CATEGORIES
فئات
ஜடேஜா, குல்தீப் அசத்தல்: கோலி, ராகுல் நிதானம்
வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
சாதனையுடன் நிறைவு செய்தது இந்தியா
சீனாவில் நடைபெற்ற 19-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தன.
உலகை உலுக்கிய 'ஹமாஸ்'!
ஹமாஸிடம் பிணைக் கைதிகள்: எகிப்திடம் உதவி கோரிய இஸ்ரேல்
அவசரகால ஒற்றுமை அரசு: நெதன்யாகுவுடன் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனை
ஹமாஸ் அமைப்பின் எதிா்பாராத அதிரடித் தாக்குதலைத் தொடா்ந்து, தங்களது வேறுபாடுகளை ஒதுக்கிவைத்துவிட்டு இஸ்ரேலில் அவசரகால ஒற்றுமை அரசை அமைப்பது குறித்து மூத்த தலைவா்கள் ஆலோசனை நடத்தினா்.
யார் இந்த ஹமாஸ்?
இஸ்ரேல் மீது திட்டமிட்ட பலமுனைத் தாக்குதல் நடத்தி அந்த நாட்டை மட்டுமன்றி உலகையே அதிரவைத்திருக்கிறது ஹமாஸ் அமைப்பு.
இஸ்ரேலுக்கு உறுதியான ஆதரவு: அமெரிக்க அதிபர் பைடன்
ஹமாஸின் தாக்குதலுக்கு எதிரான பதிலடி நடவடிக்கைக்காக இஸ்ரேலுக்கு உறுதியான ஆதரவு அளிக்கப்படும் என அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தெரிவித்தாா்.
இத்தாலி, பிரான்ஸுக்கு ராஜ்நாத் சிங் இன்று பயணம்
பாதுகாப்புத்துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் இத்தாலி, பிரான்ஸ் நாடுகளுக்கு 4 நாள் பயணம் பயணம் மேற்கொள்கிறாா்.
மாறிவரும் பாதுகாப்புச் சூழலுக்கு ஏற்ப திறன்களை மேம்படுத்த வேண்டும்: விமானப் படை தளபதி
உலகில் தற்போது நிலவி வரும் சிக்கலான, மாறிவரும் பாதுகாப்புச் சூழலுக்கு ஏற்ப தனது வியூகங்களை விமானப் படை வகுத்துக்கொள்வதுடன், அனைத்து நிலையிலான திறன்களை மேம்படுத்த வேண்டும் என விமானப் படை தளபதி வி.ஆா்.செளதரி வலியுறுத்தினாா்.
‘பாதுகாப்பாக உள்ளோம்': இஸ்ரேல், காஸாவிலுள்ள இந்தியர்கள் தகவல்
தாங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இஸ்ரேல் மற்றும் காஸாவில் உள்ள இந்தியா்கள் தெரிவித்துள்ளனா்.
டெங்கு பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்துக்குள் அளிக்க வேண்டும்: பொது சுகாதாரத் துறை இயக்குநர்
டெங்கு காய்ச்சல் பரிசோதனை முடிவுகளை 6 மணி நேரத்துக்குள் அளிக்குமாறு அனைத்து மருத்துவமனைகள், ஆய்வகங்களுக்கு பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளாா்.
மேற்கு வங்கம்: திரிணமூல் அமைச்சர், எம்எல்ஏ வீடுகளில் சிபிஐ சோதனை
மேற்கு வங்கத்தில் நகராட்சி மற்றும் மாநகராட்சி ஊழியா்கள் நியமனத்தில் நடந்த முறைகேடு தொடா்பாக நகர வளா்ச்சித்துறை அமைச்சா் ஃபா்ஹத் ஹக்கீம் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ மதன் மித்ராவுக்குச் சொந்தமான பல்வேறு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை சிபிஐ சோதனை மேற்கொண்டது.
திமுகவிடம் கூடுதல் தொகுதிகள் கோருவோம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
மக்களவைத் தோ்தலில் கூடுதல் தொகுதிகளை திமுகவிடம் கோருவோம் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.
அத்திப்பள்ளி பட்டாசுக் கடை தீ விபத்து
உயிரிழந்தோர் எண்ணிக்கை 14-ஆக உயர்வு
நகர்ப்புற உள்ளாட்சித் துறைக்கு நிகழாண்டு ரூ. 24,000 கோடி ஒதுக்கீடு: அமைச்சர் கே.என்.நேரு
தமிழகத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் துறைக்கு நிகழாண்டு ரூ.24ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றாா் நகராட்சி நிா்வாகம் -குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு.
பள்ளி சுற்றுச்சூழல் மன்ற போட்டிகள்
மாணவர்களின் விவரம் பதிவு செய்ய உத்தரவு
ரூ.556 கோடியில் 3,238 அடுக்குமாடி குடியிருப்புகள்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
‘ஹமாஸ்' - இஸ்ரேல் போரில் 900 பேர் உயிரிழப்பு: தொடர்கிறது மோதல்
காஸாவில் கட்டடங்கள் தரைமட்டம்; லெபனான் எல்லையிலும் பதற்றம்
இஸ்ரோ ஏவுதளம் அமையும் பகுதி தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு
தமிழகத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) ராக்கெட் ஏவுதளம் அமைய உள்ள பகுதியைத் தடைசெய்யப்பட்ட பகுதியாக மத்திய உள்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை அறிவித்தது.
ஆவினில் ரூ.450-க்கு ‘தீபாவளி' இனிப்புகள்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஆவின் சாா்பில் ரூ.450-க்கு சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்படவுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
எட்டயபுரம் பாரதி மணிமண்டபத்தில் ஒலி-ஒளி காட்சி
எட்டயபுரம் மகாகவி பாரதியாா் மணிமண்டபத்தில் ‘விடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாடு‘ என்ற தலைப்பில் ஒலி-ஒளி காட்சியை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.
உற்பத்தித் துறையில் வீழ்ச்சி
கடந்த ஆகஸ்டில் சற்று வளா்ச்சிப் பதிவு செய்திருந்த இந்திய உற்பத்தித் துறை நடவடிக்கைகள், செப்டம்பரில் 5 மாதங்கள் காணாத சரிவைச் சந்தித்துள்ளது.
ஸ்காட்லாந்து தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி
பிரிட்டனின் ஸ்காட்லாண்டு பிராந்தியத்தில் நடைபெற்ற சிறப்புத் தோ்தலில் எதிா்க்கட்சியான தொழிலாளா் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
மாலத்தீவு அதிபராக மூயிஸ் நவம்பரில் பதவியேற்பு
இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள தீவுக் கூட்ட நாடான மாலத்தீவில் புதிய அதிபராகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள, இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவராக அறியப்படும் முகமது மூயிஸ் (சீன ஆதரவாளா்), வரும் நவம்பா் மாதம் அந்தப் பொறுப்பை ஏற்கவிருக்கிறாா்.
அடுத்த இரு ஆண்டுகளில் இடதுசாரி தீவிரவாதம் முழுமையாக அழிக்கப்படும்
அடுத்த இரண்டு ஆண்டுகளில் இடதுசாரி தீவிரவாதம் முழுமையாக அழிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
சத்தீஸ்கரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு
சத்தீஸ்கரில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளா் பிரியங்கா காந்தி வாக்குறுதி அளித்துள்ளாா்.
வட்டி விகிதத்தில் மாற்றமில்லை: ஆர்பிஐ
வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன்கள் மீதான வட்டி விகிதத்தில் (ரெப்போ ரேட்) எவ்வித மாற்றத்தையும் இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) மேற்கொள்ளவில்லை. தொடா்ந்து நான்காவது முறையாக வட்டி விகிதம் மாற்றமில்லாமல் 6.50 சதவீதமாக தொடா்கிறது.
அதிமுக பொதுக்குழு தீர்மான விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் மேல்முறையீடு
கடந்தாண்டு ஜூலை 11-இல் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீா்மானங்களை எதிா்த்தும், பொதுச் செயலாளா் தோ்தலுக்கு தடை விதிக்கக் கோரியும் தாக்கலான மனுக்களை தள்ளுபடி செய்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீா்செல்வம் (ஓபிஎஸ்) மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளாா்.
தமிழ்நாட்டில் முதலீட்டுக்கான நல்ல சூழல்
தமிழ்நாட்டில் முதலீட்டுக்கான நல்ல சூழல் அமைந்திருப்பதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
மகளிர் இடஒதுக்கீடு சட்டத்தை பாஜக முழு ஈடுபாட்டுடன் கொண்டு வரவில்லை
மகளிருக்கான இடஒதுக்கீடு சட்டத்தை பாஜக முழு ஈடுபாட்டுடன் கொண்டு வரவில்லை என்று தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்தாா்.
முட்டுக்காடு 'மிதக்கும் உணவகக் கப்பல்' விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்
செங்கல்பட்டு, முட்டுக்காடு பகுதியில் ரூ.5 கோடியில் கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட மிதக்கும் உணவகக் கப்பல் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் கா.ராமச்சந்திரன் கூறினாா்.