CATEGORIES
Kategorier
பாம்பன் புதிய ரயில் பாலம் அக்டோபரில் திறப்பு: தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்
மண்டபம் - ராமேசுவரம் இடையே பாம்பனில் கட்டப்பட்டு வரும் புதிய ரயில் பாலம் வரும் அக்டோபர் மாதம் திறக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் கூறினார்.
ரிப்பன் மாளிகையில் தேசியக் கொடியேற்றிய மேயர்
சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் மேயர் ஆர். பிரியா வியாழக்கிழமை தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார்.
ஆளுநர் தேநீர் விருந்து: முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு
சுதந்திர தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில், முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.
முதல்வர் மருந்தகம், முன்னாள் ராணுவ வீரர்களுக்கு புதிய திட்டம்
குறைந்த விலையில் மருந்துகள் வழங்க முதல்வர் மருந்தகம்' எனும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
அஸ்ஸாம்: 24 இடங்களில் வெடிகுண்டு வைத்த 'உல்ஃபா' தீவிரவாதிகள்
சுதந்திர தினத்தை முன்னிட்டு அஸ்ஸாமில் 24 இடங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவங்களை நிகழ்த்த அஸ்ஸாமின் ஐக்கிய விடுதலை முன்னணி (உல்ஃபா) தீவிரவாத அமைப்பின் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டது.
மதச்சார்பற்ற சிவில் சட்டம் கட்டாயம்
‘‘மதவாத’ சிவில் சட்டத்தில் இருந்து ‘மதச்சாா்பற்ற’ சிவில் சட்டத்துக்கு மாற வேண்டியது காலத்தின் தேவை’ என்று சுதந்திர தின உரையில் பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
போராட்ட மரணங்கள் தொடர்பாக போர்க் குற்ற நீதிமன்றத்தில் வழக்கு
வங்கதேசத்தில் இடஒதுக்கீடு சீா்திருத்தத்தை வலியுறுத்தி மாணவா்கள் நடத்திய போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கானவா்கள் கொல்லப்பட்டதற்குக் காரணமானவா்கள் மீது, போா்க் குற்றங்களை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர அந்த நாட்டின் இடைக்கால அரசு முடிவு செய்துள்ளது.
ஜெர்ஸி எண் ‘16' விடுவிப்பு: ஸ்ரீஜேஷுக்கு ஹாக்கி இந்தியா கௌரவம்
இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கோல்கீப்பா் பி.ஆர்.ஸ்ரீஜேஷ் சமீபத்தில் ஓய்வுபெற்ற நிலையில், அவரை கௌரவிக்கும் விதமாக அவரின் ஜெர்சி எண் ‘16’-ஐ ஹாக்கி இந்தியா அமைப்பு புதன்கிழமை விடுவித்தது.
ராணுவ கேப்டன் வீரமரணம்; பயங்கரவாதி சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ கேப்டன் வீரமரணமடைந்தாா்.
சிபிஐ விசாரணை தொடக்கம்
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடியு செய்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையை சிபிஐ புதன்கிழமை தொடங்கியது.
மாநில அந்தஸ்து வழங்கக் கோரி புதுவை பேரவையில் தீர்மானம்
மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, புதுவை சட்டப்பேரவையில் 15-ஆவது முறையாக புதன்கிழமை அரசு சாா்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
29 மாவட்டங்களில் மரகதப் பூஞ்சோலைகள்
தமிழகத்தில் ஆலைக் கழிவுகளின் செயல்பாடுகளைக் கண்காணிக்கும் சூழல் கண்காணிப்பு மையம், 29 மாவட்டங்களில் மரகதப் பூஞ்சோலைகள் ஆகியவற்றை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தாா்.
பாடநூல்கள் விலை உயர்வு: அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்
காகிதம், அச்சுக் கூலி உயா்வு காரணமாகவே பாடநூல்களின் விலை உயா்த்தப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளாா்.
2,500 கோயில்களின் திருப்பணிக்கு நிதி: முதல்வர் வழங்கினார்
தமிழகத்தில் கிராமப்புறம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள 2,500 கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ளத் தேவையான நிதியை முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் வழங்கினாா்.
கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு நிகழ்வில் பங்கேற்பேன்
முதல்வா் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் அழைப்புவிடுத்ததால், முன்னாள் முதல்வா் கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவில், தான் பங்கேற்கவுள்ளதாக தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை கூறினாா்.
திராவிட சித்தாந்தம் நாட்டை துண்டாட விரும்புகிறது
திராவிட சித்தாந்தம் நாட்டை துண்டாட விரும்புகிறது என்று ஆளுநர் ரவி கூறினார்.
