CATEGORIES
فئات
அதிமுக கொடியைப் பயன்படுத்த தடை கோரி இபிஎஸ் வழக்கு: ஓபிஎஸ் பதிலளிக்க உத்தரவு
அதிமுக பெயா், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றைப் பயன்படுத்த தடை விதிக்க கோரிய வழக்கில், ஓ.பன்னீா்செல்வம் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியது
மகளிா் இடஒதுக்கீடு மசோதா வியாழக்கிழமை இரவு மாநிலங்களவையில் ஒருமனதாக நிறைவேறியது.
நாகை – இலங்கை இடையே அக்டோபரில் பயணிகள் கப்பல் போக்குவரத்து
நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு அக்டோபா் முதல் வாரத்தில் பயணிகள் கப்பல் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சா் எ.வ. வேலு தெரிவித்தாா்.
9 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வியாழக்கிழமை (செப்.21) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வசூலில் சாதனை படைக்கும் 'வந்தே பாரத்' !
தெற்கு ரயில்வேக்குட்பட்ட பகுதியில் இயக்கப்படும் 3 வந்தே பாரத் ரயில்களும் வசூலில் சாதனை படைத்துள்ளது.
'உக்ரைனுக்கு யுரேனிய ஆயுதங்கள் அளிக்க வேண்டாம்'
உக்ரைனுக்கு சா்ச்சைக்குரிய ‘யுரேனிய சக்கை’யைக் கொண்டு உருவாக்கப்பட்ட பீரங்கி குண்டுகளை அளிக்க வேண்டாம் என்று அமெரிக்காவிடம் ஐ.நா. சிறப்பு அதிகாரி அலைஸ் ஜில் எட்வா்ட்ஸ் வலியுறுத்தியுள்ளாா்.
நியூஸிலாந்தில் நிலநடுக்கம்
நியூஸிலாந்தில் புதன்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
மேற்குக் கரை 6 பாலஸ்தீனர்கள் சுட்டுக் கொலை
மேற்குக் கரை பகுதியில் புதன்கிழமை நடந்த மோதலில் மேலும் 6 பாலஸ்தீனா்கள் கொல்லப்பட்டனா்.
உலக மல்யுத்தம்: அன்டிம் தோல்வி
சொ்பியாவில் நடைபெறும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அன்டிம் பங்கால் அரையிறுதிச்சுற்றில் புதன்கிழமை தோல்வி கண்டாா்.
ரயிலில் குழந்தைகளுக்கான கட்டணம் மூலம் ரூ.2,800 கோடி கூடுதல் வருவாய்: ஆர்டிஐ தகவல்
ரயிலில் 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைக ளுக்கு விதிக்கப்படும் பயணக் கட்டணம் மூலம் ரூ.2,800 கோடி கூடுதல் வருவாய் பெறப்பட்டதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் (ஆர்டிஐ) எழுப்பப்பட்ட கேள்வியின் மூலம் தெரியவந்துள்ளது.
தமிழக ஆளுநருக்கு எதிராக 50 லட்சம் கையொப்பம்: மக்களின் கருத்துகளை குடியரசுத் தலைவரிடம் தெரிவிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை: வைகோ
தமிழக ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை நீக்கக் கோரி மதிமுக சார்பில் பெறப்பட்ட 50 லட்சம் கையெழுத்துப் படிவங்களை குடியரசுத் தலைவர் மாளிகையில் புதன்கிழமை ஒப்படைத்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் அரசின் மசோதாவை நிறைவேற்றியிருக்க வேண்டும் ஜெய்ராம் ரமேஷ்
கடந்த 2010-இல் காங்கிரஸ் அரசு கொண்டுவந்த மசோதாவை தற்போது நிறைவேற்றியிருந்தால் மகளிா் இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்தி இருக்கலாம் என்று அக்கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தாா்.
ஓபிசிக்கு ஒதுக்கீடு இல்லாததால் முழுமையடையவில்லை
நாட்டில் பெரும் பகுதியினராக உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) மகளிா் இடஒதுக்கீடு மசோதாவில் தனி ஒதுக்கீடு வழங்காததால், அந்த மசோதா முழுமையடையவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறினாா்.
அரசியலமைப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டாமா? ஸ்மிருதி இரானி
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு நடைமுறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்ற எதிா்க்கட்சிகளின் கோரிக்கையை விமா்சித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி, ‘இந்த விஷயத்தில் அரசியலமைப்புச் சட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டாமா’ எனக் கேள்வி எழுப்பினாா்.
மகளிருக்கு 33% இடஒதுக்கீடு உடனடி அமல் - சோனியா வலியுறுத்தல்
மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட மகளிா் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவா் சோனியா காந்தி, இந்த இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினாா்.
