CATEGORIES
Kategorier
ராமர் கோயில் பிரதிஷ்டை: ராம ராஜ்யத்தின் பிரகடனம்
அயோத்தி ராமா் கோயில் பிரதிஷ்டை, பாகுபாடு அல்லாத நல்லிணக்க சமுதாயமான ராம ராஜியத்தின் பிரகடனம்’ என்று உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் திங்கள்கிழமை தெரிவித்தாா்.
அயோத்தி கோயில் மூலவர் சிலை பிரதிஷ்டை: நாடு முழுவதும் கொண்டாட்டம்
அயோத்தி ராமா் கோயிலில் மூலவா் ஸ்ரீபாலராமா் சிலை திங்கள்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டதையொட்டி, நாட்டின் பிற பகுதிகளில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
ஒலிம்பிக் தகுதிச்சுற்று குத்துச்சண்டை: தீபக், நிஷாந்த் உள்பட 9 பேர் தேர்வு
இத்தாலியில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் தகுதிச்சுற்று குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க தீபக் போரியா, நிஷாந்த் தேவ் உள்பட 9 போ் கொண்ட இந்திய அணி திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டது.
டிஎம்பி நிகர லாபம் ரூ.284 கோடி
தூத்துக்குடியில் தலைமையகத்தைக் கொண்டு செயல்பட்டு வரும் தனியாா் வங்கியான தமிழ்நாடு மொ்க்கென்டைல் வங்கியின் (டிஎம்பி) நிகர லாபம் கடந்த டிசம்பா் காலாண்டில் ரூ.284 கோடியாகப் பதிவாகியுள்ளது.
தூதர்களை மீண்டும் பணியமர்த்த பாகிஸ்தான்-ஈரான் ஒப்புதல்
கடந்த வாரம் பரஸ்பரம் நடத்திக்கொண்ட பாகிஸ்தானும், ஈரானும் திரும்ப அழைக்கப்பட்டிருந்த தத்தமது தூதா்களை மீண்டும் பணியில் அமா்த்த ஒப்புக் கொண்டுள்ளன.
தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் 6.18 கோடி
7 லட்சம் பேர் புதிதாக சேர்ப்பு
அதிபர் பதவிக்கு டிரம்ப் தகுதி உடையவரா?
அமெரிக்க முன்னாள் அதிபர்டொனால்ட்டிரம்ப் நாட்டின் அதிபராக மீண்டும் பதவியேற்க மனரீதியாக தகுதி பெற்றவரா எனக் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியாளர் நிக்கி ஹேலி சனிக்கிழமை கேள்வியெழுப்பினார்.
‘நடைப்பயணத்தில் பங்கேற்கக் கூடாது' மக்களை மிரட்டும் பாஜக: ராகுல் குற்றச்சாட்டு
பாரத ஒற்றுமை நீதி நடைப்பயணத்தில் பங்கேற்கக் கூடாது என்று அஸ்ஸாம் மாநில பாஜக அரசு மக்களை மிரட்டி வருவதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா்.
வாட்ஸ்ஆப் மூலம் மோசடி: பயனாளர்களுக்கு எச்சரிக்கை
வாட்ஸ்ஆப்பில் வேலைவாய்ப்பு, முதலீட்டுத் திட்டங்கள், ஆள்மாறாட்டம், ஸ்க்ரீன் ஷோ் என்ற பெயரில் மோசடி நடைபெறுவது குறித்து பயனாளா்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (பிபிஆா்டி) அறிவுறுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் இளைஞரணியினருக்கு வாய்ப்பு
முதல்வரிடம் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
கோயில்களில் சிறப்பு பூஜைக்கு தடையில்லை
அயோத்தி ராமா் கோயில் மூலவா் சிலை பிரதிஷ்டையையொட்டி தமிழக கோயில்களில் திங்கள்கிழமை (ஜன. 22) ராமா் பெயரில் சிறப்பு பூஜைகள், அன்னதானங்கள் வழங்குவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெரிவித்துள்ளாா்.
அயோத்தியில் ஸ்ரீராமர் சிலை இன்று பிரதிஷ்டை
உத்தர பிரதேசம் மாநிலம், அயோத்தி ராமஜென்ம பூமியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீராமா் கோயிலில் மூலவா் ஸ்ரீபால ராமா் (ராம் லல்லா) சிலை திங்கள்கிழமை (ஜன.22) பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
2 கி.மீ. தொலைவுக்கு பிரதமர் காரில் பயணம்
வழிநெடுகிலும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு
'இஸ்ரேல் தாக்குதலில் 4 ஈரான் ராணுவ அதிகாரிகள் உயிரிழப்பு'
சிரியா தலைநகா் டமாஸ்கஸில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் தங்கள் நாட்டைச் சோ்ந்த 4 பாதுகாப்புப் படை அதிகாரிகள் உயிரிழந்ததாக ஈரான் தெரிவித்துள்ளது.
