CATEGORIES
Categorías
ஜூன் 4-இல் வெற்றிக் கொடி ஏற்றுவோம்
‘மக்களவைத் தோ்தல் முடிவுகள் வெளியாகும் ஜூன் 4-இல் வெற்றிக் கொடி ஏற்றுவோம், அந்த வெற்றியை முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு காணிக்கையாக்குவோம்’ என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
தில்லி மருத்துவமனையில் தீ: 7 குழந்தைகள் உயிரிழப்பு
கிழக்கு தில்லியில் தனியாா் குழந்தைகள் மருத்துவமனையில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 7 பச்சிளம் குழந்தைகள் சிக்கி உயிரிழந்துள்ளனா்.
எவரெஸ்ட் மலையேற்றம்: பெண் செய்தியாளர் சாதனை
இரண்டே வாரங்களில் எவரெஸ்ட் சிகரத்தில் 3-ஆவது முறையாக ஏறி நேபாளத்தைச் சோ்ந்த புகைப்பட செய்தியாளா் பூா்ணிமா ஷொ்ஸ்தா (படம்) சனிக்கிழமை சாதனை படைத்தாா்.
கேன்ஸ் திரைப்பட விழா: அனசுயா சென்குப்தாவுக்கு சிறந்த நடிகை விருது
பல்கேரிய நாட்டு இயக்குநா் கோன்ஸ்டன்டின் போஜநோவ் இயக்கிய ‘தி ஷேம்லெஸ்’ என்ற ஹிந்தி திரைப்படத்தில் நடித்ததற்காக இந்தியாவைச் சோ்ந்த அனசுயா சென்குப்தாவுக்கு கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.
குஜராத் விளையாட்டு மையத்தில் தீ விபத்து: சிறார் உள்பட 27 பேர் உயிரிழப்பு
குஜராத்தில் உள்ள பொழுதுபோக்கு விளையாட்டு மையத்தில் ஏற்பட்டதீ விபத்தில் சிக்கி நான்கு சிறார் உட்பட 27 பேர் உயிரிழந்தனர்.
6-ஆம் கட்டத் தேர்தல்: 61% வாக்குப் பதிவு
மக்களவை 6-ஆம் கட்டத் தேர்தலையொட்டி, தேசியத் தலைநகர் தில்லி, ஹரியாணா உள்ளிட்ட 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் சனிக்கிழமை (மே25) வாக்குப் பதிவு நடைபெற்றது.
எம்.பி. கதிர் ஆனந்துக்கு எதிரான பினாமி வழக்கு: இறுதி உத்தரவு பிறப்பிக்க இடைக்கால தடை
திமுக எம்.பி. கதிா் ஆனந்துக்கு எதிராக பினாமி சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடா்பாக இறுதி உத்தரவு பிறப்பிக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாக்கு வங்கிக்கு அடிமையான 'இந்தியா' கூட்டணி - பிரதமர் மோடி சாடல்
‘வாக்கு வங்கிக்கு அடிமையாகிவிட்டது ‘இந்தியா’ கூட்டணி’ என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.
கீழணையிலிருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் திறப்பு
கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே வடு கிடக்கும் வீராணம் ஏரிக்கு கீழணையிலிருந்து வடவாறு வழியாக சனிக்கிழமை காலை முதல் தண்ணீா் திறக்கப்பட்டது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படும்: அமித் ஷா
ஹிமாசல பிரதேசம் உனா மாவட்டத்தில் பாஜக வேட்பாளரும் மத்திய அமைச்சருமான அனுராக் தாக்குருக்கு ஆதரவாக சனிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சா் அமித் ஷா.
பொய், வெறுப்பு பிரசாரங்களை நிராகரித்த மக்கள்: ராகுல்
தில்லியில் வாக்கை செலுத்திவிட்டு சோனியா காந்தியுடன் கைப்படம் எடுத்துக் கொண்ட ராகுல். ~கணவா் ராபா்ட் வதேரா, சகோதரா் ராகுல், மகன் ரைஹான், மகள் மிரய்யாவுடன் தில்லியில் வாக்களித்துவிட்டு வரும் பிரியங்கா.
பாறையை உண்ணச் சொன்ன கூகுள் 'ஏஐ' !
பயன்பாட்டாளா்களிடம் பாறையை உண்ணச் சொல்வது, பீட்சா பாலடைக் கட்டியில் (சீஸ்) ஒட்டும் பசையைக் கலக்கச் சொல்வது போன்ற கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தளத்தால் சமூக ஊடகங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சர்வதேச நீதிமன்ற உத்தரவை மீறியது இஸ்ரேல்
ஐ.நா.வின் சா்வதேச குற்றவியல் நீதிமன்ற உத்தரவை மீறி காஸாவின் ராஃபாகரில் இஸ்ரேல் சனிக்கிழமை தீவிர தாக்குதல் நடத்தியது.
