CATEGORIES
Kategoriler
ஆயுர்வேதத் துறையின் பொருளாதார மதிப்பு 90 சதம் அதிகரிப்பு: அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
ஆயுர்வேதத் துறையின் பொருளாதார மதிப்பு கோவிட் தொற்றுக்கு பிறகு 90 சதம் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
பஜாஜ் பல்சர் 180 பிஎஸ்6 பைக் இந்திய சந்தையில் அறிமுகம்
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பஜாஜ் பல்சர் 180 பிஎஸ்6 பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து செய்தியாவது:
எக்ஸ்பாக்ஸ் வயர்லெஸ் ஹெட்செட் மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகம்
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளும் இந்திய சந்தையில் சிறப்பான வரவேற்பு உள்ள நிலையில் அந்நிறுவனத்தின் பல்வேறு சாதனங்களை அறிமுகப்படுத்தும் வண்ணம் உள்ளது. இந்நிலையில் வயர்லெஸ் ஹெட்செட் மாடல் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிஎல்ஐ திட்டத்தை பயன்படுத்தி அதிகபட்ச முதலீடுகளை ஈர்க்க வேண்டும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்
பிஎல்ஐ திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்தி அதிகபட்ச முதலீடுகடிள ஈர்க்க பிரதமர் நரேந்திரமோடி வலியுறுத்தி உள்ளார்.
உள்நாட்டு விமான பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது: அமைச்சர்
விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் குழு கூட்டம் நடை பெற்றது. விமான போக்குவரத்து இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) ஹர்தீப் சிங் புரி இதற்கு தலைமை தாங்கினார்.
அடுத்த ஆண்டில் அறிமுகமாகிறது புதிய ஜீப் காம்பஸ் 7 சீட்டர் மாடல்
ஜீப் காம்பஸ் 7 சீட்டர் மாடல் அடுத்த ஆண்டின் மத்தியில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்திய மோட்டார் வாகனச் சந்தையில் மிட்சைஸ் எஸ்யூவி பிரிவில் போட்டி அதிகரித்து வருகிறது.
வருமான அடிப்படையில் நிலக்கரி சுரங்கங்களின் வர்த்தக ஏலத்தை நிலக்கரி அமைச்சகம் தொடங்கியது
புது தில்லி, பிப்.12 மத்திய நிலக்கரி அமைச்சர் பிரகலாத் ஜோஷி, நாடாளுமன்றத் தின் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளதாவது:
ரூ.78,910 கோடி மதிப்பிலான திட்டங்கள் அம்ருத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டன
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை இணையமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிலில் கூறியதாவது: நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட நகரங்களில், புதுப்பிப்பு மற்றும் நகர்ப்புற மாற்றத்துக்கான அடல் திட்டம் (அம்ருதி) கடந்த 2015ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
சுசூகி நிறுவனம் 13 லட்சம் கார்களை நெக்ஸா வாயிலாக விற்பனை
மாருதி நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை புதிய மைல்கல்லை தொட்டுள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்றின் போது ஓய்வூதியதாரர்களுக்கு உதவ பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன: அமைச்சர் ஜிதேந்திர சிங்
நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இன்று எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு எழுத்துப் பூர்வமாக பதிலளித்த மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சருமான ஜிதேந்திர சிங், கீழ்காணும் தகவல்களை அளித்தார்.
