CATEGORIES
Kategoriler
பொருளாதார நடவடிக்கைகளுக்கு புதிய திட்டங்கள் உத்வேகம் அளிக்கும்-பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
புதிதாக தொடங்கப்படும் திட்டங்கள் பொருளாதார நடவடிக் கைகளுக்கான உத்வேகத்தை அதிகப்படுத்துவதுடன், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். புதுச்சேரியில் பல்வேறு திட்டங்களை துவக்கிவைத்துப் பேசுகையில் பிரதமர் நரேந்திர மோடி இதனைத் தெரிவித்தார்.
பெங்களூரு ஆலையை விரிவுபடுத்த ரூ.800 கோடி முதலீடு செய்யும் போஷ்
ஜெர்மனி நாட்டை சேர்ந்த டெக்னாலஜி மற்றும் சேவை நிறுவனமான போஷ் குழுமம், அதன் பெங்களுரில் தற்போதுள்ள வளாகத்தை முழுமையாக செயற்கை நுண்ணறிவு மையமாக மேம்படுத்த ரூ.800 கோடி முதலீடு செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
பாரம்பரிய பெருமைக்காக மட்டுமே பொதுத்துறை நிறுவனங்களை நடத்தக்கூடாது பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
அண்மையில் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட தனியார் மயமாக்கல் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி இணைய வழியில் பேசினார். அவர் இது குறித்து தெரிவித்துள்ளதாவது:
கோவிட்-19க்கு எதிரான இந்தியாவின் ஒருங்கிணைந்த போராட்டம் வெற்றியடையும்: ஜித்தேந்திர சிங்
கோவிட்-19க்கு எதிரான இந்தியாவின் ஒருங்கிணைந்த போராட்டம் வெற்றியடையும் என மத்திய இணையமைச்சர் ஜித்தேந்திர சிங் கூறியுள்ளார். தொற்று காலத்தில் சிறந்த நிர்வாக நடைமுறைகள் என்ற தலைப்பில் இந்தியா மாலத்தீவு இடையே 2 நாள் இணைய கருத்தரங்கு நிகழ்ச்சி நடந்தது.
டிஜிட்டல் நாணயங்களினால் பாதிப்பு ஏற்படும் ஆர்பிஐ ஆளுநர் சக்திகாந்த தாஸ்
மெய்நிகர் நாணயங்கள் எனப்படும், டிஜிட்டல் நாணயங்களால் நாட்டின் நிதி ஸ்திரத் தன்மை மீது ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து, ஆர்பிஐ கவலை கொண்டிருப்பதாகவும்; அதை மத்திய அரசுக்கு தெரிவித்திருப்பதாகவும், ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்திய சந்தையில் பேட்டரி கார் விற்பனை அதிகரிக்கும்: வால்வோ இயக்குநர்
அடுத்த நான்கு ஆண்டுகளில் இந்திய சந்தையில் பேட்டரி கார் விற்பனை அதிகரிக்கும் என ஸ்வீடனைச் சேர்ந்த வால்வோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜிஎஸ்டி வரிக்குள் பெட்ரோல், டீசல் கொண்டு வர மாநில அரசுகள் எதிர்ப்பு: அமைச்சர் பிரதான்
பெட்ரோல் மற்றும் டீசல் ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவரப்படுமா என்பது குறித்து மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கமளித்துள்ளார்.