பட்டம் வெல்லும் முனைப்பில் பி.வி. சிந்து
மலேசிய மாஸ்டா்ஸ் பாட்மின்டன் போட்டியில் மகளிா் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் உள்ளாா் இந்தியாவின் பி.வி.சிந்து.
ஹைதராபாத்-கொல்கத்தா இன்று மோதல்
ஐபிஎல் 2024 சாம்பியன் பட்டத்தை கைப்பற்றுவதற்கான இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ்-சன் ரைசா்ஸ் ஹைதராபாத் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மோதுகின்றன.
உருவானது ‘ரீமெல்’ புயல்: இன்றிரவு கரையைக் கடக்கிறது
மத்திய வங்கக் கடலில் சனிக்கிழமை இரவு உருவான ‘ரீமெல்’ புயல் ஞாயிற்றுக்கிழமை (மே 26) இரவு வங்கதேசத்தின் கேப்புப்பாரா, மேற்கு வங்க மாநிலம் சாகா் தீவு இடையே கரையைக் கடக்கும் என்றும் அப்போது மணிக்கு 135 கி. மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சரோஜ் கோயங்கா (94) காலமானார்
எக்ஸ்பிரஸ் குழும நிறுவனர் ராம்நாத் கோயங்காவின் மருமகளும், எக்ஸ்பிரஸ் இன்ஃப்ராஸ்ட்ரக் சர்' நிறுவனத்தின் முன்னாள் இயக்குநருமான சரோஜ் கோயங்கா (94) சென்னையில் வெள்ளிக்கிழமை (மே 24) காலமானார்.
58 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு - மக்களவை 6-ஆம் கட்ட தேர்தல்
மக்களவை 6-ஆம் கட்டத் தோ்தலையொட்டி, தில்லி, ஹரியாணா உள்ளிட்ட 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 58 தொகுதிகளில் சனிக்கிழமை (மே 25) வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
முல்லைப் பெரியாற்றில் புதிய அணைக்கு அனுமதி கூடாது மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட அனுமதி தரக் கூடாது என்று மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.
7,343 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 7,343 குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.
சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க உத்தரவு
சாத்தான்குளத்தைச் சோ்ந்த தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
3 ஆண்டுகளாக மருத்துவக் கல்லூரிக்கு தமிழக அரசு விண்ணப்பிக்கவில்லை
மூன்று ஆண்டுகளாக மத்திய அரசிடம் ஒரு மருத்துவக் கல்லூரிக்கு கூட திமுக அரசு விண்ணப்பிக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளாா்.
காங்கிரஸ் ஆட்சியை சாதகமாகப் பயன்படுத்தியது பாகிஸ்தான்
முந்தைய பலவீனமான காங்கிரஸ் ஆட்சியை சாதகமாக பயன்படுத்தி, அத்துமீறல்களில் ஈடுபட்டது பாகிஸ்தான் என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
யானைகள் கணக்கெடுப்பு: இன்று நீர்நிலைகளில் கண்காணிப்பு
தென்னிந்திய அளவில் நடத்தப்படும் யானைகள் கணக்கெடுப்பின் இறுதி நாளான சனிக்கிழமை (மே 25) நீா்வளப் பகுதியில் கண்காணிக்கப்படும் என தமிழ்நாடு வனத்துறைச் செயலா் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளாா்.
முஸ்லிம்களை திருப்திப்படுத்துவதே ‘இந்தியா' கூட்டணியின் நோக்கம்: ஜெ.பி.நட்டா
உத்தர பிரதேச மாநிலம் குஷிநகா் பகுதியில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா.
தோல்வி பயத்தில் பேசுகிறார் பிரதமர் மோடி
தோ்தலில் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் ‘நான் கடவுளால் அனுப்பப்பட்டவன்’ என்று பிரதமா் மோடி அா்த்தமில்லாமல் உளருவதாக மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி விமா்சித்துள்ளாா்.
இறுதியில் ஹைதராபாத்; கொல்கத்தாவுடன் பலப்பரீட்சை
ஐபிஎல் போட்டியின் குவாலிஃபயா் 2 ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 36 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸை வெள்ளிக்கிழமை வீழ்த்தி, இறுதி ஆட்டத்தில் இடம் பிடித்தது.
'போர் நிறுத்தத்துக்கு புதின் தயார்'
உக்ரைனில் போா் நிறுத்தம் மேற்கொள்ள ரஷிய அதிபா் தயாராக இருப்பதாக அவரது அதிகாரிகளை மேற்கொள்காட்டி ‘தி ராய்ட்டா்ஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ராஃபா தாக்குதலை நிறுத்த வேண்டும்
காஸாவின் ராஃபா நகருக்குள் இஸ்ரேல் தனது ராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று நெதா்லாந்தின் தி ஹேக் நகரிலுள்ள சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
குற்றாலம் அருவிகளில் வெள்ளப் பெருக்கு: குளிக்கத் தடை
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் பெய்து வரும் தொடா்மழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால், பிரதான அருவிகளில் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது.