CATEGORIES
Categorías
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 2025-ஆம் ஆண்டு நாட்காட்டி வெளியீடு
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் 2025- ஆம் ஆண்டுக்கான நாட்காட்டி வெளியிடப்பட்டது.
விமான விபத்து: ‘தவறை மூடி மறைக்க முயன்ற ரஷியா'
அஜா்பைஜான் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதில், தனது தவறை ரஷியா மூடி மறைக்க முயன்றதாக அஜா்பைஜான் அதிபா் இல்ஹம் அலியெவ் ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
கனடாவில் தரையிறங்கியபோது தீப்பற்றிய விமானம்: பயணிகள் தப்பினர்
கனடாவின் செயின்ட் ஜான்ஸ்நகரத்திலிருந்து புறப்பட்டு வந்த 'ஏர் கனடா' சிறிய ரக விமானம், ஹேலிஃபாக்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ஓடுபாதையில் உரசியதால் தீப்பற்றியது.
பாலஸ்தீனம்: இதழியல் மாணவி சுட்டுக் கொலை
பாலஸ்தீனத்தின் வடமேற்கு நகரமான ஜெனினில் அந்நாட்டைச் சேர்ந்த இதழியல் மாணவி ஷாதா அல்-சபாக் (22), சனிக்கிழமை அவரது வீட்டில் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இறுதிக்கு தென்னாப்பிரிக்கா தகுதி
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்ற தென்னாப்பிரிக்கா, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் முதல் அணியாக இடம் பிடித்தது.
கோப்பை வென்றது ஹரியாணா ஸ்டீலர்ஸ்
புரோ கபடி லீக் போட்டியின் 11-ஆவது சீசனில் ஹரியாணா ஸ்டீலர்ஸ் 32-23 என்ற புள்ளிகள் கணக்கில் பாட்னா பைரேட்ஸை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி, முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
ஹெச்-1பி விசா முறைக்கு டிரம்ப் ஆதரவு: எலான் மஸ்க் நெருக்கடி எதிரொலி
ஹெச்-1பி நுழைவு இசைவு (விசா)திட்டத்துக்கு அமெரிக்காவின் புதிய அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப் ஆதரவு தெரிவித்துள்ளார்.
மகா கும்பமேளா: குடியரசுத் தலைவர், துணைத் தலைவருக்கு நேரில் அழைப்பு
மகா கும்பமேளாவில் பங்கேற்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் ஆகியோருக்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஞாயிற்றுக்கிழமை நேரில் அழைப்பு விடுத்தார்.
மகரவிளக்கு பூஜை: சபரிமலையில் இன்று நடை திறப்பு
மகரவிளக்கு பூஜைக்காக, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திங்கள்கிழமை (டிச.30) மாலை 4 மணியளவில் திறக்கப்படவுள்ளது.
நினைவக விவகாரத்தில் ‘மறைமுக சதி’: மத்திய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு நினைவகம் அமைக்கப்படும் இடத்தில் இறுதிச் சடங்கை நடத்தாமல் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு மறைமுக சதியில் ஈடுபட்டது என காங்கிரஸ் ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டியது.
சீனாவால் ஏற்படக்கூடிய வெள்ள அபாயத்தைத் தடுக்கவே சியாங் திட்டம்
சீனாவால் ஏற்படக்கூடிய வெள்ள அபாயத்தைத் தடுப்பதே சியாங் திட்டத்தின் நோக்கம் என்று அருணாசல பிரதேச முதல்வர் பெமா காண்டு தெரிவித்தார்.
காங்கிரஸில் சுயபரிசோதனை அவசியம்: சர்மிஷ்டா முகர்ஜி வலியுறுத்தல்
காங்கிரஸ் கட்சியின் இப்போதைய மோசமான நிலை குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டியது அவசியம் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகளான சர்மிஷ்டா முகர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
மன்மோகன் சிங்கின் அஸ்தி யமுனை நதியில் கரைப்பு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அஸ்தியை தில்லியில் மஜ்னு கா திலா குருத்வாராவுக்கு அருகே யமுனை நதியில் அவரது குடும்பத்தினர் கரைத்தனர்.
தங்களைத் தவிர வேறு யாருக்கு மரியாதை கிடைத்தாலும் சோனியா குடும்பத்துக்கு பிடிக்காது
மத்திய அமைச்சர் விமர்சனம்
பிகார் முதல்வர் வீட்டை நோக்கி தேர்வர்கள் பேரணி: காவல் துறை தடியடி
பிகாரில் அரசுப் பணித் தேர்வில் வினாத்தாள் கசிந்ததாக குற்றஞ்சாட்டி, பாட்னாவில் முதல்வர் நிதீஷ் குமார் வீட்டை நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற தேர்வர்கள் மீது தண்ணீரை பீய்ச்சியடித்தும் தடியடி நடத்தியும் காவல் துறையினர் கலைத்தனர்.
