CATEGORIES
சென்னையில் கனமழை, வெள்ளம்: விமானச் சேவை பாதிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் புதன்கிழமை யன்று (செப்டம்பர் 26) இரவு பெய்த கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ் கின. கனமழையால் 35 விமானங் களின் சேவை பாதிக்கப்பட்டது.
பள்ளம், மேடான கழிவுநீர் நுழைவாயில் மூடிகள்: சென்னைவாசிகள் அச்சம்
சென்னையில் சாலைகள், தெருக்களின் மையப் பகுதியில் செல்லும் கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டால் அதை சரி செய்வதற்காக ஆங்காங்கே 1 லட்சத்து 68 ஆயிரம் மனித நுழைவாயில்கள் (Manholes) அமைக்கப்பட்டுள்ளன.
இணைய வர்த்தகத் தளங்களில் விற்கப்படும் குழந்தைகளுக்கான பொருள்கள் குறித்து எச்சரிக்கை
இணைய வர்த்தகத் தளங்களின்வழி குழந்தைகளுக்காக விற்கப்பட்ட சில பொருள்கள் பாதுகாப்பற்றவை எனக் கண்டறியப்பட்டதை அடுத்து, இவ்வாறு பொருள் வாங்கும்போது முன்னெச்சரிக்கையாக இருக் குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காலக்கெடு நெருங்குகிறது; ‘விஇபி' அட்டைக்குப் போராட்டம்
சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள், மலேசியாவிற்குள் நுழைய 'விஇபி' எனும் வாகன அனுமதி அட்டையைப் பெற வேண்டும்.
வெளிநாட்டு ஊழியர்களுக்குப் புதிய சுகாதாரப் பராமரிப்புத் திட்டம்
வெளிநாட்டு ஊழியர்களுக்கு மேம்பட்ட சுகாதார சேவைகளை அளிக்கும் பொருட்டு 'சாட்டா காம்ஹெல்த்' எனும் அறநிறுவனம் (SATA CommHealth) ஒரு முதன்மைப் பராமரிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
எம்ஆர்டி சேவை இடையூறு; கனமழை, குழப்பத்தால் பயணிகளுக்குக் கூடுதல் அசௌகரியம்
கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் மின்சாரக் கோளாறு காரணமாக நேற்றிலிருந்து (செப்டம்பர் 25ஆம் தேதி) எம்ஆர்டி சேவை தடைபட்டுள்ளது.
குறைந்த தீவிரமுடைய சிறுவர் துன்புறுத்தல் சம்பவங்கள் அதிகரிப்பு
சிங்கப்பூரில் கடந்த சில ஆண்டுகளில், குறைந்த தீவிரமுடைய சிறுவர் துன்புறுத்தல் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு - மேற்கு பாதையில் பாதிக்கப்பட்ட ரயில் சேவை கட்டங்கட்டமாகத் திரும்பக்கூடும் - இன்றும் தொடரும் பாதிப்பு
கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் மின்சாரக் கோளாறு காரணமாக ஜூரோங் ஈஸ்ட் நிலையத்துக்கும் புவன விஸ்தா நிலையத்துக்கும் இடையிலான ரயில் சேவை புதன்கிழமை (செப்டம்பர் 25) முதல் தடைப்பட்டுள்ளது.
471 நாள்களுக்குப் பிறகு செந்தில் பாலாஜிக்கு பிணை
ஓராண்டுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டு, பலமுறை பிணை கேட்டு போராடிய நிலையில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை (செப்டம்பர் 26) பிணை வழங்கியது.
மீண்டும் கார் பந்தயத்தில் பங்கேற்கும் அஜித்: முன்னாள் ‘ஃபார்முலா 1' பங்கேற்பாளர் தகவல்
நடிகர் அஜித் மீண்டும் கார் பந்தயங்களில் பங்கேற்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா சார்பில் ‘ஃபார்முலா 1’ கார் பந்தயத்தில் பங்கேற்ற முதல் வீரரும் அஜித்தின் நெருங்கிய நண்பருமான நரேன் கார்த்திகேயன் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
இயந்திரக் கற்றலும் மொழியின் பன்முகத்தன்மையும்
தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகத்துக்கு ஈடுகொடுத்து மொழிக் கற்றல் மாதிரிகளை வடிவமைத்துவரும் வல்லுநர்களிடம், பல்லாயிரம் ஆண்டுகளாகப் பேசப்பட்டு, எழுதப்பட்டு, பரவி, மருவி வந்த மொழியைச் செயற்கை நுண்ணறிவுக்குக் கற்பிப்பது சாத்தியமா எனும் கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது.
இணையம்வழி துன்புறுத்தல்: லாரி ஓட்டுநருக்கு 12 மாதச் சிறை
பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் டிக்டாக் சமூக ஊடகத்தளப் பிரபலமான ‘ஈஷா’ என்று அழைக்கப்பட்ட 29 வயது ஏ. ராஜேஸ்வரியை இணையம்வழி துன்புறுத்திய லாரி ஓட்டுநருக்கு 12 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மும்பை கோவில் லட்டு பிரசாதங்களில் சுண்டெலிகள் இருந்ததாக புதிய சர்ச்சை
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டுகளில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகள் கொழுப்பு கலப்படம் செய்யப்பட்டு இருந்ததாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியிருந்தார்.
