CATEGORIES
Categorías
907 புள்ளிகளுடன் பும்ரா சிறப்பிடம்
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 907 புள்ளிகளை ஈட்டி புதிய சாதனை படைத் துள்ளார் நட்சத்திர வீரர் ஜஸ்ப்ரீத் பும்ரா.
காஸா: இஸ்ரேல் தாக்குதலில் மேலும் 17 பேர் உயிரிழப்பு
காஸாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் மேலும் 17 பேர் உயிரிழந்தனர்; 41 காயமடைந்தனர்.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் உறுப்பினரானது பாகிஸ்தான்
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தற்காலிக உறுப்பினராக பாகிஸ்தான் புதன்கிழமை பொறுப்பேற்றது. இரண்டு ஆண்டுகளுக்கு அந்த கவுன்சிலில் பாகிஸ்தான் அங்கம் வகிக்கிறது.
'பாட்ஷா' வசனத்துடன் புத்தாண்டு வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்த், தனது தளமான 'எக்ஸ்' (முன்பு ட்விட்டர்) இல், 2025 ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு வாழ்த்தை பகிர்ந்துள்ளார்.
மின் நுகர்வு 13,040 கோடி யூனிட்டுகளாக உயர்வு
இந்தியாவின் மின் நுகர்வு கடந்த டிசம்பர் மாதத்தில் 13,040 கோடி யூனிட்டுகளாக உயர்ந்துள்ளதாக அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் ‘ஸ்கரப் டைபஸ்' பாக்டீரியா தொற்று அதிகரிப்பு
ஸ்கரப் டைபஸ் எனப்படும் பாக்டீரியா தொற்று தமிழகத்தில் அதிகரித்து வருவதாகக் கூறியுள்ள பொது சுகாதாரத் துறை, அதற்கான சிகிச்சை வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
புத்தாண்டில் உயர்ந்த தங்கம் விலை: பவுன் ரூ.57,200-க்கு விற்பனை
ஆங்கிலப் புத்தாண்டின் முதல் நாளான புதன்கிழமை, தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து, ரூ.57,200-க்கு விற்பனையாகியது.
திருச்செந்தூர் கோயிலில் பல லட்சம் பக்தர்கள் தரிசனம்
திருச்செந்தூரில் உள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு கடந்த புதன்கிழமை லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ரஷிய எரிவாயுப் போக்குவரத்தை நிறுத்தியது உக்ரைன்
தங்கள் நாடு வழியாக பிற ஐரோப்பிய நாடுகளுக்கு குழாய் மூலம் ரஷிய எரிவாயு விநியோகிக்கப்படுவதை உக்ரைன் புதன்கிழமை நிறுத்தியது.
அமெரிக்கா: கார் தாக்குதலில் 10 பேர் உயிரிழப்பு
அமெரிக்காவின் லூசியானா மாகாணம், நியூ ஆர்லியன்ஸ் நகரில் கூட்டத்தினரின் மீது காரை ஏற்றி மர்ம நபர் நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்தனர்; தாக்குதல் நடத்திய நபர் போலீஸாரால் சுட்டுக் கொல்லப் பட்டார்.
இந்திய வீரர்களுடன் ஆஸி. பிரதமர் சந்திப்பு - பும்ராவுக்கு பாராட்டு
சிட்னியில் நடை பெறவுள்ள 5-ஆவது டெஸ்ட் ஆட்டத்தில் பங்கேற்பதற்காக சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணியினரை ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி ஆல்பனேசி சந்தித்தார்.
உலக பிளிட்ஸ் செஸ்: வைஷாலிக்கு வெண்கலம்
ஃபிடே உலக பிளிட்ஸ் செஸ் போட்டியில் இந்திய இளம் வீராங்கனை ஆர். வைஷாலி வெண்கலம் வென்றார்.
இந்தியாவில் முதல்முறையாக விமானங்களில் 'வைஃபை' சேவை ஏர் இந்தியா அறிமுகம்
ஏர் இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட உள் நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களில் 'வைஃபை' (வயர்லெஸ் இணையம்) சேவை வழங்கப்படும் என அந்நிறுவனம் புதன்கிழமை அறிவித்தது.
பாஜகவின் தவறான செயல்களுக்கு ஆர்எஸ்எஸ் துணை போகிறதா? மோகன் பாகவத்துக்கு கேஜரிவால் கடிதம்
பாஜகவின் தவறான செயல்களுக்கு ஆர்எஸ்எஸ் துணை போகிறதா என அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்துக்கு எழுதிய கடிதத்தில் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் கேள்வியெழுப்பி உள்ளார்.
சொத்து தகராறு: தாய், 4 சகோதரிகளைக் கொன்ற இளைஞர்
உத்தர பிரதேச மாநிலம், லக்னௌவில் உள்ள விடுதியில் சொத்து தகராறு காரணமாக தாய் மற்றும் 4 சகோதரிகளை 24 வயது இளைஞர் படுகொலை செய்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
பாதுகாப்புத் துறை சீர்திருத்த ஆண்டாக '2025' அறிவிப்பு
முப்படைகளையும் தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்ட போருக்குத் தயாராக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கும் வகையில் 2025-ஆம் ஆண்டு ‘சீர்திருத்த ஆண்டாக’ கடைபிடிக்கப்படும் என மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இந்திய உறவு மேம்படுத்தப்படும்: வங்கதேசம்
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை வங்கதேசத்துக்கு அழைத்து வரும் நடவடிக்கையும், இந்தியாவுடனான வங்கதேச உறவை மேம்படுத்தும் முயற்சிகளும் ஒரே சமயத்தில் நடைபெறும் என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை ஆலோசகர் தௌஹித் ஹுசைன் தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத்தில் அதிமுக, பாஜக கேவியட் மனு தாக்கல்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அதிமுக, பாஜகவை சேர்ந்த வழக்குரைஞர்கள் இருவர் தரப்பில் தனித் தனியாக உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வருமான வரி பிடித்த அறிக்கை: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மூன்று காலாண்டுகளுக்கான வருமான வரி பிடித்த அறிக்கையை ஜன.25-ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
முழுநேர முனைவர் பட்டப்படிப்பை புதுப்பிக்கும் மாணவர்களுக்கு ஊக்கத் தொகை
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்த முழுநேர முனைவர் பட்டப்படிப்பை புதுப்பிக்கும் மாணவர்களும் ஊக்கத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கத்தார் பிரதமருடன் ஜெய்சங்கர் சந்திப்பு: இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து ஆய்வு
கத்தாருக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அந்நாட்டின் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானியை புதன்கிழமை சந்தித்துப் பேசினார்.
இரட்டை இலை சின்னம் விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு ஓபிஎஸ் பதில் மனு
இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பதில் மனு அனுப்பியுள்ளார்.
அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறப்பு
தமிழகத்தில் அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு, ஒன்று முதல் பிளஸ் 2 வரை பிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் வியாழக்கிழமை (ஜன.2) திறக்கப்படவுள்ளன.
பொதுமக்கள் குறை தீர்வுக்கு கூடுதல் முன்னுரிமை
வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களுக்கு நிதியமைச்சகம் அறிவுறுத்தல்
வசீகரப் புன்னகை விடை பெற்றது!
1977-இல் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. நாட்டு மக்கள் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, பளிச்சென்று சிரித்தபடி ஒருவர் தோன்றுகிறார்.
தமிழகத்தில் 2024-ஆம் ஆண்டில் 268 பேரின் உடல் உறுப்புகள் தானம்
தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கடந்த ஆண்டில் மட்டும் மூளைச்சாவு அடைந்த 268 பேரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு 1,500 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
குறைந்துவரும் காட்டு வெள்ளாமை
இந்திய மக்களில் பெரும்பாலோரின் வாழ்வாதாரம் விவசாயம். இந்த விவசாயம்தான் அன்றும் இன்றும் நம் பொருளாதாரத்தின் முதுகெலும்பு. விவசாயத்தைப் புரந்து பேணுபவர்கள் கிராம மக்கள். இதனால்தான் 'இந்தியா கிராமங்களில் வாழ்கிறது' என்பர்.
பேருந்து வீட்டுக்குள் புகுந்ததில் பெண் உயிரிழப்பு
பெரம்பலூர் அருகே செவ்வாய்க்கிழமை இரவு மேல்மருவத்தூர் கோயிலுக்குச் சென்ற பக்தர்களின் பேருந்து வீட்டுக்குள் புகுந்ததில், தூங்கிக்கொண்டிருந்த பெண் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
விஜய் அரசியல் வருகையால் திமுக கூட்டணிக்கு பாதிப்பு இல்லை
நடிகர் விஜயின் அரசியல் வருகையால் திமுக கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று மதிமுக பொதுச்செயலர் வைகோ கூறினார்.
புத்தாண்டு கொண்டாட்டம்: சாலை விபத்துகளில் 5 பேர் உயிரிழப்பு
சென்னை, ஜன. 1: சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்ற செவ்வாய்க்கிழமை நள்ளிரவும், புதன்கிழமை அதிகாலையும் சாலை விபத்துகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.