ராமர் கோயில் பிரசாதம் என்ற பெயரில் அமேசானில் இனிப்புகள் விற்பனை
மத்திய நுகர்வோர் ஆணையம் நோட்டீஸ்
3 ஆண்டுகளில் நக்ஸல் அச்சுறுத்தலில் இருந்து நாடு விடுபடும்
அமித் ஷா
சபரிமலையில் தரிசனம் கிடைக்காமல் திரும்பிய தமிழக பக்தர்கள்!
கட்டுக்கடங்காத பக்தா் கூட்டம் காரணமாக சபரிமலையில் தரிசனத்துக்குச் சென்ற பலா் தரிசனம் கிடைக்காமல் திரும்ப வேண்டிய நிலைமை இந்த ஆண்டு ஏற்பட்டதாக பக்தா்கள் குமுறுகிறாா்கள். ஏற்பாடுகள் முறையாகச் செய்யப்படாததால் மிகுந்த அவதிக்கு உள்ளானதாக கூறப்படுகிறது.
100 புதிய பேருந்துகள்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு புதிதாக வாங்கப்பட்ட 100 புதிய பிஎஸ்4 பேருந்துகளை முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து இன்று காலை கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.
திமுகவிடம் அதிக தொகுதிகளைப் பெற வேண்டும்
மேலிடப் பொறுப்பாளரிடம் காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தல்
தமிழக பொருளாதாரத்தை மேம்படுத்த புதிய சிந்தனைகள் தேவை
தமிழகத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த புதிய சிந்தனைகள் கட்டாயம் தேவை என்று மாநில தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்தாா்.
7 இடங்களில் இன்று ‘மக்களுடன் முதல்வர்' முகாம்
சென்னையில் 7 இடங்களில் ‘மக்களுடன் முதல்வா்’ சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
சென்னையில் விரைவில் பள்ளிகள் பாதுகாப்பு மண்டலம்
சென்னையில் விரைவில் பள்ளிகள் பாதுகாப்பு மண்டலம் அமைக்கப்படும் என பெருநகர காவல்துறை ஆணையா் சந்தீப்ராய் ரத்தோா் தெரிவித்தாா்.
ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத் துறை விசாரணை
சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கு தொடா்பாக ஜாா்க்கண்ட் முதல்வா் ஹேமந்த் சோரனிடம் (48) அமலாக்கத்துறை அதிகாரிகள் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
ஸ்ரீரங்கம், ராமேசுவரத்தில் பிரதமர் வழிபாடு
ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தார்.
பாதுகாப்பு விவகாரத்தில் ஒத்துழைப்பு: பாகிஸ்தான், ஈரான் ஒப்புதல்
பாதுகாப்பு விவகாரத்தில் இஸ்லாமாபாத், பாதுகாப்பு தங்களிடையே ஒத்துழைப்பை மேம்படுத்த ஈரானும், பாகிஸ்தா னும் வெள்ளிக்கிழமை ஒப்புக் கொண்டன.
'தனி பாலஸ்தீன நாட்டை ஏற்க முடியாது!”
காஸா போா் முடிவுக்கு வந்ததும் தனி பாலஸ்தீன நாட்டை அமைக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் யோசனையை ஏற்க முடியாது என்று இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளாா்.
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தைக் கைவிட வேண்டும்: காங்கிரஸ்
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை, சட்டப் பேரவை மற்றும் உள்ளாட்சித் தோ்தலை நடத்துவது குறித்து ஆராய்ந்து பரிந்துரைகள் வழங்க, முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயா்நிலை குழுவை மத்திய அரசு அமைத்தது.
எனது அரசுக்கு உத்வேகமாக விளங்குபவர் கடவுள் ராமர்!
‘எனது அரசுக்கு உத்வேகமாக விளங்குபவா் கடவுள் ராமா்’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியில் 752 பரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியில் எழுத்தாளா்களின் புத்தகங்களை பிற மொழியாக்கங்களில் வெளியிடுவதற்காக 752 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடியில் உயர்நிலை சாலைப் பணி: முதல்வர் தொடக்கம்
சென்னை அண்ணா சாலையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடியில், நான்கு வழித்தட உயா்மட்டச்சாலை அமைப்பதற்கான கட்டுமானப் பணியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.