CATEGORIES
Kategorier
பிரதமர் மோடி குறித்து அவதூறு: காங்கிரஸ் எம்.பி. மீது குற்றச்சாட்டு பதிவு
கடந்த 2014-ஆம் ஆண்டு அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்த வழக்கில் சஹாரன்பூர் காங்கிரஸ் எம்.பி. இம்ரான் மசூத் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
ஜார்க்கண்ட்: 35 வேட்பாளர்களை அறிவித்தது ஜேஎம்எம்
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 35 வேட்பாளர்கள் அடங்கிய முதல் பட்டியலை ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கட்சி புதன்கிழமை வெளியிட்டது.
வக்ஃப் மசோதா கூட்டத்தில் விதிகளை மீறவில்லை
நாடாளுமன்ற கூட்டுக் குழு கூட்டத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவம் குறித்தே தான் பொது வெளியில் பேசினேன் என்றும், விதிகளை மீறி அந்தக் கூட்டத்தின் அலுவல்களை பொதுவெளியில் வெளியிடவில்லை என்றும் அக்குழு தலைவர் ஜகதாம்பிகா பால் தெரிவித்தார்.
ரயில்வே இடஒதுக்கீடு: முறையாக பராமரிக்க ரயில்வே வாரியம் அறிவுறுத்தல்
ரயில்வே துறையின் அனைத்து (17) மண்டலங்களுக்கும் அதன் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் பட்டியலின (எஸ்சி), பழங்குடியின (எஸ்டி) மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பிரிவுகளின் ரோஸ்டர் இடஒதுக்கீடு விதிகளை முறையாக பராமரிக்க ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
பெங்களூரில் கட்டடம் இடிந்து விழுந்த விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை 8-ஆக உயர்வு
பெங்களூரில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடகம்: பாஜகவில் இருந்து விலகிய எம்எல்சி காங்கிரஸில் இணைந்தார்
கர்நாடகத்தில் பாஜகவில் இருந்து விலகி, சட்ட மேலவை உறுப்பினர் (எம்.எல்.சி.) பதவியை ராஜிநாமா செய்த சி.பி.யோகேஸ்வர் காங்கிரஸ் கட்சியில் புதன்கிழமை இணைந்தார்.
அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி இன்று ஆலோசனை
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு வியாழக்கிழமை (அக். 24) ஆலோசனை நடத்துகிறார்.
சிறைத் துறை டிஐஜி உள்பட 3 பேர் பணியிடை நீக்கம்
வேலூர் மத்திய சிறையில் கைதி சித்திரவதை செய்யப்பட்ட வழக்கில், சிறைத் துறை டிஐஜி உள்பட 3 பேரை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.
புழுங்கல் அரிசிக்கு ஏற்றுமதி வரி விலக்கு
புழுங்கல் அரிசி, பட்டை தீட்டப்படாத பழுப்பு அரிசி மற்றும் நெல்லுக்கு ஏற்றுமதி வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
உமறுப்புலவரின் 382-ஆவது பிறந்த நாள்: எட்டயபுரத்தில் எம்.பி., அமைச்சர் மரியாதை
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில், 'சீறாப்புராணம்' இயற்றிய உமறுப்புலவரின் 382-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.
பேறு கால இறப்புகளைத் தவிர்க்க புதிய திட்டம்: பொது சுகாதாரத் துறை
பேறு காலத்தில் பல்வேறு உடல் நல அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் கர்ப்பிணிகளைக் கண்டறிந்து அவர்களது பிரசவ சிகிச்சையை பாதுகாப்பாக மேற்கொள்வதற்கான சிறப்புத் திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை நடைமுறைப்படுத்தியுள்ளது.
மர்மக் காய்ச்சல்: தேர்வறையில் மயங்கி விழுந்து பள்ளி மாணவி உயிரிழப்பு
பவானியில் மர்மக்காய்ச்சலால் உடல்நலம் பாதிக்கப்பட்ட மாணவி, பள்ளிக்கு தேர்வு எழுதச் சென்றபோது மயங்கி விழுந்து புதன்கிழமை உயிரிழந்தார்.
ஆவடியில் 496 பேருக்கு ரூ.14 கோடியில் நலத் திட்ட உதவிகள்
ஆவடியில் நடைபெற்ற மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் 496 பயனாளிகளுக்கு ரூ.14.53 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் சா.மு.நாசர் புதன்கிழமை வழங்கினார்.
தீபாவளி: தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
தீபாவளியை யொட்டி பொதுமக்களிடம் லஞ்சம் பெறுவதாக எழுந்த புகார்களின் அடிப்படையில், தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் புதன்கிழமை சோதனை செய்தனர்.
திமுக கூட்டணிக்குள் நடப்பது விவாதங்களே - விரிசல் அல்ல!
திமுக கூட்டணிக்குள் நடப்பது விவாதங்கள்தான், விரிசல் அல்ல என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.
