CATEGORIES
Kategoriler
ஒப்போ எஃப்19 புரோ, புரோ பிளஸ் இந்தியாவில் அறிமுகமானது
புதிய எஃப்19 புரோ மற்றும் புரோ பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை ஒப்போ நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ எஃப்19 புரோ ஸ்மார்ட்போனின் விலை ரூ.21,490-ஆக உள்ளது.
ஒன்பிளஸ் 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மார்ச் 23ம் தேதி அறிமுகமாகிறது
ஒன்பிளஸ் நிறுவனம் புதிய 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வரும் மார்ச் 23ம் தேதி அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வந்துள்ளது.
இந்தியாவில் கோவிட் தடுப்பு நடவடிக்கை சிறப்பாக உள்ளது: கீதா கோபிநாத் தகவல்
கோவிட் நோய்த்தொற்றை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளில் இந்தியா முன்னிலை வகிப்பதாகவும், அதன் தடுப்பூசி கொள்கை மிகச்சிறப்பாக உள்ளது என சர்வதேச செலாவணி நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
6 ஆண்டுகளில் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களை ஆப்பிள் நிறுவனம் வாங்கியுள்ளது: டிம் கும்
கடந்த ஆறு ஆண்டுகளில், 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களை ஆப்பிள் நிறுவனம், வாங்கி இருப்பதாக, அதன் தலைமை செயல் அதிகாரி, டிம் குக் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
2022ம் நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 13.7 சதவீத வளர்ச்சியை எட்டும்: மூடிஸ் கணிப்பு
வரும் 2022-ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதாரம் 13.7 சத வளர்ச்சியை எட்டும் என சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் காலாண்டில் ஐசிஐசிஐ லொம்பார்டு 6.6 சதம் வளர்ச்சி
நடப்பு நிதியாண்டில் 2வது முறையாக ஐசிஐசிஐ லொம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ.4 இடைக்கால ஈவுத்தொகை வழங்குவதற்கு அதன் இயக்குநர் குழு ஒப்புதல் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஏப்ரல் முதல் கார்களில் ஏர்பேக் கட்டாயம்?
ஏப்ரல், முதல் தேதிக்கு பிறகு, விற்பனை செய்யப்படும் கார்களில், முன்பக்கத்தில் பயணம் செய்வோரின் பாதுகாப்புக்காக, இரண்டு, ஏர்பேக்குகள் கட்டாயம் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என, அதிகாரப் பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில், கார்களின் விலை அதிகரிக்ககூடும் என்கிறார்கள், வாகனத்துறையை சேர்ந்தவர்கள்.
2020-21ம் நிதியாண்டின் ஏப்ரல்-டிசம்பர் காலகட்டத்தில் பங்குகளில் அந்நிய நேரடி முதலீட்டு வரத்து 40% உயர்வு
நடப்பு 2020-21ம் நிதியாண்டின் ஏப்ரல் -டிசம்பர் காலகட்டத்தில் பங்குகளில் அந்நிய நேரடி முதலீட்டு வரத்து 40 சதம் அதிகரித்துள்ளதாக மத்திய அரசு அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
மகளிர் தினத்தைச் சிறப்பித்த வேளாண் மாணவிகள்
காரியாபட்டி வட்டார வருவாய் கிராமம் ஜோகில்பட்டியில் தேசிய மகளிர் தினத்தை யொட்டி வேளாண் கல்லூரி மாணவிகள் க.பார்கவி, ர.சந்தியா, ம.சரிகா, ச.சாருலதா, ஜெ.இரா.ஷாலினி, மு.சினேகா ஆகியோர் அக்கிராம பெண்களுக்கு மகளிர் தினத்தின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அறிமுகத்திற்கு முன்பே கசிந்த ரியல்மி 8 மொபைல் அம்சங்கள்
சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ரியல்மி 8 ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் அறிமுகத்திற்கு முன்பே தெரியவந்துள்ளது. ரியல்மி நிறுவனத்தின் இந்திய மற்றும் ஐரோப்பா பிராந்தியத்தின் தலைவரான மாதவ் சேத் தனது டுவிட்டர் பக்கத்தில் ரியல்மி 8 மாடலின் அட்டைப்பெட்டியை பகிர்ந்துள்ளார்.
