CATEGORIES
Kategoriler
பிப்.28ல் பிஎஸ்எல்வி சி-51 ராக்கெட் விண்ணில் பாய்கிறது: இஸ்ரோ
இஸ்ரோ வருகிற 28-ந் தேதி காலை 10.23 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-51 ராக்கெட்டை வானிலை நிலைமைகளுக்கு உட்பட்டு விண்ணில் ஏவுகிறது என செய்திகள் வெளியிட்டுள்ளது.
1.5 கோடி யூனிட்கள் விற்பனை ஹோண்டா இந்தியா நிறுவனம் சாதனை
ஹோண்டா நிறுவனம் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் புது மைல்கல் எட்டியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
விற்பனைக்கு வந்தது ரெனால்ட் கைகர்
ரெனால்ட் கைகர் காம்பாக்ட் எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. ரெனால்ட் கைகர் ரகங்களின் ஆரம்பவிலை 5.45 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) முதல் ரூ.8.60 லட்சம் வரை உள்ளது.
பங்கு வெளியீடு மூலம் ரூ.510 கோடி திரட்ட ஈஸிமை டிரிப் நிறுவனம் திட்டம்
வரும் மார்ச் மாத கடைசியில், ஈஸிமை டிரிப் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வர திட்டமிட்டுள்ளது.
தொலைத்தொடர்பு துறையில் நிதி மோசடிகளை விசாரிக்க டிஜிட்டல் புலனாய்வு பிரிவு: அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்
கைபேசிகளில் வரும் விரும்பத்தகாத தகவல்கள், குறுஞ் செய்திகள் மூலம் தொடர்ந்து தொல்லை அளித்தல், மோசடியான கடன் வசதிகள் குறித்த வாக்குறுதிகள், இவை அனைத்துக்கும் மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை பாதுகாப்பானவையாக ஆக்குதல் ஆகியவை குறித்த உயர்மட்ட கூட்டத்திற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பம், தொலைதொடர்பு மற்றும் சட்டம் & நீதி அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் தலைமை வகித்தார்.
சென்னையில் சாதனங்கள் உற்பத்தி அமேசான் நிறுவனம் துவக்குகிறது மத்திய அமைச்சர் தகவல்
அமேசான் நிறுவனம் மின்னணு சாதனங்களின் உற்பத்தியை சென்னையில் துவக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரூ.10,000 கோடி மதிப்பிலான அரசு பத்திரங்கள் பிப்.25ம் தேதி விற்பனை செய்ய ஆர்பிஐ முடிவு
ஆர்பிஐ வங்கி வெளியிட்ட அறிவிப்பின் படி வரும் பிப்ரவரி 25ம் தேதி சிறப்பு வர்த்தகத்தின் கீழ் அரசு பத்திரங்களை ஓரே நேரத்தில் வாங்கவும், விற்பனை செய்யவும் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.635 கோடியை முதலீடு செய்ய ஏத்தர் எனர்ஜி திட்டம்
அடுத்த ஐந்து ஆண்டுகளில், ரூ.635 கோடியை மின்சார இருசக்கர வாகனங்களை தயாரிக்கும், ஏத்தர் எனர்ஜி நிறுவனம், தமிழதகத்தில் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜீரண பாதிப்பு, பாக்டீரியா தொற்று தடுப்புக்கு உள்பட 16 மருந்துகள் தரமற்றவையாக கண்டுபிடிப்பு
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 16 மருந்துகள் தரமற்றவையாக இருந்ததாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
சரக்கு ரயில் போக்குவரத்தின் மூலதன செலவு கடந்த ஆண்டை விட 21 சதம் உயர்வு: கோயல்
மத்திய ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில் துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் பியூஷ் கோயல், இந்திய சரக்கு ரயில் போக்குவரத்துக் கழகத்தின் பணிகளை ஆய்வு செய்தார்.
சணல் விவசாயிகளுக்கான விழிப்புணர்வு பட்டறையை மத்திய ஜவுளி அமைச்சர் தொடங்கி வைத்தார்
பல்வேறு சணல் பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப ஜவுளி பொருட்களின் உற்பத்தியில் நாட்டுக்கு பங்களிக்கவும், தங்களது வருவாய் மற்றும் உற்பத்தி திறனை பெருக்கி கொள்வதற்காகவும் சான்றளிக்கப்பட்ட விதைகளை பயன்படுத்துமாறு விவசாயிகளை மத்திய ஜவுளி மற்றும் பெண்கள் & குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி ஜுபின் இரானி கேட்டுக் கொண்டார்.
வாகனங்களுக்கு ரூ.95 ஆயிரம் வரையிலான சலுகையை அறித்தது நிசான் நிறுவனம்
நிசான் நிறுவனத்தின் கார் மாடலுக்கு ரூ. 95 ஆயிரம் வரையிலான சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது.
மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.5000 கோடியை மத்திய அரசு வழங்கியது
ஜிஎஸ்டி இழப்பீட்டை மாநிலங்கள் எதிர்கொள்வதற்கான 16-வது தவணையாக ரூ.5,000 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது.
