CATEGORIES
தடையை மீறி பட்டாசு வெடித்த 347 பேர் மீது வழக்கு
சென்னை, நவ. 1: தடையை மீறி, பட்டாசு வெடித்ததாக சென்னையில் 347 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
சாலைத் தடுப்பின் மீது கார் மோதல்: சின்னத்திரை நடிகரின் மகன் உயிரிழப்பு
சென்னை, நவ.1: வேளச்சேரியில் சாலைத் தடுப்பின் மீது கார் மோதிய விபத்தில், சின்னத்திரை நடிகரின் மகன் உயிரிழந்தார்.
மேலும் மூன்று பள்ளிகளில் விசாரணை நடத்த உத்தரவு
சென்னை, நவ. 1: கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்திய விவகாரத்தில் மேலும் மூன்று பள்ளிகளில் நேரில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தீபாவளி தொடர் விடுமுறை: கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் அலைமோதிய மக்கள் கூட்டம்
சென்னை, நவ.1: தீபாவளி தொடர் விடுமுறையையொட்டி சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்கா மற்றும் மெரீனா கடற்கரையில் வெள்ளிக்கிழமை மக்கள் கூட்டம் அலை மோதியது.
வீடு வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் மோசடி: நிலத்தரகருக்கு 2 ஆண்டுகள் சிறை
சென்னையில் வீடு வாங்கித் தருவதாக ரூ.10 லட்சம் பண மோசடி செய்த வழக்கில், நிலத்தரகருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து பூந்தமல்லி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சென்னையிலிருந்து தாய்லாந்தின் புக்கட் நகருக்கு புதிய விமான சேவை அறிமுகம்
சென்னை, நவ. 1: சென்னையில் இருந்து தாய்லாந்தின் புக்கட் நகர் உள்பட 6 இடங்களுக்கு புதிய விமான சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
ராயபுரத்தில் ரூ.3.42 கோடி மதிப்பில் தற்காலிக பேருந்து நிலையம்: ஒப்பந்தம் கோரியது மாநகராட்சி
சென்னை, நவ. 1: ராயபுரத்தில் ரூ.3.42 கோடி மதிப்பில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்தம் கோரியுள்ளது.
திருச்செந்தூர் சூரசம்ஹாரம்: நவ.6-இல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னை, நவ. 1: சூரசம்ஹார விழாவை முன்னிட்டு சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து நவ.6-இல் திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
தீபாவளி : சென்னையில் 2 நாள்களில் 213 டன் பட்டாசு கழிவுகள் அகற்றம்
சென்னை, நவ. 1: தீபாவளி பண்டிகை முடிவடைந்த நிலையில், வியாழக்கிழமை (அக்.31), வெள்ளிக்கிழமை (நவ.1) ஆகிய தேதிகளில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 213.61 மெட்ரிக் டன்ன பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
50% வரை தள்ளுபடி: ஈரோடு ஜவுளிக் கடைகளில் அதிகாலையிலேயே குவிந்த மக்கள்
ஜவுளிக் கடைகளில் 50 சதவீதம் வரை தள்ளுபடியில் ஜவுளிகளை வாங்க அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததால் கடைவீதி வெள்ளிக்கிழமை களைகட்டியிருந்தது.
ரயில் பயணச் சீட்டு முன்பதிவு காலம் குறைப்பு அமல்
சென்னை, நவ. 1: ரயில் பயணச் சீட்டுகள் முன்பதிவு செய்யும் கால அளவு 60 நாள்களாகக் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த நடைமுறை வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்தது.
19 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: நவ.6-இல் புயல் சின்னம் உருவாகிறது
சென்னை, நவ. 1: தமிழகத்தில் சனிக்கிழமை (நவ.2) நீலகிரி, கோவை உள்ளிட்ட 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்டோபரில் ஜிஎஸ்டி ரூ.1.87 லட்சம் கோடி!
இரண்டாவது அதிகபட்ச வசூல்
எல்லையில் ஓர் அங்குலம்கூட விட்டுத் தரப்படாது - பிரதமர் உறுதி
எல்லையில் ஓர் அங்குல நிலத்தைக்கூட இந்தியா விட்டுத் தராது என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதிபடத் தெரிவித்தார்.
