CATEGORIES
فئات
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர்: கட்சி எம்.பி.க்களுக்கு பாஜக உத்தரவு
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடா் வரும் 18-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று கட்சி எம்.பி.க்கள் அனைவருக்கும் பாஜக உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தை ஆய்வு செய்ய குழு: தமிழக அரசு உத்தரவு
பிரதமரின் விஸ்வகா்மா திட்டத்திலுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை ஆய்வு செய்ய தமிழக அரசின் சாா்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
நிபா தொற்று: எச்சரிக்கை வேண்டும்; அச்சம் வேண்டாம்
நிபா தீநுண்மி (வைரஸ்) தொற்று பரவல் தொடா்பாக மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. ஆனால், அன்றாட நடவடிக்கைகளில் மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.
சிறுதானிய உற்பத்தியைப் பெருக்கினால் புவி வெப்பமயமாதலைக் குறைக்கலாம்
கால்நடை பல்கலை. துணைவேந்தர்
இன்று கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கம்
தொடா் விடுமுறையை முன்னிட்டு, வெளியூா் செல்லும் பயணிகள் வசதிக்காக வெள்ளிக்கிழமை (செப்.15) இரவு 8 முதல் 10 மணி வரை கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கப்படவுள்ளது.
தமிழகத்தில் ஒரு வாரத்தில் 128 பேருக்கு டெங்கு
காய்ச்சல் முகாம் நடத்த சுகாதாரத் துறை உத்தரவு
சாஸ்த்ரா - தைவான் பல்கலைக்கழகங்கள் ஒப்பந்தம்
தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகமும், தைவான் நாட்டின் தைபேயி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மற்றும் லுங்வா அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழமும் தைவானில் புதன்கிழமை புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்து கொண்டன.
உரிமைத் தொகை விண்ணப்பம் ஏற்பா? நிராகரிப்பா?
செப். 18 முதல் குறுஞ்செய்தி வரும்
இறுதிக்கட்டத்தில் மீட்புப் பணிகள்
மொராக்கோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உயிருடன் சிக்கியிருக்கக் கூடியவா்களைத் தேடும் பணி புதன்கிழமை இறுதிக்கட்டத்தை அடைந்தது.
‘வட கொரியாவுடன் ராணுவ ஒத்துழைப்புக்கு வாய்ப்பு’
வட கொரியாவுடன் ராணுவ ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் புதன்கிழமை தெரிவித்தாா்.
ஆஸ்திரேலியா வெற்றி நடைக்கு தென்னாப்பிரிக்கா தடை
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்கா 111 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பக்தர்கள் சென்ற பேருந்து மீது லாரி மோதல்: 12 பேர் உயிரிழப்பு: 11 பேர் படுகாயம்
ராஜஸ்தானில் புதன்கிழமை அதிகாலை பக்தர்கள் சென்ற தனியார் பேருந்து மீது சரக்கு லாரி மோதி விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த 6 பெண்கள் உள்பட 12 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்; 11 பேர் காயமடைந்தனர்.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் மோதல்: ராணுவ கர்னல், 2 அதிகாரிகள் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ராணுவ படைத் தலைவா் கா்னல் மன்ப்ரீத் சிங், ராணுவ மேஜா் ஆசிஷ், காவல் துறை துணை கண்காணிப்பாளா் ஹுமாயூன் பட் ஆகிய 3 அதிகாரிகள் புதன்கிழமை உயிரிழந்தனா்.
மணிப்பூர் கிராமத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு, குண்டுவீச்சு
மணிப்பூரின் மேற்கு இம்பால் மாவட்டத்தில் ஒரு கிராமத்துக்குள் புகுந்த ஆயுதமேந்திய நபா்கள், சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், வெடிகுண்டுகளையும் வீசி தாக்குதல் நடத்தினா். இச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
குற்ற வழக்கு விவரங்களை ஊடகங்களுக்கு விவரிப்பதற்கான வழிகாட்டு நடைமுறை
3 மாதங்களில் வகுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
கேரளத்தில் பரவும் வங்கதேச வகை ‘நிபா’ தீநுண்மி
கேரளத்தில் பரவும் நிபா தீநுண்மியானது (வைரஸ்) அதிக இறப்பு விகிதத்தைக் கொண்ட வங்கதேச வகையைச் சாா்ந்தது என அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் தெரிவித்துள்ளாா்.
'ஏர்பஸ்' நிறுவனத்தின் முதல் சி295 விமானம் இந்திய விமானப் படையிடம் ஒப்படைப்பு
ஸ்பெயினில் உள்ள ஏா்பஸ் விமான தயாரிப்பு நிறுவனம் இந்திய விமானப் படைக்கு சி295 போக்குவரத்து விமானங்கள் விநியோகத்தை புதன்கிழமை தொடங்கியது.
