CATEGORIES
Kategoriler
சென்னை துறைமுக பொறுப்புக் கழக துணைத் தலைவராக பாலாஜி அருண்குமார் பொறுப்பேற்பு
சென்னை துறைமுக பொறுப்புக் கழக துணைத் தலைவராக எஸ். பாலாஜி அருண்குமார் பொறுப்பேற்றுள்ளார்.
சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் வழக்கு - அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜாமீன் மனு தள்ளுபடி
சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசனின் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
போக்குவரத்துக் கழகங்களை மேம்படுத்த அரசு நிதி வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்துத் தொழிலாளர்கள்.
கரோனா தொற்றால் உயிரிழந்த காவல் ஆய்வாளர் படத்துக்கு டிஜிபி அஞ்சலி
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் நீத்த கமாண்டோ பள்ளி காவல் ஆய்வாளர் ஜோனதன் பிரான்சிஸ் உருவப் படத்துக்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இடம்: சென்னை அடையாறு மருதம் கமாண்டோ வளாகம்.
காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஒரேநாளில் 840 பேருக்கு கரோனா
செங்கை மாவட்டத்தில் நேற்று 321 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 24,129 ஆக அதிகரித்தது. 21,181 பேர் குணமடைந்த நிலையில் 379 பேர் உயிரிழந்தனர்.
கரோனா நிவாரணத்துக்கு 10-வது முறையாக ரூ.10,000 வழங்கிய யாசகர்
கரோனா நிவாரணத்துக்கு பத்தாவது முறையாக ரூ.10,000த்தை யாசகர் பூல்பாண்டியன் மதுரை ஆட்சியரிடம் நேற்று வழங்கினார்.
கடையநல்லூர் முன்னாள் எம்எல்ஏ நயினா முகமது காலமானார்
தென்காசி மாவட்டம் கடையநல்லூரைச் சேர்ந்தவர் நயினா முகமது (73). கடந்த 1996-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
2வது தலைநகர் பிரச்சினையை பெரிதாக கருத தேவையில்லை: ஹெச். ராஜா
2-வது தலைநகர் பிரச்சினையைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனப் பாஜக தேசியச் செயலாளர் ஹெச். ராஜா தெரிவித்தார்.
இந்திய கம்யூ. மூத்த தலைவர் நல்லகண்ணு குணமடைந்தார்
சென்னை அரசு பொது மருத்துவமனையில் காய்ச்சல், சளி பிரச்சினைக்கு சிகிச்சைப் பெற்று வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு குணமடைந்தார்.
இ-பாஸை ரத்து செய்தால் தொற்று அதிகரிக்கும் கரோனா பரிசோதனைகளை அதிக அளவில் செய்ய வேண்டும்
ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலர் அறிவுறுத்தல்
காணொலி மூலம் நடந்த காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு காங்கிரஸ் கட்சி தலைவராக சோனியா காந்தியே நீடிப்பார்
அடுத்த 6 மாதங்களில் புதிய தலைவரை தேர்வு செய்ய திட்டம்
இந்து தமிழ் திசை நடத்தும் ‘வர்மம் தெரபி' ஆன்லைன் பயிற்சி
செப்.2-ம் தேதி தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது
காயமடைந்த பெண்ணை 45 கி.மீ. சுமந்து வந்த வீரர்கள்
காயமடைந்த பெண்ணை படுக்கையில் வைத்து மலைப்பகுதியில் சுமந்து வரும் ஐடிபிபி வீரர்கள்.
திருமயம் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ காலமானார்
புதுக்கோட்டை மாவட்டம் பொன்ன மராவதி அருகே உள்ள ஆலவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் வ.சுப் பையா(69). இவர், திமுக சார்பில் பொன்னமராவதி ஒன்றியக் குழுத் தலைவராகவும், 1989 முதல் 1991 வரை திருமயம் தொகுதி பேரவை உறுப்பினராகவும் இருந்தார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு முதல்வர், துணைமுதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
இன்று பிறந்தநாள் கொண்டாடும் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
நீரில் மூழ்கிய 6 பேரை காப்பாற்றிய தஞ்சை இளைஞர் ஸ்ரீதருக்கு 'ஜீவன் ரக்ஷா பதக்' விருது
முதல்வர் பழனிசாமி வழங்கினார்
ஸ்டாலின் முதல்வரான பிறகு 2-வது தலைநகர் அறிவிப்பு: கே.என். நேரு
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வரான பிறகு தமிழகத்துக்கு 2-வது தலைநகரை உருவாக்குவார் என்று திமுக முதன்மைச் செயலாளர் கே.என். நேரு தெரிவித்தார்.
பத்மநாபசுவாமி கோயில் 26-ம் தேதி வழிபாட்டுக்கு திறப்பு
பத்மநாப சுவாமி கோயில் கோபுரத்தைப் பார்த்து கும்பிடும் மூதாட்டி.
நிதிஷ் தலைமையில் பிஹார் தேர்தலை எதிர்கொள்வோம்: ஜே.பி.நட்டா தகவல்
பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலை முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் எதிர்கொள்வோம் என பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
பிரணாபுக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் டெல்லி ராணுவ மருத்துவமனை தகவல்
குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தொடர்ந்து செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருவதாக டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
ஓடிடியில் வெளியாகும் 'சூரரைப் போற்று' திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு
சூர்யாவின் ‘சூரரைப் போற்று திரைப்படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுவதற்கு திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கிராமங்களில் சுகாதார பணிகளில் தேமுதிகவினர் ஈடுபட வேண்டும்
பிறந்தநாளையொட்டி விஜயகாந்த் அறிவுறுத்தல்
அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பவானி கோயிலில் தரிசனம்
பவானி கூடுதுறையில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நேற்று புனித நீராடினார்.
அரசு பொது மருத்துவமனையில் நல்லகண்ணுவுக்கு சிகிச்சை
கரோனா வைரஸ் தொற்று இல்லை
திருப்போரூரில் தடையை மீறி செயல்பட்ட திருமண மண்டபங்களுக்கு பூட்டு
திருப்போரூரில் தடையை மீறி திறக்கப்பட்ட திருமண மண்டபத்துக்கு அதிகாரிகள் பூட்டுப் போட்டனர்.
கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கோரி 10,000 இடங்களில் ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு
பொதுமக்கள், போலீஸாருக்கு விழிப்புணர்வு மருத்துவ முகாம்
மாமல்லபுரத்தில் தனியார் மருத்துவமனை மற்றும் போலீஸார் இணைந்து நடத்திய சிறப்பு மருத்துவ முகாமில், பொதுமக்கள் சிகிச்சை பெறுவதை மாவட்ட எஸ்பி கண்ணன் பார்வையிட்டார்.
கரோனாவால் இந்தியாவின் பழக்கத்தை பின்பற்றி கைகூப்பி வணக்கம் சொல்லும் தலைவர்கள்
சீனாவில் தொடங்கி இன்று உலகம் முழுவதும் கரோனா வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவுவதைத் தடுக்க, கைகளை அடிக்கடி சோப்புப் போட்டு கழுவ வேண்டும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும், முகக் கவசம் அணிய வேண்டும் என்று பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.
பிரணாப் உடல் நிலையில் முன்னேற்றமில்லை
டெல்லி ராணுவ மருத்துவமனை தகவல்
மாணவர்களின் மனதின் குரலை கேட்க மத்திய அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்
நீட் மற்றும் ஜேஇஇ தேர்வு தொடர்பான மாணவர்களின் மனதின் குரலை மத்திய அரசு கேட்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.