CATEGORIES
Kategoriler
மாஞ்சா நூல் அறுத்து குழந்தை உள்பட இருவர் படுகாயம் வியாசர்பாடி முழுவதும் அதிரடி சோதனை
வியாசர்பாடியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது மாஞ்சா நூல் அறுத்ததில் குழந்தை உள்பட இருவர் படுகாயமடைந்தனர்.
பள்ளிக்கரணை சதுப்புநில ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு எடுத்த துரித நடவடிக்கை செல்லும்
சென்னை சதுப்பு நில ஆக்கிரமிப்புகளை அகற்ற தமிழக அரசு துரித நடவடிக்கை எடுத்தது செல்லும், அதை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சிக்னல், மேம்பாலம் அருகில் உள்ள பேருந்து நிறுத்தங்கள் இடமாற்றம்
சென்னையில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு தீர்வாக சிக்னல்கள், மேம்பாலங்கள் அருகே இருக்கும் பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் வரை தள்ளி இடமாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து கழகம் தரப்பில் தகவல் வெளியாகி உள்ளன.
நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து இலங்கையில் புதிய பிரதமர், அமைச்சர்கள் பதவியேற்றனர்
இலங்கையில் நாடாளுமன்ற தேர்தலில் என்பிபி கட்சி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதிபர் திசநாயக தலைமையில் புதிய பிரதமர் மற்றும் அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.
வறுமை, பட்டினி, பருவநிலை குறித்து ஆலோசனை பிரேசிலில் ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார்
நைஜீரியாவைத் தொடர்ந்து பிரேசில் சென்ற பிரதமர் மோடி, ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்றார். இம்மாநாட்டில் உலகளாவிய வறுமை, பட்டினி, பருவநிலை சவால்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
7 விக்கெட் வித்தியாசத்தில் பாக்.கை வென்று அசத்தல்
பாகிஸ்தானுடனான 3வது டி20 போட்டியிலும் அசத்தல் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி, 3-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி உள்ளது. ஆஸ்திரேலியா சென்றுள்ள பாக்.
இதுவரை 150 நடிகைகளுக்கு தனுஷ் தொல்லை கொடுத்துள்ளார்
நயன்தாரா – விக்னேஷ் சிவன் தொடர்பான ‘Nayanthara: Beyond the Fairy Tale’ என்ற ஆவண திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இன்று (18.11.2024) வெளியாக உள்ளது.
சென்னை, கோவை உள்பட 22 இடங்களில் சோதனை லாட்டரி மார்ட்டின், ஆதவ் அர்ஜூனாவிடம் 12.41 கோடி ரொக்கம் பறிமுதல்
6.42 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது
மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்தக் கூடாது
விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் அறிவுரை
நாம் ஒற்றுமையாக இருந்தால் பாதுகாப்பாக இருப்போம் மோடி, அமித் ஷா, அம்பானி ஒன்றாக இருந்தால் பாதுகாப்பாக இருப்பார்கள்
பாஜவின் புதிய கோஷத்துக்கு ராகுல் காந்தி விளக்கம்
பாதுகாப்பு படையுடன் மோதல் மணிப்பூரில் போராட்டக்காரர் சுட்டுக் கொலை
மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் பாதுகாப்பு படையுடனான மோதலில் போராட்டக்காரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
குத்தகை காலம் முடிந்தால் காலி செய்யணும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் மது கடையை மாற்ற வேண்டும்
குத்தகை காலம் முடிந்து விட்டால் கடையை காலி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு டாஸ்மாக் நிர்வாக இயக்குநருக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் மதுக்கடையை மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
யாரைப்பற்றியும் கவலை இல்லை சீமான் தடாலடி
திருச்சியில் நேற்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டியில் எந்த கட்சியுடன் கூட்டணி அமைப் பது குறித்தும் நாம் தமிழர் கட்சிக்கு கவலை இல்லை.
நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் சோலார் பேனல் ஆலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி
1,260 கோடியில் ‘விக்ரம் சோலார் நிறுவனம்' அமைக்கிறது | 3,150 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என தகவல்
திருச்செந்தூர் முருகன் கோயிலில் யானை மிதித்து பாகன், உறவினர் பலி
பரிகார பூஜைக்கு பின் நடை திறப்பு
தமிழகத்தில் 2026 தேர்தல் கூட்டணி விஜய் உள்பட எந்த கட்சியுடனும் அதிமுக பேசவில்லை
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல காற்று சுழற்சி 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
குமரிக் கடல் பகுதியில் வளி மண்டல காற்று சுழற்சி நிலை கொண்டு இருப்பதால் 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆரம்பநிலை சிசு வளர்ச்சியை கண்டறியும் பரிசோதனை திட்டம்
760 ஓமந்தூரார் மருத்துவமனையில் இதுவரை பயனடைந்த கர்ப்பிணிகளின் எண்ணிக்கை | சிசுவின் மரபணுவை ஆராய 'டபுள் மார்க்கர்' மற்றும் 'என்டி' ஸ்கேன் பரிசோதனை
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாடு அரசின் அறிக்கை ‘மாஸ்டர் கிளாஸ்’
நிதிப்பங்கீடு குறித்து தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த அறிக்கையை, மாஸ்டர் கிளாஸ் என்று கூறுவேன்.
வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை
வருகிற சட்டமன்றத்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்று தமிழக வெற்றிக்கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார்.
ஒன்றிய வருவாயில் இருந்து மாநிலங்களுக்கான வரிப் பகிர்வு பங்கை தமிழகத்திற்கு 50% ஆக உயர்த்த வேண்டும்
16வது நிதி கமிஷனிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
இங்கிலாந்துடன் 4வது டி20: பேட்டிங்கில் மிரட்டிய லுாயிஸ் இமாலய இலக்கை ‘சேஸ்’ செய்து வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி
கரீபியன் பகுதியில் உள்ள செயின்ட் லுாசியா தீவில் நேற்று முன்தினம் நடந்த இங்கிலாந்து அணியுடனான, 4வது டி20 போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
4 படம் ஓடினால் போதும் முதல்வராக ஆசை வருது விஜய் மீது செல்லூர் ராஜூ தாக்கு
தமிழகத்தில 4 படம் ஓடினால் போதும், உடனே முதல்வராகும் ஆசை சில நடிகர்களுக்கு வருகிறது என்று நடிகர் விஜயை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மறைமுகமாக தாக்கினார்.
இன்னும் ஒரு சாதி அமைப்பாகவே பார்க்கும் ஒரு பார்வை இருக்கிறது நமக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை என்று விலகி இருக்க முடியாது - திருமாவளவன் பேச்சு
“இன்னும் ஒரு சாதி அமைப்பாகவே பார்க்கும் ஒரு பார்வை மண்ணிலே இருக்கிறது. நமக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை” என்று விலகி இருக்க முடியாது திருமாவளவன் கூறியுள்ளார்.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான சிறப்பு கலந்தாய்வு மருத்துவ ஆலோசனை குழு அறிவிப்பு
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் காலி இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு விட்டன. கடந்த 5ம் தேதியுடன் இதற்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நிறைவு பெற்றுவிட்டது.
உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் தமிழக வீராங்கனை காசிமாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை காசிமாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
டாக்டர். எம்ஜிஆர் நிகர்நிலை பல்கலைக்கழக 33வது பட்டமளிப்பு விழா ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் பங்கேற்பு
சென்னையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் 33வது பட்டமளிப்பு விழா, வேலப்பன்சாவடியில் உள்ள ஏசிஎஸ் மருத்துவமனை வளாகத்தில் வேந்தர் ஏ.சி.சண்முகம் தலைமையில் நேற்று நடந்தது.
காசிமேட்டில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான படகுகள் கரை திரும்பியதால் நெரிசல்
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான விசைப்படகுகள் மற்றும் பைபர் படைகுகள் மற்றும் கட்டுமரங்களில் மீனவர்கள் கடலுக்கு செல்வது வழக்கம்.
இன்ஸ்டாகிராமில் சிறுமிகளை காதல் வலையில் வீழ்த்தி நகை, பணம் பறித்த சிறுவன் கைது - சொகுசு வாழ்க்கை வாழ்ந்தது அம்பலம்
செல்போன் பயன்பாடு வந்த பிறகு சமூக வலைதளங்களை இளைஞர்கள் குறிப்பாக பள்ளி மாணவ, மாணவியர் அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.
கார்த்திகை மாதப்பிறப்பையொட்டி காஞ்சி வரதராஜ பெருமாள் பவனி
ஈரோடு கஸ்தூரி அரங்கநாதர்(பெருமாள்) கோயிலில் கார்த்திகை மாத பிறப்பையொட்டி நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் பங்கேற்று மூலவரை வழிபட்டு சென்றனர்.