CATEGORIES
Kategorier
ஐரோப்பிய கார் சாம்பியன்ஷிப் ரேஸில் பங்கேற்கிறார் அஜித்
இந்தியா முழுவதும் பைக்கில் சுற்றுப்பயணம் செய்த அஜித், அடுத்த கட்டமாக உலகம் முழுவதும் பயணம் செய்ய திட்டமிட்டு உள்ளார்.
அதிமுகவில் உறுப்பினர் அட்டை வழங்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் - எடப்பாடி அறிக்கை
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
பக்கத்து வீட்டுக்காரருடன் காம்பவுண்ட் சுவர் பிரச்னை நடிகை திரிஷா தொடர்ந்த வழக்கு முடித்துவைப்பு - ஐகோர்ட் உத்தரவு
மதில்சுவர் தொடர்பாக அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட பிரச்னையில் சமரசம் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டதையடுத்து நடிகை திரிஷா தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
விவாகரத்துக்கு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் மனைவி ஆர்த்தி மீது நடிகர் ஜெயம் ரவி போலீசில் புகார்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான ஜெயம் ரவி சில நாட்களுக்கு முன்பு 18 ஆண்டு கால திருமண பந்தத்தில் இருந்து விலகுவதாக அறிவிப்பு வெளியிட்டார்.
பழச்சாறில் சிறுநீர் கலந்ததாக சர்ச்சை உ.பி.யில் உணவகங்களில் சிசிடிவி கட்டாயம் முதல்வர் ஆதித்யநாத் உத்தரவு
உத்தரப்பிரதேசத்தில் உணவகங்களில் சிசிடிவி பொருத்துவதை கட்டாயமாக்கி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
வழக்கு தொடர ஆளுநரின் அனுமதிக்கு எதிரான கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனு தள்ளுபடி உயர் நீதிமன்ற தீர்ப்பால் பரபரப்பு
காங்கிரஸ் மூத்த தலைவரான கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதியின் 3.16 ஏக்கர் நிலத்தை வீட்டுமனை திட்டத்திற்கு பயன்படுத்தியதற்காக மாற்று நிலமாக 14 வீட்டுமனைகளை மைசூரு நகர வளர்ச்சி ஆணையம் (மூடா) ஒதுக்கியிருந்தது.
ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டு 2 போலீசாரை கொன்ற ரவுடி சுட்டுக் கொலை - உத்தரபிரதேச போலீஸ் அதிரடி
மதுபான கடத்தலை தடுத்த போது ஓடும் ரயிலில் 2 கான்ஸ்டபிள்களை தள்ளிவிட்டு கொன்ற ரவுடியை உத்தரபிரதேச போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர்.
நடிகை பலாத்கார வழக்கில் சிக்கிய மலையாள நடிகர் முகேஷ் கைது தலைமறைவான நடிகர் சித்திக்கை பிடிக்க போலீசார் தீவிரம்
மலையாள நடிகைகள் உள்பட பெண் கலைஞர்களுக்கு எதிரான பாலியல் புகார்கள் குறித்து விசாரணை நடத்திய ஹேமா கமிட்டி அறிக்கை வெளிவந்த பின்னர் மலையாள நடிகர்கள், தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள் உள்பட சினிமா கலைஞர்கள் மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் கூறப்பட்டன.
மகனுக்கு குத்துச்சண்டை பயிற்சி தாயை ஆபாச படமெடுத்து மிரட்டல் பல லட்சம் ரூபாய், நகை பறித்த பயிற்சியாளர்கள்
மதுரை, அண்ணா நகரை சேர்ந்த 39 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், விளக்குத்தூண் போலீஸ் உதவி கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: 10 ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்து தனியாக தையல் கடை வைத்து வாழ்ந்து வருகிறேன்.
மணல் குவாரி அனுமதி பெற்று தருவதாக செல்லூர் ராஜூ பெயரில் ₹6.80 கோடி மோசடி அதிமுக கவுன்சிலருக்கு வலை: 3 பேர் கைது - தொழிலதிபர் தற்கொலை முயற்சி
மணல் குவாரி உரிமம் பெற்றுத் தருவதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பெயரைப் பயன்படுத்தி, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த குவாரி உரிமையாளரிடம் ரூ.6.80 கோடி மோசடி செய்தது தொடர்பாக, மதுரை அதிமுக கவுன்சிலர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
7 வயது மகளை கொன்று கணவன், மனைவி தற்கொலை
அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு
மாணவி கூட்டு பலாத்கார புகாரில் உண்மையில்லை - திண்டுக்கல் எஸ்பி பேட்டி
தேனி மாவட்டத்தை சேர்ந்த மாணவி ஒருவர், தனியார் நர்சிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், திண்டுக்கல் ரயில்நிலைய பாதுகாப்பு பணி போலீசாரை நேற்று முன்தினம் காலை சந்தித்து, தன்னை தேனி பழைய பஸ் நிலையம் அருகே அடையாளம் தெரியாத மர்மநபர்கள் காரில் கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்ததாகவும், பின்னர் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் இறக்கி விட்டு சென்றதாகவும் தெரிவித்திருந்தார்.
நிதி நிறுவனம் ₹250 கோடி மோசடி சேர்மன், நிர்வாக இயக்குநர் கைது - 2 வீடுகள், 4 ஆபீஸ்களுக்கு சீல்
அதிக வட்டி கொடுப்பதாக ஆசைகாட்டி, பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டவர்களின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தினர்.