தேர்தல் ஆணையத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை
புது தில்லி, நவ.1: ஹரியாணா பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முறைகேடு குற்றச்சாட்டை நிராகரித்த தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக காங்கிரஸ் கட்சி எச்சரித்துள்ளது.
‘தியாகிகளைப் போற்றும் திமுக அரசு’
பசும்பொன் தேவர் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை
முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் வளர்ச்சி 2% குறைவு
கடந்த செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் எட்டு முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளர்ச்சி இரண்டு சதவீதமாகக் குறைந்துள்ளது.
காஸாவில் ஐ.நா.வின் நிவாரணப் பணிகளை முடக்க இஸ்ரேல் அதிரடி
காஸாவின் உயிர்நாடியாக விளங்கும் பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நல அமைப்புக்கு (யுஎன்ஆர்டபிள்யுஏ) இஸ்ரேல் தடை விதித்துள்ளதால், அந்தப் பகுதி நிவாரணப் பணிகளை அந்த நாடே கையிலெடுக்க வேண்டும் என்று ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.
ஸ்பெயினில் மேக வெடிப்பு: 72 பேர் உயிரிழப்பு
ஸ்பெயினில் மேக வெடிப்பு காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 72 பேர் உயிரிழந்தனர்.
3 வீரர்களை விண்வெளிக்கு அனுப்பியது சீனா
'சென்ஷு 19' விண்கலம் மூலம் விண்வெளி நிலையத்துக்கு புறப்பட தயாரான மூன்று வீரர்கள்.
தென்மண்டல பல்கலை பாட்மின்டன்: எஸ்ஆர்எம் சாம்பியன்
தென் மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான ஆடவர் பாட்மின்டன் போட்டியில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
அயோத்தி தீபோற்சவம்: 2 கின்னஸ் சாதனைகள் படைப்பு
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் புதன்கிழமை நடைபெற்ற 8-ஆம் ஆண்டு தீபோற்சவ நிகழ்வில் சரயு படித்துறைகளில் 1,121 பக்தர்கள் ஒரே நேரத்தில் ஆரத்தி வழிபாடு நடத்தி, 25 லட்சம் விளக்குகள் ஏற்றப்பட்டு 'கின்னஸ்' உலக சாதனைகள் படைக்கப்பட்டன.
தமிழ் தலைவாஸ் அதிரடி வெற்றி
புரோ கபடி லீக் தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 44-25 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது தமிழ் தலைவாஸ்.
காலிறுதிச் சுற்றில் போபண்ணா-எப்டன் இணை
அல்கராஸ், சிட்சிபாஸ் முன்னேற்றம்
இன்று சென்னையின் ஈஃப்சி-பஞ்சாப் எஃப்சி மோதல்
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற மும்முரம்
ஓபிசி கணக்கெடுப்பு: மத்திய அரசிடம் தெலங்கானா காங்கிரஸ் வலியுறுத்தல்
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (ஓபிசி) கணக்கெடுப்பையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று தெலங்கானா காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ம.பி. தேசிய பூங்காவில் இரு நாள்களில் 7 யானைகள் உயிரிழப்பு: விசாரணைக்கு உத்தரவு
மத்திய பிரதேசத்தின் பந்தாவ் கர் தேசிய பூங்காவில் கடந்த இரு நாள்களில் 7 யானைகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் தர்ஷனுக்கு 6 வார கால இடைக்கால ஜாமீன்; உயர்நீதிமன்றம் உத்தரவு
கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கன்னட நடிகர் தர்ஷனுக்கு 6 வார கால இடைக்கால ஜாமீன் வழங்கி கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீக்கிய பிரிவினைவாதிகளைக் குறிவைக்க உத்தரவிட்டார் அமித் ஷா - கனடா அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு
கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகள் குறிவைத்து வன்முறை, மிரட்டல் மற்றும் உளவுத் தகவல்கள் சேகரிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டதாக, அந்நாட்டின் வெளியுறவுத் துறை இணையமைச்சர் டேவிட் மோரிசன் குற்றஞ்சாட்டினார்.
மிகுந்த ஆபத்தான பொருளாதார நிலையில் இந்கியா: காங்கிரஸ்
இந்தியா தற்போது மிகுந்த ஆபத்தான பொருளாதார நிலையில் இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.