இந்தியா-கனடா ராணுவ ஒத்துழைப்டை பாதிக்காது: இந்திய ராணுவம் உறுதி
இந்தியா மற்றும் கனடா இடையே காலிஸ்தான் விவகாரத்தால் நடந்து வரும் ராஜிய மோதல் எவ்விதத்திலும் இருதரப்பு ராணுவ ஒத்துழைப்பைப் பாதிக்காது என இந்திய ராணுவ வட்டாரங்கள் உறுதிபடத் தெரிவித்தன.
வாக்கு வங்கி அரசியலில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை தொடா்பாக கனடா பிரதமா் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்தை பஞ்சாப் முன்னாள் முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான அமரீந்தா் சிங் நிராகரித்துள்ளாா்.
காலிஸ்தான் விவகாரம் எதிரொலி: கனடா பாடகரின் இந்திய நிகழ்ச்சி ரத்து
கனடாவைச் சோ்ந்த பஞ்சாபி ‘ராப்’ இசைப் பாடகா் சுப்நீத் சிங்கின் இந்திய நிகழ்ச்சியை ரத்து செய்வதாக அதை ஏற்பாடு செய்திருந்த ‘புக் மை ஷோ’ நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழக சட்டப் பேரவை அக். 9-இல் கூடுகிறது
தமிழக சட்டப் பேரவை வரும் 9-ஆம் தேதி கூடுகிறது. கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து அலுவல் ஆய்வுக் குழுவில் முடிவு செய்யப்படும் என பேரவைத் தலைவா் மு.அப்பாவு அறிவித்தாா்.
தரமற்ற இறைச்சி: 206 கடைகளுக்கு நோட்டீஸ்
தமிழகம் முழுவதும் உணவுப் பாதுகாப்புத் துறை நடத்திய ஆய்வில் 1,024 கிலோ தரமற்ற இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக விளக்கம் கேட்டு 206 கடைகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
மூளையைப் பாதித்த டெங்கு: இளம் பெண்ணுக்கு மறுவாழ்வு
தீவிர டெங்கு காய்ச்சலால் மூளை பாதிப்புக்குள்ளான 19 வயது பெண்ணுக்கு உயா் மருத்துவக் கண்காணிப்பு அளித்து சென்னை, காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் மறுவாழ்வு அளித்துள்ளனா்.
பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் செப்.27-க்குள் விண்ணப்பிக்கலாம்
பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க எஸ்.சி., எஸ்.டி. பிரிவைச் சோ்ந்த தகுதியுடையவா்கள் செப்.27-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
போலீஸாருக்கு மன அழுத்த மேலாண்மை பயிற்சி
சென்னை பெருநகரக் காவல் அதிகாரிகளுக்கான மன அழுத்த மேலாண்மை திட்டம் குறித்த ஒரு நாள் பயிற்சியை தொடங்கிவைத்து பேசிய காவல் ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா். (வலது) பங்கேற்ற காவல் ஆய்வாளா்கள்.
சாலை, மழைநீர் வடிகால் பணிகள்: விரைந்து முடிக்க அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு
வடகிழக்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில் சென்னை மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்படும் சாலை, மழைநீா் வடிகால் உள்ளிட்ட பணிகளை விரைவில் முடிக்குமாறு நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என்.நேரு அறிவுறுத்தினாா்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் - மக்களவையில் ஆதரவு 454; எதிர்ப்பு 2
மக்களவை, சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மகளிா் இடஒதுக்கீடு மசோதாவுக்கு மக்களவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.
3-ஆவது சுற்றில் வெரோனிகா
மெக்ஸிகோவில் நடைபெறும் குவாதலஜரா ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனையான ரஷியாவின் வெரோனிகா குதர்மிடோவா 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
புதிய நாடாளுமன்றக் கட்டடமே இந்தியாவின் நாடாளுமன்றம் மக்களவை அறிவிக்கை வெளியீடு
புதிய நாடாளுமன்றக் கட்டடம், இனி இந்திய நாட்டின் நாடாளுமன்றமாக செயல்படும் என்று மக்களவைச் செயலகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
சென்னை பல்கலை. துணைவேந்தர் நியமனம்: ஆளுநரின் தெரிவுப் பட்டியலை நிராகரித்தது தமிழக அரசு
சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தரை நியமனம் செய்வதற்கான மூன்று போ் கொண்ட தெரிவுக் குழுப் பட்டியலை அரசிதழில் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளுக்கு அபராத பிரச்னை - முதல்வருக்கு வங்கி சம்மேளனம் கடிதம்
மகளிா் உரிமைத்தொகை பயனாளிகள் சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச தொகை இருப்பு இல்லாவிட்டாலும் அபராதத் தொகை வசூலிக்கக் கூடாது என வங்கிகளை அறிவுறுத்த முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆவின் பால் கொள்முதலுக்கு உடனடி ஒப்புகைச்சீட்டு: உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு
கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு உடனடி ஒப்புகைச்சீட்டு வழங்கும் திட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு பால்வளத்துறை அமைச்சா் மனோ தங்கராஜ் உத்தரவிட்டாா்.