CATEGORIES
Categorías
ஹெலிகாப்டர் விபத்து: ஈரான் அதிபர், வெளியுறவு அமைச்சர் உயிரிழப்பு
ஈரானின் 8-ஆவது அதிபரான இப்ராஹிம் ரய்சி (63), அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் ஹுசைன் ஆமிா் அப்துல்லாஹியன் (60) உள்ளிட்டோா் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்தனா்.
5-ஆம் கட்டத் தேர்தல்: 60% வாக்குப்பதிவு
மக்களவைத் தேர்தல் 5-ஆம் கட்ட வாக்குப் பதிவில் திங்கள்கிழமை 60 சதவீத வாக்குகள் பதிவாகின.
ஸ்வாதி மாலிவால் மீதான தாக்குதல் வழக்கு: பிபவ் குமாருக்கு 5 நாள் போலீஸ் காவல்
ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமாரை 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் ஞாயிற்றுக்கிழமை அனுமதி அளித்தது.
பாஜக தலைமையகத்தை நோக்கி பேரணி: கேஜரிவால் தடுத்து நிறுத்தம்
தில்லியில் பாஜக தலைமையகத்தை நோக்கி ஆம் ஆத்மி கட்சியினருடன் பேரணியாகச் செல்ல முயன்ற கட்சியின் தேசிய அமைப்பாளரும் முதல்வருமான அரவிந்த் கேஜரிவாலை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
வனப் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்து - ஈரான் அதிபரின் நிலை என்ன?
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி பயணம் செய்த ஹெலி காப்டர் மோசமான வானிலை காரணமாக வனப் பகுதியில் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு அரசு ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் குறையும் வெப்பம்!
தமிழகத்தில் கடந்த இரு வாரங்களாக பல இடங்களில் மழை பெய்து வருவதால், வெப்பத்தின் தாக்கம் குறைந்து வருகிறது.
4 மாவட்டங்களுக்கு நாளை வரை சிவப்பு எச்சரிக்கை
தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் (மே 20,21) அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நேபாளம்: பிரசண்டா அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
நேபாள பிரதமா் பிரசண்டா தலைமையிலான அரசு மீது திங்கள்கிழமை (மே 20) நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
இந்தியாவுடன் வர்த்தக உறவு பாதிப்பு ஏன்?
புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு இந்தியா அதிக வரி விதிப்பதால் அந்நாட்டுடன் வா்த்தக உறவு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான முகமது இசாக் தாா் நாடாளுமன்றத்தில் எழுத்துமூலம் விளக்கமளித்துள்ளாா்.
பஞ்சாபை வீழ்த்தியது ஹைதராபாத்
ஐபிஎல் போட்டியின் 69-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தியது.
அரசியல் கட்சிகளை ஆதரித்து வாக்கு சேகரிக்க மாட்டோம்
மம்தா குற்றச்சாட்டுக்கு துறவிகள் பதில்
ஜம்மு-காஷ்மீர் தேர்தல் களம்: நீதி கோரி வாக்கு கோரும் பண்டிட் வேட்பாளர்
ஜம்மு-காஷ்மீரில் உள்ள அனந்த்நாக்-ரஜௌரி மக்களவைத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் காஷ்மீர் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ஒரே வேட்பாளரான திலீப்குமார் பண்டிதா (56) தங்கள் சமூகத்துக்கு நீதி கோரி வாக்கு சேகரித்து வருகிறார்.
வடக்கு-தெற்கு என நாட்டைத் துண்டாட அனுமதிக்க மாட்டோம்
வடக்கு-தெற்கு என நாட்டைத் துண்டாட அனுமதிக்க மாட்டோம் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
தொடர் மழை: டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிப்பு |
நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களில் 2 கோடி கைப்பேசிகளுக்கு எச்சரிக்கை தகவல்கள்
தமிழக அரசு நடவடிக்கை
அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிகரிப்பது ஏன்?
கடந்த காலங்களில் திருமணத்திற்குப் பின் கருவுறுதல், குழந்தைப் பிறப்பு என்பதெல்லாம் இயல்பான நிகழ்வாக இருந்தது.
