CATEGORIES
ஏஎஃப்ஏ பணிக்குழு 27 பரிந்துரைகளை முன்வைத்துள்ளது வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பில் நீக்குப்போக்குத்தன்மை தேவை
வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பில் மேம்பட்ட நிதியுதவித் திட்டம், அவர்களைக் கையாள்வதில் நீக்குப்போக்குத் தன்மை ஆகியவை தேவை என்று ஏஎஃப்ஏ (Alliance for Action) எனப்படும் வர்த்தகப் போட்டித்தன்மை தொடர்பான தனியார்-பொதுத் துறை கூட்டுப் பணிக்குழு வெள்ளிக்கிழமை (நவம்பர் 1) வெளியிட்ட தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மண்டாயிலிருந்து தப்பிய குரங்கு பிடிபட்டது
மண்டாயில் உள்ள விலங்குத் தோட்டத்திலிருந்து தப்பிச் சென்ற ஆப்பிரிக்கக் குரங்கு ஒன்று கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை ( நவம்பர் 1) சுவா சூ காங் பகுதியில் பிடிபட்டுள்ளது.
பொதுத்துறை ஆய்வறிக்கை முக்கியத் துறைகளில் சிங்கப்பூர் முன்னேற்றம்
அனைத்து வயதுப் பிரிவுகளையும் சேர்ந்த குடிமக்களுக்குக் கூடுதல் வாய்ப்புகளை உருவாக்கும் இடமாகச் சிங்கப்பூர் விளங்குகிறது.
இன வெறுப்புப் பேச்சைச் சகித்துக்கொள்ள முடியாது: மலேசியப் பிரதமர் அன்வார்
மலேசியாவில் உள்ள பல்வேறு இனங்களுக்கு இடையே வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பேசுவோரை தான் துளியும் சகித்துக் கொள்ள மாட்டேன் என்று மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
நான்கு நாள் வேலை வாரம்: சாத்தியமில்லை என்கின்றன 95% சிங்கப்பூர் நிறுவனங்கள்
சிங்கப்பூரில் இருக்கும் 95 விழுக்காடு நிறுவனங்களின் முதலாளிகள் தங்கள் நிறுவனத்தில் நான்கு நாள் வேலை வாரத்தை நடைமுறைப்படுத்த விரும்பவில்லை எனச் சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பு (எஸ்என்இஎஃப்) நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
சன்லவ் முதியோர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்
சன்லவ் முதியோர் இல்லத்தைச் சேர்ந்த முதியவர்களின் உள்ளங்களை தீபாவளிக் கொண்டாட்டங்கள் அலங்கரித்தன.
‘டெல்லியில் இரவு பேருந்து பயணம் பாதுகாப்பற்றது'
டெல்லி நகர நிர்வாகத்தின் பெண்களுக்கான இலவச பேருந்து பயணத்திட்டத்தில் வழங்கப்படும் பிங்க் (இளஞ்சிவப்பு) பயணச்சீட்டு எண்ணிக்கை நூறு கோடி என்ற மைல் கல் சாதனையை எட்டியிருக்கும் நிலையில், 77 விழுக்காட்டு பெண்கள் டெல்லியில் இரவு நேரப் பயணம் பாதுகாப்பானதாக இல்லை என உணர்வதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்; பலர் மரணம்
வட காஸாவில், ‘பீட் லஹியா’ நகரில் உள்ள குடியிருப்புக் கட்டடம் ஒன்றின்மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 93 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல்போயினர்.
கமலா அதிபராக வேண்டும்: அமெரிக்க இந்தியச் சமூகம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பாகப் போட்டியிடும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்று அதிபராக வேண்டும் என்று அங்கு வாழும் இந்தியர்கள் விழைவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் தெரிவித்தது.
ஒளியின் சிறப்பைப் போற்றும் சிறுபான்மைச் சமூகத்தினர்
தீபாவளியை முக்கியப் பண்டிகையாகக் கொண்டாடும் இந்துக்களுடன் சீக்கியர்கள், சமணர்கள் உள்ளிட்ட பிற சமயத்தவரும் இணைகின்றனர்.
அலங்கார நாயகர்களான வெளிநாட்டு ஊழியர்கள்
வெளிநாட்டு ஊழியர்களை கட்டுமானத் தளங்களிலும் தொழிற்பேட்டைகளிலும் பணிபுரிவோர் என்ற கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்காமல் அவர்களைத் தனித்துவமிக்கவர்களாக சிங்கப்பூரர்கள் கருதுவதை ஊக்குவிக்கிறோம் என்கிறது ஐஆர்ஆர்.
கற்றல் - வாழ்நாளுக்கும் தொடரும் ஒரு முதலீடு
வகுப்பறையில் அதிக கவனம் செலுத்த இயலாத மாணவர் ஒருவருக்கு கற்றலில் சிரமங்கள் இருப்பதைக் கண்டறிந்த ஆசிரியர் பிரகாஷ் திவாகரன், 36, அவருக்கு உதவ பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.
தேசம் கடந்த நேசம்
தீபாவளி என்றாலே வாழ்வின் நன்மைகளைக் கொண்டாடி மகிழ்வது.
ஹவ்காங் எம்ஆர்டி நிலையத்துக்கு மேல் குடியிருப்பு-வர்த்தக வளாகம்
ஹவ்காங் எம்ஆர்டி நிலையத்திற்கு மேல் உள்ள நிலப்பகுதியில் பேருந்து நிலையத்துடனான குடியிருப்பு-வர்த்தக வளாகம் ஒன்று கட்டப்பட இருக்கிறது.