சில நிமிஷங்களில் விற்றுத் தீர்ந்த சிறப்பு ரயில் டிக்கெட்
தென் மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்ட தீபாவளி சிறப்பு ரயில்களில் சில நிமிஷங்களில் பயணச்சீட்டுகள் விற்றுத் தீர்ந்தன.
தீபாவளி பண்டிகை: சுயஉதவிக் குழு தயாரிப்புகளை ஊக்கப்படுத்துங்கள்
பண்டிகை காலங்களையொட்டி, சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருள்களை மக்கள் வாங்க ஊக்குவிக்க வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தினார்.
வீட்டில் ஆய்வகம் அமைத்து மெத்தம்பெட்டமைன் தயாரிக்க முயற்சி
சென்னை கொடுங்கையூரில் வீட்டில் ஆய்வகம் அமைத்து மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் தயாரிக்க முயன்றதாக 5 கல்லூரி மாணவர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
அடுத்த 15 ஆண்டுகளுக்குள் சென்னை உலகின் சிறந்த நகரமாக மாறும்
சென்னை நகரம் அடுத்த 15 ஆண்டுகளில் உலகின் முக்கிய நகரங்களின் பட்டியலில் இடம்பெறும் என சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும (சிஎம்டிஏ) உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா தெரிவித்தார்.
ரூ.25 லட்சம் பணத்துக்கு பதிலாக வெள்ளை காகிதம்: ராஜஸ்தான் நபர் கைது நகைக்கு பதிலாக பணத்தை கொடுத்தபோது மோசடி
சென்னையில் ரூ.25 லட்சம் நகைக்காக கொடுத்த பணத்தில், வெள்ளை காகிதத்தை கொடுத்து மோசடி செய்ததாக ராஜஸ்தான் நபர் கைது செய்யப்பட்டார்.
கேபிள் டிவி ஆபரேட்டர்கள் உண்ணாவிரதம்
கட்டண சேனல்களின் கட்டண உயர்வை குறைக்க வேண்டும், ஜிஎஸ்டியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் புதன்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் திருட்டு விவகாரம்: காப்பீட்டு நிறுவனத்துக்கு எதிரான மனு தள்ளுபடி
ஸ்டார் ஹெல்த் காப்பீட்டு நிறுவனத்தின் 3 கோடி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட விவரங்கள் திருட்டு குறித்து விசாரிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் மின்சார பேருந்துகள் ஏப்ரலில் பயன்பாட்டுக்கு வருகிறது
சென்னையில் ஒப்பந்த அடிப்படையில் தனியார் மின்சார பேருந்துகளை இயக்க ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
நாடகம் மூலம் மயக்க மருந்தியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய மருத்துவ மாணவர்கள்
சென்னை, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மயக்க மருந்தியல் தின விழிப்புணர்வுப் பேரணி மற்றும் நாடகம் புதன்கிழமை நடைபெற்றது.
அதிக திடக்கழிவுகள்: மாநகராட்சி எச்சரிக்கை
சென்னை மாநகராட்சி பகுதியில் பெருமளவு திடக்கழிவு கொட்டுவோர் விதிமீறலில் ஈடுபட்டால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் தெரிவித்துள்ளார்.
சமுதாய மேம்பாட்டுத் திட்டங்களுக்கு சென்னை துறைமுகம் ரூ. 2.79 கோடி உதவி
சமுதாய மேம்பாட்டுத் திட்டங்களுக்கு சென்னை துறைமுகம் சார்பில் பெருநிறுவன சமூக பொறுப் பாண்மைத் திட்டத்தின் கீழ் ரூ.2.79 கோடி நிதியுதவி வழங்கப் பட்டுள்ளது.
படுக்கை வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில்
நாட்டிலேயே முதல் முறையாக படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயிலின் சோதனை வரும் ஜனவரி மாதத்துக்குள் முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் என ஒருங் கிணைந்த ரயில் பெட்டி தொழிற் சாலை (ஐசிஎஃப்) பொது மேலாளர் யு.சுப்பாராவ் தெரிவித்தார்.
வரம்பு மீறும் தொலைக்காட்சி நாடகங்கள் மீது சட்ட நடவடிக்கை
தொலைக்காட்சியில் வரம்பு மீறிய வன்முறை மற்றும் பார்வையாளர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் இடம்பெறும் நாடகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
இன்று முன்பதிவு தொடக்கம்
தீபாவளிக்கு சென்னையில் இருந்து கோவை, மங்களூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
எல்லையில் அமைதிக்கு முன்னுரிமை
இந்திய-சீன எல்லையில் அமைதிக்கு முன்னுரிமை அளிக்க பிரதமா் நரேந்திர மோடியும், சீன அதிபா் ஷி ஜின்பிங்கும் உறுதிபூண்டுள்ளனா்.