ரூ.15 லட்சம் ஆரம்ப விலையில் எம்வி அகுஸ்டாவின் புதிய மாடல்கள்
ரூ.15 லட்சம் ஆரம்ப விலையில், புதிய 800 சிசி மாடல்களை எம்வி அகுஸ்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள் ளது. புருட்டேல் 800ஆர்ஆர் & ட்ராக்ஸ்டர் ஆர்ஆர் என்ற பெயரில் இந்த மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மௌ-ஆனந்த் விகார் இடையே இரு வாரங்களுக்கு ஒரு முறை இயங்கும் சிறப்பு ரயில் சேவை - அமைச்சர் பியுஷ் கோயல் துவக்கி வைத்தார்
மௌ ஆனந்த் விகார் இடையே இரு வாரங்களுக்கு ஒரு முறை இயங்கும் சிறப்பு ரயில் சேவையை மத்திய ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில் துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் பியுஷ் கோயல், காணொலிக் காட்சி வாயிலாக கொடியசைத்துத் துவக்கிவைத்தார்.
பொதுத்துறை நிறுவனங்களை வாங்க வேதாந்தா திட்டம்
மத்திய அரசு, பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பெட்ரோல் டீசல் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்?
உலக சந்தையில் எண்ணெய் விலை நிலவரங்களின் அடிப் படையில் இந்திய சந்தையில் தினந்தோறும் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்படுகிறது.
டிசம்பர் காலாண்டில் வோடஃபோன் ஐடியா ஒட்டுமொத்த இழப்பு ரூ.4,532 கோடி சரிவு
பெரும் கடன் சுமையில் சிக்கி தவிக்கும் வோடஃபோன் ஐடியா நிறுவனம் மூன்றாவது காலாண் டில் ஏற்பட்ட ஒட்டுமொத்த இழப்பு ரூ.4,532.1 கோடியாக குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.50 உயர்வு
எண்ணெய் நிறுவனங்கள் ஒரே மாதத்தில் கேஸ் சிலிண்டர் விலையை ரூ.75 அதிகரித்துள்ளன.
கோவிட் தொற்று குறைந்தாலும் எந்த நாடும் கட்டுப்பாடுகளை தளர்த்தக்கூடாது உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை
கோவிட் தொற்று பரவல் குறைந்தாலும், எந்த ஒரு நாடும் கட்டுப்பாடுகளை தளர்த்தக்கூடாது, அதற்கான நேரம் இன்னும் வரவில்லை என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி கடந்த ஜனவரி மாதத்தில் 65 சதவீதம் வீழ்ச்சி
கடந்த ஜனவரி மாதத்தில், நவரத் தினங்கள் மற்றும் ஆபரணங்கள் ஏற்றுமதி, 7.8 சதம் அளவுக்கு வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
நிவெர், புரெவி புயல் நிவாரணம் - தமிழகத்திற்கு ரூ.286.91 கோடி கூடுதல் ஒதுக்கீடு
தமிழகத்திற்கு ரூ.286.91 கோடி கூடுதல் நிதியுதவியை வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
கேலக்ஸி ஏ21எஸ் ஸ்மார்ட்போன் விலை குறைப்பு: சாம்சங்
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ21 எஸ் ஸ்மார்ட்போனுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கூடுதல் கவர்ச்சியுடன் வந்தது 2021 ஜாவா 42 ஆரம்பவிலை ரூ.1.84 லட்சம்
2021 ஜாவா 42 மாடலின் டீசர் வீடியோ வைரலான நிலையில், கூடுதல் கவர்ச்சியுடன் விற்பனைக்கு வந்துள்ளது அந்த மோட்டார் சைக்கிள்.
ரூ.338 கோடிக்கு கோவிட் தடுப்பூசி ஏற்றுமதி அமைச்சர் பியுஷ் கோயல் தகவல்
இந்தியாவின் கோவிட் தொற்றுக்கான தடுப்பூசி ஏற்றுமதி ரூ.338 கோடியை எட்டியுள்ளதாக மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மாநிலங்களவையில் தெரிவித்தார்.
கிசான் ரயில் திட்டத்தின் கிழ் 24 வழித்தடங்களில் இது வரை ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன: கோயல்
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த மத்திய ரயில்வே, வர்த்தகம் & தொழில்கள் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் பியுஷ் கோயல், கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
கூ செயலியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 30 லட்சத்தை தொட்டது
டுவிட்டர் செயலிக்கு போட்டியாக களம் இறங்கி இருக்கும், இந்திய தயாரிப்பான, கூ செயலியில் முதலீடு செய்வதற்கு,
குடும்ப ஓய்வூதியத்திற்கான உச்சவரம்பு மாதத்திற்கு ரூ.1,25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது: ஜிதேந்திர சிங்
குடும்ப ஓய்வூதியம் தொடர்பான முக்கிய சீர்திருத்தமாக, குடும்ப ஓய்வூதியத்திற்கான உச்சவரம்பு மாதத்திற்கு ரூ.45,000-ல் இருந்து ரூ.1,25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் அமைச்சரும் (தனிப் பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான ஜிதேந்திர சிங் கூறினார்.
ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளை வாங்க கொல்கத்தாவைச் சேர்ந்த ரூயா குழுமம் விருப்பம்
ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளை வாங்குவதற்கு, கோல்கட்டாவைச் சேர்ந்த, ரூயா குழுமம் , தன் விருப்பத்தை தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
4வது காலாண்டில் 2.69 கோடி வெறுப்பு பேச்சு பதிவுகள் மீது பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை
4வது காலாண்டில், கடந்த டிசம்பர் வரையிலான முகநூலில் பதிவிடப்பட்டிருந்த 2.69 கோடி வெறுப்பு பேச்சு பதிவுகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.