CATEGORIES
Kategorier
தோல்விக்கு பொறுப்பானவர்களைக் கண்டறிய வேண்டும்
ஹரியாணாவில் காங்கிரஸின் தோல்விக்கு யாா் பொறுப்பு என்பதைக் கண்டறிய வேண்டும் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான குமாரி செல்ஜா வலியுறுத்தியுள்ளாா்.
நல்ல நிர்வாகத்துக்கு கிடைத்த வெற்றி: பிரதமர்
ஹரியாணா பேரவைத் தேர்தலில் பாஜகக்கு கிடைத்த வெற்றி, சிறந்த நிர்வாகம் மற்றும் வளர்ச்சி சார்ந்த அரசியலுக்கு கிடைத்த வெற்றி என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
அக்.15-இல் 1,000 இடங்களில் மழைக்கால மருத்துவ முகாம்கள்
பருவ மழைக் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வரும் 15-ஆம்தேதி 1,000 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
ரூ.38,698 கோடி புதிய தொழில் முதலீடுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல்
தமிழகத்தில் ரூ.38,698 கோடி மதிப்பிலான 14 புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
போதைப் பொருள் விற்பனையாளர்களின் 8,949 வங்கிக் கணக்குகள் முடக்கம்: டிஜிபி
தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்களின் 8,949 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக காவல் துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
தளவாய் சுந்தரத்தை வரவேற்கிறேன்
அதிமுகவின் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்ட தளவாய் சுந்தரத்தை வரவேற்கிறேன் என தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் எச்.ராஜா தெரிவித்தார்.
திருப்பூரில் நாட்டு வெடி வெடித்து குழந்தை உள்பட 3 பேர் உயிரிழப்பு
திருப்பூரில் வீட்டில் தயாரித்த நாட்டு வெடி வெடித்ததில் 9 மாத குழந்தை உள்பட 3 பேர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனர்.
அதிமுக ஆட்சியில்தான் சொத்து வரி உயர்த்தப்பட்டது
அதிமுக ஆட்சியில்தான் சொத்து வரி உயர்த்தப்பட்டதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.
ஆண்டுக்கு ரூ.46,000 கோடி இறால் ஏற்றுமதி
இந்தியா ஆண்டுக்கு ரூ.46 ஆயிரம் கோடி மதிப்பிலான இறால் மீன்களை ஏற்றுமதி செய்வதாக மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால் வளம் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை இணையமைச்சர் ஜார்ஜ் குரியன் கூறினார்.
சென்னை ஐஐடியில் இணைய பாதுகாப்பு மையம் தொடக்கம்
நாட்டில் புது மைகளை ஊக்குவிக்கும் அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சியை மேம்படுத்த புதிய இணைய பாதுகாப்பு மையத்தை சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது.
மின்வாரிய ஊழியர்கள் பருவமழையை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்
தமிழகத்தில் பருவமழையை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும் என மின்வாரிய ஊழியர்களுக்கு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவுறுத்தியுள்ளார்.
‘எல்லாப் புகழும் இறைவனுக்கே': ஏ.ஆர். ரகுமான்
\"தேசிய திரைப்பட விருது பெற்றது பெருமை அளிப்பதாகவும், எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்றும் \"பொன்னியின் செல்வன் பாகம் 1' திரைப்படத்தில் சிறந்த பின்னணி இசை அமைத்ததற்கான தேசிய திரைப்பட விருது பெற்ற இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தெரிவித்தார்.
பாஜக‘ஹாட்ரிக்' வெற்றி முதல்வராகிறார் ஒமர்
ஹரியாணா சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று, தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.
மெரீனாவில் 21.5 டன் குப்பை அகற்றம்
விமானப்படை சாகச நிகழ்வைக் காண ஞாயிற்றுக்கிழமை பல லட்சம் மக்கள் குவிந்த சென்னை மெரீனா கடற்கரையில் 21.5 டன் குப்பை சேகரிக்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்தாா்.
கண்கவர் அம்சங்களுடன் கலைஞர் நூற்றாண்டு பூங்கா
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
கிரீமியா எண்ணெய் கிடங்கில் உக்ரைன் தாக்குதல்
ரஷியாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கிரீமியா தீபகற்பத்தின் முக்கிய எண்ணெய்க் கிடங்கில் தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
இரு தேசத் தீர்வு சாத்தியமா?
இஸ்ரேலுக்குள் தரை, கடல், வான்வழியாக ஊடுருவி தாக்குதல் நடத்தி 1,139 பேரை ஹமாஸ் அமைப்பினர்கள் படுகொலை செய்து திங்கள்கிழமை (அக். 7) ஓராண்டு நிறைவுபெற்றது.
புதிய ஏவுகலன் மாதிரி விரைவில் அறிமுகம் - இஸ்ரோ தலைவர்
விண்வெளி நிலையம் அமைப்பதற்கு முக்கியத்துவம் வாய்ந்த அடுத்த தலைமுறை ஏவுகலன் (என்ஜிஎல்வி) மேம்பாட்டுக்கான மாதிரி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று இஸ்ரோ தலைவர் எஸ். சோமநாத் திங்கள்கிழமை தெரிவித்தார்.
தென்னாப்பிரிக்காவை சாய்த்தது இங்கிலாந்து
இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) இடையே (சுமார் 2 பில்லியன் டாலர்கள் ரூ.16,800 கோடி) முதலீட்டில் உணவு வழித்தடம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
ரூ.16,800 கோடி முதலீட்டில் இந்தியா, யுஏஇ இடையே உணவு வழித்தடம் - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) இடையே (சுமார் 2 பில்லியன் டாலர்கள் ரூ.16,800 கோடி) முதலீட்டில் உணவு வழித்தடம் அமைக்கப்பட உள்ளதாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
வளர்ச்சிக்கு நக்ஸல்கள் மிகப் பெரிய தடை: அமித் ஷா
வளர்ச்சிக்கு நக்ஸல்கள் மிகப் பெரிய தடையாக உள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றஞ்சாட்டினார்.
லாலு, இரு மகன்களுக்கு நீதிமன்றம் ஜாமீன்
ரயில்வே பணிக்கு லஞ்சமாக நிலம் பெற்ற வழக்குடன் பண மோசடி வழக்கில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பிகார் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ், அவருடைய மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
காவல் துறைக்கு ரூ.78 கோடியில் புதிய கட்டடங்கள்
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காவல் துறைக்கு ரூ.78 கோடியில் புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக இந்த கட்டடங்களை அவர் திறந்தார்.
'மெரீனா உயிரிழப்பு சம்பவத்தை அரசியலாக்க வேண்டாம்'
மெரீனா உயிரிழப்பு சம்பவத்தை யாரும் அரசியலாக்க வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்தார்.
ஆவடியில் 13 இடங்களில் ரூ.42 கோடியில் மழைநீர் வடிகால்
ஆவடியில் மழைநீர் தங்குதடையின்றி செல்ல ரூ.42.41 கோடியில் 13 இடங்களில் வடிகால் அமைக்கப்பட்டுள்ளதாக சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்தார்.
பருவமழை காலத்தில் விரைந்து செயல்பட வேண்டும்
நெடுஞ்சாலைத் துறைக்கு அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தல்
விமான சாகச நிகழ்வு: உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம்
சென்னையில் விமான சாகச நிகழ்வைக் காண வந்து உயிரிழந்த 5 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.
மாலத்தீவுக்கு முதலில் உதவும் நாடு இந்தியா - பிரதமர் நரேந்திர மோடி
மாலத்தீவுக்கு முதலில் உதவிக்கரம் நீட்டும் நாடாக இந்தியா உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
பாஜக ஆட்சியில் மத நல்லிணக்கம் பாதிப்பு
ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பிரதமரின் சலித்துப்போன உரைகளால் அரசின் தோல்விகளை மறைக்க முடியாது
பிரதமா் மோடியின் சலித்துப்போன உரைகளால் அரசின் தோல்விகளை மறைக்க முடியாது என்று காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே விமா்சித்தாா்.