CATEGORIES
Kategorier
மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவர் மீது பாட்டிலால் தாக்குதல்: இரு மாணவர்கள் தலைமறைவு
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மாணவரை 'ராகிங்' செய்து பீர் பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பிச்சென்ற இரு மாணவர்கள் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிண்டி உயர் சிறப்பு மருத்துவமனையில் 11 துணை மருத்துவப் படிப்புகளுக்கு அனுமதி
கிண்டி கலைஞர் உயர் சிறப்பு மருத்துவமனையில் 11 துணை மருத்துவப் படிப்புகளை நிகழ் கல்வியாண்டு முதல் தொடங்க அரசு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் ஆயுஷ் துறையில் அளப்பரிய வளர்ச்சி
தமிழகத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் ஆயுஷ் மருத்துவத் துறை அளப்பரிய வளர்ச்சியை பெற்றுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையம் பெயர் மாற்றம்
நங்கநல்லூர் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு ஓடிஏ மெட்ரோ ரயில் நிலையம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
64 மருத்துவக் கல்லூரிகள் பங்கேற்ற தேசிய மருத்துவப் பயிலரங்கு
மருத்துவக் கல்லூரிகளுக்கு இடையேயான தேசிய பயிலரங்கம் 'ஜெனசிஸ்-24' என்ற தலைப்பில் சென்னை மருத்துவக் கல்லூரியில் தொடங்கியது.
மாணவர்களுக்கு கவிதை, கட்டுரைப் போட்டிகள்
தாய்மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கவிதை, கட்டுரை போட்டிகள் நடத்தப்படவுள்ளதாக மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் அறிவித்துள்ளது.
கவரைப்பேட்டை ரயில் விபத்து: தீவிரவாத சதிக்கான ஆதாரம் இல்லை
திருவள்ளூர் மாவட்டம், கவரைப்பேட்டை அருகே அக். 11-ஆம் தேதி பாக்மதி விரைவு ரயில், சரக்கு ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தின் பின்னணியில் தீவிரவாத சதி இருப்பதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை என்று தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தெரிவித்துள்ளது.
இந்தியா - சீனா படை விலக்கல் தொடக்கம்
கிழக்கு லடாக் எல்லையில் பிரச்னைக்குரிய டெம்சோக் மற்றும் டெப்சாங் சமவெளி பகுதிகளில் இருந்து படை களை விலக்கிக் கொள்ளும் நடவடிக்கையை இந்தியாவும் சீனாவும் தொடங்கியுள்ளதாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் வெள்ளிக்கிழமை (அக். 25) தெரிவித்தன.
தனியார் பள்ளியில் ரசாயன வாயு கசிவு: 45 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி
சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வெள்ளிக்கிழமை திடீரென அடையாளம் கண்டறியப்படாத ரசாயன வாயு கசிவு ஏற்பட்டதில் சுமார் 45 மாணவிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கல்வி - விளையாட்டுக்கு சமமான முக்கியத்துவம்
கல்வி, விளையாட்டு ஆகிய 2 துறைகளுக்கும் சரிசமமான முக்கியத்துவத்தை தமிழ்நாடு அரசு அளித்து வருவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
சென்னை எம்டிசி-க்கு 500 மின்சாரப் பேருந்துகள்
சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு மின்சாரத்தில் இயங்கக் கூடிய 500 பேருந்துகளை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தை, ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் பெற்றுள்ளது.
55 சதவீதம் அதிகரித்த காபி ஏற்றுமதி
இந்திய காபிக்கான தேவை சா்வதேச அளவில் அதிகரித்து வருவதால், நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் நாட்டின் காபி ஏற்றுமதி 55 சதவீதம் அதிகரித்துள்ளது.
இம்ரான் கான் மனைவி ஜாமீனில் விடுவிப்பு
பரிசுப் பொருள் முறைகேடு வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுடன் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அவரது மனைவி புஷ்ராபீபி (படம்), ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இஸ்ரேல் தாக்குதலில் 3 லெபனான் ராணுவத்தினர் உயிரிழப்பு
தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அந்த நாட்டு ராணுவ வீரர்கள் மூன்று பேர் உயிரிழந்தனர்.
இராக், சிரியாவில் துருக்கி வான்வழித் தாக்குதல்
ஆயுத தொழிற்சாலை தாக்குதலுக்குப் பதிலடி
மகளிர் ஒருநாள் கிரிக்கெட்: நியூஸி.யை வென்றது இந்தியா
நியூஸி லாந்து மகளிர் அணிக்கு எதி ரான முதல் ஒருநாள் கிரிக்கெட் டில், இந்திய மகளிர் அணி 59 ரன் கள் வித்தியாசத்தில் வியாழக்கி ழமை வெற்றி பெற்றது. இதைய டுத்து, 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முன்னிலை கண்டது.
