CATEGORIES
Kategorier
சிரியா தலைநகரை சுற்றிவளைத்த கிளர்ச்சிப் படையினர்
டமாஸ்கஸ், டிச. 7: சிரியா தலைநகர் டமாஸ்கஸின் புறநகர்ப் பகுதிகளை கிளர்ச்சிப் படையினர் கைப்பற்றி அந்நகரை சுற்றிவளைத்துள்ளதாக அந்த நாட்டின் போர் நிலவரத்தைக் கண்காணித்துவரும் அமைப்பின் தலைவரும் கிளர்ச்சிப் படை தளபதி ஒருவரும் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்து 5,00,000
நியூஸிலாந்துக்கு எதிராக வெலிங்டனில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி புதிய உலக சாதனை படைத்துள்ளது.
அடிலெய்ட் டெஸ்ட்: இந்தியா திணறல், ஆஸி. முன்னிலை
அடிலெய்ட், டிச. 7: இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பிங்க் டெஸ்ட் ஆட்டத்தின் இரண்டாவது நாளான சனிக்கிழமை ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 337 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பின்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய இந்தியா 128/5 ரன்களுடன் திணறி வருகிறது.
2025-க்குப் பிறகு போப் பிரான்சிஸ் இந்தியா வர வாய்ப்பு: மத்திய அமைச்சர்
திருவனந்தபுரம், டிச.7: 'கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் 2025-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியா வர வாய்ப்புள்ளது என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் சனிக்கிழமை தெரிவித்தார்.
ஈஸ்ட் பெங்காலிடம் (2-0) வீழ்ந்தது சென்னை எஃப்சி
சென்னை, டிச. 7: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் ஒரு பகுதியாக சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணியிடம் 2-0 என்ற கோல் கணக்கில் தோற்றுது சென்னையின் எஃப்சி அணி.
10-ஆவது சுற்றிலும் டிரா
குகேஷ்-லிரேனுக்கு தலா 5 புள்ளிகள்
டாலருக்கு எதிராக பிரிக்ஸ் நாணயம்? அமைச்சர் ஜெய்சங்கர் பதில்
டாலருக்கு பதிலாக புதிய பணத்தின் மூலம் வர்த்தகத்தை மேற்கொள்ள இந்தியா எப்போதும் நினைத்ததில்லை என்று அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.
விமான நிலைய பாதுகாப்புக்கு புதிய தரக் கட்டுப்பாட்டுப் பிரிவு: சிஐஎஸ்எஃப் அமைத்தது
புது தில்லி, டிச. 7: நாட்டில் உள்ள விமான நிலையங்களுக்கு பாதுகாப்பை வழங்கும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்), அதன் விமான பாதுகாப்புப் பிரிவின் செயல்திறனை மேம்படுத்த புதிய உள் தரக்கட்டுப்பாட்டுப் பிரிவை அமைத்துள்ளது.
டிச. 21-இல் சர்வதேச தியான தினம்: இந்தியாவின் முன்மொழிவை ஏற்றது ஐ.நா.
நியூ யார்க், டிச. 7: டிசம்பர் 21-ஆம் தேதியை சர்வதேச தியான தினமாக அறிவிக்க முன்மொழிந்த இந்திய ஆதரவுத் தீர்மானத்துக்கு ஐ.நா. பொதுச் சபையில் வெள்ளிக்கிழமை ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்திய எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு: பாஜக குற்றச்சாட்டுக்கு அமெரிக்கா மறுப்பு
புது தில்லி, டிச. 7: பிரதமர் நரேந்திர மோடி, தொழிலதிபர் கௌதம் அதானி ஆகியோரைக் குறிவைத்து நடத்தும் தாக்குதல்கள் மூலம் இந்தியாவை சீர்குலைக்கும் நடவடிக்கைகளுக்குப் பின்னணியிலுள்ள அமைப்புகளுக்கு அமெரிக்கா நிதியளிப்பதாக பாஜக சுமத்திய குற்றச்சாட்டை அந்நாடு மறுத்துள்ளது.
மகாராஷ்டிர பேரவையில் புதிய எம்எல்ஏ-க்கள் பதவியேற்பு
மும்பை, டிச. 7: மகாராஷ்டிர சட்டப் பேரவையின் மூன்று நாள் சிறப்பு கூட்டத்தொடர் சனிக் கிழமை தொடங்கியது. முதல் நாளில், முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார் உள்ளிட்ட புதிய எம்எல்ஏ-க்கள் பதவியேற்றனர்.
தினசரி பயன்பாட்டு பொருள்கள் மீதான வரியை உயர்த்த மத்திய அரசு திட்டம்: ராகுல்
புது தில்லி, டிச.7: தினசரி பயன்பாட்டு பொருள்கள் மீதான ஜிஎஸ்டியை உயர்த்தி, புதிய வரி வரம்பு முறையை அறிமுகம் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
தொலைபேசி இடைமறிப்பு: புதிய விதிகளை வெளியிட்டது மத்திய அரசு
புது தில்லி, டிச.7: தொலைபேசி அழைப்புகளை இடைமறிப்பதற்கான புதிய விதிகளை மத்திய அரசு வெளியிட்டது.