ஐடி ஹார்டுவேர் தயாரிப்புக்கு ஊக்கத்தொகை மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஐடி ஹார்டுவேர் வன்சாதனங்கள் தயாரிப்புக்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை அளிக்கும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
உலக நாடுகள் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க வேண்டும்: ஜவடேகர் வலியுறுத்தல்
உலக நாடுகள் கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஜவடேகர் வலியுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது: பருவ நிலை மாற்றம் ஓர் எச்சரிக்கை மணி என்று ஐநா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் குறிப்பிட்ட மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர், வரும் 2030ம் ஆண்டுக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தை உலக நாடுகள் பாதியாக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மார்ச்சில் 1.3 கோடி கோவிட் தடுப்பு மருந்துகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்படும்: பைஸர் நிறுவனம்
வரும் மார்ச் மாதம் நடுவிலிருந்து வாரத்துக்கு சுமார் 1.3 கோடிக்கும் அதிகமான கோவிட் தொற்று தடுப்பு மருந்துகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட இருப்பதாக ஃபைஸர் மருந்து நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஃபைஸர் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்திய சந்தையில் 2021 ஹிமாலயன் பைக் வினியோகம் துவக்கியது ராயல் என்பீல்டு
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 2021 ஹிமாலயன் மாடல் வினியோக துவக்கியுள்ளதாக செய்தியாகியுள்ளது.
பட்ஜெட் விலையில் ரெட்மி கே40 சீரிஸ் அறிமுகம்?
கே40 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை ரெட்மி நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்த உள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய ஸ்மார்ட்போன்களில் சாம்சங் E4 அமோல் எல்இடி டிஸ்பிளே தரப்பட்டுள்ளது. திரை 120Hz புதுப்பிப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது.
இந்தியா-மொரிஷீயஸ் இடையே வர்த்தக ஒப்பந்தம்
இந்தியாவும் மொரிஷீயஸ்-ம் தடையற்ற வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் அந்த நாட்டு தலைநகர் போர்ட் லூயிஸில் கையெழுத்தாகியுள்ளது.
மெர்சிடிஸ் பென்ஸ் லிமோசின் இந்தத் தேதியில் அறிமுகமாகிறதா?
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஏ கிளாஸ் லிமோசின் செடான் காருக்கு இந்தியச் சந்தையில் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், இந்தக் கார் எந்தத் தேதியில் அறிமுகமாக உள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு கொலம்பியாவில் வர்த்தக வாய்ப்புகள்: சஞ்சீவ் ரஞ்சன்
தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு, மிகப் பிரமாதமான வர்த்தக வாய்ப்புகள் காத்திருப்பதாக, அந்நாட்டிற்கான இந்திய தூதர், சஞ்சீவ் ரஞ்சன் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இகோஸ்போர்ட் புது வேரியண்ட் விரைவில் அறிமுகம்: ஃபோர்டு நிறுவனம்
இகோஸ்போர்ட் புது வேரியண்ட் விரைவில் அறிமுகமாகும் என ஃபோர்டு நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து செய்தியாவது:
தடுப்பூசி போடும் பணியில் தனியாரை ஈடுபடுத்த வேண்டும் நிதியமைச்சரிடம் அசிம் பிரேம்ஜி கோரிக்கை
தனியார் துறையினரை ஈடுபடுத்துவதன் மூலம் மிக அதிக எண்ணிக்கையிலானவர்களுக்கு கோவிட் தொற்று தடுப்பு ஊசி போட முடியும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி கோரிக்கை விடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
எரிபொருள் மீதான மறைமுக வரிகளை குறைக்க வேண்டும்: ஆர்பிஐ கவர்னர்
பெட்ரோல், டீசல் எரிபொருள் விலையை நியாயமான அளவில் கட்டுக்குள் வைத்திருப்பதற்கு அவற்றின் மீதான மறைமுக வரிகளை குறைக்க வேண்டும் என ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
கோவிட்-19 தொற்று தடுப்பூசி, இந்தியர்களுக்கு மட்டுமல்லாது உலக மக்களுக்கும் மிகவும் அவசியம் - விஞ்ஞானிகள் வலியுறுத்தல்
கோவிட் பெருந்தொற்றின் பரவலை முற்றிலும் ஒழிப்பதற்கு இந்திய மக்கள் அனைவரும் தடுப்பூசிகளைப் எடுத்துக் கொள்வது மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள மக்களும் விரைவில் தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆறு முக்கிய நகரங்களில் வாடகை பைக் சேவை: ரேபிடோ அறிமுகம்
பைக் டாக்ஸி சேவையை வழங்கி வரும் ரேபிடோ நிறுவனம் ஆறு முக்கிய நகரங்களில் பன்முனை பயணங்களுக்கான வாடைகை பைக் சேவையை புதிதாக தொடங்கியுள்ளது.
