CATEGORIES
فئات
ராஜஸ்தானில் பயங்கரம் விபத்தில் சிக்கிய எல்பிஜி டேங்கர் லாரி தீப்பிடித்ததில் 11 பேர் கருகி பலி
ராஜஸ்தானில் எல்பிஜி டேங்கர் லாரி எதிர்பாராதவிதமாக வாகனங்களின் மீது மோதியில் தீ விபத்து ஏற்பட்டது.
நாடாளுமன்ற வளாகத்தில் கைகலப்பு ராகுல் மீதான வழக்கு குற்றப்பிரிவுக்கு மாற்றம்
நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்பட்ட கைகலப்பில் பாஜ எம்.பி.க்கள் இருவர் காயமடைந்தது தொடர்பாக ராகுல் காந்திக்கு எதிரான வழக்கு டெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம்
சபரிமலையில் இவ்வருட மண்டல கால பூஜைகளுக்காக நடை திறக்கப்பட்ட கடந்த நவம்பர் 15ம் தேதி முதல் பக்தர்கள் கடந்த வருடத்தை விட அதிகமாக குவிந்து வருகின்றனர்.
மண்டபம் மீனவர்கள் 8 பேருக்கு டிச.27 வரை காவல் நீடிப்பு
ராமேஸ்வரம் அருகே மண்டபம் துறைமுகம் கடலோரப்பகுதியில் இருந்து டிச.8ம் தேதி மீன் பிடிக்க சென்ற கார்த்திக் ராஜ் மற்றும் சகாய ஆண்ட்ரோஸ் ஆகிய இருவரின் படகுகளை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். இதிலிருந்த, 8 மீனவர்களையும் கைது செய்தனர்.
மருத்துவ கழிவுகள் கொட்டிய விவகாரம் நெல்லை வந்த கேரள குழுவிடம் கலெக்டர் கிடுக்கிப்பிடி கேள்வி
நெல்லை அருகே கோடகநல்லூரில் கேரள மாநிலத்தில் இருந்து மருத்துவ கழிவுகள் கொண்டு வந்து கொட்டப்பட்டது.
திமுக தொடர் திட்டங்களை தருகிற காரணத்தினால் மக்கள் தொடர் வெற்றி அளிப்பதை பார்த்து எடப்பாடிக்கு வயிற்றெரிச்சல்
திமுக அரசு தொடர் திட்டங்களை தருகிற காரணத்தினால், திமுகவிற்கு தொடர் வெற்றியை மக்கள் அளித்து வருகின்றனர்.
நடத்தையில் சந்தேகத்தால் கொடூர கொலை மனைவி உடலை 10 துண்டாக கூறு போட்ட கணவர் கைது
குமரி மாவட்டம், அஞ்சுகிராமம் அருகே மனைவியை கொன்று உடல் பாகங்களை 10 துண்டுகளாக வெட்டி 3 பேக்குகளில் அடைத்து வீசுவதற்கு சென்ற கணவரை தெருநாய்கள் சுற்றிவளைத்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
பொங்கல் நாளில் அறிவிக்கப்பட்டுள்ள நெட் தேர்வு தேதி மாற்ற வலியுறுத்தல்
ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் தேசிய தேர்வு முகமை பொது இயக்குநர் பிரதீப் சிங் கரோலா ஆகியோருக்கு மதுரை எம்பி சு.வெங்கடேசன், எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பழநி மலைக்கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கை 192.984 கிலோ தங்கம் வங்கியில் ஒப்படைப்பு
திண்டுக்கல் மாவட்டம், பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய 192.984 கிராம் தங்க நகைகள், மும்பையில் உள்ள ஒன்றிய அரசின் உருக்கு ஆலைக்கு தங்கக்கட்டிகளாக மாற்றுவதற்காக எஸ்பிஐ வங்கி மூலம் நேற்று எடுத்து செல்லப்பட்டது.
புதுச்சேரியில் இருந்து 8 மாதங்களுக்கு பிறகு ஐதராபாத், பெங்களூருக்கு மீண்டும் விமான சேவை
புதுச்சேரி லாஸ்பேட்டை விமான நிலையத்தில் இருந்து பெங்களூரு, ஐதராபாத் ஆகிய இடங்களுக்கு ஸ்பைஸ் ஜெட் மூலம் விமானம் இயக்கப்பட்டு வந்தது.
பிளஸ் 2 அரையாண்டு தேர்வு கணக்கு பாடத்தில் குளறுபடி
சென்னை மாவட்டத்தில் கடந்த 16ம் தேதி கணக்கு பாடத் தேர்வு நடத்தப்பட்டது.
அமித்ஷாவுக்கு எதிராக உயர் நீதிமன்ற வக்கீல்கள் போராட்டம்
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் கருத்து தெரிவித்தார்.
எண்ணூரில் புதிய அனல்மின்நிலைய விரிவாக்க திட்டம் கருத்துக்கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் தள்ளுமுள்ளு
எண்ணூரில் 1970ம் ஆண்டு முதல் 5 அலகுகள் மூலம் 450 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் செயல்பட்டு வந்த எண்ணூர் அனல் மின் நிலையம் அடிக்கடி பழுதானது.
