CATEGORIES
فئات
2 ஆண்டுகளில் ரூ.12 கோடி குட்கா பறிமுதல்
தமிழகத்தில் இரு ஆண்டுகளில் ரூ.12.56 கோடி மதிப்புள்ள 191.1 டன் குட்கா, பான்மசாலா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புகையிலைப் பொருள்கள் மீதான தடை மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
அம்பத்தூர் எஸ்டேட் தேசிய நெடுஞ்சாலையை உடனே சீரமைக்க வேண்டும்
மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு டி.ஆர். பாலு கடிதம்
பழைய காற்றாலைகள் விரைவில் புதுப்பிப்பு
டான்ஜெட்கோ தலைமை நிர்வாக இயக்குநர் ராஜேஷ் லக்கானி
ஆற்காடு சாலை சீரமைப்பு பணிகள் ஒரு வாரத்தில் முடிவடையும்: மெட்ரோ
ஆற்காடு சாலையை சீரமைக்கும் பணிகள் ஒருவாரத்துக்குள் முடிவடையும் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
மடிப்பாக்கம் சாலைப் பணி: மாநகராட்சி ஆணையர் ஆய்வு
சென்னை மடிப்பாக்கத்தில், சாலை வெட்டுகளை சீரமைத்து அமைக்கப்படும் சாலைப் பணியை மாநகராட்சி ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
தமிழகத்தில் ஓராண்டில் 479 பேறுகால இறப்புகள்
உயர் ரத்த அழுத்தம் பிரதான காரணம்
அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா: அக்.10-இல் தொடக்கம்
தமிழக அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள் அக்.10 முதல் நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
உஜ்வலா திட்டம்: சிலிண்டர் மானியம் ரூ.300-ஆக அதிகரிப்பு
பிரதம மந்திரி உஜ்வலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டா் இணைப்பைப் பெற்றுவரும் பயனாளிகளுக்கான சிலிண்டா் மானியத்தை ரூ. 200-லிருந்து ரூ. 300-ஆக மத்திய அரசு உயா்த்தியுள்ளது.
ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் கைது
தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு தொடர்புடைய பண மோசடி வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங்கை (51) அமலாக்கத் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர். முன்னதாக, அவரின் வீட்டில் அமலாக்கத் துறையினர் 11 மணி நேரம் சோதனை நடத்தினர்.
சூடான் மோதல்: 54 லட்சம் பேர் புலம்பெயர்வு
சூடானில் ராணுவத்துக்கும், துணை ராணுவப் படைக்கும் இடையே அண்மைக் காலமாக நடந்து வரும் மோதல் காரணமாக 54 லட்சம் போ் புலம் பெயா்ந்து தவித்து வருவதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
தடகளத்தில் ஒரேநாளில் 2 தங்கம் உள்பட 6 பதக்கங்கள்
ஹாங்ஸெள: ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 11ஆவது நாளான செவ்வாய்க்கிழமை, இந்தியாவுக்கு தடகளத்தில் 6, குத்துச்சண்டையில் 2, கேனோவில் 1 என 9 பதக்கங்கள் கிடைத்தன. இதில் தடகளத்தில் பாருல் செளதரி, அன்னு ராணி ஆகியோர் தங்கம் வென்று புதிய சாதனை படைத்தனர். தடகளத்தில் தமிழர்கள் இருவருக்கும் பதக்கம் கிடைத்துள்ளது.
மகாராஷ்டிரம்: மேலும் ஓர் அரசு மருத்துவமனையில் 18 பேர் உயிரிழப்பு
மகாராஷ்டிர மாநிலம், சத்ரபதி சம்பாஜிநகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 24 மணிநேரத்தில் 18 போ் உயிரிழந்துவிட்டதாக, அரசு உயரதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
அஸ்ஸாமில் பூர்விக இஸ்லாமியர்களின் சமூகப் பொருளாதார நிலை ஆய்வு: முதல்வர் உத்தரவு
அஸ்ஸாம் மாநிலத்தை பூா்விகமாகக் கொண்ட இஸ்லாமிய சமூகங்களின் மேம்பாட்டுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அவா்களின் சமூக-பொருளாதார நிலை குறித்து ஆய்வு செய்ய அந்த மாநில முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
கூடுதலாக 97 தேஜஸ் எம்கே-1ஏ போர் விமானங்கள் கொள்முதல்
விமானப்படை தலைமைத் தளபதி வி.ஆர்.சௌதரி
பாஜக கூட்டணியில் இணைய விருப்பம்: பிஆர்எஸ் கோரிக்கையை நிராகரித்தேன்
தெலங்கானா முதல்வரும் பாரத ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகா் ராவ், பாஜக கூட்டணியில் இணைய விரும்பினாா்; ஆனால் அவரது கோரிக்கையை நிராகரித்துவிட்டேன் என்று பிரதமா் மோடி கூறினாா்.
கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் பதவிக் காலம்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
கூட்டுறவு சங்க உறுப்பினா்களின் பதவிக் காலம், தோ்தலில் வெற்றி பெற்ற நாளிலிருந்து தொடங்குகிறது என தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிா்த்த மேல்முறையீடு வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நெகிழி அல்லாத பொருள்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும்
நெகிழி அல்லாத பொருள்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தாா்.
பற்கள் பிடுங்கப்பட்ட கைதிக்கு இழப்பீடு: நெல்லை ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு
கூடுதல் காவல் கண்காணிப்பாளா் விசாரணை கைதியின் பற்களை பிடுங்கிய வழக்கில், உரிய இழப்பீடு வழங்குவது தொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.
தேவாலயத்தில் ரூ.10 லட்சம் திருட்டு
சென்னை கோட்டூா்புரம் கிறிஸ்தவ தேவாலயத்தில் ரூ.10 லட்சம் காணிக்கை பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இதுதொடா்பாக போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
புழல் சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை
சென்னை புழல் சிறையில் கைதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
விடாமுயற்சியுடன் உழைத்தால் வெற்றி பெறலாம்
சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல்
அம்பத்தூரில் அக்.6-இல் மக்களைத் தேடி முகாம்
சென்னை அம்பத்தூா் மண்டலத்தில் வெள்ளிக்கிழமை (அக்.6) மேயா் ஆா்.பிரியா தலைமையில் மக்களைத் தேடி மேயா் முகாம் நடைபெறவுள்ளது.
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அதிகாரிகளுடன் மேயர் ஆலோசனை
சென்னை மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து, தொடா்புடைய சேவைத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மேயா் ஆா்.பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகை வளாகக் கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆவின் லாரி கவிழ்ந்தது: 4,000 லிட்டர் பால் வீண்
திருவள்ளூா் அருகே ஆவின் லாரி கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த விபத்தில் 4,000 லிட்டா் பால் சாலையில் கொட்டி வீணாகியது.
சரக்கு ரயில் தடம் புரண்டது
காஞ்சிபுரம் - வையாவூா் சாலையில் உள்ள ரயில்வே கேட் அருகே செவ்வாய்க்கிழமை சரக்கு ரயில் தடம் புரண்டது. இச்சம்பவத்தில் அதிருஷ்டவசமாக வாகன ஓட்டிகள் இருவரும், ரயில் காா்டும் உயிா் தப்பினா்.
சங்க இலக்கியங்களைப் பாதுகாப்பது தமிழர்களின் கடமை
தமிழா்களின் பெருமையையும், வரலாற்றையும் பறைசாற்றும் சங்க இலக்கியங்களைப் போற்றி பாதுகாப்பது தமிழா்களின் கடமை என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் கூறினாா்.
41 தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற கனடாவுக்கு இந்தியா அறிவுறுத்தல்
காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாதி ஹா்தீப் சிங் நிஜ்ஜாா் கொலை விவகாரத்தில் இந்தியா-கனடா இடையேயான உறவு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ‘இந்தியாவில் பணியமா்த்தப்பட்டிருக்கும் தூதரக அதிகாரிகளில் 41 பேரை வரும் 10-ஆம் தேதிக்குள் திரும்பப் பெற வேண்டும்’ என்று கனடாவை இந்தியா அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹிந்துக்களை பிளவுபடுத்த காங்கிரஸ் முயற்சி: பிரதமர் மோடி
‘வாக்கு வங்கி அரசியலுக்காக ஹிந்துக்களை பிளவுபடுத்த காங்கிரஸ் முயற்சிக்கிறது’ என்று பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினாா்.
சட்டம்-ஒழுங்கை காக்க தீவிர நடவடிக்கை
காவல் துறையினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
பேரவைக் கூட்டத்தில் ஊதிய உயர்வை அறிவிக்க அரசு மருத்துவர்கள் கோரிக்கை
அடுத்த வாரத்தில் தொடங்கும் தமிழக சட்டப் பேர வைக் கூட்டத் தொடரில் அரசு மருத்துவர்களுக்கான ஊதிய உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும் என்று அரசு மருத் துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு அறிவித்துள்ளது.