CATEGORIES
Kategoriler
2ஆயிரம் சிறப்பு பஸ்கள் இயக்கம்
ஆயுத பூஜை, தொடர் விடுமுறையை முன்னிட்டு
41 இடங்களுக்கு 3ம் சுற்று கலந்தாய்வு தொடங்கியது
நடப்பாண்டு இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கையில் 3ம் சுற்று கலந்தாய்வு நேற்று தொடங்கியது.
திருவள்ளூர் அடுத்த போளிவாக்கத்தில் வாகன சோதனையில் சிக்கிய வழிப்பறி திருடர்கள்
தப்பிச் சென்றபோது கீழே விழுந்ததில் கால் முறிவு
துணை முதல்வர் உதயநிதிக்கு சிறப்பான வரவேற்பு
திமுக கூட்டத்தில் எம்எல்ஏ அறிவுறுத்தல்
கும்மிடிப்பூண்டி அருகே குடும்ப தகராறில் பெண் அடித்துக்கொலை? முட்புதரில் சடலம் மீட்பு
கும்மிடிப்பூண்டி அடுத்த போந்தவாக்கம் வில்லியர் காலனியைச் சேர்ந்த தம்பதி சீனிவாசன் (42) வெங்கட்டம்மாள் இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
தற்காலிக பட்டாசுக்கடை வைக்க விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்
தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர் இணையதளம் வழியாக வரும் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டணை
ஏழு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
எடையாத்தூர் அரசு பள்ளியில் ₹66 லட்சத்தில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி - எம்பி செல்வம்
திருக்கழுக்குன்றம் ஒன்றியம், எடையாத்தூர் ஊராட்சியில் அரசு தொடக்கப்பள்ளியில் 166 லட்சம் செலவில் புதிய கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டும் பணியினை காஞ்சிபுரம் எம்பி செல்வம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
3வது சர்வதேச மாநாட்டில் செயல்பாட்டு ஆராய்ச்சி பிரிவில் காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதாரத்துறைக்கு முதல் பரிசு
காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தஞ்சாவூரில் நடைபெற்ற 3வது சர்வதேச மாநாட்டில் செயற்பாட்டு ஆராய்ச்சி எனும் பிரிவின் கீழ் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்பட்ட 50 ஆராய்ச்சிகளில் முதல் பரிசு பெற்ற காஞ்சிபுரம் மாவட்ட பொது சுகாதாரத்துறை குழுவினர் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகனை சந்தித்து, சான்றிதழ் மற்றும் கேடயத்தையும் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.
அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த சாம்சங் தொழிலாளர்கள் பேச்சு வார்த்தையில் உடன்பாடு
மறுப்பு தெரிவித்து ஒரு தரப்பினர் போராட்டம்
விவசாய பயன்பாடு இல்லாததால் ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் படகு குழாம் அமைக்க வேண்டும்
ஸ்ரீபெரும்புதூரில் விவசாய பயன்பாடில்லாததால் அங்குள்ள ஏரியில் படகு குழாம் அமைக்க வேண்டும். என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
சென்னை விஐடி பல்கலைக்கழகத்தில் டெக்லீட் உலகளாவிய தலைமைத்துவ மாநாடு
விஐடி ரூபி விழா கொண்டாட் டத்தின் ஒரு பகுதியாக சென்னை விஐடி வளாகத் தில் ‘விஐடி டெக்லீட்-உலக ளாவிய தலைமைத்துவ மாநாடு 2024'-ன் தொடக்க விழா நேற்று நடந்தது.
தலைசிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதே முதல்வரின் நோக்கம் - ஜெகத்ரட்சகன் எம்பி பேச்சு
திமுக பவள விழா முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்டம், கொளத்தூர் கிழக்கு பகுதி திமுக சார்பில், புகழரங்க கூட்டம் கொளத்தூரில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. பகுதி செயலாளர் ஐசிஎப் முரளி தலைமை வகித்தார்.
சென்னையில் செயல்படும் மகளிர் விடுதிகளை பதிவு செய்ய தவறினால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை
சென்னையில் செயல்படும் தனியார் மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்களை பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் சென்னை கலெக்டர் எச்சரித்துள்ளார்.