சீன அந்நிய நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு 9 மாதங்களுக்குப் பிறகு அனுமதி
சுமார் 9 மாதங்களுக்குப் பிறகு சீனாவின் அந்நிய நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கத் தொடங்கியுள்ளளதாக தெரிவித்துள்ளது.
மத்திய ஆயுத படைகள் முன்கூட்டியே அனுப்பப்படுவது வழக்கமான நடைமுறை: தேர்தல் ஆணையம் விளக்கம்
மேற்கு வங்க மாநிலத்துக்கு மட்டும் மத்தியப் படைகள் அனுப்பப்பட்டு வருவதாக, இந்தியன் எக்ஸ்பிரஸ், இந்துஸ்தான் டைம்ஸ் போன்ற பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளது, இந்திய தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு வந்துள்ளது. இதற்கு கீழ்கண்ட விளக்கத்தை அளிக்க இந்திய தேர்தல் ஆணையம் விரும்புகிறது:
கடந்த 20 ஆண்டுகளாக ஈரல் கொழுப்பு நோய் இரண்டு மடங்குக்கு மேல் உயர்வு: அமைச்சர்
மது அருந்தாமல் ஏற்படும் ஈரல் கொழுப்பு நோயை , புற்றுநோய், சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஆகிய நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் தேசிய திட்டத்தின் கீழ் இணைப்ப தற்கான செயல்பாட்டு வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தொடங்கி வைத்தார்.
மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் கார் விலை அதிகரிப்பு
மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் சொகுசு எஸ்யூவி காரின் விலை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. குறித்து செய்தியாவது: கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.
உள்நாட்டு சந்தையில் பயணிகள் வாகன விற்பனை இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டும்: டாடா மோட்டார்ஸ்
மக்களிடையே தேவை அதிகரித்து வருவதையடுத்து உள் நாட்டில் பயணிகள் வாகன துறை வரும் நிதியாண்டில் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அம்மா ஆயுள் காப்பீட்டுத் திட்டம் இடைக்கால பட்ஜெட்டில் அறிமுகம் துணை முதல்வர் ஓபிஎஸ் அறிவிப்பு
தமிழகத்தில் வாழும் ஏழைக் குடும்பங்களுக்கு அம்மா விபத்து மற்றும் ஆயுள் காப்பீடு திட்டம் அறிமுகம் செய்யப்படுவதாக தமிழக துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
டிசம்பர் காலாண்டில் அம்புஜா சிமெண்ட்ஸ் வருவாய் 4.58 சதம் உயர்வு
டிசம்பர் காலாண்டில் அம்புஜா சிமெண்ட்ஸ் நிறுவனம் ரூ.968.24 கோடி நிகரலாபத்தை ஈட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.
தொலைத்தொடர்பு வாடிக்கையாளர் எண்ணிக்கை டிசம்பரில் 117 கோடி சரிவு: டிராய் தகவல்
கடந்த டிசம்பரில் தொலைத் தொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 117 கோடியாக சற்று சரிவைச் சந்தித்துள்ளது என டிராய் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்திய பங்குச் சந்தைகளில் அமெரிக்கா அதிக முதலீடு கேர் ரேட்டிங்ஸ் ஆய்வறிக்கை தகவல்
2014-15ம் நிதியாண்டுக்கு பின், நடப்பு நிதியாண்டில் தான், அன்னிய முதலீட்டாளர்கள் அதிக முதலீட்டை மேற்கொண்டிருக்கின்றனர் என ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.
பட்ஜெட் விலை 4ஜி ரேம் மொபைல் மோட்டோ இ7 பவர் அறிமுகமானது
பட்ஜெட் விலையில் 4ஜி ரேம் திறனுடன் மோட்டோ இ7 பவர் மொபைல் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. மோட்டோரோலா இ சீரிஸில் புதிய மாடலாக இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது.