CATEGORIES
Kategorier
தஞ்சாவூர் ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் கண்டிப்பு
தஞ்சாவூர் மாவட்டஆட்சியர், ஆட்சியராக இருக்கவே தகுதியற்றவர் என்று கண்டனம் தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் அக்.28-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.
தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 150 இடங்கள் அதிகரிப்பு
தமிழகத்தில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் நிகழாண்டில் 150 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரித்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
கருணாநிதி நினைவு நாணயம்: அரசியல் நோக்கம் இல்லை
முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு நாணயம் வெளியிட்டதில் எந்த அரசியல் நோக்கமும் கிடையாது என்று மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சா் எல். முருகன் கூறினாா்.
பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: முதன்மைக் கல்வி அலுவலர் விசாரணை
கிருஷ்ணகிரி அருகே 8-ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் விசாரணை மேற்கொண்டு வருவதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு தெரிவித்தாா்.
செயற்கைக்கோள் உருவாக்கிய எஸ்ஆர்எம் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
எஸ்.ஆா்.எம்.பப்ளிக் பள்ளி மாணவா்கள் உருவாக்கிய செயற்கைக் கோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பை உறுதி செய்ய தலைமைச் செயலர் உத்தரவு
கொல்கத்தாசம் பவத்தின் எதிரொலியாக, தமிழ கத்தில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என தலைமைச் செயலர் நா.முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார்.
வாக்காளர் விவரம் சரிபார்ப்பு பணி: சென்னையில் இன்று தொடக்கம்
சென்னை மாவட்டத்துக்குட்பட்ட அனைத்து வாக்காளர் விவரங்க ளையும் சரிபார்க்கும் பணி செவ்வாய்க்கிழமை (ஆக.20) தொடங்கவுள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ்: தரவரிசைப் பட்டியல் வெளியீடு
நாமக்கல் பள்ளி மாணவர் பி.ரஜனீஷ் முதலிடம்
புதிய தலைமைச் செயலராக நா.முருகானந்தம் பொறுப்பேற்பு
தமிழக அரசின் 50-ஆவது தலைமைச் செயலராக நா. முருகானந்தம் இன்று பொறுப்பேற்றார்.
திமுக ஆட்சியைக் காப்பாற்றவே மத்திய அமைச்சரை அழைத்து விழா
திமுக ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவே, மத்திய அமைச்சரை அழைத்து கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழா நடத்தப்பட்டதாக அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கூறியுள்ளாா்.
பாஜகவுடன் ரகசிய உறவு இல்லை
பாஜகவுடன் ரகசியமாக உறவு வைக்க வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை என்று முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா்.
கமலா ஹாரிஸைவிட நான் அழகானவன்
அமெரிக்க அதிபா் தோ்தலில் என்னை எதிா்த்துப் போட்டியிடும் கமலா ஹாரிஸைவிட நான் அழகானவன் என்று குடியரசுக் கட்சி வேட்பாளா் டொனால்ட் டிரம்ப் பேசினாா்.
தொடரைக் கைப்பற்றியது தென்னாப்பிரிக்கா
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த ஆட்டம் 3 நாள்களில் முடிவுக்கு வந்தது.
அரையிறுதியில் மோதும் சின்னர் - ஸ்வெரெவ்
மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியான சின்சினாட்டி ஓபன் அரையிறுதியில், உலகின் நம்பா் 1 வீரரான இத்தாலியின் யானிக் சின்னா், 3-ஆம் நிலை வீரரான ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் ஆகியோா் பலப்பரீட்சை நடத்துகின்றனா்.
குவைத் பிரதமருடன் எஸ்.ஜெய்சங்கர் சந்திப்பு
குவைத் பிரதமர் ஷேக் அகமது அப்துல்லா அல்-அகமது அல்-ஜபீர் அல்-ஷபா, பட்டத்து இளவரசர் ஷேக் ஷபா அல்-கலீத் அல்-ஷபா ஆகியோரை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் ஞாயிற்றுக்கிழமை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
அகதிகளுக்கு குடியுரிமை மறுத்த காங்கிரஸ் அரசுகள்
காங்கிரஸ் தலைமையிலான முந்தைய அரசுகளின் ஒருதரப்பினரை திருப்திப்படுத்தும் கொள்கையால், நம் நாட்டில் ஏராளமான அகதிகளுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
வரலாற்றில் அழிக்க முடியாத முத்திரையைப் பதித்தவர் கருணாநிதி
வரலாற்றில் அழிக்க முடியாத முத்திரையைப் பதித்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
அக்.2-இல் போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக். 2-ஆம் தேதி மது, போதைப் பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் கூறினார்.
தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை
தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறினார்.
சென்னையில் ஹம்சத்வனி அமைப்பின் ஆண்டு விழா
’கலாசார அமைப்பான ஹம்சத்வனியின் முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துகள்' என்று அதன் ஆண்டு விழாவில் பங்கேற்ற மேகாலய உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ். வைத்தியநாதன் தெரிவித்தார்.
பள்ளி மேலாண்மைக் குழு புதிய உறுப்பினர்கள் விவரம் பதிவேற்ற கல்வித் துறை உத்தரவு
தமிழக அரசு தொடக்கப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் பள்ளி மேலாண்மைக் குழுக்களுக்கு புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அது குறித்த விவரங்களை 'எமிஸ்' தளத்தில் பதிவேற்ற பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் சர்வதேச காற்றாடி திருவிழா நிறைவு
மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் கடந்த 15-ஆம் தேதி தொடங்கிய சர்வதேச காற்றாடித் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நிறைவு பெற்றது.
பெண் மருத்துவர் படுகொலை: உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணை
கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து செவ்வாய்க்கிழமை (ஆக. 20) விசாரணை மேற்கொள்ள உள்ளது.
ஐஏஎஸ் பணிகளை தனியார்மயமாக்குவதே மோடியின் உத்தரவாதம்
மத்திய அமைச்சகங்களில் காலியாக உள்ள உயர்பதவிகளில் ஐஏஎஸ் அதிகாரிகளுக்குப் பதில் தனியார் துறைகளைச் சேர்ந்த வல்லுநர்களை நேரடி நியமனம் (லேட்டரல் என்ட்ரி) செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு மக்கள் விரோத எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை கண்டனம் தெரிவித்தார்.
தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா மாற்றம்
தமிழக தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா தமிழ்நாடு கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத் தலைவராக மாற்றப்பட்டுள்ளாா்.
மத்தியில் நிலையான ஆட்சிக்கு பங்களித்தவர் கருணாநிதி
கட்சி, சித்தாந்த கோட்பாடுகளைத் தாண்டி, மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சிக்கு ஆக்கபூர்வ பங்களிப்பைத் தந்தவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டினார்.
காங்கேசன்துறையிலிருந்து நாகை திரும்பியது பயணிகள் கப்பல்
இலங்கை காங்கேசன்துறைமுகத்துக்கு 44 பயணிகளுடன் வெள்ளிக்கிழமை புறப்பட்ட ‘சிவகங்கை’ பயணிகள் கப்பல், நாகை துறைமுகத்துக்கு சனிக்கிழமை திரும்பி, முதல் பயணத்தை நிறைவு செய்தது.
'குரங்கு அம்மையால் உலகத்துக்கே ஆபத்து!'
ஆப்பிரிக்காவில் பரவி வரும் குரங்கு அம்மை நோயைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் அந்த நோய் உலகம் முழுவதும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
'இதுவரை இல்லாத நெருக்கத்தில் காஸா ஒப்பந்தம்’
காஸா போா் நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கான தருணம் இதுவரை இல்லாத அளவுக்கு மிக நெருக்கத்தில் உள்ளதாக அமெரிக்க அதிபா் ஜோ பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.
காலிறுதியில் ஸ்வியாடெக், சபலென்கா, சின்னர், ருனே
சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் போட்டி காலிறுதிச் சுற்றுக்கு மகளிர் பிரிவில் ஸ்வியாடெக், சபலென்கா, ஆன்ட்ரீவா, சாம்ஸோனாவா, ஜெஸிக்கா பெகுலா, பாவ்லா படோஸா, ஆடவர் பிரிவில் ஜேனிக் சின்னர், அலெக்ஸ் வெரேவ், ஹோல்கர் ருனே, ருப்லேவ், பென் ஷெல்டன் ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.