CATEGORIES
Kategoriler
முக்கிய வழக்குகளில் ஆஜராகாத அரசு வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை
நீதிமன்றங்களில் முக்கிய வழக்குகளில் ஆஜராகாத அரசு வழக்கறிஞர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரிய மனு ஐகோர்ட்டில் தள்ளுபடி
தேர்தல் அதிகாரியை மிரட்டியதாக, முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதான வழக்கை ரத்து செய்ய கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
6 முதல் 12ம் வகுப்பு அரையாண்டு தேர்வுக்கான கால அட்டவணை
அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு வருகிற 9ம் தேதி (திங்கட்கிழமை) முதல் 23ம் தேதி (திங்கட்கிழமை) வரைநடக்கும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித் துறை அறிவித்தது. இதில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்புக்கு வருகிற 16ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலும், 6 முதல் 12 வரை 9ம் தேதி முதல் 23ம் தேதி வரையிலும் தேர்வு நடக்கிறது. தேர்வு தேதி அறிவிக்கப்பட்ட போது, 10, 12ம் வகுப்புகளுக்கு மட்டும் முழு அட்டவணை வெளியிடப்பட்டது.
நடிகை ஷில்பா ஷெட்டி கணவர் வீடு உள்ளிட்ட 15 இடங்களில் ஈடி ரெய்டு
ஆபாச படம் எடுத்து பணமோசடியில் ஈடுபட்ட வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் வீடு உள்ளிட்ட 15 இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி.
மகாராஷ்டிரா தேர்தல் தோல்வி கடுமையான முடிவுகள் எடுக்கப்படும்
கட்சி அமைப்பை வலுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்தார்.
அதிமுக கள ஆய்வுகளில் நடப்பது மோதல் அல்ல, கருத்து பரிமாற்றம்
அதிமுக கள ஆய்வு கூட்டங்களில் நடப்பது மோதல் அல்ல. ஆட்சி அமைப்பதற்கான கருத்து பரிமாற்றம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
மாமூல் வேட்டை மூலம் கோடீஸ்வரரான அதிமுக பிரமுகர் 6 ஆண்டில் சம்பளமே ₹9 லட்சம்தான்...ஆனா...கோடிக்கணக்கில் சொத்து குவிப்பு
மாமூல் வேட்டையின் மூலம் மகன் பெயரில் அதிமுக பிரமுகர் சொத்துகளை வாங்கி குவித்து உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
பல்லடம் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து பயங்கரம் ஐடி ஊழியர், தாய், தந்தையை வெட்டி கொன்று நகை கொள்ளை
பல்லடம் அருகே நள்ளிரவில் வீடு புகுந்து ஐடி ஊழியர், தாய், தந்தையை வெட்டி கொன்று நகைகளை கொள்ளையடித்த மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள், பேரிடர் மீட்பு படையினர் விரைந்துள்ளனர்
சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நேற்று காலை வந்தார்.
வேளாண் துறை, தமிழ் வளர்ச்சி, மீன்வளம், பால்வளம் ஆகிய துறைகளில் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமை செயலகத்தில் வேளாண்மை-உழவர் நலத்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆகிய துறைகளின் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
பெரம்பூரில் தண்டவாளத்தை கடந்தபோது விபரீதம் ரயில் இன்ஜினில் தலை சிக்கி 2 கி.மீ.க்கு தொங்கிய கல்லூரி மாணவியின் உடல்
பெரம்பூரில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் இன்ஜினில் தலை சிக்கி பலியான கல்லூரி மாணவியின் உடல் சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு தொங்கியபடி சென்றது.
விடுதிகளுக்கு மின்கட்டணத்தில் சலுகை வழங்க வேண்டும்
உரிமையாளர்கள் நலச்சங்க பொதுக்குழுவில் தீர்மானம்
கும்பகோணம் கோயிலில் இருந்து 1957ல் திருடப்பட்ட திருமங்கையாழ்வார் சிலை 67 ஆண்டுகளுக்கு பிறகு மீட்பு
லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் இருந்து கொண்டு வரப்படுகிறது * சிலை திருட்டு தடுப்பு பிரிவுக்கு டிஜிபி பாராட்டு சென்னை,: கும்பகோணம் சவுந்திரராஜபெருமாள் கோயிலில் கடந்த 1957ம் ஆண்டு காலத்தில் திருடப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலையை லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அருங்காட்சியத்தில் இருந்து 67 ஆண்டுகளுக்கு பிறகு சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் மீட்டுள்ளனர்.
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பூங்கா, கடற்கரை பகுதி இன்று மூடல்
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூங்காக்கள் மற்றும் கடற்கரை பகுதிகள் இன்று மூடப்படும் என்று சென்னை மாநராட்சி ஆணையர் குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
சென்னை பெருநகர காவல்துறை டிவிட்டரில் போலீசார் குறித்து முதல்வர் பேசிய வீடியோவை 1 லட்சம் பேர் பார்வை
சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று முன்தினம் உள்துறை சார்பில் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 3,359 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினர்.
