CATEGORIES
Kategorien
வாரிசு அடிப்படையில் பணி வழங்க கோரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு
சேலம் தமிழ் புலிகள் கட்சியின் மூலமாக மணிமேகலை என்பவர் கணவர் கண்ணனுக்கு வழங்க வேண்டிய வேலையை வாரிசு என்ற அடிப்படையில் பணி வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாநகராட்சி ஆணையர் அலுவலகத்திற்கு வந்து மனுக்கள் பெறும் பெட்டியில் மனு அளித்தனர்.
திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கவனசர்ப்பு போராட்டம்
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத மு க ஸ்டாலின் தலைமையிலான அரசை கண்டித்து அதிமுக தஞ்சை தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பில் பட்டுக்கோட்டை அண்ணா சிலை அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கொரோனா கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் 31ந் தேதி வரை நீட்டிப்பு
மத்திய அரசு அறிவிப்பு
கொரோனா பாதிப்பு உயர்வு: கேரளாவில் 2 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு
கேரளாவில் கொரோனா பாதிப்பு உயர்வை முன்னிட்டு 2 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
உண்ணாவிரத போராட்டம்
சேலம் பிஎஸ்என்எல் சேலம் கிளையின் சார்பாக 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டு இயக்கங்கள் ஒன்று சேர்ந்து மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.
பெட்ரோல், டீசல் விலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்
சேலம் ஜனநாயக தொழிற்சங்க மையம் சார்பாக, தலைமை தபால் அலுவலகம் முன்பு பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றின் மீதான வரியை பாதியாக குறைத்திட வேண்டியும், மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடக பாரதிய ஜனதா அரசாங்கத்தின் முயற்சியை நிறுத்திட வேண்டியும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெகாசஸ் விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் முக்கிய ஆலோசனை
பெகாசஸ் ஊழல் தொடர்பாக அனைத்து எதிர்க்கட்சிகளும் மக்களவையில் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுக்கும் என்று புதன்கிழமை வட்டாரங்கள் தெரிவித்தன.
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கதவணை கட்டும் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
அணைக்கரை பகுதி கீழணை வடக்கு பிரிவு இருந்து வடவாறு, வடக்கு பா ராஜன் வாய்க்கால் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள சீரமைப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பாலசுப்ரமணியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
கர்நாடக மாநிலத்தின் 23வது முதல்வராக பசவராஜ்பொம்மை பதவியேற்றார்
கர்நாடக மாநிலத்தின் 23வது முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைத்தார். கர்நாடக மாநில முதல்வராக எடியூரப்பா பொறுப்பேற்ற நாள் முதல், சில பாஜ மூத்த எம்எல்ஏக்கள் அவருக்கு எதிராக போர்கொடி உயர்த்தி வந்தனர்.
உத்தர பிரதேசத்தில் பயங்கர விபத்து சாலையில் தூங்கிய 18 தொழிலாளர்கள் பலி
உத்தர பிரதேசத்தில் பழுதாகி நின்று கொண்டிருந்த பேருந்து மீது டிரக் மோதியது. இந்த விபத்தில் பேருந்தின் முன்பாக சாலையில் தூங்கிக் கொண்டு இருந்த தொழிலாளர்கள் பலியாகினர். உத்தர பிரதேசத்தின் பரபன்கி மாவட்டத்தில் டிரக் பேருந்து மோதிக்கொண்ட விபத்தில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கோர விபத்து குறித்து உத்தர பிரதேச போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
நாமக்கல் மாவட்டத்தை கொத்தடிமை தொழிலாளர் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் ஆட்சியர்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு மற்றும் மறுவாழ்வு குறித்த மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயா பிசிங் தலைமையில் நடைபெற்றது.
எம்.ஆர்.கே.சர்க்கரை ஆலையில் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஆய்வு
சேத்தியாத்தோப்பில் உள்ள எம்.ஆர். கே.சர்க்கரை ஆலையில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஆய்வு பணியை மேற்கொண்டார். பத்தாண்டு காலமாக துவக்கப்படாமல் உள்ள கரும்பு சக்கையில் இருந்து மின் உற்பத்தி, எத்தனால் தயாரித்தல் மற்றும் விவசாயிகள் குறைகேட்பு ஆலோசனைக் கூட்டம் கடலூர் மாவட்டம், புவனகிரி அருகே உள்ள சேத்தியாத்தோப்பில் எம். ஆர். கிருஷ்ணமூர்த்தி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது.
அப்துல் கலாமுக்கு புதுச்சேரி கடற்கரை சாலையில் சிலை அமைக்க வேண்டும்
ஆர்எல்வி ஜனநாயக பேரவை கோரிக்கை
காவலர் உடற்தகுதி தேர்வு
கோவை மாவட்டம் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்ற இரண்டாம் நிலை காவலர், சிறைத்துறை காவலர் மற்றும் தீயணைப்பு பிரிவினர்களுக்கான உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு, கோவை சரக காவல் துறை துணைத் தலைவர், கோவை மாவட்ட சிறைத்துறை துணைத் தலைவர், கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் கோவை மாவட்டக் காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் துவங்கப்பட்டது.
