CATEGORIES
Kategoriler
கனமழை: தயார் நிலையில் மீட்புப் படைகள்
தமிழகத்துக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதைத் தொடா்ந்து, பேரிடா் மீட்புப் படைகளைத் தயாா் நிலையில் வைக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
கோவையில் கொட்டித் தீர்த்த கனமழை
கோவையில் ஞாயிற்றுக்கிழமை கொட்டித் தீர்த்த கனமழையால் மாநகரில் வீடுகள், கடைகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
ரஷியாவுக்கு எதிராக சர்வதேச அமைப்புகள் நடவடிக்கை: உக்ரைன் வலியுறுத்தல்
சரணடைந்த உக்ரைன் வீரர்களை ரஷியா சுட்டுக்கொன்ற குற்றச்சாட்டு தொடர்பாக சர்வதேச அமைப்புகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உக்ரைன் மனித உரிமைகள் தூதர் டிமிட்ரோ லுபிநெட்ஸ் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினார்.
இஸ்ரேலில் அமெரிக்க படைகள்: ஈரான் மறைமுக எச்சரிக்கை
இஸ்ரேலுக்கு தனது படைகளை அனுப்பும் நடவடிக்கையைத் தவிா்க்க வேண்டும் என்று அமெரிக்காவுக்கு ஈரான் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜேக் சின்னர், சபலென்கா சாம்பியன்
ஷாங்காய் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியில் இத்தாலியின் ஜேக் சின்னரும், வுஹான் ஓபன் போட்டியில் பெலாரஸின் அா்யனா சபலென்காவும் சாம்பியன் பட்டம் வென்றனா்.
பாஜகவில் மூத்தவர்களுக்கு மதிப்பில்லை: சரத் பவார்
பாஜகவில் நீண்ட காலமாக இருக்கும் உண்மையான மூத்த நிா்வாகிகள், தொண்டா்களுக்கு மதிப்பு இல்லை என்று தேசியவாத காங்கிரஸ் (பவாா்) பிரிவு தலைவா் சரத் பவாா் தெரிவித்தாா்.
தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டரை வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி
உத்தரகண்ட் மாநிலத்தில் தண்டவாளத்தில் கேஸ் சிலிண்டரை வைத்து ரயிலைக் கவிழ்க்க நடந்த சதி முறியடிக்கப்பட்டது.
வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள அவசரகால கட்டுப்பாட்டு மையம்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்காக வருவாய்துறை மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் மாநில அவசரகால கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
நிகழாண்டில் 95 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரைவைக்கு எதிர்பார்ப்பு
நிகழாண்டில் 95 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரைவை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சர்க்கரை, கரும்பு உற்பத்தி மேம்பாட்டுத் துறை அமைச்சர் இரா. ராஜேந்திரன் தெரிவித்தார்.
மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி தேரோட்டம்
சென்னை மணலி புதுநகர் அய்யா வைகுண்ட தர்மபதி புரட்டாசி மாத திருவிழாவின் வினையொட்டி, ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 19,000 கன அடியாக அதிகரிப்பு
கர்நாடகம், தமிழகத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 19,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிரம்: அரசியல் போட்டியில் முன்னாள் அமைச்சர் சித்திக் கொலையா?
மகாராஷ்டிர முன்னாள் அமைச்சா் பாபா சித்திக் (66), அரசியல் போட்டியில் சுட்டுக் கொல்லப்பட்டாரா அல்லது வேறு காரணமா என்பது குறித்து காவல் துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
‘லைட்டர்’ உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு தடை: சீனாவுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை
உள்நாட்டு தீப்பெட்டி உற்பத்தியை ஊக்குவிக்கும் மற்றும் சீனப்பொருள்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் சிகரெட் லைட்டர் உதிரிபாகங்களின் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
சபரிமலை தரிசனம்: நேரடி பதிவு முறை கிடையாது
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருகிற மண்டல பூஜை-மகரவிளக்கு நடைதிறப்பு காலத்தில் நேரடி பதிவு முறை (ஸ்பாட் புக்கிங்) கிடையாது எனவும், அனைத்து பக்தா்களும் தரிசிக்கும் வகையில் வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் தேவஸ்வம் அமைச்சா் வாசவன் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
குஜராத்தில் ரூ.5,000 கோடி போதைப் பொருள் பறிமுதல்
குஜராத் மாநிலம், அங்கலேஷ்வரில் உள்ள மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து ரூ.5,000 கோடி மதிப்புள்ள கோகைன் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
நாளைமுதல் வடகிழக்குப் பருவமழை
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்.15 அல்லது 16-ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
பாலசோரில் இருந்து பாடம் கற்கவில்லையா ரயில்வே?
