CATEGORIES
Kategorier
எம்.ஆர்.விஜயபாஸ்கரை தீவிரமாக தேடும் சிபிசிஐடி போலீசார்
கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அ.தி.மு.க.முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அண்ணாமலை வாயால் வடை சுடுகிறார் எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்: மு.க.ஸ்டாலின்
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலையொட்டி தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து தனது பேச்சை வீடியோவில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் போலீஸ் பாதுகாப்பு வளையத்தில் 42 கிராமங்கள்
8ந் தேதி பிரசாரம் ஓய்கிறது, 10ம் தேதி வாக்குப்பதிவு
காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி ஜீவா நகர் அரசு தொடக்கப்பள்ளியில் உணவுத்திருவிழா
காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி ஜீவா நகர் அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளி மாணவர்களின் உணவுத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது.
சேலத்தில் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை
சேலம் மாநகராட்சி தாதகாப்பட்டியை அடுத்த தாகூர் தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது 64).
திருவெண்ணெய்நல்லூர் அருகே பனப்பாக்கம் கிராமத்தில் கூரை வீடுகள் எரிந்து சேதம்
அமைச்சர் பொன்முடி நேரில் சென்று ஆறுதல் கூறினார்
இந்திய அணி வீரர்களை நேரில் சந்தித்து வாழ்த்திய பிரதமர் மோடி
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் 7,8-ந் தேதி உதயநிதி பிரச்சாரம்
திரளான கூட்டத்தை சேர்க்க முடிவு
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது சற்றுநேரத்தில் வெடிக்கும் என்றும் நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் இமெயில் மூலமாக மிரட்டல் விடுத்திருந்தார்.
முதல்வரை தன்னிசையாக செயல்படவிட்டால் மீண்டும் காமராஜர் வீடு கட்டும் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் : புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நாஜிம் கருத்து
புதுச்சேரி முதல்வரை தன்னிசையாக செயல்படவிட்டால், மீண்டும் காமராஜர் வீடு கட்டும் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் என, புதுச்சேரி முன்னாள் அமைச்சர் நாஜிம் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் வீரர்களை ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சி முதலமைச்சர், சபாநாயகர், அமைச்சர் பங்கேற்பு
புதுச்சேரி ஒலிம்பிக் அசோசியேஷன் சார்பில் சர்வதேச ஒலிம்பிக் தின விழா மற்றும் பாரிஸ் நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் 2024 போட்டியில் பங்கு பெற உள்ள இந்திய வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் 'சியர் பார் இந்தியா' நிகழ்ச்சி நேற்று லாஸ்பேட்டை உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
நீட் தேர்வை ரத்து செய்ய கோரி திமுக மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க.தலைவரும் முதல்அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித்திருமஞ்சன உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது
சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நீட் தேர்வு மாநில உரிமைகளுக்கு எதிரானது: த.வெ.க. தலைவர் விஜய் பேச்சு
நடிகர் விஜய் 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை தொடங் கியுள்ளார். கட்சி தொடங்கிய அறிவிப்பை கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
உத்தரபிரதேசத்தில் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பரிதாப பலி - சாமியார் போலேபாபா தலைமறைவு
உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் புல்ராய் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நேற்று இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. இந்த ஆன்மிக சொற்பொழிவை பாபா நாராயன் ஹரி என்ற சாஹர் விஷ்வஹரி போலே பாபா சாமியார் நடத்தினார்.
கள்ள சாராயம், போதை பொருட்கள் விற்பவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை
விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளசாராயம், போதை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுப்பது குறித்து ஆய்வு கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
மக்கள் அச்சமின்றி வாழ்கின்ற நிலையை உருவாக்கிட மத்திய அரசு புதிய சட்டங்களை அமல்படுத்தியுள்ளது-முதலமைச்சர் ரங்கசாமி பெருமிதம்
மக்கள் அச்சமின்றி வாழ்கின்ற நிலையை உருவாக்கும் நோக்கில், மத்திய அரசு புதிய சட்டங்களை அமல்படுத்தியு ள்ளது என, முதல மைச்சர் ரங்கசாமி பேசினார்.
குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் கட்டுமான பணி: ஒப்பந்தம் வெளியீடு
நாட்டின் 2வது ராக்கெட் ஏவுதளம் அமைக்க குலசேகரன்பட்டினத்தில் 2 ஆயிரத்து 233 ஏக்கர் நிலப்பரப்பை தமிழக அரசு ஒதுக்கி தந்துள்ளது.
தமிழக மீனவர்கள் கைது: வருகிற 5ந்தேதி ரெயில் மறியல் போராட்டம்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களையும்,அவர்களின் படகுகளையும் இலங்கை கடற்படை சிறைபிடிக்கும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது.
நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசிய சில பகுதிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்
பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 24ம் தேதி தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த 27ம் தேதி உரை நிகழ்த்தினார்.
ராகுல்காந்தி போல செயல்படாதீர்கள்: தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.,க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
நாடாளுமன்ற தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால், பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. பிரதமர் மோடி 3வது முறையாக பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் - சிறை அதிகாரி உள்பட 44-பேருக்குமணிதியான ஆணை
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் அமைச்சர் ராமச்சந்திரன் வழங்கினார்
நீலகிரி மாவட்டம், பந்தலூர் வட்டத்தில், பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார்
தேர்தல் செலவினங்கள் இறுதி செய்வது குறித்து ஒத்திசைவு கூட்டம்
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவினங்கள் இறுதி செய்வது குறித்து ஒத்திசைவு கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி தலைமையில், தேர்தல் செலவின பார்வையாளர் ராகுல் சிங்கானியா, முன்னிலையில் நடைபெற்றது.
டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு முதலமைச்சர் ரங்கசாமி வாழ்த்து
புதுவை முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது, 9வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்திருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது.
அடையாளம் இல்லாத எங்களை அடையாளப்படுத்தும் வகையில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கி வரும் முதல்வர் - புதுக்கோட்டை மாவட்ட பயனாளிகள் நெஞ்சார்ந்த நன்றி
\"கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு\" -திருக்குறள் உரிய சுருவி, உற்றகாலம் ஆற்றும் வகை, ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்வறிந்து செயல்படுபவனே சிறந்த அமைச்சன் என்ற வள்ளுவத்திற்க்கிணங்க ஏழை எளிய பொதுமக்களின் நலனில் அக்கறைகொண்டு அவர்களுக்கு தேவையானவற்றை ஆய்ந்தறிந்து உற்ற நேரத்தில் உரிய வகையில் வழங்கிட எண்ணற்றத் திட்டங்கனை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்கள்.
இரா.சம்பந்தன் மறைவு உலகெங்கிலும் வாழும் தமிழ்ச் சொந்தங்களுக்கு பேரிழப்பு: மு.க.ஸ்டாலின்
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைத் தமிழர்களின் முதுபெரும் அரசியல் தலைவர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மறைந்த செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
3வது முறையாக பதவியேற்றுள்ள பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த 24ந் தேதி தொடங்கியது.
பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு இன்று முதல் அமல்
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 1ந் தேதி நிர்ணயம் செய்த வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் முத்திரை கட்டணம் மற்றும் பதிவு ஆவண கட்டணத்தை, பதிவுகளுக்கு பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கிறது.