CATEGORIES
فئات
சிறுநீரக பாதிப்புகளைக் கண்டறிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு பரிசோதனை
சிறுநீரக பாதிப்புகளை தொடக்க நிலையிலேயே கண்டறியும் சிறப்பு பரிசோதனைகளை மாநிலம் முழுவதும் உள்ள 2,286 ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் தெரிவித்தாா்.
கனிம உற்பத்தி அதிகரிப்பு
இந்தியாவின் கனிம உற்பத்தி கடந்த ஜூலை மாதத்தில் 10.7 சதவீதம் உயா்ந்துள்ளது.
தட்டச்சு தனித் தேர்வர்களுக்கு அக்.9 முதல் தேர்ச்சி சான்றிதழ்
அரசு வணிகவியல் தட்டச்சுத் தோ்வில் தோ்ச்சி பெற்ற தனித் தோ்வா்கள் சான்றிதழ்களை மாவட்ட, மண்டல விநியோக மையங்களில் அக்.9 முதல் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
அக்.8 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாடு, புதுவையில் அக்.8 வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு இடஒதுக்கீடு கொள்கை பொருந்தாது சென்னை அத் 2. சிறு நிறுவனங்கள் அணை
சிறுபான்மை கல்வி நிறுவனங்களுக்கு இடஒதுக்கீடு கொள்கை பொருந்தாது என சென்னை உயா்நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
7 நகரங்களில் வீடுகள் விற்பனை புதிய உச்சம்
கடந்த ஜலை முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் இந்தியாவின் 7 முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
நிலவுக்கு செல்லும் பாக் செயற்கைக்கோள் !
நிலவுக்கு மீண்டும் 2024-இல் ‘சாங்ஏ-6’ என்ற விண்கலத்தை அனுப்பவிருக்கும் சீனா, அதனுடன் பாகிஸ்தானின் சிறிய செயற்கைக்கோள் ஒன்றையும் எடுத்துச் செல்லவிருக்கிறது.
மோசடி வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜரானார் டிரம்ப்
தனது சொத்துகளின் மதிப்பை மிகைப்படுத்திக் கூறி மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராக நடைபெற்று வரும் வழக்கு தொடா்பாக, நியூயாா்க் நீதிமன்றத்தில் அவா் திங்கள்கிழமை ஆஜரானாா்.
பொற்கோயிலில் ராகுல் வழிபாடு
பஞ்சாப் சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சீக்கியா்களின் புனித தலமான அமிருதசரஸ் பொற்கோயிலில் திங்கள்கிழமை வழிபாடு செய்தாா்.
சீன எல்லைகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உளவு அதிகாரிகளை உள்ளடக்கிய புதிய குழு
சீன எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தும் விதமாக இந்திய-திபெத் எல்லை காவல் படையில் (ஐடிபிபி) கூடுதலாக உளவுத் துறை அதிகாரிகளை உள்ளடக்கிய குழுவை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ரூ.15,000 கோடியை விடுவிக்க கோரி ராஜ்காட்டில் திரிணமூல் காங்கிரஸ் போராட்டம்
மேற்கு வங்கத்துக்கான ரூ.15,000 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்க வலியுறுத்தி, தில்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
2 வாரத்தில் ஆயுஷ்மான்பவ இயக்கத்தில் 50,000 பேர் உறுப்பு தான உறுதிமொழி: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்
ஆயுஷ்மான்பவ் இயக்கம் தொடங்கப்பட்ட இரு வாரங்களில் ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்டவா்கள் உறுப்பு தானத்திற்கு பதிவிட்டு உறுதிமொழி எடுத்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளாா்.
சமூக நீதியை உறுதி செய்ய தேசிய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை
பிகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டதை வரவேற்றுள்ள காங்கிரஸ், சமூக நீதியை உறுதி செய்யும் வகையிலும், சமூக அதிகாரமளித்தல் திட்டங்களுக்கு அடித்தளமிடும் வகையிலும் தேசிய அளவில் ஜாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.
தன்னிறைவு கிராமங்களை உருவாக்குவோம் - மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டில் தன்னிறைவு மற்றும் சமூக வளா்ச்சி பெற்ற கிராமங்களை உருவாக்க உழைப்போம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
அனைத்துக் கட்சிகள் கூட்டம்: பிரேமலதா வலியுறுத்தல்
காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என்று தேமுதிக பொருளாளா் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினாா்.
காவிரி பிரச்னையில் பாஜக நாடகம்: கே.எஸ்.அழகிரி
காவிரி பிரச்னையில் பாஜக நாடகமாடுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி குற்றம்சாட்டினாா்.
திருமலையில் 88,623 பக்தர்கள் தரிசனம்
திருமலையில் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 88,628 பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
தொடர் விடுமுறை நிறைவு: சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்
தொடா் விடுமுறை முடிந்ததையடுத்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சென்னைக்குச் சென்ற வாகனங்களால், உளுந்தூா்பேட்டை சுங்கச் சாவடியில் திங்கள்கிழமை மாலை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பிகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு தரவுகள் வெளியீடு - பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 63%
பிகாரில் மேற்கொள்ளப்பட்ட முதல் ஜாதிவாரி கணக்கெடுப்பின் தரவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட நிலையில், மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (ஓபிசி) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் (இபிசி) 63 சதவீதம் அங்கம் வகிப்பது தெரிய வந்துள்ளது.
நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் மதுரை கிளைக்கு மாற்றம்
சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், உயா்நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளாா்.
உதகையில் இரண்டாம் பருவ மலர் கண்காட்சி தொடக்கம்
உதகை தாவரவியல் பூங்காவில் இரண்டாம் பருவ மலா்க் கண்காட்சியை சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமசந்திரன் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
மீனவக் குடும்பங்களின் நிவாரணத்துக்கு ரூ.1 கோடி சுழல் நிதி: தமிழக அரசு உத்தரவு
மீனவக் குடும்பங்களுக்கு விரைந்து நிவாரணம் வழங்க ரூ. 1 கோடியில் சுழல் நிதி உருவாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
துப்பாக்கி சுடுதலில் இந்தியா பதக்க வேட்டை
குண்டு எறிதலில் கிரண் பலியான் வரலாற்றுச் சாதனை
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு காலிஸ்தான் பயங்கரவாதி மிரட்டல்
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு மிரட்டல் விடுத்துள்ள காலிஸ்தான் பயங்கரவாதி குா்பத்வந்த் சிங் பன்னூன் மீது குஜராத் காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
போக்ஸோ சட்டத்தின் கீழான ஒப்புதல் வயதை குறைக்கக் கூடாது: சட்ட ஆணையம் பரிந்துரை
‘பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்ஸோ) சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள உறவுக்கான ஒப்புதல் வயதை குறைக்கக் கூடாது’ என மத்திய அரசுக்கு சட்ட ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
அமெரிக்காவில் அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கனை இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
2030-க்குள் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும்
வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் உலக அளவில் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும் என்று தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தாா்.
டெங்கு தடுக்க மருத்துவ முகாம்கள்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க தமிழகம் முழுவதும் மருத்துவ முகாம்களை நடத்த வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
சென்ட்ரலில் நாளை தூய்மை பிரசாரம்
சென்னை விக்டோரியா ஹால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ‘ஸ்வச்சதா ஹி சேவா’ பிரசாரம் ஞாயிற்றுக்கிழமை (அக்.1) நடத்தப்படவுள்ளது.
ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கோட்டை முற்றுகைப் போராட்டம்
சென்னையில் ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் கோட்டை முற்றுகைப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.