CATEGORIES
மலேசியா: குறைந்த விலை பெட்ரோல் நிரப்பும் வெளிநாட்டினர்மீது நடவடிக்கை
போலி மலேசிய வாகனப் பதிவெண்களைப் பயன்படுத்தி மலேசியாவில் 701495 வகை பெட்ரோலை சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களில் நிரப்பும் ஒட்டுநர்களுக்கு எதிரா கக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசிய அதிகாரிகள் எச்சரிக்கை விடுத் துள்ளதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
பாலர் பராமரிப்பு நிலையங்களில் கூடுதலாக 40,000 இடங்கள்
அடுத்த ஐந்து ஆண்டுகளில் புதிதாக ஏறத்தாழ 40,000 பிள்ளைப் பராமரிப்பு இடங்கள் உருவாக்கப்படவுள்ளன. இவற்றில் 6,000 புதிய கைக்குழந்தைப் பராமரிப்பு இடங்களும் உள்ளடங்கும்.
தனிப்பாணியைக் கடைப்பிடிக்கும் அர்ஜுன் தாஸ்: இயக்குநர் பாராட்டு
“அர்ஜுன் தாஸிடம் ஒருவித அப்பாவித்தனம் இருக்கும். அதை எப்போதுமே ரசிப்பேன்,” என்கிறார் இயக்குநர் விஷால் வெங்கட்.
‘என் அபிமான நாயகன்’
விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவும் கதாநாயகனாகிவிட்டார் அவர் நடித்துள்ள ‘பீனிக்ஸ்’ (வீழான்) படம் விரைவில் திரைகாண உள்ளது. சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இப்படத்தை இயக்குகிறார்.
கூடுதலாகப் பணம் சேமிக்க உதவும் குறிப்புகள்
கல்விக் கட்டணங்கள், மாதந்தோறும் பெற்றோருக்குப் பணம் தருவது போன்ற கடமைகளை நிறைவேற்றுவதால் இளம் சிங்கப்பூரர்கள் பணம் சேமிப்பது சற்றுக் கடினம் எனக் கருதக்கூடும்.
விட்டுக்கொடுக்க தயார், ஆனால் வரம்புகள் உள்ளன: ஹிஸ்புல்லா அமைப்பு
இஸ்ரேலுடன் ஒரு மாதத்துக்கு மேலாகப் போரில் ஈடுபட்டுள்ள ஹிஸ்புல்லா, சண்டைநிறுத்தத்திற்குத் தயார் என்று கூறியுள்ளது.
பகடிவதை கலாசாரம் ஆகிவிட்டது: அன்வார்
மலேசியாவில் பகடிவதை பொறுத்துக்கொள்ளப்படுவதாலும் சில நேரங்களில் அது தற்காத்துப் பேசப்படுவதாலும், அது ஒரு கலாசாரமாகிவிட்டதாக பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
சில இந்திய நிறுவனங்கள்மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை
உக்ரேனில் ரஷ்யாவின் போர் முயற்சிகளுக்கு உதவியதற்காக சில இந்திய நிறுவனங்கள் உட்பட கிட்டத்தட்ட 400 நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
எல்லைகளில் இந்தியாவின் இடத்தை விட்டுக்கொடுக்க மாட்டோம்: மோடி
குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் உள்ள இந்திய-பாகிஸ்தான் எல்லை அருகே, எல்லைப் பாதுகாப்புப் படை, கடற்படை, விமானப்படை மற்றும் ராணுவ வீரர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடினார்.
சென்னை வந்த 11 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை விமான நிலையத்துக்கு மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பரபரப்பு நிலவியது.
சிவகாசியில் இந்த ஆண்டு 90% பட்டாசுகள் விற்றுத் தீர்ந்தன ரூ.6,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை
நடப்பாண்டில் சிவகாசியில் ரூ.6,000 கோடி மதிப்புள்ள பட்டாசுகள் விற்றுத்தீர்ந்துள்ளன.
சக சிறைக் கைதியின் முகத்தில் வெட்டியவருக்குக் கூடுதல் சிறை
ஆயுதமேந்தி கொள்ளையடித்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக சாங்கி சிறைச்சாலையில் தண்டனையை நிறைவேற்றி வந்த கார்த்திக் ஸ்டால்னிராஜ், வேறொரு சிறைக் கைதியின் முகத்தில் ஆயுதத்தால் வெட்டினார்.
புவாங்கோக் புதிய பேருந்து சந்திப்பு நிலையம் டிசம்பர் 1ஆம் தேதி திறப்பு
புவாங்கோக்கில் எதிர்வரும் டிசம்பர் 1ஆம் தேதி புதிய பேருந்து சந்திப்பு நிலையம் திறக்கப்படவுள்ளது.
பாதுகாப்பு அம்சங்களை ஆராய குழு அமைத்துள்ள எஸ்எம்ஆர்டி
பொதுப் போக்குவரத்து நம்பகத்தன்மை, பாதுகாப்பு தொடர்பான அம்சங்களை ஆராய ரயில் போக்குவரத்து நிறுவனமான எஸ்எம்ஆர்டி குழு ஒன்றை அமைத்துள்ளது.
சுகாதாரப் பராமரிப்புத் துணை நிபுணர்களுக்கான புதிய உத்தி
சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் சுகாதாரப் பராமரிப்புத் துணை நிபுணர்கள் (allied health professionals) ஆற்றக்கூடிய பங்கைச் சிறப்பாக வடிவமைக்கும் நோக்கில் தேசிய அளவிலான உத்தி வகுக்கப்பட்டு வருகிறது.
