆண்டில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த அபுல்கலாம் ஆசாத்தின் பதவிக் காலம் முடிவடைந்தது.
பட்டாசு வெடிக்க நேரக் கட்டுப்பாடு: மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல்
விபத்து, ஒலி மற்றும் மாசற்ற தீபாவளியைக் கொண்டாடுமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்களுக்கு போனஸ்: ராமதாஸ் கருத்துக்கு அமைச்சர் கண்டனம்
போக்குவரத்து கழகத் தொழிலாளர்களுக்கான தீபாவளி போனஸ் குறித்து தமிழக அரசை விமர்சித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறிய கருத்துக்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பரவுகிறது நுரையீரலை பாதிக்கும் ஆர்எஸ்வி தொற்று
பொது சுகாதாரத் துறை ஆய்வில் தகவல்
பெண் நீதிபதிக்கு தொல்லை: வழக்குரைஞருக்கு பார் கவுன்சில் தடை
பெண் நீதிபதியை காதலிப்பதாகக் கூறி தொல்லை கொடுத்த வழக்குரைஞருக்கு தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்தது.
பாதுகாப்பாக பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாட வேண்டும்
பொது மக்களுக்கு துணை முதல்வர் வேண்டுகோள்
மருத்துவக் கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரம்: இரு மாணவர்கள் மீது வழக்குப்பதிவு
சென்னையில் மருத்துவக் கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட மாணவர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் கந்த சஷ்டி பெருவிழா ஏற்பாடுகள் தீவிரம் - அமைச்சர் பி.கே.சேகர்பாபு
திருச்செந்தூர் முருகன் கோயில் கந்தசஷ்டி பெருவிழா நவ.2-ஆம் தேதி தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான 7-ஆம் தேதி நடைபெறவுள்ள சூரசம்ஹாரத்துக்கு 6 லட்சம் பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுவதால், தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்த இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது என்று துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தீபாவளி திருநாள்: தலைவர்கள் வாழ்த்து
தீபாவளி திருநாளையொட்டி, தமிழக மக்களுக்கு ஆளுநர் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து கூறியுள்ளனர்.
மருத்துவ அலுவலர்களை சுய மதிப்பீடு செய்ய எதிர்ப்பு
ஆரம்பசுகாதார நிலையங்கள், மாவட்ட சுகாதாரத் துறைகளில் பணியாற்றும் மருத்துவர்களின் செயல்பாடுகளை சுய மதிப்பீடு செய்வதற்கு தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மாணவி பாலியல் வன்கொடுமை: ஆட்டோ ஓட்டுநர் போக்ஸோவில் கைது
ஆவடி அருகே பள்ளி மாணவியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் போக்ஸோ சட்டத்தில் புதன்கிழமை கைது செய்தனர்.
‘கங்குவா’ திரைப்படம் நவ.7 வரை வெளியிடப்படாது’
நடிகர் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் நவ. 7-ஆம் தேதி வரை வெளியிடப்படாது என ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
பள்ளியில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.25 லட்சம் மோசடி: உடற்கல்வி ஆசிரியை கைது
தனியார் பள்ளிகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.25 லட்சம் மோசடி செய்த, அரசு உதவிபெறும் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியையை போலீஸார் கைது செய்தனர்.
அம்பத்தூரில் மருத்துவமனை நடத்திய போலி மருத்துவர் கைது
அம்பத்தூரில் பட்டப்படிப்பு முடித்துவிட்டு தனியார் மருத்துவமனை நடத்தி, மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவரை போலீஸார் கைது செய்தனர்.
இணையதளம் மூலம் ரூ.1 கோடி மோசடி: வடமாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் கைது
இணையதளம் மூலம் ஒரு கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட சண்டிகர் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 2 பேரை சைபர் குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.