இந்திய வாகன தொழில் நுட்ப ஆராய்ச்சி மையத்துடன் எஸ்.ஆர்.எம். புரிந்துணர்வு ஒப்பந்தம்
சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூா் எஸ்.ஆா்.எம். உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் மற்றும் மகாராஷ்டிர மாநிலம் புணேயில் உள்ள இந்திய வாகன தொழில் நுட்ப ஆராய்ச்சி மையம் இடையே ஆட்டோமொபைல் மற்றும் இயந்திர பொறியியல் துறையில் மாணவா்களின் கண்டுபிடிப்பு திறன்களை மேம்படுத்தும் வகையில் மேற்கொண்ட புரிந்துணா்வு ஒப்பந்தம் சனிக்கிழமை கையொப்பமானது.
ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்: ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீஸார்
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மர்ம நபரால் கடத்தப்பட்ட 3 வயது குழந்தையை ஒரு மணி நேரத்தில் Railway Police மீட்டனர்.
பீன்ஸ் கிலோ ரூ.200
சென்னை கோயம்பேடு சந்தையில் வரத்து குறைவால் காய்கறிகள் விலை உயா்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை ஒரு கிலோ பீன்ஸ் ரூ.200-க்கு விற்பனையானது.
கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழா
கவிதை உறவு இலக்கிய அமைப்பின் 52-ஆம் ஆண்டு விழாவில் எழுத்தாளா்கள், கவிஞா்கள் மற்றும் பதிப்பாளா்களுக்கு விருது வழங்கப்பட்டது.
மருத்துவ வேதிக் கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து
கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் செயல்பட்டு வரும் மருத்துவ வேதி கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தால் கரும்புகை சூழ்ந்து 15 கிராம மக்கள் அவதிக்கு உள்ளானாா்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் விடிய விடிய பலத்த மழை
பேச்சிப்பாறை அணை மறுகால் மதகுகள் திறப்பு
திருமலை பரிணய உற்சவம் நிறைவு
திருமலையில் நடைபெற்று வரும் பத்மாவதி பரிணய உற்சவம் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
தில்லியில் 118 டிகிரி வெயில்!
நாட்டிலேயே அதிகபட்சமாக தில்லியின் நஜாஃப்கா் பகுதியில் 118.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை ஞாயிற்றுக்கிழமை பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
49 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு
மக்களவை 5-ஆம் கட்டத் தோ்தலையொட்டி, உத்தர பிரதேசம் உள்பட 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் திங்கள்கிழமை (மே 20) வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
மாநிலங்களுக்கு இடையே மோதலைத் தூண்டுகிறார் - பிரதமர் மீது முதல்வர் குற்றச்சாட்டு
மாநிலங்களுக்கிடையே மோதலைத் தூண்டும் மலிவான உத்தியை பிரதமா் நரேந்திர மோடி கையில் எடுத்திருப்பதாக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
ஸ்வாதி மாலிவால் மீது தாக்குதல்: கேஜரிவாலின் உதவியாளர் கைது
மாநிலங்களவை ஆம் ஆத்மி உறுப்பினர் ஸ்வாதி மாலிவால் தாக்கப் பட்டதாகக் கூறப்படும் வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலின் தனி உதவியாளர் பிபவ் குமார் சனிக்கிழமை கைதுசெய்யப்பட்டார்.
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை நீட்டிப்பு தவறான செயல்
தஞ்சாவூா் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நாள் 15- ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வில் மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய உலகத் தமிழா் பேரமைப்புத் தலைவா் பழ. நெடுமாறன் உள்ளிட்டோா்.
‘அத்வைத தத்துவத்தை நிலைநாட்டியவர் ஸ்ரீ ஆதிசங்கரர்’
நாட்டில் அத்வைத தத்துவத்தை நிலைநாட்டிய பெருமைக்குரியவா் ஸ்ரீ ஆதிசங்கரா் என சங்கர மடத்தின் பீடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கூறியுள்ளாா்.
யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக் கேட்பு கூடாது
யானை வழித்தடங்கள் குறித்து தமிழக அரசு ஆன்லைனில் கருத்து கேட்காமல் கடைக்கோடி மக்களிடம் நேரில் சென்று கருத்து கேட்க வேண்டும் என்று மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் கூறியுள்ளாா்.