ஏஐசிடிஇ.யின் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இன்று கடைசிநாள்
அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) அங்கீகாரம் பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் கேட் அல்லது சிஇஇடி நுழைவுத் தேர்வு அடிப்படையில் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு மாதந்தோறும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி பொறியியல், தொழில்நுட்பம், கட்டிடவியல் ஆகிய படிப்புகளில் நடப்பு கல்வியாண்டில் (2024-25) சேர்க்கை பெற்ற முதுநிலை மாணவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு அரசு ஒருபோதும் அனுமதிக்காது டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்ய வேண்டும்
மதுரை மாவட்டம், இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இரண்டு நாட்களாக போக்கு காட்டி வந்த பெஞ்சல் புயல் உருவானது
இன்று இரவு முதல் அதிகாலை வரை ஃபெஞ்சல் புயல் கரையைக் கடக்கும் என்றும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணித்துள்ளார்.
வடாரண்யேஸ்வரர் கோயிலில் தெப்பத் திருவிழா கோலாகலம்
திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் தெப்பத் திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
துணை முதல்வர் பிறந்தநாள் பளுதூக்கும் போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
திருவள்ளூர் நகர திமுக சார்பில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பளு தூக்கும் போட்டி நடந்தது.
கானா பாடகி இசைவாணி இயக்குனர் ரஞ்சித் மீது புகார்
மேடை நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய பாடல் பாடிய கானா பாடகி இசைவாணி மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சுருட்டப்பள்ளி, தேவந்தவாக்கத்தில் சிவன் கோயில்களில் பிரதோஷ விழா
சுருட்டபள்ளி, தேவந்தவாக்கத்தில் உள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ விழா நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
அறுந்து கிடந்த மின் வயரை மிதித்ததால் கறவை மாடுடன் பால் வியாபாரி பலி
பொன்னேரி அருகே, மின் சாரம் பாய்ந்து கறவை மாடுடன் பால் வியாபாரியும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தில் பதிவு செய்ய அழைப்பு
திருவள்ளூர் கலெக்டர் த.பிரபுசங்கர் விடுத்துள்ள அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் திருமணம் ஆகாத பெண் குழந்தைகள் ஆகியோரின் நலனுக்காக தமிழ் நாடு அரசு கைம்பெண் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம் மூலம் மாவட்ட அளவில் கருத்தரங்கம் நடத்தப்படுகிறது.
3 மற்றும் 5வது மெட்ரோ வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத ரயில் பெட்டிகள் தயாரிக்க F3,657 கோடியில் ஒப்பந்தம்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், 2ம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 3 மற்றும் 5ல் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் 3 ரயில் பெட்டிகளை கொண்ட 70 மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான ஏற்பு கடிதம் பி.இ.எம்.எல் நிறுவனத்திற்கு 3,657.53 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் இருந்து கடத்தப்பட்ட ₹25 லட்சம் மதிப்புள்ள ஒரு டன் குட்கா பறிமுதல்
ஊத்துக்கோட்டை அருகே, ஆந்திர மாநிலத்தில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களான குட்கா, கூல் லிப் உள்ளிட்டவை மூட்டை மூட்டையாக மினி வேனில் தமிழகத்திற்கு கடத்தப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தங்கைக்கு வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவித்துவிட்டு கிணற்றில் குதித்து வாலிபர் தற்கொலை
அதிக கடன் சுமை காரணத்தால் தங்கைக்கு தகவல் தெரிவித்துவிட்டு வாலிபர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நண்பர்களுடன் குளிக்க சென்றபோது கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் பரிதாப பலி
கும்மிடிப்பூண்டி அருகே 15 வயது சிறுவன் காணாமல்போன விவகாரத்தில், கிணற்றில் தவறி விழுந்ததில் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தது தெரியவந்தது.
வங்கி இட மாற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
பாக்கம் ஊராட்சி, பெரியபாளையம் நெடுஞ்சாலையில் 2013 முதல் யூகோ வங்கி செயல்பட்டு வருகிறது.
அத்திமாஞ்சேரிபேட்டையில் பரபரப்பு 2 மாணவிகளிடம் பாலியல் சில்மிஷம் பட்டதாரி ஆசிரியர் போக்சோவில் கைது
அத்திமாஞ்சேரிபேட்டையில் 2 மாணவிகளிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட பட்டதாரி ஆசிரியர் போக்சோவில் கைது செய்யப்பட்டார். திருத்தணி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 10 நாட்களில் மட்டும் பாலியல் புகாரில் 3 ஆசிரியர்கள் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.