பேச்சுவார்த்தைக்கு அழைக்காத மத்திய அரசு: மீண்டும் தில்லி நோக்கி விவசாயிகள் இன்று பேரணி
மத்திய அரசிடம் இருந்து பேச்சுவார்த்தைக்கான அழைப்பு ஏதும் வராத நிலையில், தில்லி நோக்கிய பேரணியை 101 விவசாயிகளும் மீண்டும் ஞாயிற்றுக்கிழமை (டிச. 8) தொடங்கவுள்ளதாக பஞ்சாப் விவசாயிகள் சங்கத் தலைவர் சர்வான் சிங் பாந்தர் தெரிவித்தார்.
பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களை விரைவில் பணியமர்த்த நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
பிஎம்-கிஸான் உதவித் தொகையை ரூ.12,000-ஆக உயர்த்த வேண்டும் - நிர்மலா சீதாராமனிடம் விவசாயிகள் கோரிக்கை
2025-26-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை முன்னிட்டு, தில்லியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் கோரிக்கை மனு அளித்த விவசாயி சங்க பிரதிநிதிகள்.
மகா விகாஸ் அகாடமி கூட்டணி: சமாஜவாதி கட்சி விலக முடிவு
மகாராஷ்டிரத்தில் எதிர்க்கட்சிகளின் \"மகா விகாஸ் அகாடி\" கூட்டணியில் இருந்து சமாஜவாதி விலக முடிவு செய்துள்ளதாக, அக்கட்சியின் மாநிலத் தலைவர் அபு ஆஸ்மி சனிக்கிழமை தெரிவித்தார்.
வங்கதேசத்தில் 'இஸ்கான்' கோயிலுக்கு தீவைப்பு
வங்கதேசத்தின் டாக்கா மாவட்டத்தில் உள்ள 'இஸ்கான்' அமைப்பின் கோயிலுக்கு அடையாளம் தெரியாத கும்பல் சனிக்கிழமை தீ வைத்தது. இச்சம்பவத்தில் சுவாமி சிலைகள் சேதமடைந்தன.
முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணி: தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
முல்லைப் பெரியாறு அணையின் ஆண்டு பராமரிப்புப் பணியை உடனே மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
தேன் கலந்த பாலினும் இனிய தண்ணீர்...
ருமணம் முடிந்து, கணவன் வீட்டிற்குச் சென்ற பெண் முதல் முறையாகப் பிறந்த வீட்டிற்கு வரும்போது, அவளிடம் ரகசியமாகவும் வெளிப்படையாகவும் பெற்றோரும் தோழியரும் பல கேள்விகளைக் கேட்பதுண்டு.
புகை நமக்கு உறவு!
கம்பனின் தமிழமுதம் - 22
திருவண்ணாமலை மகா தீப மலையில் வல்லுநர் குழு இன்று ஆய்வு
திருவண்ணாமலை, டிச. 7: திருவண்ணாமலையில் துறை, தீயணைப்பு, வனம், மருத்துவம் உள்ளிட்ட துறையினருடன் 2,668 அடி உயர மலை மீது ஞாயிற்றுக்கிழமை (டிச. 8) ஏறிச் சென்று தொழில்நுட்ப வல்லுநர் குழு மலையின் தன்மையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் சனிக்கிழமை தெரிவித்தார்.
கூட்டணி நிலைப்பாட்டில் உறுதி
சென்னை, டிச. 7: கூட்டணி நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாக விடுதலைச் சிறுத்தை கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
திமுக மீது விஜய் விமர்சனம்: உதயநிதி ஸ்டாலின் பதில்
வேலூர், டிச. 7: திமுக மீதான தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் விமர்சனம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், 'நான் சினிமா செய்திகளைப் பார்ப்பதில்லை' என்றார்.
சட்டம் - ஒழுங்கு: முதல்வர் ஆலோசனை
சென்னை, டிச. 7: சட்டம் - ஒழுங்கு விவகாரம் தொடர்பாக காவல் துறை உயரதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை ஆலோசனை நடத்தினார்.
கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை
9 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு
புயல் பாதிப்பு: மாணவர்களுக்கு புதிய பாடநூல்கள், சீருடைகள் விநியோகம்
தமிழகத்தில் பென்ஜால் புயலால் பாதிக்கப்பட்டு பாடநூல்கள், சீருடைகளை இழந்த மாணவர்களுக்கு புதியவற்றை விநியோகிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் எஸ். கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
சாரணர் இயக்கம் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும்
தாம்பரம், டிச. 7: சாரணர் இயக்கத்தால் பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதன் மூலம், சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று சாய்ராம் சாரணர் மாவட்ட தலைமை ஆணையரும், ஸ்ரீசாய்ராம் கல்விக் குழுமத் தலைவருமான சாய் பிரகாஷ் லியோ முத்து கூறினார்.
ஹிந்தி பிரசார சபா பட்டமளிப்பு விழா மத்திய அமைச்சர் பங்கேற்பு
மத்திய அமைச்சர் பங்கேற்பு
அறிவிக்கப்பட்ட திருப்பணிகளை விரைந்து முடிக்க அமைச்சர் உத்தரவு
சென்னை, டிச. 7: அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட திருப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு துறையின் அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.