CATEGORIES
Categorías
சத்தீஸ்கர்: காங்கிரஸ் எம்எல்ஏ வீட்டில் அமலாக்கத் துறை சோதனை
சத்தீஸ்கரில் மதுபான ஊழல் தொடர்பான பண மோசடி வழக்கில், காங்கிரஸ் எம்எல்ஏ கவாசி லக்மா, அவரது மகன் ஹரீஷ் லக்மா உள்ளிட்டோருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறை சனிக்கிழமை சோதனை நடத்தியது.
நெருங்கிய உதவியாளர்களின் கட்டுப்பாட்டில் நிதீஷ் குமார்- தேஜஸ்வி யாதவ்
பாட்னா, டிச. 28: 'பிகார் முதல்வர் நிதீஷ் குமார், தனது ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நெருங்கிய உதவியாளர்கள் சிலரின் கட்டுப்பாட்டில் உள்ளார்;
மணிப்பூர்: இம்பால் பள்ளத்தாக்கில் முழு அடைப்பு போராட்டம்
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
111 மருந்துகள் தரமற்றவை: நவம்பர் மாத சோதனையில் கண்டுபிடிப்பு
கடந்த நவம்பரில் மத்திய மருந்து ஆய்வகங்களில் பரிசோதிக்கப்பட்ட 41 மருந்துகளும் பல்வேறு மாநில ஆய்வகங்களில் பரிசோதிக்கப்பட்ட 70 மருந்துகளும் தரமற்றவையாக இருப்பதை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) கண்டறிந்துள்ளது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவியேற்கவுள்ள வால்ட்ஸுடன் ஜெய்சங்கர் சந்திப்பு
அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவியேற்கவுள்ள மைக்கேல் வால்ட்ஸை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சனிக்கிழமை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஜகஜீத் சிங்கை மருத்துவமனையில் அனுமதிக்க டிச.31 வரை அவகாசம்
பஞ்சாப் எல்லையில் ஒரு மாதத்துக்கும் மேலாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய தலைவர் ஜகஜீத் சிங் தலேவாலை மருத்துவமனையில் அனுமதிக்க டிச.31-ஆம் தேதி வரை மாநில அரசுக்கு உச்சநீதிமன்றம் சனிக்கிழமை அவகாசம் அளித்தது.
மகா கும்பமேளா: அமித் ஷாவுக்கு யோகி ஆதித்யநாத் நேரில் அழைப்பு
உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் சனிக்கிழமை நேரில் அழைப்பு விடுத்தார்.
அஞ்சல் துறை சேவைக்கான கட்டமைப்பை உருவாக்க நிதி ஒதுக்கீடு
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் ஜோதிராதித்ய சிந்தியா ஆலோசனை
முதல் தகவல் அறிக்கை வெளியானதற்கு தொழில்நுட்பக் கோளாறே காரணம் - சட்டத் துறை அமைச்சர் ரகுபதி
சென்னை, டிச.28: அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியானதற்கு தொழில்நுட்பக் கோளாறுதான் காரணம் என்று மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறியுள்ளார்.
அமலாக்கத் துறை அதிகாரி மீதான லஞ்ச வழக்கில் இடைத்தரகர் கைது: சிபிஐ
அமலாக்கத் துறை உதவி இயக்குநர் மீதான லஞ்ச வழக்கில் தொடர்புடைய குற்றச்சாட்டில் இடைத்தரகர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக சிபிஐ சனிக்கிழமை தெரிவித்தது.
வன்கொடுமை வழக்கில் மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு
மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் குழு நியமனம்
அண்ணா பல்கலை. பாதுகாப்பை மேம்படுத்த ஆளுநர் உத்தரவு
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை மேம்படுத்த பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு வேந்தரும் ஆளுநருமான ஆர்.என். ரவி உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடியில் நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர்
அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர் கல்விக்குச் செல்லும் மாணவிகளுக்கும் ரூ.1,000 வழங்கும் 'புதுமைப்பெண்' விரிவாக்கத் திட்டத்தை தூத்துக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் டிச. 30-இல் தொடங்கி வைக்கவுள்ளார்.