புதிய விவோ நெக்பேண்ட் ஹெட்செட் அசத்தல் சவுண்ட் அம்சத்துடன் அறிமுகம்
விவோ எஸ் 9 மற்றும் விவோ எஸ்இ ஸ்மார்ட்போன்களுடன், புதிய நெக் பேண்ட் வயர்லெஸ் ஹெட்செட்டையும் சீனாவில் அறிமுகம் செய்துள்ளது விவோ நிறுவனம். ஃபெதர் கிரே, பிளாக் மற்றும் புளூ வண்ணங்களில் இந்த ஹெட்செட் அறிமுகமாகி யுள்ளது.
3வது காலாண்டில் ஐடி துறை விற்பனை 5.2 சதம் அதிகரிப்பு: ஆர்பிஐ
மூன்றாவது காலாண்டில் தகவல் தொழில்நுட்ப (ஐடி) துறை விற்பனை 5.2 சதம் அதிகரிதத்துள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இது குறித்து ஆர்பிஐயின் புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ரூ.35.7 லட்சம் மதிப்பில் 730 கிராம் தங்கம்
சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் பறிமுதல்
இந்திய வாகனத் துறையின் வருவாய் 30 சதம் அளவு உயரும்: கட்கரி தகவல்
இந்திய வாகனத் துறையின் வருவாய் 30 சதம் அளவு உயரும் என அமைச்சர் கட்கரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து விரிவான செய்தியாவது:
125 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் ரியல்மி ஜிடி 5ஜி ஸ்மார்ட்போன்
விரைவில் இந்தியாவில் அறிமுகம்?
மஹிந்திரா தார் மாடலுக்கு அமோக வரவேற்பு
அதிக ஏர்பார்ப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தார் ஜீப் மாடலை மஹிந்திரா நிறுவனம் அறிமுகப்படுத்தியது.
நடப்பாண்டில் 1 லட்சம் டிராக்டர் விற்பனை சோனாலிகா நிறுவனம் சாதனை
நடப்பு நிதி ஆண்டில் சோனாலிகா நிறுனம் ஒரு லட்சத்துக்கும் அதிகமான டிராக்டர்களை விற்பனை செய்து சாதனை புரிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், கடந்த பிப்ரவரி மாதத் துடனான 11 மாத காலத்தில் மொத்தம் 1 லட்சத்து 6,432 டிராக்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ரமன் மிட்டல் தெரிவித்துள்ளார்.
கச்சா எண்ணெய் உற்பத்தியை ஒபெக் நாடுகள் அதிகரிக்க வேண்டும்: மத்திய அரசு வலியுறுத்தல்
பெட்ரோலியப் பொருள்களை ஏற்றுமதி செய்யும் நாடுகள் (ஓபெக்), கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து விலையில் நிலைத் தன்மை நிலவுவதை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
எரிபொருளை ஜிஎஸ்டி வரியின் கீழ் வந்தால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75 ஆக குறையும்
எஸ்பிஐ நிபுணர்கள் கருத்து
இபிஎஃஓ நிதிக்கான வட்டி விகிதம் 8.5% ஆக நீடிக்கும்
அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார் தகவல்
முப்படைகளுக்கு இடையே அனைத்து நிலைகளிலும் ஒத்துழைப்பை அதிகரிப்பதில் கவனம்: ராஜ்நாத் சிங்
எல்லை விவகாரங்கள் குறித்த சில முக்கிய பிரச்னைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு கண்டதில் இந்தியாவின் உறுதியான எதிர்வினை உதவிபுரிந்தது என பாது காப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித் துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து பேசினால் மட்டுமே வரிகளை குறைப்பது குறித்து முடிவெடுக்க முடியும் பெட்ரோல் உயர்வு குறித்து நிதியமைச்சர் பேச்சு
பெட்ரோல், டீசல் விலை அதிகரித்திருப்பது நுகர்வோருக்கு சுமையாக மாறியுள்ளது என்பதை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒப்புக்கொண்டுள்ளார்.