உலக சாம்பியன் ஜெர்மனியை வெற்றி கண்டது இந்தியா
நடப்பு உலக சாம்பியன் ஜெர்மனிக்கு எதிரான 2-ஆவது ஹாக்கி ஆட்டத்தில் இந்தியா 5-3 கோல் கணக்கில் வியாழக்கிழமை வென்று அசத்தியது.
வாஷிங்டன் சுந்தர் சுழலில் சுருண்டது நியூஸிலாந்து
இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 259 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
வயநாடு வேட்பாளர் பிரியங்கா காந்தி: வாரிசு அரசியலுக்கு கிடைத்த வெற்றி
கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி களமிறக்கப்பட்டது, வாரிசு அரசியலுக்குக் கிடைத்த வெற்றி என்று பாஜக விமர்சித்துள்ளது.
நாடாளுமன்ற பொது கணக்குக் குழு முன் ஆஜராகாத 'செபி' தலைவர்: கூட்டம் ஒத்திவைப்பு
பங்குச் சந்தை ஒழுங்காற்று வாரியத்தின் (செபி) செயல்பாடுகள் குறித்து ஆராயும் நாடாளுமன்ற பொது கணக்குக் குழு முன் வாரியத் தலைவர் மாதபி புரி புச் வியாழக்கிழமை (அக்.24) ஆஜராகாமல் தவிர்த்தார்.
பாகிஸ்தானில் ஜாகீர் நாயக் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
இந்தியாவால் தேடப்படும் நபரான இஸ்லாமிய மத போதகர் ஜாகீர் நாயக், கிறிஸ்தவ மதத்தை நிந்தித்ததாக பாகிஸ்தானைச் சேர்ந்த கிறிஸ்தவ மத போதகர்கள் அந்த நாட்டு அதிபர் மற்றும் பிரதமருக்கு புகார் அனுப்பியுள்ளனர்.
எல்லையில் இயல்பு நிலையை மீட்பதில் இந்தியா-சீனா கருத்தொற்றுமை
இந்திய-சீன எல்லையில் இயல்புநிலையை மீட்டெடுப்பதில் இரு நாடுகளுக்கும் இடையே பரந்த கருத்தொற்றுமை எட்டப்பட்டுள்ளது என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தெரிவித்தாா்.
போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: நிதின் கட்கரி
போக்குவரத்து விதிமீறல்களைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உள்ளிட்ட புதுமை தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய நெடுஞ்சாலை, போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
எந்த நாடும் இந்தியாவைப் புறக்கணிக்க முடியாது
அமெரிக்கா, சீனா உள்பட எந்த நாடும் புறக்கணிக்க முடியாத இடத்தில் இன்று இந்தியா உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
தடைக்குப் பிறகும் தொடரும் புல்டோசர் நடவடிக்கை: அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தடைக்குப் பிறகும் புல்டோசர் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் மாநில அரசுகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுப்பு தெரிவித்தது.
கேரளத்தில் ஜிஎஸ்டி மோசடி: சோதனையில் 104 கிலோ தங்கம் பறிமுதல்
கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்தில் நகை உற்பத்தியாளர்களிடம் சரக்கு மற்றும் சேவைவரி (ஜிஎஸ்டி) துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.75 கோடி மதிப்பிலான 104 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
உ.பி. இடைத்தேர்தலில் காங்கிரஸ் போட்டியில்லை
உத்தர பிரதேசத்தில் 9 பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டி யிடப்போவதில்லை என்று காங்கிரஸ் வியாழக்கிழமை அறிவித்தது.
முதல் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ் பிருத்விராஜ் சவான், நானா படோல் போட்டி
மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 48 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை காங்கிரஸ் வியாழக்கிழமை வெளியிட்டது.
கரையைக் கடந்தது 'டானா' புயல்
'டானா' புயல் ஓடிஸாவின் திரபாரா மாவட்டத்தின் பிதர்க னிகா தேசிய பூங்கா மற்றும் பத்ரக் மாவட்டத்தின் தாம்ரா துறைமு கம் இடையே வியாழக்கிழமை நள்ளிரவு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை கரையைக் கடந்தது.
ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநருக்கு ப.சிதம்பரம் கண்டனம்
முதல்வர் இல் லாமல் பாதுகாப்பு ஆய்வுக் கூட்டத்தை நடத்திய ஜம்மு காஷ் மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவின் நடவடிக்கைக்கு முன் னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்ப ரம் கண்டனம் தெரிவித்தார்.