CATEGORIES
Kategoriler
லெபனான் கிராமங்களில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவு
ஹிஸ்புல் லாக்களைக் குறிவைத்து லெபனானில் தரைவழி தாக்குதலைத் தொடங்கியுள்ள இஸ்ரேல், அந்த நாட்டின் எல்லை கிராமங்களில் இருந்து பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
கான்பூர் டெஸ்ட்டிலும் இந்தியா வெற்றிக் கொடி
வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது. இதன் மூலம், 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக வென்றது.
கிழக்கு லடாக் எல்லைச் சூழல் இயல்பாக இல்லை: ராணுவ தலைமைத் தளபதி
கிழக்கு லடாக் எல்லையில் இயல்பான சூழல் நிலவவில்லை என்று ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி தெரிவித்தார்.
பொய் வாக்குறுதிகளே காங்கிரஸின் அரசியல்
‘பொய் வாக்குறுதிகள் மட்டுமே காங்கிரஸின் அரசியல்; அதேநேரம், கடின உழைப்பு மற்றும் தீா்வு சாா்ந்த அரசியலை பாஜக முன்னெடுக்கிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
மத்திய நிதி ரூ.1.17 லட்சம் கோடி எப்படி செலவிடப்பட்டது?
மத்திய அரசு ஒதுக்கிய ரூ. 1.17 லட்சம் கோடியை மேற்கு வங்க அரசு எந்தெந்த பணிகளுக்காக, எப்படி செலவிட்டது என்பது குறித்து மாநில முதல்வர் மம்தா பானர்ஜி விளக்கமளிக்க வேண்டும் என்று அந்த மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் வலியுறுத்தியுள்ளார்.
பழனி மலைக் கோயில் ராஜகோபுர சுதை வளைவு சேதம்
பழனி மலைக் கோயிலில் உள்ள ராஜகோபுரத்தின் சுதை வளைவு சேதமடைந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
ஜமைக்கா ராணுவத்துக்கு இந்தியா பயிற்சி
ஜமைக்கா ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பதோடு, அவா்களின் திறன் கட்டமைப்புக்கு இந்தியா பங்காற்றும் என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
ரஜினிகாந்துக்கு ரத்த நாள சீரமைப்பு சிகிச்சை
ரத்த நாள வீக்க பாதிப்புக்குள்ளான நடிகா் ரஜினிகாந்துக்கு அறுவை சிகிச்சையின்றி ஸ்டென்ட் உபகரணம் பொருத்தப்பட்டதாகவும், அவா் இரு நாள்களில் வீடு திரும்புவாா் என்றும் அப்பல்லோ மருத்துவமனை தெரிவித்துள்ளது.
ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி விஜயகுமார் பொறுப்பேற்பு
தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தின் துணைத் தலைவராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி எம்.பி. விஜயகுமார் பொறுப்பேற்றார்.
ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு எதிர்காலத்தில் அனுமதி வழங்க மறுக்கக் கூடாது
ஆா்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு எதிா்காலத்தில் அனுமதி மறுக்கவோ, புதிய நிபந்தனைகளை விதிக்கவோ கூடாது என தமிழக காவல் துறைக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதியோர் பராமரிப்பு உதவியாளர் படிப்பு தொடக்கம்
தமிழகத்தில் உள்ள 36 அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதியோர் பராமரிப்பு உதவியாளர் சான்றிதழ் படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் கல்வியில் யோகா, உடற்கல்வி, சம்ஸ்கிருதம்
ஆசிரியா் கல்வியில் யோகா, கலை, சம்ஸ்கிருதம், உடற்கல்வி பாடங்கள் புதிதாக சோ்க்கப்படும் என தேசிய ஆசிரியா் கல்வி கவுன்சில் தலைவா் பங்கஜ் அரோரா கூறினாா்.
மெரீனாவில் விமானப் படை சாகச ஒத்திகை
சென்னை மெரீனா கடற்கரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்திய விமானப் படை விமானங்களின் சாகச ஒத்திகையை பாா்வையாளா்கள் வியப்புடன் கண்டு ரசித்தனா்.
ஜம்மு-காஷ்மீர் இறுதிக்கட்டத் தேர்தல்: 70% வாக்குப் பதிவு
ஜம்மு-காஷ்மீரில் மூன்றாவது மற்றும் இறுதிக் கட்டமாக 40 தொகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை (அக்.1) அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது. இதில் 69.65 சதவீத வாக்குகள் பதிவாகின.