6,000 நோயாளிகளுக்கு அப்பல்லோவில் ரோபோடிக் அறுவை சிகிச்சை
நாட்டிலேயே 6,000 ரோபோடிக் அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட மருத்துவமனையாக அப்பல்லோ மருத்துவக் குழுமம் உருவெடுத்துள்ளது.
நெடுஞ்சாலைத் துறையில் 180 பேர் பணி நியமனம்
நெடுஞ்சாலைத் துறைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள 180 பேருக்கு பணி நியமன உத்தரவுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்: உச்சநீதிமன்றம் மறுப்பு
மதுபான விற்பனை தொடர்பான கலால் கொள்கை முறைகேடு வழக்கில், தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க உச்சநீதிமன்றம் புதன்கிழமை மறுத்துவிட்டது.
செங்கோட்டையில் 11-ஆவது முறையாக தேசியக் கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி
நாட்டின் 78-ஆவது சுதந்திர தினத்தை யொட்டி, தில்லிசெங்கோட்டையில் வியாழக்கிழமை (ஆக.15) தேசியக் கொடியை ஏற்றிவைத்து, நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்.
அடுத்தகட்ட பொருளாதார வளர்ச்சிக்கு அடித்தளம்
‘மத்திய அரசின் திறன்மிக்க நடவடிக்கைகளால், அடுத்த தலைமுறைக்கான பொருளாதார வளா்ச்சிக்கு அடித்தளமிடப்பட்டுள்ளது’ என்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்தார்.
கோவையில் 5 நாடுகளின் போர் விமானங்கள் சாகசம்!
கோவை அருகே சூலூா் விமானப் படை தளத்தில் நடைபெற்ற 5 நாடுகளின் போா் விமானங்களின் சாகசம் பாா்வையாளா்களை வியப்பில் ஆழ்த்தியது.
வங்கதேசம்: ஷேக் ஹசீனா மீது கொலை வழக்கு
வங்கதேசத்தில் பிரதமா் பதவியிலிருந்து கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட ஷேக் ஹசீனா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வளரும் விருட்சங்கள்: பாரீஸ் ஒலிம்பிக் தந்த பாடம்
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவின் பதக்கங்கள் 1 வெள்ளி, 5 வெண்கலம் என 6.
அறிவியல் ஆராய்ச்சியில் அரசு பெருமளவில் முதலீடு - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
அறிவியல் ஆராய்ச்சிப் பணிகளில் மத்திய அரசு பெருமளவில் முதலீடு செய்துள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இந்தியாவை வளர்ந்த நாடாக்க இளைஞர்களுக்கு அமித்ஷா அழைப்பு
2047ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக்கும் நோக்கத்தில் இணைந்து பணியாற்ற இளைஞர்கள் முன்வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு விடுத்தார்.
சுதந்திர தினம்: நாளை கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியேற்றுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சுதந்திர தினத்தை யொட்டி, கோட்டை கொத்தளத்தில் வியாழக்கிழமை (ஆக. 15) தேசியக் கொடியை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏற்றி வைத்து உரையாற்றுகிறார்.
போலி ஜாதிச் சான்றிதழ் விவகாரம்: தோளப்பள்ளி ஊராட்சித் தலைவர் தகுதி நீக்கம்
வேட்பு மனுவுடன் போலி ஆதிதிராவிடா் ஜாதி சான்றிதழ் அளித்து தேர்தலில் வெற்றி பெற்ற விவகாரத்தில் வேலூர் மாவட்டம், தோளப்பள்ளி ஊராட்சித் தலைவா் கல்பனா சுரேஷை தகுதிநீக்கம் செய்து ஊரக வளர்ச்சி துறை கூடுதல் முதன்மை செயலாளா் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
வருவாய், கல்வித் துறை திட்டங்கள் - மேயர் பிரியா தொடங்கி வைத்தார்
சென்னை மாநகராட்சியின் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்த வருவாய்த் துறை, கல்வித் துறை சார்ந்த திட்டங்களை செவ்வாய்க்கிழமை மேயர் பிரியா தொடங்கிவைத்தார்.
ஆக.16-இல் விண்ணில் பாய்கிறது எஸ்எஸ்எல்வி டி-3
புவி கண்காணிப்புக்கான ஐஓஎஸ்-08 செயற்கைக்கோளுடன் எஸ்எஸ்எல்வி டி-3 ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து வரும் 16-ஆம் தேதி விண்ணில் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.