செல்போனை மறைத்து வைத்ததால் ஆத்திரம் இரும்பு ராடால் தலையில் அடித்து வடமாநில தொழிலாளி கொலை
சக தொழிலாளி கைது மாங்காடு அருகே பயங்கரம்
பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரம் - திருச்சி இடையே இன்டர்சிட்டி சிறப்பு ரயில்
டிசம்பர் 31ம் தேதி வரை வாரத்தில் 5 நாட்கள் இயக்கம்
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 167 இடங்களில் வெள்ளத்தடுப்பு பணிகள் நிறைவு
சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னிட்டு சென்னை உள்பட 5 மாவட்டங்களில் 167 இடங்களில் வெள்ளத்தடுப்பு பணிகள் நீர்வளத்துறை மூலம் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பருவமழை தொடக்கத்திற்கு முன்னரே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மழை கொட்டித் தீர்த்தது. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து பலி எண்ணிக்கையும் உயர்ந்தது. தென்னிந்தியாவிலும் பல்வேறு இடங்களில் மழை கொட்டித்தீர்த்தது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழகத்தில் குறைவான மழையே பெய்தது. ஆனால் வடகிழக்கு பருவமழை தொடர்ந்ததும் அதிக அளவு மழை பெய்யும் என்று கணிக்கப்படுகிறது. ஆகையால் பாதிப்பும் அதிகமாக இருக்கும் என்றே சொல்லப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. ஆனால் கடந்த சில ஆண்டிலிருந்து இந்த பருவமழையில் தீவிரமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. குறிப்பாக 3 மாதங்கள் வரை நின்று பெய்ய வேண்டிய மழை ஒரேநாளில் மொத்தமாக கொட்டிவிடுகிறது. இதனால் எதிர்ப்பாராத வெள்ளம் மற்றும் பாதிப்புகள், பொருள் இழப்பையும் ஏற்படுத்திவிடுகிறது. கடந்தாண்டு சென்னையில் பாதிப்புகள் ஏற்பட்டதைபோல தென் மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை பருவமழையால் அதிகளவு பாதிப்புகள் ஏற்பட்டது. ஓராண்டுக்கு பெய்ய வேண்டிய மழை ஒரேநாளில் பெய்ததால் அந்த நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. தூத்துக்குடியும், நெல்லையும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதுபோன்ற எந்த பாதிப்பும் இந்த முறை ஏற்படக்கூடாது என்பதற்காக முன்னேற்பாடுகள் நடவடிக்கைளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை மற்றும் அதைச்சுற்றிய பகுதிகளில் ஒவ்வொரு வருடமும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் சீராக மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக கனமழை கொட்டிய நேரங்களிலும் வெள்ள நீர் விரைவாக வடிந்தது. பொதுவாக வடகிழக்கு பருவமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன. எனவே பருவமழைக்கு முன்னதாக இந்த மாவட்டங்களில் உள்ள நீர்வழித்தடங்களை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு அதிகபட்சமாக₹20 கோடி வரை ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. ஆனால் இந்த நிதியில் போதியளவில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. அதனால் குடியிருப்புகள், சாலைகள் உள்ளிட்ட இடங்களில் தேங்கும் வெள்ளம் வடிவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. எனவே கூடுதல் நிதியை ஒதுக்க ேவண்டும் என நீர்வளத்துறை வாயிலாக தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது. அதை ஏற்று இம்மாதம் 15ம் தேதிக்குள் மேல் தொடங்க உள்ள வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிக்கு₹35 கோடி அரசு கடந்த பிப்ரவரி மாதம் ஒதுக்கீடு செய்தது. வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக நகரப்பகுதிகள் மற்றும் அதையொட்டி உள்ள புறநகர்ப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் இருந்து, ஆகாயத்தாமரை போன்ற நீர்வாழ் தாவரங்களை அகற்றுவதற்கு ஏதுவாக வருடாந்திர நடவடிக்கை பணிகளை நீர்வளத்துறை தொடங்கி முடிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் இந்தாண்டு₹35 கோடியில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பருவமழை முடிவும் வரை மழை வெள்ள நீர் தொடர்ந்து தடையின்றி செல்வதை உறுதி செய்யும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது : ஏறத்தாழ 250 கிலோ மீட்டர் தூரம் வரையிலான பெரிய நீர்வழித்தடங்கள்மற்றும் அதன் உபரிப் பாதைகள், இதன் மூலம் சீரமைக்கப்படும். மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், ஏற்கெனவே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் ஓட்டோரி நீரோடை, விருகம்பாக்கம் – அரும்பாக்கம் கால்வாய் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயை சுத்தம் செய்வதற்கான தனித்திட்டமாக₹3.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. பாலாறு, கிருஷ்ணா குடிநீர் திட்டம், ஆரணியாறு, கொள்ளிடம், வெள்ளாறு வடிநிலங்களில் 167 இடங்களில் தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துதல் உள்ளிட்ட வெள்ள தடுப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் பணிகளை நிறைவடைந்தாலும் டிசம்பர் 31ம் தேதி வரை கண்காணிக்கப்பட்டு வரும். இவ்வாறு கூறினர்.
செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு
2024ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அறிவியலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடரை வெல்ல இந்தியா முனைப்பு
இந்தியா – வங்கதேசம் மோதும் 2வது டி20 போட்டி, டெல்லி அருண் ஜெட்லி அரங்கில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.
பெய்ரூட் மீது தாக்குதல் ஹிஸ்புல்லா முக்கிய தளபதியை கொன்றது இஸ்ரேல்
பெய்ரூட் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டார்.
சொந்த பயன்பாட்டுக்காக நிதியை பயன்படுத்தியதாக நடவடிக்கை கல்வி அறக்கட்டளை பதிவு ரத்து எதிர்த்து வழக்கு
சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு 234 தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்கள் நியமனம்
திமுக தலைமை கழகம் அறிவிப்பு
கேரளாவில் இருசக்கர வாகனங்களில் 4 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம்
கேரளாவில் இருசக்கர வாகனங்களில் 4 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கேரள நிதியமைச்சருக்கு முஸ்லிம் மாணவி கை கொடுத்ததால் சர்ச்சை எந்த மத நம்பிக்கையும் அரசியலமைப்பு சட்டத்தை விட உயர்ந்தது அல்ல - கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு
கடந்த சில மாதங்களுக்கு முன் கோழிக்கோட்டில் ஒரு தனியார் சட்டக் கல்லூரியில் நடந்த விழாவில் கேரள நிதியமைச்சர் பாலகோபால் கலந்து கொண்டார்.
தொலைந்து போன காவிரியின் துணை நதிகள்
‘பொன்னி நதி’யான காவிரிக்கு சங்க இலக்கிய பாடல்கள் ஏராளம் உண்டு. ‘ஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி, வாய்க்காவா மழவர் ஓதை வளவன் தன் வளனே வாழி காவேரி’, ‘தான் பொய்யா மலைத்தனைய கடற்காவிரி’ என்பன போன்ற பாடல்கள் கல்வெட்டுகளில் அழியாத இடம் பெற்றுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை தொடங்கி வைத்ததால் கட்சி பொறுப்புகளில் இருந்து தளவாய்சுந்தரம் எம்எல்ஏ நீக்கம்
குமரியில் நடந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை தொடங்கி வைத்த தளவாய்சுந்தரத்தை மாவட்ட செயலாளர், அமைப்பு செயலாளர் பொறுப்புகளில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம், கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவர். தற்போது கன்னியாகுமரி எம்எல்ஏவாக உள்ள தளவாய்சுந்தரம், குமரி கிழக்கு மாவட்ட செயலாளராகவும், அதிமுக மாநில அமைப்பு செயலாளராகவும் இருந்தார்.
₹1,00,000 கோடி வர்த்தக இலக்கை நோக்கி...
1980க்கு பிறகு தொடர்ச்சியான வளர்ச்சியை கண்டு வந்த திருப்பூரின் பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி 2014ம் ஆண்டு ஒன்றியத்தில் பாஜ அரசு பொறுப்பேற்ற பின்பு அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, கொரோனா ஊரடங்கு, பருத்தி தட்டுப்பாடு, நிலையில்லாத நூல் விலை உயர்வு, கன்டெய்னர் தட்டுப்பாடு உள்ளிட்டவற்றின் காரணமாக நிலை குலைந்தது.
அப்டேட் ஆகிறது 'சிசிடிஎன்எஸ்’
குற்றவாளிகளை பிடிக்க, தகவல் சேகரிக்க கூடுதல் தொழில்நுட்பம்
மழைக் காலத்தின்போது அதிகாரிகள் செல்போனை சுவிட்ச்ஆப் செய்தால் கடுமையான நடவடிக்கை - அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை
மழைக்காலங்களில் அதிகாரிகள் செல்போனை “சுவிட்ச்ஆப்” செய்து வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தாம்பரம் விமானப்படை தளத்தில் சாகச நிகழ்ச்சிகள் நிறைவு இந்திய விமானப்படையின் சேவை உலக நாடுகளுக்கும் தேவைப்படுகிறது
விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங் பேச்சு