CATEGORIES
Kategoriler
காவலர்களைத் தாக்கி துப்பாக்கிகளை பறித்துச் சென்ற நக்ஸல்கள்
சத்தீஸ்கரில் நக்ஸல் தீவிரவாதிகள் இரு காவலர்களை கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கி, அவர்களிடம் இருந்த துப்பாக்கிகளைப் பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வக்ஃப் விவகாரம்: முஸ்லிம்களின் உணர்வுக்கு தெலுங்கு தேசம், ஜேடியு மதிப்பளிக்க வேண்டும்
வக்ஃப் சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில், முஸ்லிம்களின் உணர்வுக்கு தெலுங்கு தேசம் (டிடிபி), ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சிகள் மதிப்பளிக்க வேண்டும் என்று ஜாமியத் உலமா-ஏ-ஹிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளது.
குஜராத்தில் லேசான நிலநடுக்கம்
குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் மற்றும் பொருள் சேதம் ஏற்படவில்லை என அந்த மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
காஷ்மீர் பயங்கரவாதிகளின் வேட்டையில் 'பிஸ்கட்'
பாதுகாப்புப் படையினரின் உத்தி
'காசநோய் இல்லாத இந்தியா' சாத்தியம்
'ஒருங்கிணைந்த முயற்சியால் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க முடியும்; இந்தியாவில் காசநோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளதே இதற்கு சான்று' என பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
யார் வாக்குகளை பிரிக்கப் போகிறார் விஜய்?
தமிழக தேர்தல் களத்தில் யாருடைய வாக்குகளை விஜய் பிரிக்கப் போகிறார் என்ற விவாதம் சூடுபிடித்துள்ளது.
குளிர்காலம்: கேதார்நாத் கோயில் நடை அடைப்பு
டேராடூன், நவ. 3: குளிர்காலத்தை முன்னிட்டு, உத்தரகண்டில் உள்ள பிரசித்தி பெற்ற கேதார்நாத் மற்றும் யமுனோத்ரி ஆகிய கோயில்களின் நடை ஞாயிற்றுக்கிழமை அடைக்கப்பட்டது.
வடமொழியைப் பழிக்கும் வரியைப் பாடலாமா?
தமிழ்த்தாய் வாழ்த்தில் உள்ள ஏழு வரிகளில் ‘வதனம், திலகம், தெக்கணம், வாசனை’ போன்ற சொற்கள் எல்லாமே ஆரிய மொழியாகிய சம்ஸ்கிருத மொழிச்சொற்கள்தாம். இத்தனை சம்ஸ்கிருத வார்த்தைகள் காணப்படும்போது, சம்ஸ்கிருத மொழியை, ‘உலக வழக்கொழிந்த மொழி’ என்று எப்படிச் சொல்ல முடியும்?
வனக் காப்பாளர், காவலர் காலியிடங்கள்: உடற்தகுதித் தேர்வு எப்போது?
வனக் காப்பாளர், வனக் காவலர் காலிப் பணியிட எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றோர்க்கு உடற்தகுதித் தேர்வு குறித்த விளக்கத்தை பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
உள்ளாட்சி ஓய்வூதியர்களுக்கு 3 மாதங்களுக்குள் ஓய்வூதியம்
உள்ளாட்சி ஓய்வூதியர்களுக்கு ஓய்வு பெற்ற நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் ஓய்வூதியப் பலன்களை வழங்குவதற்கான வழிமுறையை உருவாக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சிப் பணியாளருக்கு ஓய்வூதியப் பலன்கள் அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்
உள்ளாட்சிப் பணியாளர்களுக்கு ஓய்வூதியப் பலன்களை உடனடியாக வழங்க வேண்டுமென தமிழக அரசை பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் தலைமைச் செயலர் பி.சங்கர் காலமானார்
சென்னை, நவ.3: முன்னாள் தலைமைச் செயலர் பி.சங்கர் (82) சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
ஈரோட்டில் ஒன்றரை மாத பெண் குழந்தை ரூ. 4 லட்சத்துக்கு விற்பனை: 5 பேர் கைது
ஈரோட்டில் ஒன்றரை மாத பெண் குழந்தையை ரூ. 4 லட்சத்துக்கு விற்பனை செய்த 4 பெண்கள் உள்பட 5 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
சத்தியமங்கலம் அருகே சாணியடித் திருவிழா
தமிழகம், கர்நாடக பக்தர்கள் பங்கேற்பு
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் கட்சியில் இடமில்லை
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் கட்சியில் இடமில்லை என அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
அறங்காவலர் குழுவினர் - தீட்சிதர்கள் வாக்குவாதம்
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தனி சந்நிதியாக உள்ள தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் கொடிமரத்தை மாற்ற ஞாயிற்றுக்கிழமை மாலை அறங்காவலர் குழுவினர் பூர்வாங்க பூஜைகள் செய்ய முயன்றனர். இதனால், அவர்களுக்கும், தீட்சிதர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸார் இரு தரப்பினரையும் சமரசம் செய்து பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றனர்.