பங்கு வெளியீடு மூலம் ரூ.2700 கோடி திரட்ட லோதா டெவலப்பர்ஸ் நிறுவனம் திட்டம்
மும்பையை சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான, லோதா டெவலப்பர்ஸ் நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபியிடம் விண்ணப்பித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
லுமிஃபோர்டு நிறுவனத்தின் அறிமுகம் புதிய ஹெச்டி சீரிஸ் வயர்லெஸ் ஹெட்போன்கள்
லூமிஃபோர்ட் நிறுவனம் புதிதாக எச்டி 50, எச்டி 60 மற்றும் எச்டி 70 ஆகிய மூன்று வயர்லெஸ் ஹெட்போன்களை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஒருநாளில் 1,603 கிமீ தூரம் பயணம் டாடா அல்டூராஸ் சாதனை
டாடா அல்டுராஸ் கார் ஒரே நாளில் 1,603 கிமீ தூரம் பயணித்து இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்துள்ளது. இந்த சாதனையைப் படைத்துள்ள முதல் டாடா நிறுவனத்தின் தயாரிப்பு அல்டுராஸ் தான் குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரா மாநிலம், புனேவைச் சேர்ந்த தவ்ஜீத் சஹா என்பவர் 24 மணி நேரம் தொடர்ச்சியாக டாடா அல்டுராஸ் காரில் பயணித்து 1,603 கிமீ தூரத்தைக் கடந்திருக்கின்றார். இந்த செயலுக்காக இந்தியா ரெக்கார்ட் புத்தகத்தில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது.
வாய்ஸ் மேசேஜிங் வசதியை இந்தியாவில் வழங்கும் டுவிட்டர் நிறுவனம்
டுவிட்டர் சமூக வலைதளத்தில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
தொலை தொடர்பு உற்பத்தித்துறையை ஊக்குவிக்க ரூ.12,195 கோடி செலவில் ஊக்குவிப்பு திட்டம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தொலை தொடர்பு மற்றும் நெட்வொர்க்கிங் பொருட்களுக்காக ரூ.12,195 கோடி மதிப்பில் உற்பத்தியுடன் தொடர்புடைய ஊக்குவிப்பு திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை யிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்தும் வாய்ப்பு தொழில்முனைவோருக்கு கிடைக்க வேண்டும்: மோடி
நாஸ்காம் தொழில்நுட்ப மற்றும் தலைமைத்துவ மன்றத்தில் (என்டிஎல்எஃப்) காணொலி வாயிலாக உரையாற்றுகையில், பிரதமர் நரேந்திர மோடி இதனைத் தெரிவித்தார்.
உலகத் தரம் மிக்க உற்பத்தி ஆலையை உருவாக்க ரூ.700 கோடி முதலீடு: ஆம்பியர் திட்டம்
ஆம்பியர் எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய உற்பத்தி ஆலை தமிழகத்தில் தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து செய்தியாவது:
விரைவில் களமிறங்குகிறது ஸ்பெசல் எடிசன் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர்
ஸ்பெஷல் எடிசன் எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கை ஹீரோ நிறுவனம் விரைவில் சந்தைக்குக் கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
குறைந்த விலையில் சந்தைக்கு வருகிறதா எம்ஜி இசட்எஸ் பெட்ரோல் வேரியண்ட்?
சந்தையில் வரவேற்பைப் பெற்றுள்ள இசட் எஸ் எலெக்ட்ரிக் காரின் பெட்ரோல் வேரியண்டை எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் தயாரித்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே.
23 நாடுகளுக்கு கோவிட் தடுப்பூசியை வழங்கி வருகிறது மத்திய அரசு: ஹர்ஷ் வர்தன்
அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சிக் குழு-மத்திய மருந்துகள் ஆராய்ச்சி நிறுவனம் குறைந்தவிலை மருந்துகளுக்காக பாடுபட்டு வருவதாகவும், சென்ட்குரோமன் மற்றும் அர்டீத்தெர் போன்ற முக்கிய மூலக்கூறுகளை உலகத்துக்கு அளித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் அமைச்சரும் சிஎஸ்ஐஆர் துணை தலைவருமான ஹர்ஷ் வர்தன் கூறினார்.