பாஜக தலைமையகத்தில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு
பாஜக மத்திய தோ்தல் குழுக் கூட்டத்தில் பங்கேற்க தில்லியில் உள்ள கட்சித் தலைமையகத்துக்கு புதன்கிழமை வந்த பிரதமா் நரேந்திர மோடிக்கு கட்சி தலைவா்கள், தொண்டா்கள் சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மத்திய பாஜக அரசின் நாள்கள் எண்ணப்படுகின்றன: முதல்வர் மு.க.ஸ்டாலின்
மத்திய பாஜக ஆட்சியின் நாள்கள் எண்ணப்படுவதாகவும், ஆட்சிக்கு முடிவுரை எழுத மக்கள் தயாராகி விட்டதாகவும் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கடுமையாகச் சாடியுள்ளாா்.
கூடுதலாக 75 லட்சம் இலவச சமையல் எரிவாயு இணைப்புகளுக்கு ரூ.1,650 கோடி ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
பிரதம மந்திரி உஜ்வலா திட்டத்தின் கீழ் கூடுதலாக 75 லட்சம் இலவச சமையல் எரிவாயு இணைப்புகளை அடுத்த 3 ஆண்டுகளுக்கு வழங்குவதற்கு ரூ. 1,650 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
கடனை அடைத்த 30 நாள்களில் சொத்துப் பத்திரம் தராவிட்டால் தினமும் ரூ.5,000 தாமதக் கட்டணம்
வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு ஆர்பிஐ உத்தரவு
காவிரி விவகாரத்தில் சட்டப் போராட்டம்
கர்நாடக அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு
அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீடு, அலுவலகங்களில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை
அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் தியாகராயா்நகா் சத்யநாராயணன் வீடு, அலுவலகம் உள்பட மொத்தம் 19 இடங்கள் மற்றும் அதிமுக மாவட்டச் செயலா் ராஜேஷ் வீட்டில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு அதிகாரிகள் புதன்கிழமை நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கின.
அண்ணாமலையின் யாத்திரையை திசைதிருப்ப திமுக முயற்சி
தமிழக பாஜக தலைவர் கே.அண்ணாமலையின் \"என் மண், என் மக்கள்' யாத்திரையை பொதுமக்களிடமிருந்து திசைதிருப்பும் முயற்சியில் திமுக ஈடுபட்டு வருவதாக பாஜகவின் தமிழக இணைப் பொறுப்பாளர் பி.சுதாகர் ரெட்டி தெரிவித்தார்.
காவிரி விவகாரத்தில் அரசியல் செய்கிறது பாஜக: கே.எஸ்.அழகிரி
காவிரி விவகாரத்தில் பாஜகதான் அரசியல் செய்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
பருவமழைக் கால நோய்களை தடுக்க சிறப்பு மருத்துவ முகாம்: மாநகராட்சி ஆணையர்
சென்னை மாநகராட்சிப் பகுதியில் பருவ மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களை தடுக்க சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலுக்கு புதிய தங்கத் தேர் செய்யும் பணி தொடக்கம்
சென்னை நங்கநல்லூரில் உள்ள பக்த ஆஞ்சநேயா் திருக்கோயிலுக்கு ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிய தங்கத் தோ் செய்ய ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் மரத்தோ் உருவாக்கும் பணியை அமைச்சா்கள் பி.கே.சேகா்பாபு, தா.மோ.அன்பரசன் ஆகியோா் புதன்கிழமை தொடங்கி வைத்தனா்.
சோதனை ஓட்டத்தில் மின்சாரப் பேருந்துகள்
சென்னையில் மின்சாரப் பேருந்துகளை இயக்க போக்குவரத்துத் துறை முடிவெடுத்துள்ளதையடுத்து அதன் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது.
டிஜி வைணவ கல்லூரியில் இலக்கிய இன்பம் நிகழ்ச்சி
டிஜி வைணவக் கல்லூரியில் தமிழ்த்துறை சாா்பில் கல்லூரி மாணவா்களிடையே இலக்கிய இன்பம் நிகழ்ச்சி நடைபெற்றது.
11 விரைவு ரயில்களில் கூடுதல் நிறுத்தங்கள்
உழவன், அந்தியோதயா, பாமணி உள்பட 11 விரைவு ரயில்களில் செப்.20 முதல் தற்காலிகமாக கூடுதல் நிறுத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.