நடைமேடை அனுமதி சீட்டு விலை உயர்வு ரயில்வே விளக்கம்
பிளாட்ஃபார்ம் டிக்கெட் எனப்படும் நடைமேடை அனுமதி சீட்டின் விலை குறித்து சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
சத்தமில்லாமல் சந்தைக்கு வந்தது விவோ Y31s ஸ்டாண்டர்டு எடிசன்
எந்தவித முன்னறிவிப்புகளும் இல்லாமல் ஒய்31எஸ் ஸ்டாண்டர்ட் எடிசன் 5ஜி ஸ்மார்ட்போனை சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது விவோ நிறுவனம். இந்த மொபைல் மீடியாடெக் டைமென்சிட்டி 700 சிப்செட் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 10 வருடங்களில் மிகக் குறைந்த வட்டி விகிதத்தை ஐசிஐசிஐ வங்கி அறிவித்தது
மும்பை, மார்ச் 6 வீட்டுக் கடனுக்கான வட்டியை ஐசிஐசிஐ வங்கி 6.7 சதமாக குறைத்ததன் மூலம், கடந்த 10 வருடங்களில் இல்லாத மிகக் குறைந்த வட்டிவிகிதத்தை அந்த வங்கி அமல்படுத்தியுள்ளது.
எம்340ஐ எக்ஸ்டிரைவ் மாடலுக்கான முன்பதிவு பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனம் துவங்கியது
அதிகம் எதிர்பார்க்கப்படும் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எம் சீரிஸ் மாடலின் முன்பதிவு குறித்து விவரம் வெளியாகியுள்ளது.
ஐபோன் 13 சீரிஸில் லைட்னிங் போர்ட் அம்சம்?
ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 சீரிஸ் மாடல்கள் லைட்னிங் போர்ட் அம்சங்களை கொண்டிருக்கும் என செய்திகள் வெளியாகி உள்ளது.
டாட்ஸ் 11, டாட்ஸ் 20 இயர்பட்ஸ் அம்ப்ரேன் நிறுவனம் அறிமுகம்
புதிய டிடபிள்யூஎஸ் சீரிஸ் டாட்ஸ் 11 மற்றும் டாட்ஸ் 20 இயர்பட்ஸ் ஹெட் செட்டுகளை அம்ப்ரேன் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. ஃபிளிப்கார்ட் மற்றும் அமேசான் அமேசான் இணையதளங்களில் இந்த இயர்பட்ஸ் விற்பனைக்குக் கிடைக்கிறது. இந்த சாதனங்களின் விலை ரூ.2,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல் ஜாகுவார் எலெக்ட்ரிக் கார் மார்ச் 23ல் இந்தியாவில் அறிமுகம்
ஜாகுவார் நிறுவனம், தனது முதல் முழு பேட்டரி காரை மார்ச் 23ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது. ஐ-பேஸ் எனப் பெயரிடப்பட்ட இந்தக் காரை மார்ச் 9ல் அறிமுகப்படுத்த முன்னதாக ஜாகுவார் நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
டிசம்பரில் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி ரூ.8,806 கோடியை எட்டியுள்ளது
கடந்த டிசம்பரில் மின்னணு பொருட்கள் ஏற்றுமதி இதுவரை இல்லாத வகையில் ரூ.8,806 கோடியை எட்டியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும், இந்த ஏற்றுமதியில் செல்லிடப் பேசிகளின் பங்களிப்பு 35 சதமாக இருந்தது.