திருவொற்றியூரில் சாலை விபத்தில் தந்தை, மகன் உயிரிழப்பு
திருவொற்றியூரில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் தந்தை மகன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
வீட்டு வேலைக்கார சிறுமி அடித்துக் கொலை: 6 பேர் கைது
சென்னை, நவ. 3: வீட்டு வேலை செய்து வந்த சிறுமி அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் 6 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிரசென்ட் வளாகத்தில் எண்ணெய், எரிவாயு பயிற்சி படிப்பு தொடக்கம்
வண்டலூர் பி.எஸ்.அப்துர் ரகுமான் கிர சென்ட் உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவன வளாகத்தில் எண்ணெய், எரிவாயு உற்பத்தி நிறுவனங்களில் பாதுகாப்புடன் பணியாற்றுவதற்கான படிப்பு தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
ப்ரீபெய்ட் மின் மீட்டர் முறையை அமல்படுத்த வேண்டும்
ப்ரீ பெய்ட் மின் மீட்டர் முறையை அமல்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மணலி அருகே இருவேறு சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு
திருவொற்றியூர், நவ. 4: மணலி அருகே ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இரு வேறு விபத்துகளில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
எந்த சமூகத்தை அவதூறாக பேசினாலும் நடவழக்கை எடுக்க வேண்டும்
எந்த சமூகத்தை யார் அவதூறாகப் பேசினாலும் அவர்கள் மீது பிசிஆர் (வன் கொடுமை) சட்டத்தின் கீழ் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி தலைவர் அர் ஜுன் சம்பத் கூறினார்.
கனரா வங்கி சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
சென்னையில் கனரா வங்கி சார்பில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தமிழகத்தில் நவ.9 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் திங்கள்கிழமை (நவ.4) முதல் சனிக்கிழமை (நவ.9) வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் முப்படை ஓய்வூதியதாரர்களுக்கு குறைகேட்பு முகாம்
தமிழகம் முழுவதும் முப்படை ஓய்வூதியதாரர்களுக்கான குறைகேட்பு முகாம் வரும் நவ.30-ஆம் தேதி வரை நடைபெறும் என சென்னை பாதுகாப்பு கணக்குகள் கட்டுப்பாட்டாளர் ப.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
நியாயவிலைக் கடைகளில் காலிப் பணியிடங்கள்: நவ.7 -க்குள் விண்ணப்பிக்கலாம்
நியாய விலைக் கடைகளில் உள்ள விற்பனையாளர், கட்டுநர் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை வரும் 7-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
தீபாவளி தொடர் விடுமுறை: ஏலகிரியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
திருப்பத்தூர், நவ.3: தீபாவளி தொடர் விடுமுறையால் ஏலகிரி மலையில் சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
அருணாசலேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் கூட்டம்
விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
குற்றாலம் அருவிகளில் குளிக்க அனுமதி
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
கந்த சஷ்டி 2-ஆம் நாள் விழாவில் பரத நாட்டிய நிகழ்ச்சிகள்
திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி 2-ஆம் நாள் விழாவில் மலைக்கோயில் வளாகத்தில் நடைபெற்ற பக்தி இன்னிசை மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.