துணைவேந்தர் பதவிகள் நிரப்புவதில் அரசியல் செய்வதை விடுத்து பல்கலைக்கழகங்கள் கல்விப் பணியாற்ற வழி விட வேண்டும்
துணைவேந்தர் பதவிகளை நிரப்புவதில் அரசியல் செய்வதை விடுத்து பல்கலைக்கழகங்கள் கல்விப் பணியாற்ற ஆளுநர் வழி விட வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;
இந்தியாவிலேயே முதன்முறையாக 78 வயது நோயாளிக்கு புதிய தொழில்நுட்பத்துடன் அலெக்ரா வால்வு பொருத்தம்
அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை: இந்தியாவின் முன்னணி இதய சிகிச்சை நிபுணரும், அப்போலோ மருத்துவமனையின் ஸ்ட்ரக்ச்சுரல் ஹார்ட் புரோக்ராமின் தலைவருமான செங்கோட்டுவேலு தலைமையில் இயங்கும் அப்போலோ மருத்துவமனைகள் குழு, இந்தியாவிலேயே முதன்முறையாக புதிய தலைமுறை நுட்பத்திலான அலெக்ரா ட்ரான்ஸ்கதீடெர் ஆர்ட்டிக் வால்வு இம்ப்ளானேஷன் வால்வை நோயாளிக்கு வெற்றிகரமாக பொருத்தி இருப்பதன் மூலம் மேம்பட்ட இதய சிகிச்சையில் மற்றொரு மைல்கல்லை எட்டி உள்ளது.
மெரினாவில் வரும் 24ம் தேதி வரை நடக்கிறது மகளிர் சுயஉதவி குழுக்களின் உணவு திருவிழா
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் மெரினாவில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை 28 கோடியாக அதிகரிப்பு
தமிழ்நாட்டில் சுற்றுலாப் பயணிகளின் வருகை எண்ணிக்கை 28.71 கோடியாக உயர்ந்துள்ளது என சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற வாயிலில் நடந்த கொலையை காவல்துறையினர் தடுக்காமல் வேடிக்கை பார்ப்பதா?
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவு:
சென்னையில் இருந்து பினாங்கிற்கு இன்று முதல் நேரடி விமான சேவை
மலேசியா நாட்டின் தனித்தீவான பினாங்கிற்கு, சென்னையில் இருந்து, நாளை முதல் அதிகாலையில் இருந்து நேரடி தினசரி விமான சேவை தொடங்குகிறது.
பெண் வழக்கறிஞர் பற்றி அவதூறு கருத்து ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் மீது மேலும் ஒரு வழக்கு பாய்ந்தது
திருச்சியை சேர்ந்த ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் கடந்த 13ம் தேதி உச்ச நீதிமன்றத்தை விமர்சனம் செய்து சமூக வலைத்தளத்தில் தனது கருத்தை பதிவு செய்து இருந்தார்.
புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் நாட்டிலேயே மிகக் குறைந்த விலையில் மின்சாரம் வழங்குவது உறுதி செய்யப்படும்
புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது என்றும் நாட்டிலேயே மிகக் குறைந்த விலையில் மின்சாரம் தொடர்ந்து வழங்குவது உறுதி செய்யப்படும் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் தரமான பருப்பு, பாமாயில் வழங்கும் நிறுவனங்களுக்கே கொள்முதல் ஆணை
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் தரமான பருப்பு மற்றும் பாமாயில் வழங்கும் நிறுவனங்களுக்கே கொள்முதல் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது என்று வாணிப கழக மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுப்பெறும்
வங்கக் கடலில் மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐஐடி ஆராய்ச்சி மையம், ஆய்வகங்களை ஜன.3, 4ம் தேதிகளில் மக்கள் பார்வையிடலாம்
ஜனவரி 3, 4ம் தேதிகளில் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஆராய்ச்சி மையங்களையும் ஆய்வகங்களையும் பார்வையிடலாம் என பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஈரோட்டில் ₹1,368 கோடியில் வளர்ச்சி திட்டப்பணி 50,088 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
ஈரோட்டில் நேற்று நடந்த அரசு விழாவில் ரூ.1,368 கோடி மதிப்பில் அரசு வளர்ச்சி திட்ட பணிகளை அடிக்கல் நாட்டியும், தொடங்கி வைத்தும் 50,088 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார் ஜன.6ம் தேதி சட்டப்பேரவை கூடுகிறது
தமிழக சட்டப்பேரவை ஜனவரி 6ம் தேதி கூடுகிறது என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் அன்றைய தினம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார்.
அமித் ஷா பதவி விலக கோரி எதிர்க்கட்சிகள் தொடர் அமளி நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் தேதிக்குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன.
திருத்தணியில் சிதிலமடைந்து காணப்படும் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா?
திருத்தணியில், சிதிலமடைந்த கட்டிடத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வரும் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்திற்கு நிரந்தர கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்று போலீசார் வலியுறுத்திள்ளனர்.
பணியில் இருந்து நீக்கியதாக கூறி பிரபல வங்கியில் புகுந்து மேலாளருக்கு சரமாரி வெட்டு
தி.நகரில் உள்ள தனியார் வங்கிக்குள் வாடிக்கையாளர் போல் புகுந்து மேலாளரை சரமாரியாக கத்தியால் வெட்டிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது. தப்பியோட முயன்ற அவரை போக்குவரத்து காவலர் மடக்கி பிடித்தார்.
விபத்தில் சிக்கிய சரக்கு லாரி மீது பஸ் மோதியது
புழல் அருகே சாலை தடுப்பு மீது மோதி விபத்திற்குள்ளான லாரி மீது மாநகர பேருந்து மோதியது. அதிஷ்டவசமாக பயணிகள் தப்பினர்.