முதல் தகவல் அறிக்கை கசிந்த விவகாரம்: காவல் ஆணையர் மீது அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவு
இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அண்ணா பல்கலை.க்கு இடைக்கால துணைவேந்தர்: ஆளுநருக்கு கடிதம்
அண்ணா பல்கலை.க்கு மூத்த பேராசிரியர் ஒருவரை இடைக்கால துணைவேந்தராக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்கலை ஆசிரியர்கள் சங்கம் சார்பில் ஆளுநருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
புதிய பாதையில் பாமக பயணம்: மருத்துவர் ச.ராமதாஸ்
பாமக இனி புதிய பாதையில் பயணிக்கும் என்று அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் தெரிவித்தார்.
பிஎம் கேர்ஸ் நிதி நன்கொடை ரூ.912 கோடியாக சரிவு
பிரதமரின் அவசரகால நிதிக்கான (பிஎம் கேர்ஸ் ஃபண்ட்) நன்கொடை ரூ.912 கோடியாக சரிந்துள்ளது.
போர்க்களத்தில் ஓர் அறுவைச் சிகிச்சை!
கம்பனின் தமிழமுதம் - 25
நூறாண்டாகப் புகழ் மணக்கும் நற்றமிழறிஞர்!
செந்தமிழுக்கு வாய்த்த இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ்ப் பெரும்புலமைச் சான்றோர்களின் வரிசையில், செந்தமிழ்ப் பெரும் புலவர் ந.ரா. முருகவேளுக்குப் பேரிடம் உண்டு.
மன்மோகன் குடும்பத்தினர் கோரிக்கை நிராகரிப்பு: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நினைவகம் கட்டும் இடத்தில் இறுதிச் சடங்குகளைச் செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற அவரது குடும்பத்தினரின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளதாகக் கூறி, முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் நினைவிடத்தில் அமைச்சர், தலைவர்கள் அஞ்சலி
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி, அவர் நினைவிடத்தில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் சனிக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
சென்னையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் - 4 பேர் விஷம் குடித்து தற்கொலை
திருவண்ணாமலை, தங்கும் விடுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரு சக்கர வாகனம் மீது லாரி மோதல்: தனியார் நிறுவன பெண் ஊழியர் உயிரிழப்பு
சென்னை அருகே சோழிங்கநல்லூரில் இரு சக்கர வாகனம் மீது சிமென்ட் கலவை லாரி மோதிய விபத்தில், தனியார் நிறுவன பெண் ஊழியர் உயிரிழந்தார்.
முதல்வரை அவமதிக்கும் நோக்கில் விடியோ வெளியிட்டவர் கைது
தமிழக முதல்வரின் புகைப்படம் ஒட்டப்பட்ட போஸ்டரை வயது முதிர்ந்த பெண் அவமதிக்கும் நிகழ்வை விடியோ எடுத்த நபரை போலீஸார் கைது செய்தனர்.
மாணவி வன்கொடுமை: அண்ணாமலை கேள்வி
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைதான நபர் அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் குறித்து, அமைச்சர் ஏன் விளக்கமளிக்கவில்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் கே.அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.
தடுப்பணை வெள்ளத்தில் சிக்கி 3 பேர் உயிரிழப்பு
காஞ்சிபுரம் அருகே வெங்கச்சேரி கிராமப் பகுதியில் செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை வெள்ளத்தில் சிக்கி, 3 பேர் உயிரிழந்தனர்.
தொழிலாளி அடித்துக் கொலை: சரித்திர பதிவேடு குற்றவாளி கைது
சென்னை அமைந்தகரையில் தொழிலாளி அடித்துக் கொலை செய்த வழக்கில், சரித்திர பதிவேடு குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
மன்மோகன் சிங் உடல் தகனம்
21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதை
224 வழக்குகளில் பறிமுதல் செய்த மூன்றரை டன் கஞ்சா தீயிட்டு அழிப்பு
சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் பதிவான 224 வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட மூன்றரை டன் கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது.
அபுதாபி விமானத்தில் இயந்திரக் கோளாறு: சென்னையில் மீண்டும் தரையிறக்கம்
சென்னையிலிருந்து அபுதாபிக்கு புறப்பட்டுச் சென்ற விமானம், நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது இயந்திரக் கோளாறு கண்டறியப்பட்டதையடுத்து, அந்த விமானம் மீண்டும் சென்னையில் தரையிறக்கப்பட்டது.