கவரைப்பேட்டை விபத்து குறித்து நிபுணர்கள் கருத்து
முதல்வரின் உத்தரவுப்படி மீட்பு-நிவாரண நடவடிக்கைகள்
தமிழக அரசு தகவல்
ஜபாலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்
22 பேர் உயிரிழப்பு
இறுதிச் சுற்றில் ஜேக்-ஜோகோ மோதல்
ஷாங்காய் மாஸ்டா்ஸ் டென்னிஸ் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு ஜாம்பவான் ஜோகோவிச்-இத்தாலியின் நட்சத்திர வீரா் ஜேக் சின்னா் தகுதி பெற்றுள்ளனா்.
உலக பட்டினிக் குறியீடு: 'தீவிர பகுப்பாய்வு' பிரிவில் இந்தியா
127 நாடுகளில் 105-ஆவது இடம்
பாஜகவை வீழ்த்த பிற கட்சிகளுடன் காங்கிரஸ் இணைந்து செயல்பட வேண்டும்
பாஜகவை வீழ்த்த பிற கட்சிகளுடன் காங்கிரஸ் இணைந்து செயல்பட வேண்டும் என்று அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி தெரிவித்தார்.
ஹரியாணா: பாஜக அரசு அக்.17-இல் பதவியேற்பு
ஹரியாணாவில் பாஜக தலைமையிலான புதிய அரசு வரும் அக்டோபா் 17-ஆம் தேதி பதவியேற்கவுள்ளது. இவ்விழாவில் பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள், கட்சியின் மூத்த தலைவா்கள், பல்வேறு மாநில முதல்வா்கள் பங்கேற்கவுள்ளனா்.
அக். 17-இல் அதிமுக ஆண்டு விழா: கட்சிக் கொடியேற்றுகிறார் இபிஎஸ்
அதிமுகவின் 53-ஆவது ஆண்டு தொடக்க விழா அக்.17-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சிக் கொடியை ஏற்றி பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி, தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கவுள்ளார்.
ஷார்ஜா விமானத்தில் நடுவானில் கோளாறு: திருச்சியில் டிஜிசிஏ விசாரணை
திருச்சியிலிருந்து 144 பயணிகளுடன் ஷார்ஜாவுக்கு வெள்ளிக்கிழமை புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு குறித்து மத்திய அரசின் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) தனது விசாரணையை சனிக்கிழமை தொடங்கியது.
கோயம்பேடு அங்காடியில் மழைநீர் தேங்காமல் இருக்க கூடுதல் நடவடிக்கை
அமைச்சர் பி.கே.சேகர்பாபு
விஜயதசமி: பள்ளிகளில் கல்வியைத் தொடங்கிய குழந்தைகள்
விஜயதசமி நாளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பெற்றோர்கள் ஆர்வத்துடன் தங்கள் குழந்தைகளை சேர்த்தனர்.
யானைகள் ஊர்வலத்துடன் மைசூரு தசரா திருவிழா நிறைவு
மைசூரில் கடந்த 10 நாள்களாக நடைபெற்றுவந்த உலகப் புகழ்பெற்ற தசரா திருவிழா சனிக்கிழமை வண்ணமயமான யானைகள் ஊர்வலம், தீப்பந்த ஊர்வலத்துடன் நிறைவடைந்தது.
ரயில் விபத்து: என்ஐஏ விசாரணை
திருவள்ளூர்மாவட்டம்,பொன்னேரியை அடுத்த கவரைப்பேட்டையில் வெள்ளிக்கிழமை இரவு சரக்கு ரயில் மீது பாக்மதி விரைவு ரயில் மோதி விபத்துக்குளான சம்பவம் தொடர் பாகதேசிய புலனாய்வு முகமை (என் ஐஏ) விசாரணை நடத்தி வருகிறது.
ஜப்பான் அமைப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு
ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 'நிஹோன் ஹிடாங்கியோ' அமைப்புக்கு 2024-ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.