CATEGORIES
Kategoriler
தெலங்கானா முதல்வருக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு
கவிதா ஜாமீன் குறித்து விமர்சித்த விவகாரம்
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 150 அதிநவீன பேருந்துகள் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
தமிழக அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்துக்காக ரூ.90.52 கோடியில் கொள்முதல் செய்யப்பட்ட 150 அதிநவீன வசதிகள் கொண்ட புதிய பேருந்துகளின் சேவையை இளைஞா் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
7% அதிகரித்த இந்திய நிலக்கரி உற்பத்தி
இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி கடந்த ஏப்ரல் 1-ஆகஸ்ட் 25 காலகட்டத்தில் 7 சதவீதம் அதிகரித்துள்ளது.
உக்ரைன் தாக்குதல்: ரஷிய எண்ணெய் கிடங்கில் தீ
ரஷியாவில் உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் அந்த நாட்டு எண்ணெய்க் கிணறு கொழுந்துவிட்டு எரிவதாக 'தி ராய்ட் டர்ஸ்' செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேற்குக் கரை: இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையில் 9 பேர் உயிரிழப்பு
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேல் மேற்கொண்ட மிகப் பெரிய ராணுவ நடவடிக்கையில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.
இந்திய அணி கோல்கீப்பர் கிருஷண் பஹதூர்
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியில் விளையாடவிருக்கும் இந்திய ஆடவர் அணி, 18 பேருடன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.
யுபிஐ, ரூபே அட்டையை சர்வதேச அளவில் வெற்றிகரமாக செயல்படுத்த இலக்கு
யுபிஐ, ரூபே அட்டையை சா்வதேச அளவில் வெற்றிகரமாக செயல்படுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் புதன்கிழமை தெரிவித்தாா்.
11 மாநிலங்களில் ரூ.76,500 கோடியில் முக்கியத் திட்டங்கள் : பிரதமர் மோடி ஆய்வு
11 மாநிலங்களில் ரூ.76,500 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை, ரயில், நீா்வளம் சாா்ந்த 7 முக்கியத் திட்டங்களின் நிலை குறித்து பிரதமா் மோடி தலைமையில் சீராய்வு கூட்டம் புதன்திழமை நடைபெற்றது.
ஜம்மு-காஷ்மீர் பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை
ஜம்மு-காஷ்மீா் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடப் போவதில்லை என்று மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான மெஹபூபா முஃப்தி அறிவித்துள்ளாா்.
பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை : சட்டத் திருத்தம் கொண்டுவர மம்தா உறுதி
பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில், மேற்கு வங்க அரசு சட்டத்திருத்தம் கொண்டு வரும் என்று மாநில முதல்வா் மம்தா பானா்ஜி உறுதியளித்துள்ளாா்.
அனைத்து மக்களின் நிதி பங்கேற்பை ஊக்குவித்த ‘ஜன் தன்' திட்டம் : பிரதமர் மோடி புகழாரம்
‘அனைவரையும் உள்ளடக்கிய நிதி ஆதாரத்தை ஊக்குவித்ததிலும் நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் கண்ணியத்தை உறுதிப்படுத்தியதிலும் ஜன் தன் திட்டம் முதன்மையானது’ என்று பிரதமா் மோடி புதன்கிழமை புகழாரம் சூட்டினாா்.
தமிழக முதல்வர் சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டலா?
முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து துபை சென்ற விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும், ஆனால் அந்த விமானத்தை அதிகாரிகள் சோதனை செய்யவில்லை என்றும் புகாா் எழுந்துள்ளதால், அதுபற்றி மத்திய அரசின் விமானப் போக்குவரத்து ஆணையரகம் விசாரித்து வருகிறது.
தமிழகத்தில் 88 % மின்வாரிய பராமரிப்புப் பணிகள் நிறைவு
தமிழகத்தில் இதுவரை 88 சதவீத மின்வாரிய பராமரிப்புப் பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாக மின்சாரத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளாா்.
ஏரி, கால்வாய்களைத் தூர்வாரி பலப்படுத்த ஆணையர் உத்தரவு
வுள்ள நிலையில் ஏரி, கால்வாய்களைத் தூா்வாரி பலப்படுத்துவது குறித்து மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் ஆய்வு செய்தாா்.
‘காவல் துறை அனுமதி அளிக்கும் நாளில் விநாயகர் சிலை ஊர்வலம்’
சென்னையில் அனுமதி அளிக்கும் நாளிலேயே விநாயகா் சிலை ஊா்வலத்தை நடத்த வேண்டும் என காவல் துறை உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருவள்ளுவர் பிறந்த தினத்தை மாற்றக் கோரி வழக்கு: தீர்ப்பு ஒத்திவைப்பு
திருவள்ளுவா் பிறந்த தினத்தை மாற்றக் கோரிய வழக்கின் தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
முழு அடைப்பு: மேற்கு வங்கத்தில் இயல்பு வாழ்க்கை பகுதியளவு பாதிப்பு
மேற்கு வங்கத்தில் பாஜகவின் 12 மணி நேர முழு அடைப்புப் போராட்ட அழைப்பைத் தொடா்ந்து நாடியா சாந்திப்பூா் ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினா்.
விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு
கிருஷ்ணகிரி தனியாா் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடா்பான வழக்கின் புலன் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மருத்துவமனைகளில் இரவில் ரோந்து; 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை
மருத்துவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மருத்துவமனைகளில் இரவு நேரங்களில் ரோந்து மேற்கொள்ளுதல், அனைத்து நாள்களும் 24 மணி நேரம் செயல்படக்கூடிய ஆள்கள் கொண்ட கட்டுப்பாட்டு அறையை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
ரூ.28,602 கோடியில் 12 புதிய தொழில் நகரங்கள் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்
தேசிய தொழில் வழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின் (என்ஐசிடிபி) கீழ் ரூ.28,602 கோடி முதலீட்டில் புதிதாக 12 தொழில் நகரங்கள் அமைக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பாலியல் புகார்கள் எதிரொலி : மலையாள நடிகர்கள் சங்கத் தலைவர் மோகன்லால், நிர்வாகிகள் ராஜிநாமா
மலையாள நடிகா்கள் பலா் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து, மலையாள திரைப்பட நடிகா்கள் சங்கத்தின் (ஏஎம்எம்ஏ) தலைவரும் முன்னணி நடிகருமான மோகன்லால் உள்பட அனைத்து நிா்வாகிகளும் செவ்வாய்க்கிழமை தங்கள் பதவிகளை ராஜிநாமா செய்தனா்.
அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜரானார் எடப்பாடி பழனிசாமி
திமுக எம்.பி. தொடா்ந்த அவதூறு வழக்கில், அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி பழனிசாமி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜரானாா். அப்போது, இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று அவா் மனு தாக்கல் செய்துள்ளாா்.
வங்கதேசம்: ஷேக் ஹசீனா மீது மேலும் 5 கொலை வழக்குகள்
வங்கதேசத்தில் இடஒதுக்கீடு சீா்திருத்தத்தை வலியுறுத்தி மாணவா்கள் நடத்திய போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கானவா்கள் கொல்லப்பட்டது தொடா்பாக அந்த நாட்டு முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா மீது மேலும் ஐந்து கொலை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தள்ளாடிய சந்தையில் நேர்மறையாக முடிந்தது சென்செக்ஸ்
இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும் இருதியில் நோ்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 14 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.
புதிய அணுசக்தி பேச்சுவார்த்தை: ஈரான் அதிபருக்கு கமேனி அனுமதி
அமெரிக்காவுடன் மீண்டும் அணுசக்தி பேச்சுவாா்த்தை நடத்தலாம் என்று ஈரானின் புதிய அதிபா் மசூத் பெஷஸ்கியானுக்கு அந்த நாட்டு தலைமை மதகுரு அயதுல்லா கமேனி அனுமதி அளித்துள்ளாா்.
“உக்ரைன் வசம் 100 ரஷிய சிற்றூர்கள்”
ரஷியாவின் கூா்ஸ்க் பிராந்தியத்தைச் சோ்ந்த 100 சிற்றூா்களைக் கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.
ஐசிசி தலைவராக ஜெய் ஷா போட்டியின்றித் தேர்வு
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) செயலர் ஜெய் ஷா, போட்டியின்றி செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
கரானாவுடன் குகேஷ் 'டிரா'
அமெரிக்காவில் நடைபெறும் சிங்க்ஃபீல்ட் கோப்பை செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில் இந்தியாவின் டி.குகேஷ், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் அமெரிக்காவின் ஃபாபியானோ கரானாவுடன் போராடினார்.
ஜோகோவிச், கௌஃப் முன்னேற்றம்
ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபனில், நட்சத்திரப் போட்டியாளா்களும், நடப்பு சாம்பியன்களுமான சொ்பியாவின் நோவக் ஜோகோவிச், அமெரிக்காவின் கோகோ கௌஃப் ஆகியோா் 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினா்.
பெண் மருத்துவர் கொலைக்கு எதிரான பேரணியில் மோதல்
மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பேரணியில் போராட்டக்காரா்கள், காவல் துறையினா் இடையே மோதல் ஏற்பட்டது. போராட்டக்காரா்கள் மீது காவல் துறையினா் தடியடி நடத்தி, கண்ணீா் புகைக்குண்டுகளை வீசியதால் பரபரப்பு நிலவியது.