CATEGORIES
Kategoriler
தமிழகம், புதுச்சேரியில் 3 நாள் மழை பெய்ய வாய்ப்பு
வானிலை ஆய்வு மையம் தகவல்
ஜனவரியில் ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 டிக்கெட் இணையத்தில் வெளியீடு
வரும் ஜனவரி மாதத்தில் ஏழுமலையானை தரிசிப்பதற்கான ரூ.300 டிக்கெட்களை இணைய வழியில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று வெளியிட்டது.
வாஜ்பாயின் 96-வது பிறந்த நாள் பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்
முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் கடந்த 1924-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி பிறந்தவர். கடந்த 1996, 1998-99 மற்றும் 1999 2004 என 3 முறை பிரதமர் பதவி வகித்தார் வாஜ்பாய். கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி காலமானார்.
ரஜினி, கமல் கட்சிகளால் திமுக கூட்டணிக்கு பாதிப்பில்லை: முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் தேனி மாவட்டம் போடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேர்தலுக்கு பிறகு தே.ஜ.கூட்டணியின் முதல்வரே அரியணை ஏறுவார்: எல்.முருகன்
கள்ளக்குறிச்சியில் பாஜக அணி மற்றும் பிரிவு நிர்வாகிகள் மாநாடு நேற்று நடைபெற்றது. இம் மாநாட்டில் பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் பேசியது:
சபரிமலைக்கு தினமும் 5,000 பக்தர்கள் அனுமதி உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரி மனு
சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினமும் 5,000 பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
தடுப்பூசி போட்டு கொண்ட சவுதி பட்டத்து இளவரசர்
தடுப்பூசி போட்டுக் கொண்ட, சவுதி பட்டத்து இளவரசர் மொகமது பின் சல்மான்.
திருவள்ளூர் மாவட்ட பகுதிகளில் 4 இடங்களில் அம்மா மினி கிளினிக் திறப்பு
மக்கள் அனைவருக்கும் விரிவான மருத்துவ வசதி அளிக்கும் பொருட்டு, கிராம ஊராட்சிகள் மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் மக்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் கிடைப்பதற்காக அம்மா மினி கிளினிக்குகளை தமிழக அரசு தொடங்கி வருகிறது.
திருவண்ணாமலையில் 10-வது மாதமாக பவுர்ணமி கிரிவலம் செல்லதடை
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையை பவுர்ணமி நாளில் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபடுவது வழக்கம்.
கரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தோர் 95.78% ஆக உயர்வு
நாடு முழுவதும் நேற்று 22,273 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அவர்களையும் சேர்த்து இதுவரை 1,01,69,118 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 97,40,108 பேர் குணமடைந்துள்ளனர். தேசிய அளவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 95.78 சதவீதமாக உயர்ந்துள்ளது.
கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 2.81 லட்சமாக குறைந்தது
நாடு முழுவதும் நேற்று 23,067 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அவர்களையும் சேர்த்து இதுவரை 1,01,46,845 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அழகிரி கட்சி ஆரம்பித்தாலும் திமுகவுக்கு பாதிப்பில்லை: கனிமொழி
விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் திமுகவினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதன்படி சிவகாசி, விருதுநகரில் நேற்று பிரச்சாரம் செய்தார்.
2021-ல் ஹெச்.ராஜாவை தமிழக அமைச்சராக்குவோம்: அண்ணாமலை
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பாஜக தேர்தல் ஆயத்தப் பணி பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
20,000-க்கு கீழ் குறைந்தது தினசரி கரோனா வைரஸ் தொற்று
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. தேசிய அளவில் நாளொன்றுக்கு சராசரியாக 25,000 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டு வருகிறது. கடந்த 22-ம் தேதி 19,556 கரோனா வைரஸ் தொற்று பதிவானது.
நாடு முழுவதும் புதிதாக 16,432 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று
நாடு முழுவதும் புதிதாக 16,432 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இது கடந்த 6 மாதங்களில் பதிவான மிக குறைவான தினசரி தொற்று ஆகும்.
பிஹாரில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஆளுநர் மாளிகைக்கு படையெடுத்த விவசாயிகள்
பிஹாரில் புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாக சென்ற விவசாயிகள் மீது போலீஸார் தடியடி நடத்தினர்.