2025ம் கல்வியாண்டில் ரூ.25 கோடி வருமானத்தில் வேலை வாய்ப்பைப் பெற்று தருவது இலக்கு
சோனா கல்வி குழும துணைத்தலைவர் பேச்சு
முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா
அக்னி பரீட்சையாக அமைந்துவிட்டதாக கண்ணீர் மல்க பேச்சு
பழம்பெரும் நடிகை ஜெயந்தி உடல் நல குறைவால் காலமானார்
மறைந்த மூத்த நடிகர்கள் ஜெமினி கணேசன், எம்.ஜி.ஆர் உள்பட பல நடிகர்களுடன் நடித்த நடிகை ஜெயந்தி காலமானார்.
வீட்டை அபகரிக்க முயற்சி அதிமுக நிர்வாகி மீது புகார்
செங்கம் தாலுக்கா அரட்டவாடி கிராமம் மல்லிகாபுரம் தண்டா பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் மனைவி செல்வி என்பவர் தனது மாற்றுத்திறனாளி மகனுடன் நேற்று முன்தினம் மாலை திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் வந்து கோரிக்கை மனு அளித்தார்.
பாமக நிறுவனர் பிறந்த நாள் கொண்டாட்டம்
கடலூர் மாவட்டம் கீரப்பாளையத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் 83வது பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
கார்கில் போர் வெற்றி தினம்: போர் நினைவிடத்தில் ராஜ்நாத்சிங் அஞ்சலி
ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் டெல்லியில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
கயத்தாறில் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் பேரணி
கயத்தாறில் காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் பேரணி கைதாக காங்கிரஸ் கட்சியின் சைக்கிள் பேரணி வரவேற்பு விழா.
புதுக்கோட்டை மாவட்டத்தில் குடியிருப்பு கட்டிட கட்டுமான பணிகளை அமைச்சர் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூரில் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் சார்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் 368 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட கட்டுமான பணிகளை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட அமைச்சர் ரகுபதி, குடிசைத்தொழில்கள், சிறு தொழில்கள் உள்ளிட்ட ஊரகத்தொழில்கள் மற்றும் குடிசை மாற்று வாரிய அமைச்சர் அன்பரசன், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
ஆற்றின் கரையோரப் பகுதியில் வசிக்கின்ற பொதுமக்களை தங்க வைப்பதற்காக மேட்டுப்பாளையத்தில் 7 திருமண மண்டபங்களும், 2 பள்ளிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் தி.மு.க., காங்கிரஸ் எம்.பிக்கள் தர்ணா
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 13ந் தேதி வரை நடைபெற உள்ளது. இக்கூட்டத் தொடரில் 'பெகாசஸ்' உளவு மென்பொருள் விவகாரம் நாடாளுமன்றத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது.
ஆரணி அருகே அடிப்படை வசதிகள் வேண்டி ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து சாலைமறியல்
ஆரணி அருகே இரும்பேடு ஊராட்சியில் ஒன்றை ஆண்டுகாலமாக அடிப்படை வசதிகளை செய்யாத ஊராட்சி மன்றத் தலைவர் தரணி வெங்கட்ராமனை கண்டித்து கிராம பொதுமக்களுடன் வார்டு உறுப்பினர்கள் செய்யாறு கூட்டு ரோட்டில் சாலைமறியலில் ஈடுப்பட்டனர்.
அமித்ஷா தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்-கேஎஸ் அழகிரி
சிதம்பரத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி வருகை தந்தார்.அப்பொழுது பேட்டியின் போது நிருபர்களிடம் அழகிரி கூறுகையில், இஸ்ரேல் நாட்டின் உளவு செயலி பெகாசஸ் மூலம் இந்தியாவில் ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அமைச்சர்கள் , பத்திரிக்கையாளர்கள் டெலிபோன் பேச்சுக்கள் ஒட்டு கேட்கப்படுகிறது. இதை மோடி அரசாங்கம் மூடி மறைக்கிறது. இந்த செயலுக்கு இஸ்ரேலுடன் இந்திய அரசாங்கம் அங்கமாக உள்ளது. இந்தச் செயலுக்கு இந்திய அரசுக்கு தொடர்பு பங்கு உள்ளது. இந்த ஒட்டு கேட்கும் மென் பொருளில் இந்திய அரசு பங்குதாரராக உள்ளது.
கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க வண்ண ஓவியங்களுடன் குழந்தைகள் வார்டு தயார்
கொரோனா 2 வது அலையின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் தற்போது குழந்தைகள் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
ஒலிம்பிக்கில் படையெடுக்கும் இந்தியர்களின் முழு பட்டியல்
32வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு கோலாகலமாக தொடங்குகிறது. ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியாவில் இருந்து 125 வீரர், 'ராங்கனைகள் தகுதி பெற்று இருக்கிறார்கள். ஒரு ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் கலந்து கொள்ளும் வீரர், ராங்கனைகளின் அதிகபட்ச எண்ணிக்கை இது தான்.
12ஆம் வகுப்பு தேர்வில் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாதனை
சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12ஆம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சியுடன் நகர அளவில் சிறப்பிடம் பிடித்து சாதனை புரிந்துள்ளது.
நியமனத்தில் முறைகேடு: ஆவின் நிறுவனத்தில் 636 பணி நியமனங்கள் ரத்து
ஆவின் பொருட்களை மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு புதிய ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.