பிஎம்டபிள்யூ எக்ஸ்3 எக்ஸ்ட்ரைவ் 30 ஐ ஸ்போர்ட் எக்ஸ் கார் அறிமுகம் ஆரம்ப விலை ரூ.56.50 லட்சம்
எக்ஸ்3 எக்ஸ்ட்ரைவ் 30ஐ ஸ்போர்ட் எக்ஸ் காரை பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்தக் காரின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.56.50 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜிடிபியில் எஸ்எம்இ தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு அடுத்த 5 வருடங்களில் உயரும்: நிதின் கட்கரி
பிரதமரின் தற்சார்பு இந்தியா கனவை நன வாக்கும் விதத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்கை 30-ல் இருந்து 40 சதமாகவும், ஏற்றுமதிகளில் 48இல் இருந்து 60 சதமாகவும், வேலை வாய்ப்பு உருவாக்கத்தில் தற்போதைய 11 கோடியை விட ஐந்து கோடி அதிக மாகவும் அடுத்த ஐந்து வருடங்களில் உயர்த்த மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சகம் திட்டமிட் டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ் சாலைகள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறினார்.
பிஎஸ்-6 எரிபொருள் உற்பத்திக்கு ரூ.34 ஆயிரம் கோடி முதலீடு: பிரதான்
பிஎஸ்-6 எரிபொருள் உற்பத்திக்கு, சுத்திகரிப்பு ஆலைகளை மேம்படுத்த ரூ.34 ஆயிம் கோடியை எண்ணெய் நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன" என மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
இந்தியா, மொரீஷியஸ் இடையே பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
இந்தியா, மொரீஷியஸுக்கிடையேயான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கூட்டு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியா மற்றும் மொரீஷியஸுக்கிடையேயான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
ரூ.30 கோடிக்கும் மேல் முதலீட்டை திரட்டிய கூ செயலி
சமூக ஊடக செயலியான, டுவிட்டருக்கு மாற்றாக, இந்தியாவில் உருவெடுத்திருக்கும், கூ செயலியின் தாய் நிறுவனத்திலிருந்து, சீன முதலீட்டு நிறுவனம் வெளியேறுகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கவர்ச்சிகரமான புதிய தோற்றத்தில் ஹர்மன் கார்டன் SoundSticks 4 ஸ்பீக்கர்
புதிய கவர்ச்சிகரமான தோற்றத்தில் சவுண்ட் ஸ்டிக்ஸ் 4 புளூடூத் ஸ்பீக்கரை ஹர்மன் கார்டன் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. ஹர்மன் கார்டன் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் இந்த ஸ்பீக்கர் விற்பனைக்குக் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் ஐடி நிறுவனங்கள் ஈட்டும் வருவாய் 2.3 சத வளர்ச்சியை எட்டும்: நாஸ்காம் தகவல்
நடப்பு நிதியாண்டில் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஈட்டும் வருவாய் 2.3 சத வளர்ச்சியை எட்டும் என மென்பொருள் மற்றும் சேவை நிறுவனங்களின் தேசிய கூட்டமைப்பு (நாஸ்காம்) அமைப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
கபீரா எலெக்ட்ரிக் பைக்குகளின் விலைகள் வெளியிடப்பட்டது
கபீரா எலெக்ட்ரிக் பைக்குகளின் விலை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த கபீரா மொபைலிட்டி நிறுவனம் சமீபத்தில் கேஎம்3000 மற்றும் கேஎம்4000 என்ற பெயரில் இரு அதிவேக எலெக்ட்ரிக் பைக்குகளை சமீபத்தில் அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அந்த எலெக்ட்ரிக் பைக்குகளின் விலைகள் வெளியிடப்பட்டுள்ளன.
வங்கி வழங்கிய கடன் 5.93 சதம் அதிகரிப்பு: ஆர்பிஐ
ஜனவரி 29-ஆம் தேதியுடன் முடிவடைந்த இரு வார காலத்தில் வங்கிகள் வழங்கிய கடன் 5.93 சதம் அதிகரித்துள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த ஆர்பிஐ அந்த புள்ளிவிவரத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது:
அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசி அவசர கால பயன்பாட்டுக்கு உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல்
இந்திய சீரம் நிறுவனம் தயாரித்து வழங்கும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.