என்னை நம்பி வருபவர்களை பலிகடா ஆக்க விரும்பவில்லை - அரசியல் கட்சி தொடங்க மாட்டேன்
நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டம் . ரசிகர்களிடம் மன்னிப்பு கோரினார்
2017 டிச. 31 முதல் 2020 டிச. 31-ம் தேதி வரை...தொடங்கப்படாமலேயே முடிவுக்கு வந்த ரஜினியின் அரசியல் பிரவேசம்
தான் நிச்சயம் அரசியலுக்கு வரப்போவதாக கடந்த 2017 டிச. 31-ல் ரஜினிகாந்த் அறிவித்தார். அதன் பிறகு தொடர்ந்து சில மாதங்கள் மாவட்டம் தோறும் நிர்வாகிகள் சந்திப்பு, இணையவழியில் உறுப்பினர் சேர்க்கை, ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது என தீவிரம் காட்டினார்.
10, 12-ம் வகுப்புக்கு இன்னும் 10 நாட்களில் செய்முறைத்தேர்வு அட்டவணை வெளியீடு
அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
பெண் குழந்தைகள் பாதுகாப்பில் கவனம் செலுத்த வைகோ வலியுறுத்தல்
பெண் குழந்தைகளைப் பாதுகாப்பதில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி கரோனா தடுப்பூசி போடும் பணிகள் ஆந்திர மாநிலத்தில் வெள்ளோட்டம்
ஆந்திர மாநிலத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் வெள்ளோட்டமாக நேற்று தொடங்கின. இதன்படி, 5 மையங்களில் அனைத்து தரப்பு வயதைச் சேர்ந்த 125 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுடன் இணைந்த டாஸ்மாக் பார்கள் இன்றுமுதல் திறப்பு
டாஸ்மாக் மதுபானக் கடைகளுடன் இணைந்த பார்களை இன்று முதல் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
கால்நடை கிளை நிலையம் தரம் உயர்வு அமைச்சர் இன்று திறந்து வைக்கிறார்
கிராமப்புறங்களில் உள்ள கால்நடை கிளை நிலையங்கள், அந்தப் பகுதியில் உள்ள கால்நடைகளின் எண்ணிக்கையை பொறுத்து கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்த்தப்படுவது வழக்கம்.
காணொலி மூலம் முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார் மயிலாடுதுறை மாவட்டம் உதயம்
30 ஆண்டு கோரிக்கை நிறைவேறியதால் பொதுமக்கள் உற்சாகம்
ஹைதராபாத் பாக்யலட்சுமி கோயிலில் பாஜக கவுன்சிலர்கள் உறுதி மொழி
ஹைதராபாத் சார்மினார் அருகே உள்ள பாக்யலட்சுமி கோயில் முன் புகைப்படம் எடுத்துக் கொண்ட பாஜக கவுன்சிலர்கள்.
வீரர்களுக்கான ரயில்களை தடுத்து வரும் விவசாயிகள் மீது அமைச்சர் குற்றச்சாட்டு
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி போராட்டம் நடத்தும் விவசாய சங்கங்களுக்கு மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அனுப்பியுள்ள 8 பக்க கடிதத்தில் கூறியிருப்பதாவது:
எம்பிபிஎஸ், பிடிஎஸ் நிர்வாக ஒதுக்கீட்டு கலந்தாய்வில் 198 பேர் மட்டுமே பங்கேற்பு
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு விளையாட்டரங்கில் கடந்த நவ.18-ல் தொடங்கியது. டிச.10 வரை நடைபெற்ற கலந்தாய்வில் அனைத்து எம்பிபிஎஸ் இடங்களும் நிரம்பின.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராகுல் டெல்லியில் இன்று போராட்டம்
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று போராட்டம் நடத்தவுள்ளார்.
வேளாண் சட்டங்களில் நீக்க வேண்டிய அம்சங்களை தெரிவிக்க அமைச்சர் அழைப்பு
புதிய வேளாண் சட்டங்களில் எந்தெந்த அம்சங்களை சேர்க்க வேண்டும், எவற்றையெல்லாம் நீக்க வேண்டும் என்பது குறித்து அரசுக்கு விவசாயிகள் தெரிவிக்கலாம் என மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார்.
தமிழகம், புதுச்சேரியில் 3 நாட்களுக்கு வறண்ட வானிலை
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து வரும் 3 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவ வாய்ப்பு உள்ளது.