தேசிய பூரண மதுவிலக்கை கொண்டு வந்தால் ஏற்க தயார் மதுக்கடைகளை குறைக்க பட்டியல் தயாரித்துள்ளோம் - அமைச்சர் சு.முத்துசாமி தகவல்
தமிழ்நாட்டில் மதுக்கடைகளை குறைக்க பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சு.முத்துசாமி தெரிவித்தார். ஈரோட்டில் தமிழ்நாடு வீட்டு வசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
முதல்வர் வெளிநாடுகளுக்கு சென்று ஈர்த்து வருகிறார் அதிகாரிகளின் பொறுப்பின்மையால் திரும்பி போகும் முதலீட்டாளர்கள் - ஐகோர்ட் கிளை நீதிபதிகள் வேதனை
தமிழ்நாடு முதல்வர் வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈர்த்து வருகிறார். அதிகாரிகளின் பொறுப்பின்மையால் முதலீடு செய்வோர் திரும்பி செல்கின்றனர்’ என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர்.
பழநி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சை கருத்து சினிமா இயக்குனர் மோகன் ஜி கைது
பழநி பஞ்சாமிர்தம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் திரைப்பட இயக்குனர் மோகன் ஜி சென்னையில் நேற்று கைது செய்யப்பட்டார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்திற்கு பயன்படுத்தப்படும் நெய்யில், பன்றி கொழுப்பு, மாட்டு கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலக்கப்பட்டதாக எழுந்த புகார் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனைக்கு இந்திய பசுமை கட்டிட கவுன்சிலின் தங்க தரச்சான்று பதக்கம் பெற்றார் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு
கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு பசுமை கட்டிடத்திற்கான இந்திய பசுமைக் கட்டிட கவுன்சிலின் தங்க தரச்சான்று வழங்கப்பட்டது.
கூட்டணியை விமர்சித்து சர்ச்சையாக பேசிய விசிக துணைப்பொதுச்செயலாளருக்கு ரவிக்குமார், வன்னியரசு கண்டனம்
விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கருத்துக்கு விசிக முக்கிய தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சென்னை ஐஐடியில் டேட்டா சயின்ஸ், ஏஐ சான்றிதழ் படிப்பு
சென்னை ஐஐடியில் டேட்டா சயின்ஸ், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் என்ற இரண்டு சான்றிதழ் படிப்பு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.
ரேஸ் கிளப் தொடர்ந்த வழக்கை அவசரமாக விசாரிக்க கோரி மனு - சென்னை ஐகோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு
குத்தகை பாக்கி 730 கோடி ரூபாய் செலுத்தாததை அடுத்து, சென்னை ரேஸ் கிளப்புக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட 160 ஏக்கர் நிலத்துக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்றும் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
பிக்-அப் பாயிண்ட் திடீர் மாற்றம், இருசக்கர வாகனங்கள் நுழைய தடை - அல்லல்படும் சென்னை விமான நிலைய பயணிகள்
சென்னை விமான நிலையம் தமிழகத்தில் முக்கிய விமான நிலையமாக இருந்து வருகிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டுக்குள் விமானம் மூலம் பயணிக்கின்றனர்.
அண்ணா பிறந்த மண்ணில் பவள விழாவை கொள்கை கூட்டணியுடன் கொண்டாடுவோம் - தொண்டர்களுக்கு முதல்வர் கடிதம்
திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின்தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: செப்டம்பர் 28ம் நாள், பேரறிஞர் பிறந்த காஞ்சி மண்ணில் பவள விழா கொண்டாடப்படுகிறது.
நான் முதல்வன் திட்டம் தொடங்கப்பட்ட பிறகே குடிமைப்பணி தேர்வுகளில் தமிழக மாணவர்கள் பங்கேற்பது அதிகரித்துள்ளது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான உண்டு உறைவிடப்பயிற்சி மற்றும் நான் முதல்வன் குடிமைப்பணி தேர்வுகளுக்கான படிப்பகம், தமிழ்நாடு மற்றும் இந்திய அளவிலான திறன் போட்டிகள், நிரல் திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகை மற்றும் சான்று வழங்கும் விழா சென்னையில் நேற்று நடந்தது.
சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக கே.ஆர்.ஸ்ரீராம் 27ம் தேதி பதவியேற்பு
மும்பை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியாக உள்ள கே.ஆர். ஸ்ரீராமை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்தது.
அண்ணாமலைக்கு எதிராக ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் ஆலோசனை - பாஜ வட்டாரத்தில் திடீர் பரபரப்பு
தமிழகத்தில் தொடர் தோல்வியால் கட்சி மேலிடம் அதிருப்தி
சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரலாக முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி நியமனம்
சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரலாக சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி நியமிக்கப்பட்டுள்ளார்.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக் கடல் பகுதியில், வடக்கு ஆந்திரா-தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
புதிய உச்சத்தை தொட்டது தங்கம் விலை முதன்முறையாக கிராம் ₹37,000க்கு விற்பனை
தங்கம் விலை நேற்று புதிய உச்சத்தை தொட்டது. முதன்முறையாக கிராம் ரூ.7 ஆயிரத்தை தொட்டு, ஒரு சவரன் ரூ.56000க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் நகை வாங்குவோர் கலக்கம் அடைந்தனர்
கவிஞர் மு.மேத்தா, பாடகி பி.சுசீலாவுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுகள் முதல்வர் மு.க.ஸ்டாலின் 30ம் தேதி வழங்கி கவுரவிக்கிறார்
இத்துடன், சிறப்பினமாகப் பெண்மையைப் போற்றும் வகையில் கூடுதலாக ஒரு பெண் திரைக்கலைஞருக்கும் இந்த விருதினை வழங்கிச் சிறப்பித்திட முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 11ம் தேதி உத்தரவிட்டுள்ளார்.
பலி எண்ணிக்கை 558 ஆக உயர்வு - லெபனான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்
லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் பலியானோர் எண்ணிக்கை 558ஆக உயர்ந்து விட்டது.