புல்டோசர் நடவடிக்கை: தீர்ப்பு ஒத்திவைப்பு
குற்றச் சம்பவத்தில் தொடர்புள்ளதாக குற்றஞ்சாட்டப்படுவோர் உள்ளிட்டோருக்குச் சொந்தமான கட்டடங்களை உள்புல்டோசர் மூலம் இடிக்கும் விவகாரத்தில் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்
இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை ஈரான் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
சட்டத்தின் ஆட்சி நடைமுறையில் மட்டுமே பொருளாதார வளர்ச்சி சாத்தியம்
சட்டத்தின் ஆட்சி நடைமுறையில் மட்டுமே பொருளாதார வளா்ச்சி மற்றும் சமூக மேம்பாடு சாத்தியம் என குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு திங்கள்கிழமை தெரிவித்தாா்.
ஒருநாள் தொடரை வென்றது ஆஸ்திரேலியா
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 'டக் வொர்த் லீவிஸ்' முறையில் 49 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் அந்த அணி, 5 ஆட்டங்கள் கொண்ட தொடரை 3-2 என்ற கணக்கில் வென்றது.
மேலும் ஓர் அமெரிக்க ட்ரோன் அழிப்பு: ஹூதிக்கள்
அமெரிக்காவின் அதிநவீன எம்க்யூ-9 ரீப்பர் ரகத்தை (படம்) சேர்ந்த மேலும் ஒரு ட்ரோனை சுட்டு வீழ்த்தியது யேமனின் ஹூதி கிளர்ச்சி யாளர்கள் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு வேலிகளை அமைக்க அமைச்சர் உத்தரவு
மழைநீர் வடிகால் பணிகள் நடைபெறும் பகுதிகளில் பாதுகாப்பு வேலிகளை அமைக்க அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.
மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.35,000 கோடி வங்கிக் கடன் இலக்கு - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
நிகழ் நிதியாண்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.35,000 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது இலக்கு என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
வேறு சிறப்பு நீதிபதியிடம் செந்தில் பாலாஜி வழக்குகள்: சென்னை உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
எம்.பி. எம்எல்ஏகளுக்கான வழக்குகள் விசாரிக்கப்படும் நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் தமிழக முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தொடா்புடைய வழக்குகளின் விசாரணையை வேறு சிறப்பு நீதிபதியிடம் ஒப்படைப்பது தொடா்பாக நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
'தொழிலதிபர்களுக்காக ஆட்சி நடத்தும் பாஜக'- ராகுல் குற்றச்சாட்டு
மத்தியில் தற்போதைய பாஜக அரசு தொழிலதிபா்களுக்கான ஆட்சியை நடத்தி வருவதாகவும் எளிய மக்கள் போராடி வரும் நிலையில் பெரும் பணக்காரா்களிடம் செல்வம் குவிந்து வருவதாகவும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.
மணிப்பூர் விவகாரத்தில் அமித் ஷா கவனம் செலுத்த வேண்டும்
'மணிப்பூர், ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு போன்ற தீவிரமான விஷயங்களில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கவனம் செலுத்த வேண்டும்' என்று காங் கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது.
பிரதமர் குறித்த கார்கே கருத்து அவமானகரமானது
பிரதமர் நரேந்திர மோடி குறித்து காங் கிரஸ் தலைவர் மல்லிகார் ஜுன் கார்கே தெரிவித்த கருத்து தரம் தாழ்ந்ததும் அவமானகரமானதும் ஆகும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.
பட்டியலின மாணவருக்கு ஐஐடியில் இடம்: உச்சநீதிமன்றம் உத்தரவு
ரூ.17,500 செலுத்தாததால் வாய்ப்பை இழந்த விவகாரம்
கான்பூர் டெஸ்ட்டில் 'டி20' விளையாடிய இந்தியா - பேட்டர்கள் அதிரடியில் புதிய சாதனை
வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் இந்தியா, 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 285 ரன்கள் விளாசி ‘டிக்ளோ்’ செய்தது.
தரைவழி தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - பின்வாங்கும் லெபனான் ராணுவம்
ஹிஸ்புல்லாக்களைக் குறிவைத்து லெபனானில் இஸ்ரேல் ராணுவம் தரைவழித் தாக்குதலை திங்கள்கிழமை தொடங்கியது.
காந்தியடிகள் பிறந்த நாள் விழா: மாணவர்களுக்கு ஆளுநர் அழைப்பு
மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி, சென்னை காந்தி மண்டபத்தில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் பொதுமக்கள், மாணவர்கள் கலந்து கொள்ளுமாறு ஆளுநர் ஆர்.என். ரவி அழைப்பு விடுத்துள்ளார்.
நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது
பழம்பெரும் நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு (74) 2022-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.