CATEGORIES
Kategoriler
மழையால் நெற்பயிர்கள் பாதிப்பு; மாரடைப்பால் விவசாயி உயிரிழப்பு
கீழையூர் அருகே மாரடைப்பால் விவசாயி புதன்கிழமை இரவு உயிரிழந்தார். மழையால் பயிர்கள் பாதிக்கப்பட்ட மன உளைச்சலில் அவர் இறந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர்.
'கச்சத்தீவை விட்டுக் கொடுத்து இந்தியாவின் கடல் பரப்பை விரிவுபடுத்தியவர் இந்திரா காந்தி'
1.75 சதுர கி.மீ. நிலப்பரப்பை மட்டுமே கொண்ட கச்சத்தீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்து, 4,000 சதுர கி.மீட்டருக்கு இந்திய கடல் எல்லையை விரிவுபடுத்தியவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி என காங்கிரஸ் மாநிலத் தலைவர் கு. செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.
சமநிலைப் பேச்சுக்குத் தயார்
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இரு தரப்பும் சமநிலையில் இருந்து நடத்தும் பேச்சுக்குத் தயாராக இருப்பதாக ரஷியா தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ஆட்டம் நிறைவு
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியர்கள் அனைவருமே, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வியாழக்கிழமை தோல்வி கண்டனர்.
ரசாயன பொருள்களை பாதுகாப்பாக கையாளுவது குறித்த பயிற்சி முகாம்
தொழிற்சாலைகளில் ரசாயன பொருள்களை பாதுகாப்பாக கையாளுவது குறித்த இரண்டு நாள் பயிற்சி முகாமை சிப்பெட்தலைமை இயக்குநர் சிஷிர் சின்ஹா தொடங்கிவைத்தார்.
ஐபோன் செயல்திறன் குறைபாடு புகார்: ஆப்பிள் நிறுவனத்துக்கு நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்
ஐபோன்களின் செயல்திறன் குறைபாடு தொடர்பாக அதைத் தயாரிக்கம் அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

செய்திகள் சில வரிகளில்...
மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தின் 50-ஆவது ஆண்டு விழாவையொட்டி மொத்தம், 14,505 பந்துகளைக் கொண்டு மைதானத்தின் பெயர் வடிவமைக்கப்பட்டு புதிய கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டது.
வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி ஜன. 26-இல் சீனா பயணம்
இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி ஞாயிற்றுக்கிழமை (ஜன. 26) முதல் சீனாவுக்கு 2 நாள் அரசுமுறைப் பயணம் செல்கிறார்.
கத்திக்குத்தில் 2 பேர் உயிரிழப்பு
ஜெர்மனியின் பவேரியா மாகாணத்தில் ஆப்கானிஸ்தானிலிருந்து வந்திருந்த 28 வயது நபர் நடத்திய சரமாரி கத்திக்குத்து தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். தாக்குதல் நடத்தியவரை போலீஸார் கைது செய்தனர்.
மூளைச்சாவு அடைந்தவரின் உறுப்புகள் தானம்: மூவருக்கு மறுவாழ்வு
விபத்தில் மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டதில் மூன்று பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஜகபர் அலி கொலை வழக்கு: குவாரி உரிமையாளர் சரண்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கனிமவளக் கொள்ளைக்கு எதிராகப் போராடிய ஜகபர் அலி கொல்லப்பட்ட வழக்கில் தேடப்பட்ட குவாரி உரிமையாளர் ராமையா காவல் நிலையத்தில் வியாழக்கிழமை சரணடைந்தார்.
பழங்குடியின சிறுமி பாலியல் கொலை வழக்கில் 5 பேருக்கு மரண தண்டனை
சத்தீஸ்கர் நீதிமன்றம் தீர்ப்பு

தேவையான தகவல்களை அளிக்காவிட்டால் அங்கீகாரம் திரும்பப் பெறப்படும்
பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. எச்சரிக்கை

ஈரோடு கிழக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் மாற்றம்
வேட்புமனு ஏற்பில் குளறுபடி எதிரொலி
ஐடி பங்குகளுக்கு வரவேற்பு: லாபத்தில் சென்செக்ஸ் நிறைவு
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமை பங்குச்சந்தை நேர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் லாபத்துடன் நிறைவடைந்தன.

மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகுவேன்
பாஜகவுக்கு ஜிதன் ராம் மாஞ்சி எச்சரிக்கை

தென் மாநிலங்களின் கலாசாரங்கள் பிரதிபலிப்பு!
இந்த ஆண்டு குடியரசு தினத்தையொட்டி தனது மாளிகையில் குடியரசுத் தலைவர் அளிக்கவிருக்கும் 'அட் ஹோம்' எனப்படும் தேநீர் விருந்து வரவேற்புக்கு அழைக்கப்படுபவர்களுக்கு, இந்தியாவின் ஐந்து தென் மாநிலங்களின் கலை மற்றும் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் பொருள்கள் இடம் பெற்ற கைவினைப்பெட்டி அழைப்பிதழை (படம்) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கியுள்ளார்.
போரில் சிக்கித் தவிக்கும் குழந்தைகள்!
மோசமான விளைவுகளைப் போர் ஏற்படுத்துகிறது. அதில், ஆகக் கொடுமையான விஷயம் குழந்தைகள் பாதிக்கப்படுவதுதான்.
டிசம்பரில் சரிந்த பாமாயில் இறக்குமதி
இந்தியாவின் பாமாயில் இறக்குமதி கடந்த டிசம்பரில் வெகுவாக வீழ்ச்சியடைந்தது. விலை குறைவான சோயாபீன் எண்ணெயின் சந்தைப் பங்கு அதிகரித்ததால் இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது.

டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் திரும்பப் பெறப்படுமா?
மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பதில்

கோலங்கள் என்றும் அழிவதில்லை!
பரபரப்பான சென்னை மயிலாப்பூர் வடக்கு வீதி; அவசரகதியில் மக்கள் இயங்கும் பகுதி. அந்த வீதி ஒரு நாள் திருவிழாக்கோலம் பூண்டது; அழகு பெற்றது.

அர்ஷ்தீப், வருண் அசத்தல்; அபிஷேக் அதிரடி
முதல் டி20 கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி
வக்ஃப் திருத்த மசோதா: ஜேபிசி கூட்டத்தை ஜன.30, 31-இல் நடத்த ஆ.ராசா வலியுறுத்தல்
வக்ஃப் திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தை அவசரகதியில் ஜன. 24, 25 ஆகிய தேதிகளில் நடத்தாமல் ஜன.30, 31 ஆகிய தேதிகளுக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று அக்குழுவின் உறுப்பினரும் திமுக எம்.பி.யுமான ஆ. ராசா வலியுறுத்தினார்.

நெல் ஈரப்பதம்: தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 இடங்களில் மத்திய குழு ஆய்வு
தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லில் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் புதன்கிழமை ஆய்வு செய்தனர்.

பிரக்ஞானந்தா தனி முன்னிலை
நெதர்லாந்தில் நடைபெறும் டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 4-ஆவது சுற்றில் வெற்றி பெற்ற இந்தியாவின் ஆர்.பிரக்ஞானந்தா, தனி முன்னிலை பெற்றார்.

தேசிய சுகாதார இயக்கம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
நாட்டில் பொது சுகாதார சேவைகள் மேம்பாட்டுக் கான தேசிய சுகாதார இயக்கத்தை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் வழங்கியது.

துருக்கி ஹோட்டல் தீவிபத்து: உயிரிழப்பு 76-ஆக உயர்வு
துருக்கி ஹோட்டல் கட்டடத்தில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 76-ஆக அதிகரித்துள்ளது.

அரசின் சமச்சீரான பயணத்துக்கு வணிகர்களின் ஆதரவு அவசியம்
எல்லோருக்கும், எல்லாமுமாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கூடிய தமிழக அரசின் சமச்சீரான பயணத்துக்கு வணிகர்களின் ஆதரவு மிகவும் அவசியம் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
புதிய உச்சத்தில் தங்கம் விலை: பவுன் ரூ.60,200-க்கு விற்பனை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன் கிழமை பவுனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.60,200-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
கிண்டி கிங் ஆய்வக மருந்து தர மேம்பாட்டுக்கு ரூ. 12 கோடி ஒதுக்கீடு
சென்னை கிண்டி கிங் ஆய்வகத்தில் மருந்து தரக் கட்டுப்பாடு மேம்பாட்டுக்காக ரூ. 12 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.