புஷ்பா-2 விவகாரம்: ‘சட்டம் தன் கடமையைச் செய்யும்’
தெலங்கானாவில் புஷ்பா-2 திரைப்பட சிறப்புக் காட்சியின் போது பெண் உயிரிழந்த விவகாரத்தில், சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று மாநில காவல் துறை டிஜிபி ஜிதேந்தர் தெரிவித்தார்.
இவிஎம் மீது நம்பிக்கையில்லை: அகிலேஷ் திடீர் விமர்சனம்
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (இவிஎம்) மீது நம்பிக்கையில்லை எனவும் மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஞாயிற்றுக்கிழமை வலியுறுத்தினார்.
'மகா கும்பமேளா 2025: பக்தர்களுக்கு வளமான, சிறந்த ஆன்மிகப் பயணம் காத்திருக்கிறது'
உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு வளமான, சிறந்த ஆன்மிகப் பயணம் காத்திருப்பதாக மத்திய கலாசாரத் துறை அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
பஞ்சாபில் இன்று முழு அடைப்பு: விவசாய அமைப்புகள் அழைப்பு
பஞ்சாப்-ஹரியாணா எல்லையில் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள விவசாயி ஜகஜீத் சிங் தலேவாலுக்கு ஆதரவாக, பஞ்சாபில் திங்கள்கிழமை முழு அடைப்பு போராட்டத்துக்கு விவசாய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.
இந்தியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் எதிரிகள்: ராணுவ வீரர்கள் விழிப்புடன் இருக்க ராஜ்நாத் சிங் அறிவுரை
'இந்தியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் எதிரிகள் உள்ளனர்; எனவே, ராணுவ வீரர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்' என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவுறுத்தினார்.
நல்லகண்ணுக்கு தலைவர்கள் புகழாரம்
கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணு நூற்றாண்டு விழாவையொட்டி தலைவர்கள் அவருக்கு புகழாரம் சூட்டினர்.
ஜனவரியில் புதிய பாம்பன் ரயில் பாலம் திறப்பு: மத்திய அரசு திட்டம்
புதிய தொழில்நுட்பத்தில் மொத்தம் ரூ. 580 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பாம்பன் புதிய ரயில் பாலம் புத்தாண்டு ஜனவரியில் திறக்கப்படவுள்ளது.
இதயம் திறக்கும் புத்தகங்கள்!
தமிழக மாவட்ட தலைநகரங்கள்தோறும் புத்தகத் திருவிழாக்கள் நடந்தாலும், தலைநகரான சென்னையில் நடக்கும் விழாவுக்குத் தனித்துவம் உண்டு.
முட்டை விலை ரூ.5.30
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மாற்றமின்றி ரூ. 5.30-ஆக நீடிக்கிறது.
19 ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்வுடன் பணியிட மாற்றம்
தமிழக காவல் துறையில் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் பதவி உயர்த்தப்பட்டு, பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
44 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்
தமிழக காவல் துறையில் 44 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பாரதம் என்பது இந்தியாவைவிடப் பெரியது
பாரதம் என்பது இந்தியாவை விடப் பெரியது. ஆப்கானிஸ்தான், நேபாளம், திபெத், இலங்கை ஆகிய நாடுகள் பாரதத்தின் பகுதிகள் என நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் பேசினார்.
ஆரணி அருகே கார்கள் மோதல்: தம்பதி உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த கண்ணமங்கலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரு கார்கள் நேருக்குநேர் மோதிக் கொண்டதில் தம்பதி உயிரிழந்தனர்.
முதல் தகவல் அறிக்கை கசிவு: 14 பேரிடம் விசாரிக்க முடிவு
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் முதல் தகவல் அறிக்கையை பதிவுறக்கம் செய்த 14 பேருக்கு விரைவில் அழைப்பாணை அனுப்பி நேரில் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்
'ஸ்பேடெக்ஸ் ஏ மற்றும் ஸ்பேடெக்ஸ் பி' ஆகிய இரு விண்கலன்கள் பிஎஸ்எல்வி சி-60ராக்கெட் வாயிலாக திங்கள்கி ழமை (டிச.30) இரவு 9.58 மணிக்கு விண்ணில் செலுத்தப்படவுள்ளன.