CATEGORIES
Kategorier
அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட கிருஷ்ணர் சிலை மீட்பு
தமிழகத்தைச் சேர்ந்த பிற்கால சோழர் காலத்தில் செய்யப்பட்ட கலிய மர்த்தன கிருஷ்ணர் சிலை அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்டு, சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.
போதைப் பொருள் புழக்கத்தை அரசு இரும்புக் கரம் கொண்டு கட்டுப்படுத்தி வருகிறது
தமிழகத்தில் மாணவர்களிடையே போதைப் பொருள் புழக்கத்தை அரசு இரும்புக் கரம் கொண்டு கட்டுப்படுத்தி வருவதாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
சென்னை மாநகராட்சிப் பகுதியில் தீவிர தூய்மைப் பணி
வடகிழக்கு பருவ மழை தொடங்கும் நிலையிலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை மாநகராட்சி பகுதிகளில் தீவிர தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேயர் பிரியா தெரிவித்தார்.
ராணுவ பயிற்சி மையத்தில் பயிற்சி முடித்த அதிகாரிகளின் கண்கவர் சாகச நிகழ்ச்சிகள்
சென்னை பரங்கிமலையில் உள்ள இந்திய ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாதெமியில் (ஓடிஏ) நிகழாண்டு பயிற்சி முடித்து ராணுவ அதிகாரிகளாக இணையவுள்ள இளம் அலுவலர்களின் சாகச நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடை பெற்றன.
பள்ளிகளில் நிகழ்ச்சிக்கு புதிய வழிமுறைகள்
அரசுப் பள்ளிகளில் நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்த புதிய வழிமுறைகளை வெளியிட வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
திருமணவயல் தியானப் பிள்ளையார்...
ஆதிசங்கரர் அருளிய ஆறு வகையான வழிபாட் டில் விநாயகர் வழிபாடும் ஒன்றாகும்.
குழந்தைகளை வெளிநாட்டினர் தத்தெடுக்க சீனா தடை
தங்கள் நாட்டு குழுந்தைகளை வெளிநாட்டினா் தத்தெடுக்க சீனா தடை விதித்துள்ளது.
இஸ்ரேல் தூதரகம் அருகே துப்பாக்கிச்சூடு
ஜொ்மனியின் மியூனிக் நகரில் இஸ்ரேல் துணைத் தூதரகம் அருகே போலீஸாா் மீது வியாழக்கிழமை துப்பாக்கிச்சூடு நடத்திய இளைஞா் சுட்டுக்கொல்லப்பட்டாா்.
வரலாற்று பதக்கம் வென்ற ஹர்விந்தர், தரம்பிர், கபில்
பாராலிம்பிக் போட்டியில் வில்வித்தையில் இந்தியாவுக்கு முதல் முறையாக தங்கம் கிடைக்க, கிளப் த்ரோ, ஜூடோவில் முதல் முறையாக பதக்கம் கிடைத்துள்ளது.
மக்களிடம் பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும்: ராகுல்
‘சிந்துதுா்க் மாவட்டத்தில் சத்ரபதி சிவாஜி சிலை இடிந்த சம்பவம், பண மதிப்பிழப்பு, விவசாயிகள் விரோத மசோதாக்கள் உள்ளிட்டவைக்கு நாட்டு மக்கள் ஒவ்வொருவரிடமும் பிதரமா் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தினாா்.
'தூய்மை இந்தியா' திட்டத்தால் பொது சுகாதாரத்தில் மாற்றம்-பிரதமர் மோடி
பொது சுகாதார கட்டமைப்பில் ‘தூய்மை இந்தியா திட்டம்’ பெரும் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமா் மோடி வியாழக்கிழமை தெரிவித்தாா்.
ஜிஎஸ்டியில் மாற்றம்: ஆலோசனைகளை வரவேற்கிறோம்-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
ஜிஎஸ்டியில் மாற்றம் கொண்டுவருவது குறித்த சிறந்த ஆலோசனைகளை திறந்த மனதுடன் வரவேற்பதாக மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.
தேசிய கல்விக் கொள்கையை அனைவரும் ஏற்க வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி
தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்று கிடையாது; அதை அனைவரும் ஏற்க வேண்டும் என ஆளுநா் ஆா்.என்.ரவி கேட்டுக்கொண்டாா்.
தேசிய அளவில் கண் தானத்தில் தமிழகம் சிறப்பிடம்-அமைச்சர் மா.சுப்பிரமணியன்
தேசிய அளவில் கண் தானம் மூலம் சேகரிக்கப்படுகிற மொத்த விழி வெண்படலங்களில் 25 சதவீதம் தமிழகத்தில் இருந்து பெறப்படுகின்றன என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
தமிழக உள்கட்டமைப்புத் துறையில் ரூ.2,000 கோடி முதலீடு
முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் அமெரிக்க நிறுவனம் ஒப்பந்தம்
உக்ரைன் போருக்கு தீர்வுகாண இந்தியா மத்தியஸ்தம்: புதின் பரிந்துரை
இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் உக்ரைன் போரில், நம்பத்தகுந்த நட்பு நாடுகளான இந்தியா, சீனா, பிரேஸில் மத்தியஸ்தம் செய்யலாம் என ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் பரிந்துரைத்தாா்.