தேசிய சேவை: $200 சிறப்புத் தொகை
சிங்கப்பூரின் அனைத்து தேசிய சேவையாளர்களும் 200 வெள்ளி சிறப்புத் தொகை பெறவிருக்கின்றனர்.
பல சமயத்தினர் பங்குபெற்ற ரத்த தான நிகழ்வில் அமைச்சர் கா.சண்முகம் - நல்லிணக்கத்துடன் திகழும் சிங்கப்பூரர்கள்
பல்லின, பல சமய மக்கள் வாழும் சிங்கப்பூரில் சமூக ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கில் பலசமயத்தினர் ஒன்றிணைந்து ரத்த தானம் செய்யும் திட்டம் தொடர்பான யோசனை 2016ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்டது.
தீபாவளிக்கு லிட்டில் இந்தியாவில் மக்கள் வெள்ளம்
செப்டம்பர் மாதம் தீபாவளி ஒளியூட்டு தொடங்கியது முதலே லிட்டில் இந்தியா வட்டாரத்தில் தீபாவளி வணிகப் பரபரப்பு தென்படத் தொடங்கியது.
தாய்லாந்தில் சிங்கப்பூரர்கள் கடப்பிதழின்றி குடிநுழைவுச்சாவடிகளைக் கடக்கலாம்
தாய்லாந்தில் ஆறு விமான நிலையங்கள் வாயிலாக அந்நாட்டிலிருந்து வெளியேறும் பயணிகள் விரைவில் முக அடையாள முறைச் (biometric system) சோதனைவழி identification குடிநுழைவுச் சாவடிகளைக் கடக்க முடியும்.
தலைதீபாவளி கொண்டாடும் பிரேம்ஜி
'எப்போது திருமணம்?” எனப் பலரும் மாறி மாறி கேள்வி கேட்ட நிலையில், இதோ தனது தலை தீபாவளியைக் கொண்டாட உள்ளார் பிரேம்ஜி.
பார்வைக் குறைபாடுள்ளோரை ஈர்க்கும் கரையோரப் பூந்தோட்டம்
தம் அழகினால் காண்போர் யாவரையும் மயக்கும் கரையோரப் பூந்தோட்டங்களின் அழகை இனி பார்வைக் குறைபாடுள்ளோரும் உணரலாம்.
காஸாவுக்கு உதவும் ஐநாவின் உதவி அமைப்பை தடை செய்யும் இஸ்ரேல்
காஸாவுக்கு உதவும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் முக்கிய உதவி அமைப்பை தடை செய்வதற்கான மசோதாவுக்கு இஸ்ரேலிய நாடாளுமன்றம் திங்கட்கிழமை (அக்டோபர் 28) ஒப்புதல் வழங்கியுள் ளது.
போலி வெடிகுண்டு மிரட்டல்
திடீரென அண்மைக் காலமாக 400க்கும் மேற்பட்ட இந்திய விமானங்களுக்குப் போலி வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதும் கூட்டம்
தீபாவளிப் பண்டிகையை ஒட்டி, மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல ஆர்வம் காட்டி வருவதால் ரயில், பேருந்து நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
சாங்கி கடற்பகுதியில் எண்ணெய்க் கசிவு
சாங்கி கடற்பகுதியில் அக்டோபர் 28ஆம் தேதியன்று எண்ணெய் கசிவு ஏற்பட்டது.
‘இஆர்பி 2.0'க்கு நேரடியாகப் பதிவு செய்யலாம்
வாகன ஓட்டிகள், தங்களுடைய வாகனத்தில் உள்வாகனச் சாதனமான இஆர்பி 2.0 வை பொருத்திக் கொள்ள நேரடியாக பழுதுபார்ப்புப் பட்டறையில் பதிவு செய்து கொள்ளலாம் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 29) அறிக்கை வாயிலாக தெரிவித்தது.
ஜோகூரில் 11,822 பேருக்கு டெங்கி தொற்று
ஜோகூரில் டெங்கி தொற்றின் எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் 36.1 விழுக்காடு அதிகரித்ததாக ஜோகூர் மாநில சுகாதார, சுற்றுப்புறக் குழுவின் தலைவர் லிங் தியன் சூன் தெரிவித்துள்ளார்.
கேரளக் கோயிலில் பட்டாசு விபத்து: 150க்கும் அதிகமானோர் காயம்
கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தில் இந்திய நேரப்படி அக்டோபர் 28 ஆம் தேதி இரவு நடைபெற்ற கோயில் திருவிழாவில் மிக மோசமான பட்டாசு விபத்து ஏற்பட்டது.
வேலைவாய்ப்பு விகிதம் இருமடங்கிற்கு மேல் வளர்ச்சி
மூன்றாம் சிங்கப்பூர்வாசிகளுக்கு காலாண்டில் இவ்வாண்டின் அதிகமான வேலைகள் கிடைத்தன.
கூடுதலாக 20,000 வாகன உரிமைச் சான்றிதழ்கள்
சிங்கப்பூரின் நிலப் போக்குவரத்து ஆணையம் 2025 பிப்ரவரி தொடங்கி அடுத்த சில ஆண்டுகளுக்கு கூடுதலாக 20,000 வரையிலான வாகன உரிமைச் சான்றிதழ்களை (COE) வழங்கவுள்ளது.
மான்செஸ்டர் யுனைடெட் நிர்வாகிக்கு மகிழ்ச்சியும் விரக்தியும் கலந்த ஓர் உணர்வு
இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27) நடைபெறும் வெஸ்ட் ஹேம் யுனைடெட் உடனான காற்பந்து ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் அணித்தலைவர் புருனோ ஃபெர்னாண்டெஸ், ஜானி எவன்ஸ் இருவரையும் நிர்வாகி எரிக் டென் ஹாக் களமிறக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.