இந்தியாவும் சீனாவும் எதிரிகள் அல்ல, பங்காளிகள்: சீனத் தூதர்
“சீனாவும் இந்தியாவும் ஒன்றுக்கொன்று போட்டியோ, அச்சுறுத்தலோ அல்ல. இரு நாடுகளும் ஒத்துழைப்பு, வளர்ச்சி வாய்ப்புகளில் பங்காளிகள் என்பதில் அதிபர் ஸி ஜின்பிங்கும், பிரதமர் நரேந்திர மோடியும் முக்கியமான ஒருமித்த கருத்தை எட்டியுள்ளனர்.
ஆசிரியர் இடமாற்றம்; கட்டியணைத்துக் கதறி அழுத மாணவர்கள்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை ‘பெல்’ குடியிருப்பு வளாகத்தில் அரசு நிதியுதவி பெறும் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 12 இடங்களில் என்ஐஏ அதிரடிச் சோதனை
பயங்கரவாத இயக்கங்களுக்கு ஆள்சேர்க்கப்படுவது தொடர்பாக நடவடிக்கை
உதயநிதி குறித்து விசிக நிர்வாகி விமர்சனம்: திமுக, விசிக இடையே மீண்டும் சலசலப்பு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஆதவ் அர்ஜுனா என்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து தெரிவித்த கருத்தால் விசிக, திமுக இடையேயான உறவில் மீண்டும் சலசலப்பு நிலவுகிறது.
89 பேருக்கு ‘மரபுடைமைப் புரவலர் விருது' வழங்கிச் சிறப்பிப்பு
சிங்கப்பூரின் மரபுடைமையைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் 2023ல் $11.67 மில்லியன் மதிப்பிலான நன்கொடைகள் வழங்கிய 89 பேருக்கு 'மரபுடைமைப் புரவலர் விருது' வழங்கி சிறப்பித்துள்ளது தேசிய மரபுடைமைக் கழகம்.
புதிய தலைமுறை நீர்மூழ்கிகளுக்காக மேம்படுத்தப்பட்ட பயிற்சி நிலையம்
புதிய தலைமுறை நீர்மூழ்கிக் கப்பல்களை இயக்கும் ஆற்றலைப் பெறும் வகையில் சிங்கப்பூர் குடியரசு கடற்படை தனது பயிற்சி நிலையத்தை மேம்படுத்தி உள்ளது.
நடனக் கலைஞர் வசந்தா காசிநாத் காலமானார்
சிங்கப்பூரின் புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் திருவாட்டி வசந்தா காசிநாத் (படம்) புதன் கிழமை காலமானார். அவருக்கு வயது 79.
கோலாலம்பூர் விமான நிலைய விஐபி வளாகத்தில் தோன்றிய குழி
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள் (விஐபி) பயன்படுத்தும் பங்கா ராயா வளாக நுழைவாயிலில் புதிதாக குழி ஒன்று காணப்பட்டதாக மலேசியாவின் பொதுப்பணி அமைச்சு தெரிவித்து உள்ளது.
லெபனானில் தொடரும் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதல்; டெல் அவிவ் நகரில் அபாய ஒலி
தெற்கு லெபனானில் உள்ள கிராமங்களை இஸ்ரேலின் போர் விமானங்கள் மூன்றாவது நாளாகச் சூழ்ந்ததாக லெபனான் ஊடகங்கள் புதன்கிழமை (செப்டம்பர் 25) கூறின.
பூன் லே - குவீன்ஸ்டவுன் இடையே சேவைத் தடை
மின்சாரக் கோளாற்றால் கிழக்கு - மேற்கு ரயில் பாதையில் போக்குவரத்து பாதிப்பு
சிங்கப்பூர் பொருளியல் மேலும் மேம்படும்: ஆசிய வளர்ச்சி வங்கி
இவ்வாண்டுக்கான சிங்கப்பூரின் பொருளியல் வளர்ச்சி மேம்படக்கூடும் என்று ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) கணித்துள்ளது.
போர் பதற்றம் அதிகரிப்பு; படைகளை அனுப்பும் அமெரிக்கா
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் போர் வெடிக்கும் சூழல் அதிக ரித்துள்ளதால் மத்திய கிழக்கு வட்டாரத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு மூலம் மாற்றம் கொண்டுவர பிரதமர் மோடி விருப்பம்: சுந்தர் பிச்சை
அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வட்டமேசை ஆலோசனை நடத்தியுள்ளார்.
பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக் கருத்து; இயக்குநர் மோகன் கைது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்திற்காகப் பயன்படுத்தப்படும் நெய்யில், விலங்குக் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பாகுபாட்டை எதிர்கொண்ட ஊழியர் எண்ணிக்கை குறைவு
நியாயமான வேலை நியமன நடைமுறைகள் குறித்த மனிதவள அமைச்சின் அறிக்கை
புது சக்தி தரும் வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகள்: ஆதி
‘ஹிப்ஹாப்’ தமிழா ஆதி நடிப்பில் அண்மையில் வெளியீடு கண்டுள்ள ‘கடைசி உலகப் போர்’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகத் தகவல்.
பக்கவாதம் குறித்து மேம்பட்ட விழிப்புணர்வு
பக்கவாத நோயின் பாதிப்புக்கு ஆளாகும் அபாயத்தைக் குறைக்கவும், அந்நோய்க்கான அறிகுறிகளைக் கண்டறியவும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் புது வாசகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.