ஏஎஃப்ஏ பணிக்குழு 27 பரிந்துரைகளை முன்வைத்துள்ளது வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பில் நீக்குப்போக்குத்தன்மை தேவை
வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பில் மேம்பட்ட நிதியுதவித் திட்டம், அவர்களைக் கையாள்வதில் நீக்குப்போக்குத் தன்மை ஆகியவை தேவை என்று ஏஎஃப்ஏ (Alliance for Action) எனப்படும் வர்த்தகப் போட்டித்தன்மை தொடர்பான தனியார்-பொதுத் துறை கூட்டுப் பணிக்குழு வெள்ளிக்கிழமை (நவம்பர் 1) வெளியிட்ட தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மண்டாயிலிருந்து தப்பிய குரங்கு பிடிபட்டது
மண்டாயில் உள்ள விலங்குத் தோட்டத்திலிருந்து தப்பிச் சென்ற ஆப்பிரிக்கக் குரங்கு ஒன்று கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை ( நவம்பர் 1) சுவா சூ காங் பகுதியில் பிடிபட்டுள்ளது.
பொதுத்துறை ஆய்வறிக்கை முக்கியத் துறைகளில் சிங்கப்பூர் முன்னேற்றம்
அனைத்து வயதுப் பிரிவுகளையும் சேர்ந்த குடிமக்களுக்குக் கூடுதல் வாய்ப்புகளை உருவாக்கும் இடமாகச் சிங்கப்பூர் விளங்குகிறது.
இன வெறுப்புப் பேச்சைச் சகித்துக்கொள்ள முடியாது: மலேசியப் பிரதமர் அன்வார்
மலேசியாவில் உள்ள பல்வேறு இனங்களுக்கு இடையே வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசுவோரை தான் துளியும் சகித்துக் கொள்ள மாட்டேன் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
நான்கு நாள் வேலை வாரம்: சாத்தியமில்லை என்கின்றன 95% சிங்கப்பூர் நிறுவனங்கள்
சிங்கப்பூரில் இருக்கும் 95 விழுக்காடு நிறுவனங்களின் முதலாளிகள் தங்கள் நிறுவனத்தில் நான்கு நாள் வேலை வாரத்தை நடைமுறைப்படுத்த விரும்பவில்லை எனச் சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பு (எஸ்என்இஎஃப்) நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
சன்லவ் முதியோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்
சன்லவ் முதியோர் இல்லத்தைச் சேர்ந்த முதியவர்களின் உள்ளங்களை தீபாவளிக் கொண்டாட்டங்கள் அலங்கரித்தன.
‘டெல்லியில் இரவு பேருந்து பயணம் பாதுகாப்பற்றது'
டெல்லி நகர நிர்வாகத்தின் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்திட்டத்தில் வழங்கப்படும் பிங்க் (இளஞ்சிவப்பு) பயணச்சீட்டு எண்ணிக்கை நூறு கோடி என்ற மைல் கல் சாதனையை எட்டியிருக்கும் நிலையில், 77 விழுக்காட்டு பெண்கள் டெல்லியில் இரவு நேரப் பயணம் பாதுகாப்பானதாக இல்லை என உணர்வதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்; பலர் மரணம்
வட காஸாவில், ‘பீட் லஹியா’ நகரில் உள்ள குடியிருப்புக் கட்டடம் ஒன்றின்மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 93 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல்போயினர்.
கமலா அதிபராக வேண்டும்: அமெரிக்க இந்தியச் சமூகம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பாகப் போட்டியிடும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்று அதிபராக வேண்டும் என்று அங்கு வாழும் இந்தியர்கள் விழைவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது.
ஒளியின் சிறப்பைப் போற்றும் சிறுபான்மைச் சமூகத்தினர்
தீபாவளியை முக்கியப் பண்டிகையாகக் கொண்டாடும் இந்துக்களுடன் சீக்கியர்கள், சமணர்கள் உள்ளிட்ட பிற சமயத்தவரும் இணைகின்றனர்.
அலங்கார நாயகர்களான வெளிநாட்டு ஊழியர்கள்
வெளிநாட்டு ஊழியர்களை கட்டுமானத் தளங்களிலும் தொழிற்பேட்டைகளிலும் பணிபுரிவோர் என்ற கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்காமல் அவர்களைத் தனித்துவமிக்கவர்களாக சிங்கப்பூரர்கள் கருதுவதை ஊக்குவிக்கிறோம் என்கிறது ஐஆர்ஆர்.
கற்றல் - வாழ்நாளுக்கும் தொடரும் ஒரு முதலீடு
வகுப்பறையில் அதிக கவனம் செலுத்த இயலாத மாணவர் ஒருவருக்கு கற்றலில் சிரமங்கள் இருப்பதைக் கண்டறிந்த ஆசிரியர் பிரகாஷ் திவாகரன், 36, அவருக்கு உதவ பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.
தேசம் கடந்த நேசம்
தீபாவளி என்றாலே வாழ்வின் நன்மைகளைக் கொண்டாடி மகிழ்வது.
ஹவ்காங் எம்ஆர்டி நிலையத்துக்கு மேல் குடியிருப்பு-வர்த்தக வளாகம்
ஹவ்காங் எம்ஆர்டி நிலையத்திற்கு மேல் உள்ள நிலப்பகுதியில் பேருந்து நிலையத்துடனான குடியிருப்பு-வர்த்தக வளாகம் ஒன்று கட்டப்பட இருக்கிறது.
தேசிய சேவை: $200 சிறப்புத் தொகை
சிங்கப்பூரின் அனைத்து தேசிய சேவையாளர்களும் 200 வெள்ளி சிறப்புத் தொகை பெறவிருக்கின்றனர்.