CATEGORIES
Kategorier
ஆமுக்த மால்யத
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகிய ஐந்து நூல்களையும் தமிழின் ஐம்பெருங்காப்பியங்கள் என்று சொல்கிறோம். ரகுவம்சம், குமார சம்பவம், நைஷதம், சிசுபாலவதம், கிராதார்ஜுனீயம் ஆகிய ஐந்தும் வடமொழியின் ஐம்பெருங்காப்பியங்கள் ஆகும். அதுபோல், தெலுங்கு மொழியில் ஐம்பெருங்காப்பியங்கள் உள்ளன ஆமுக்த மால்யத, மனு சரித்திரம், வசு சரித்திரம், பாரிஜாத அபகரணம், சிருங்காரநைஷதம் ஆகியவையே அந்த ஐந்து காப்பியங்கள்.
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
"அன்று ஆலிலைக் கண்ணனாக வந்து உலகங்களை உண்டு வயிற்றில் வைத்துக் காத்ததற்கும், இன்று திருமலையப்பனாக நின்று நான் உங்களைக் காப்பதற்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டான் மலையப்பன்.
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!
மார்கழி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசிவைகுண்ட ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.
ஆதிரை முதல்வனும் ஆருத்ரா தரிசனமும்
ஆருத்ரா தரிசனம்:30-12-2020
சனி பெயர்ச்சி பொதுப் பலன்கள்
நிகழும் மங்களகரமான ஸ்வஸ்தி ஸ்ரீசார் வரிவருஷம் தக்ஷிணாயணம் ஹேமந்தரிது மார்கழி மாதம் 11ம் நாள் இதற்குச் சரியான ஆங்கில தேதி 26.12.2020 அன்றைய தினம் பின்னிரவு 27.12.2020 தேதி முன்னிரவு தினசுத்தி அறிவது ஞாயிற்றுக்கிழமை முன்னிரவு சுக்ல துவாதசியும் க்ருத்திகை நக்ஷத்ரமும் அமிர்தயோகமும் ஸாத்ய நாமயோகமும் பாலவ கரணமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 57.04க்கு அதிகாலை 5.22க்கு தனுசு லக்னத்தில் சனி பகவான் தனுசுராசியிலிருந்து மகர ராசிக்கு (வாக்கியப் பஞ்சாங்கப்படி) ஆட்சியாக மாறுகிறார்.
சொர்ணாகர்ஷ்ண பைரவர்
பைரவர் திகம்பரராகத் திகழ்ந்த போதிலும் அன்பர்களுக்குப் பொன்னையும் பொருளையும் அள்ளித் தருபவர்.
தகட்டூர் காசி பைரவர்
இந்தியாவிலேயே அபூர்வமாக மிகச் சில இடங்களில் தான் பைரவருக்கென்று தனிக் கோயில் உள்ளது.
தஞ்சை பெரிய கோயிலில் உள்ள வாராஹியைப்பற்றி சொல்லுங்களேன்?
இன்றைய காலத்தோடு ஒப்பிடுகையில் 20 அல்லது 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீவித்யா உபாசகர்களைத் தவிர வாராஹியைப் பற்றி அறிந்தவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள்.
தீமைப்பிணி தீர உவந்த குருநாதா
அருணகிரிநாதரின் “கும்பகோண மொடாரூர்” எனத் துவங்கும் க்ஷேத்ரக் கோவைப் பாடலில், திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக குறிப்பிட்டிருக்கும் தலம் "திரு ஏடகம்'! மதுரையிலிருந்து NH 85 மேலக்கல் சாலையில் இருபது கி.மீ. பயணித்து, வைகை வட கரையிலுள்ள இத்தலத்தை அடையலாம்.
பயம் போக்கும் பைரவர்
சகல உலகங்களையும், அதில் அமைந்துள்ள திருத்தலங்களையும், அங்கு அமைந்துள்ள தீர்த்தங்களையும் காவல்புரிபவர் ஸ்ரீபைரவர் ஆவார்.
பைரவருக்கு ஏன் நாய் வாகனம்?
பைரவர் காவல் தெய்வமாக விளங்குவதால் காவல் குறியீடான நாயை வாகனமாகக் கொண்டுள்ளார். இந்த நாய் அவருக்குப் பின்புறம் குறுக்காகவும், அவருக்கு இடதுபுறம் நேராகவும் நிற்கின்றது. சில கலைஞர்கள் இந்த நாய் பைரவரின் கரத்திலுள்ள வெட்டுண்ட தலையிலிருந்து வடியும் இரத்தத்தைச் சுவைப்பதுபோலவும் அமைத்துள்ளனர்.
மீனாட்சியம்மையின் பிள்ளைத் தமிழ்
குமரகுருபரர் பாண்டிய நாட்டிலேயுள்ள ஸ்ரீவைகுண்டத்தில் சண்முக சிகாமணிக் கவிராயர் என்பாருக்கும் அவர்தம் துணைவியார் சிவகாமியம்மையாருக்கும் முன்தவப்பயனாய்த் தோன்றியவர்.
ஆபத்தை களையும் அஷ்ட பைரவர்கள்
காலபைரவாஷ்டமி 8 12 2020
இல்லந் தோறும் தெய்வீகம் நலங்கள் யாவும் அருளும் நவதீப எண்ணெய்
ஜோதி வடிவானவன் இறைவன் என்பதே இந்து தர்மத்தின் கருத்து. ஒளியாய் ஜொலித்தான் அருணாச்சலேஸ்வரன் அண்ணாமலையில். கனலில் கருவாகி புனலில் உருவானான் கந்தன் பொய்கையில். மகர ஜோதியாய் எழுகிறான் மணிகண்டன் சபரிமலையில். சுடர் ஒளியிலே அவதரித்தான் சுடலைஈசன் கயிலையில். ஒளிப்பெரும் சுடராக உருவாகிலிங்கமாய் முளைத்தான் கபாலீஸ்வரன் மயிலையில்.
காசி நகரம் பைரவ வழிபாடும்
சிவபெருமானின் திரிசூலத்தால் தாங்கப்படுவதும் எக்காலத்தும் அழியாததுமான நகரம் காசியாகும். காசியில் சிவபெருமான் எப்போதும் நீங்காது வாசம்புரிகிறார். அதனால், இது சிவவாசம் என்றும் போற்றப்படுகின்றது.
வைராவிச் சேவை
தென்மாவட்டங்களில் ஆலயங்களுக்கும் ஆலயத்தில் வீற்றிருக்கும் தெய்வங்களுக்கும் பாதுகாவலாகவும், வேண்டுமானால் தனது உயிரையும் கொடுக்கச் சபதம் பூண்ட பலர் இருந்தனர்.
அஷ்ட பைரவத் தலங்கள்
காசி நகரத்து அஷ்ட பைரவர்கள்
குருவாய்...நண்பனாய்...குழந்தையாய்!
இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்
சனியை கட்டுப்படுத்தும் மார்த்தாண்ட பைரவர்
பைரவர் மந்திர, யந்திர, தந்திர நாயகராவார். பூத வேதாள பிரேத பிசாசுக் கூட்டங்களை விரட்டும் பெருங்கருணை உடையவர்.
அனந்தனுக்கு 1000 நாமங்கள்!
(விடு பட்ட இந்த நாமத்தை இங்கு தருகின்றோம்)
கேந்திராதிபத்ய தோஷம் உண்டா?
ஆயுளைத் தீர்மானிக்கக் கூடிய சக்தி இறைவனுக்கு மட்டுமே உண்டு.
சுடரும் கலைமதி
பாதாள லோகத்தில் சகர புத்திரர்களின் அஸ்தியை தூய்மைப்படுத்தியதால் பாதாள கங்கை என்று பெயர். அபிராமி பட்டரால் இப் பாடலில் குறிப்பிடப்படுவது சிவகங்கையையே.
கல்லைத் தங்கமாக்கிய ஈசன்
வாதாபி, வில்வலன் என்ற இரண்டு அசுரர்களுக்கும் அஞ்சிய தேவர்கள், அகத்தியரால் அவர்கள் அழிக்கப்படும் வரையில் இத்தலத்தில் (புகல்) அடைக்கலமாக இருந்ததால் இவ்வூர் திருப்புகலூர் என வழங்கப்பட்டது.
எம்புதல்வா வாழி வாழி...
க்ஷேத்ரக் கோவைப் பாடலில் அடுத்தபடியாக அருணகிரியார் குறிப்பிடுவது ஆற்றுப் படைத்தலங்களுள் ஒன்றாகிய திருச்செந்தூரையே,
முருக வழிபாட்டின் நோக்கும் போக்கும்
[SYMBOL AND TRAVEL OF LORD MURUGA]
மூவாக்னி
உயிர்களின் உடலில் மூவகையான அக்னிகளும் உள்ளன. சிவாச்சாரியார், சிவபூசையில் வளர்க்கப்படும் யாகத்தீயுடன் இந்த மூன்று அக்னி தன்னுடலில் இருந்து எழுந்து கலப்பதாகப் பாவனை செய்து அதற்கான மந்திரங்களை ஓதுவதைக் காணலாம். இது பூதாக்கினி, பிந்துவாக்கினி, ஜடராக்கினி எனப்படும்.
துளசிதேவியை வழிபட்ட ராதாதேவி
பாண்டீரவனம் என்ற பெயர் கொண்ட அற்புத வனம் அது. தேவலோகமே பூமிக்கு வந்து விட்டதோ என்று மலைக்கச் செய்யும் எழில் கொஞ்சும் வனம்.மாலதி, மல்லிகை முல்லை, ஜாதி, இருவாச்சி, செண்பகம் என்று மலர்கள் பூத்துக் குலுங்கும் செடி கொடிகள். நறுமணம் கமழும் அந்த வனம் கண்ணுக்கும் கருத்துக்கும் இதம் தந்தது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. போதாக்குறைக்கு யமுனா நதியின் குளிர்ந்த இதமான வாடைக் காற்று. அப்பப்பா! சொல்லிக்கொண்டே போகலாம்....
மகிமைகள் நிறைந்த கார்த்திகை
பிரம்ம ஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா தமிழாக்கம்: ஸ்ரீமதி ராஜி ரகுநாதன்
திருமூலர் கூறும் அக்னி வழிபாடு
தமிழ் வேதமான பன்னிரு திருமுறைகளில் ஒன்றான திருமந்திரத்தில் திருமூலர் அக்னி வடிவமாக விளங் கும் சிவபெருமானின் வழிபாட்டையும் அதனால் பெறப்படும் பயனையும் விரிவாகக் கூறுகின்றார்.
சூழும் சுடர்க்கு நடுவே...
“வேலை நிலம் ஏழும்"