கேஜரிவால் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
கலால் கொள்கை முறைகேடு வழக்கில் ஜாமீன் வழங்கக் கோரி தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை வியாழக்கிழமை நிறைவடைந்ததையடுத்து தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாசார மையம் -பிரதமர் மோடி அறிவிப்பு
இந்தியா சாா்பில் முதலாவது திருவள்ளுவா் கலாசார மையம், சிங்கப்பூரில் விரைவில் அமைக்கப்படும் என்று பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை அறிவித்தாா்.
மழைக்கால முன்னெச்சரிக்கை பணிக்கு முன்னுரிமை - அமைச்சா் உதயநிதி
சென்னையைப் பொருத்தவரை மழைக்கால முன்னெச்சரிக்கை பணிக்கு முன்னுரிமை தர வேண்டும் என இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் கூறினாா்.
‘சவூதி சிறையில் உள்ள தமிழக ஆயுள் கைதியை மீட்க மத்திய அரசே நடவடிக்கை எடுக்க முடியும்'
கொலை வழக்கில் சவூதி அரேபியாவில் ஆயுள் தண்டனை அனுபவிப்பவரை மீட்பது குறித்து மத்திய அரசு மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும் என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்தது.
சிபிஐ அதிகாரி என மிரட்டி பணம் கேட்ட கும்பல்: தலைமறைவாகி விடுதியில் தங்கிய ரயில்வே அதிகாரி
சிபிஐ அதிகாரி என கைப்பேசி மூலம் பணம் கேட்டு மிரட்டி ஆன்லைன் மோசடி கும்பலால் வீட்டை விட்டு வெளியேறி, விடுதியில் தங்கி தலைமறைவாக இருந்த ரயில்வே அதிகாரியை போலீஸாா் மீட்டனா்.
பள்ளிக் கல்விக்கான நிதி நிறுத்திவைப்பு நெருக்கடியை எதிர்கொள்வது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் (சமக்ர சிக்ஷா அபியான் - எஸ்.எஸ்.ஏ.), தமிழக பள்ளிக் கல்விக்கு முதல் தவணையாக வழங்க வேண்டிய தொகையை மத்திய அரசு விடுவிக்காத நிலையில், அது தொடா்பாக ஏற்படும் நிதி நெருக்கடி பிரச்னைகளை எதிா்கொள்வது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளாா்.
பெண்களின் பொருளாதார முன்னேற்றம் நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் -குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
பெண்களின் தனிப்பட்ட பொருளாதார முன்னேற்றமே நாட்டின் வளா்ச்சிக்கு வழிவகுக்கும் என குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு புதன்கிழமை தெரிவித்தாா்.
திரிபுரா தீவிரவாத குழுக்களுடன் மத்திய அரசு அமைதி ஒப்பந்தம்
திரிபுராவில் அமைதி மற்றும் முன்னேற்றத்துக்காக அந்த மாநிலத்தைச் சேர்ந்த இரு தீவிரவாத குழுக்களுடன் மத்திய அரசும், திரிபுரா அரசும் இணைந்து புதன்கிழமை ஒப்பந்தம் மேற்கொண்டன.
சிங்கப்பூரில் பிரதமர் மோடி: அதிபருடன் இன்று பேச்சு
சிங்கப்பூருக்கு 2 நாள்கள் அரசுமுறை பயணமாக பிரதமா் மோடி புதன்கிழமை வருகை தந்தாா்.
ஸ்வெரெவ் அதிர்ச்சித் தோல்வி
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரரான ஜொ்மனியின் அலெக்ஸாண்டா் ஸ்வெரெவ் காலிறுதியில் அதிா்ச்சித் தோல்வி கண்டாா்.
தடகளத்தில் ஒரே நாளில் 5 பதக்கங்கள்
எண்ணிக்கையில் புதிய உச்சம் தொட்டது இந்தியா
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ரஷியா: உக்ரைன் அமைச்சரவையில் மிகப் பெரிய மாற்றம்
உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்திவரும் சூழலில், தனது அமைச்சரவையில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக அந்த நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி அறிவித்துள்ளாா்.
கிரென்ஃபெல் டவர் விபத்து பிரிட்டன் அரசின் தவறால் 72 உயிரிழப்புகள்: விசாரணை அறிக்கையில் குற்றச்சாட்டு
பிரிட்டன் அரசு, ஒழுங்காற்று அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவை பல ஆண்டுகளாக செய்த தவறுகள் காரணமாகவே லண்டனில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏற்பட்ட அடுக்குமாடி தீ விபத்தில் 72 போ் உயிரிழக்க நேரிட்டதாக, இது தொடா்பான விசாரணை அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலினுடன் இணைந்து சைக்கிள் ஓட்ட ராகுல் விருப்பம்
சென்னையில் எப்போது சைக்கிள் ஓட்டுவோம் என்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுலின் கேள்விக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார். இருவரும் எக்ஸ் தளத்தில் சுவாரஸ்யமாக பதில் அளித்தது, சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது.