CATEGORIES
Kategorier
தங்கம் விலை சவரனுக்கு ₹55,680ஐ எட்டி புதிய உச்சம்
தங்கம் விலை நேற்று அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.55,680 என்ற புதிய உச்சத்தை தொட்டது.
மெரினாவில் விமான சாகச காட்சி
விமானப்படையின் 92வது ஆண்டு நிறுவன விழாவை முன்னிட்டு
முதல்வர் மு.க.ஸ்டாலின் கமல்ஹாசனுக்கு வாழ்த்து
மநீம கட்சி தலைவராக மீண்டும் தேர்வு
சென்னை ரயிலை கவிழ்க்க சதி
தண்டவாளங்களில் சிக்னல் பெட்டியின் போல்ட்டை கழற்றி
2ம்கட்ட நேர்முக தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு
ஒருங்கிணைந்த பொறியியல் பணி
வெடிகுண்டுகளை கைமாற்றிய புதூர் அப்பு டெல்லியில் கைது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வெடிகுண்டை கைமாற்றிய பிரபல ரவுடி அப்புவை டெல்லியில் தனிப்படை போலீசார் அதிரடியாக சுற்றி வளைத்து கைது செய்தனர். பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஆர்ம்ஸ்டாங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 27 பேரை இதுவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் நாட்டு வெடிகுண்டுகளை சப்ளை செய்த பிரபல ரவுடி புதூர் அப்புவை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று டெல்லியில் பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த புதூர் அப்பு மீது மயிலாப்பூரில் பில்லா சுரேஷ், விஜி ஆகிய இரட்டை கொலை வழக்கு், கோடம்பாக்கம் சிவா கொலை வழக்கு உள்பட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய நாட்டு வெடிகுண்டுகள் கேட்டு வழக்கறிஞர் அருள் ரவுடி புதூர் அப்புவை நாடியதாகவும், அதன் பேரில் 4 நாட்டு வெடிகுண்டுகளை தயார் செய்து கொடுத்ததாகவும் குறிப்பாக முதலாவதாக தயார் செய்த நாட்டு வெடிகுண்டுகளை கும்மிடிப்பூண்டியில் கொண்டு சென்று வெடித்த போது போதுமான வீரியம் இல்லாததால் மீண்டும் ஆந்திராவில் இருந்து மருந்துகளை வாங்கி வந்து நாட்டு வெடிகுண்டை தயார் செய்ததாகவும் புதூர் அப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் துப்பாக்கியை எடுத்தால் நாட்டு வெடிகுண்டுகளை வீசி கொலை செய்ய திட்டமிட்டு நாட்டு வெடிகுண்டுகளை எடுத்துச் சென்றதும், ஆனால் அவற்றை பயன்படுத்தாத காரணத்தினால் அங்கேயே நாட்டு வெடிகுண்டுகளை விட்டுச் சென்றதும் விசாரணையில் தெரியவந்தது. ஏற்கனவே இவ்வழக்கில் கைதான புதூர் அப்புவின் கூட்டாளிகள் ராஜேஷ், கோபி, குமரன் ஆகியோர் நாட்டு வெடிகுண்டுகளை கொண்டு வந்து ஹரிகரனிடம் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. புதூர் அப்புவை டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு டிரான்ஸிட் வாரன்ட் பெற்றுக்கொண்டு சென்னைக்கு போலீசார் அழைத்து வருகின்றனர். எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
5 அமைச்சர்களுடன்-டெல்லி முதல்வராக பதவி ஏற்றார் அடிசி
ஆளுநர் மாளிகையில் ஆர்ப்பாட்டமின்றி நடைபெற்ற எளிமையான விழாவில் டெல்லியின் 8வது முதல்வராக அடிசி நேற்று பதவியேற்றுக்கொண்டார்.
சென்னை உயர் நீதிமன்ற-தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் நியமனம்
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி கல்பாத்தி ராஜேந்திரன் ஸ்ரீராம் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஒப்புதலை ஜனாதிபதி வழங்கியுள்ளார்.
இலங்கையின் புதிய அதிபர் யார்?
அமைதியாக முடிந்தது தேர்தல்
மாஜி அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்கு
அதிமுக ஆட்சியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ₹27 கோடி லஞ்சம்
சர்வாதிகார செயல்பாடுகளுக்கு வழிவகுக்கும்
தமிழக காங்கிரஸ் கட்சியின் செயற் குழு கூட்டம் சென்னை சதியமூர்த்திபவனில் நேற்று நடைபெற்றது.
தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
துரைப் பாக்கம் மற்றும் முகப்பேர் பகுதிகளில் செயல்படும் 2 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு நிலவியது.
தலையில் கல்லை போட்டு மீன் வியாபாரி கொலை
வீட்டு வாசலில் போதையில் தூங்கி கொண்டிருந்த மீன் வியாபாரி தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
மது ஒழிப்பு என்பது கொள்கை வழிப் போராட்டம்
திமுக வர்த்தக அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் பேச்சு
துப்பாக்கியால் மிரட்டி, கல் வீசி தாக்கி மீனவர்கள் விரட்டியடிப்பு
ராமீமஸ்வரத்தில் மிணா(ும் பதற்றம்
பிரச்னை... பிரச்னை... பிரச்னை...
'தமிழக பாஜவில் 2 மாதங்களுக்கு பெரிய நிகழ்ச்சிகள் நடத்த வேண்டாம் என்று மேலிடத்தில் உத்தரவிட்டுள்ளனர். பிரச்னை, பிரச்னை என்று பிரச்னை செய்யாதீர்கள்' என்று தமிழிசை கூறினார்.
பதிவுத் துறையில் 15 மாவட்ட பதிவாளர்கள் பணியிட மாற்றம்
வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலாளர் பிரஜேந்திர நவநீத் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: நாமக்கல் நிர்வாக மாவட்ட பதிவாளர் சந்தானம் ஈரோடு தணிக்கை மாவட்ட பதிவாளராகவும், ஈரோடு தணிக்கை மாவட்ட பதிவாளர் செந்தில்குமார் சேலம் கிழக்கு தணிக்கை மாவட்ட பதிவாளராகவும், சேலம் கிழக்கு தணிக்கை மாவட்ட பதிவாளர் கல்பனா திண்டிவனம் நிர்வாக மாவட்ட பதிவாளராகவும், திண்டிவனம் நிர்வாக மாவட்ட பதிவாளர் புனிதா செங்கல் பட்டு நிர்வாக மாவட்ட பதிவாளராகவும், செங்கல்பட்டு நிர்வாக மாவட்ட பதிவாளர் அறிவழகன் மயிலாடுதுறை நிர்வாக மாவட்ட பதிவாளராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
தேவநாதனை 4 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி
நிதி நிறுவனத்தில் மோசடி செய்த ₹300 கோடி எங்கே?
₹40 லட்சம் மதிப்பீட்டில் 6 புதிய மின் மாற்றிகள்
கிருஷ்ணசாமி எம்எல்ஏ இயக்கி வைத்தார்
ரேஷன் அரிசி கடத்திய 3 பேர் கைது
2 டன் 150 கிலோ பறிமுதல்
திமுக பொறியாளர் அணியின் மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம்
திருநின்றவூரில் நடந்தது
சாலையில் லாரி கவிழ்ந்து டிரைவர் படுகாயம்
டிரைவர் ஆர்.கே.பேட்டை அருகே ரேஷன் அரிசி மூட்டைகள் ஏற்றிச்சென்ற லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், படுகாயமடைந்தார்.
ஆரணியாற்றின் கரை சீரமைப்பு பணி விறுவிறு
பெரியபாளையம் பகுதியில் ஆரணியாற்றின் கரைகளை சீரமைக்கும் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப் பாக நடைபெற்று வருகின்றது.
காஞ்சிபுரம் அறநிலையத்துறை இணை ஆணையர் மீது வழக்கு
திருச் செந்தூர் அர்ச்சகர் பயிற்சி பள்ளியின் பார்வை மாற்றுத்திறன் தலைமை ஆசிரியரிடம் ₹50 ஆயிரம் லஞ்சம் பெற்றதாக காஞ்சிபுரம் அறநிலையத்துறை இணை ஆணையர் மீது தூத்துக்குடி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பிரியாணி சமையல் கூடத்திற்கு சீல்
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
நாளையே துணை முதல்வராக அறிவித்தாலும் ஆச்சரியமில்லை
பவள விழா ஏற்பாடு பணரி ஆய்வின்போது அமைச்சர் தா.மமா.௮ன்பரான் பட்டி
நள்ளிரவில் அதிகாரிகளுடன் கலெக்டர் நேரில் ஆய்வு
காஞ்சிபுரம் பூக்கடை சத்திரம், செங்கழுநீரோடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நள்ளிரவில் அரசு அதிகாரிகளுடன், கலெக்டர் கலைச்செல்வி மோகன், எஸ்பி சண்முகம் ஆகியோர் நேற்று முன்தினம் நள்ளிரவில் ஆய்வு செய்தனர்.
சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மாமல்லபுரத்தில் நாளாக சாலையோர ஆக்கிரிப்பு கடைகள் அகற்றப் பட்டுவருகின்றன.
முதுகு, கழுத்து பிரச்னைகளுக்கு ‘ஸ்பைன் ரீசார்ஜ்' விழிப்புணர்வு
சென்னை ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனையில் இயங்கி வரும் காவேரி ஸ்பைன் இன்ஸ்டிடியூட் சார்பில் \"ஸ்பைன் ரீசார்ஜ்” என்ற பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
₹84.66 கோடியில் ஆச்சி குழுமத்தின் பதப்படுத்தும் தொழிற்சாலை
காணொலியில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்