CATEGORIES

தலைசிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதே முதல்வரின் நோக்கம் - ஜெகத்ரட்சகன் எம்பி பேச்சு
Dinakaran Chennai

தலைசிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதே முதல்வரின் நோக்கம் - ஜெகத்ரட்சகன் எம்பி பேச்சு

திமுக பவள விழா முன்னிட்டு, சென்னை கிழக்கு மாவட்டம், கொளத்தூர் கிழக்கு பகுதி திமுக சார்பில், புகழரங்க கூட்டம் கொளத்தூரில் நேற்று முன்தினம் மாலை நடந்தது. பகுதி செயலாளர் ஐசிஎப் முரளி தலைமை வகித்தார்.

time-read
1 min  |
October 09, 2024
சென்னையில் செயல்படும் மகளிர் விடுதிகளை பதிவு செய்ய தவறினால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை
Dinakaran Chennai

சென்னையில் செயல்படும் மகளிர் விடுதிகளை பதிவு செய்ய தவறினால் கடும் நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை

சென்னையில் செயல்படும் தனியார் மகளிர் விடுதிகள் மற்றும் இல்லங்களை பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றும் சென்னை கலெக்டர் எச்சரித்துள்ளார்.

time-read
1 min  |
October 09, 2024
செல்போனை மறைத்து வைத்ததால் ஆத்திரம் இரும்பு ராடால் தலையில் அடித்து வடமாநில தொழிலாளி கொலை
Dinakaran Chennai

செல்போனை மறைத்து வைத்ததால் ஆத்திரம் இரும்பு ராடால் தலையில் அடித்து வடமாநில தொழிலாளி கொலை

சக தொழிலாளி கைது மாங்காடு அருகே பயங்கரம்

time-read
1 min  |
October 09, 2024
Dinakaran Chennai

பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க தாம்பரம் - திருச்சி இடையே இன்டர்சிட்டி சிறப்பு ரயில்

டிசம்பர் 31ம் தேதி வரை வாரத்தில் 5 நாட்கள் இயக்கம்

time-read
1 min  |
October 09, 2024
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 167 இடங்களில் வெள்ளத்தடுப்பு பணிகள் நிறைவு
Dinakaran Chennai

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 167 இடங்களில் வெள்ளத்தடுப்பு பணிகள் நிறைவு

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னிட்டு சென்னை உள்பட 5 மாவட்டங்களில் 167 இடங்களில் வெள்ளத்தடுப்பு பணிகள் நீர்வளத்துறை மூலம் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். பருவமழை தொடக்கத்திற்கு முன்னரே இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மழை கொட்டித் தீர்த்தது. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்து பலி எண்ணிக்கையும் உயர்ந்தது. தென்னிந்தியாவிலும் பல்வேறு இடங்களில் மழை கொட்டித்தீர்த்தது. மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், தமிழகத்தில் குறைவான மழையே பெய்தது. ஆனால் வடகிழக்கு பருவமழை தொடர்ந்ததும் அதிக அளவு மழை பெய்யும் என்று கணிக்கப்படுகிறது. ஆகையால் பாதிப்பும் அதிகமாக இருக்கும் என்றே சொல்லப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. ஆனால் கடந்த சில ஆண்டிலிருந்து இந்த பருவமழையில் தீவிரமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. குறிப்பாக 3 மாதங்கள் வரை நின்று பெய்ய வேண்டிய மழை ஒரேநாளில் மொத்தமாக கொட்டிவிடுகிறது. இதனால் எதிர்ப்பாராத வெள்ளம் மற்றும் பாதிப்புகள், பொருள் இழப்பையும் ஏற்படுத்திவிடுகிறது. கடந்தாண்டு சென்னையில் பாதிப்புகள் ஏற்பட்டதைபோல தென் மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களை பருவமழையால் அதிகளவு பாதிப்புகள் ஏற்பட்டது. ஓராண்டுக்கு பெய்ய வேண்டிய மழை ஒரேநாளில் பெய்ததால் அந்த நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கின. தூத்துக்குடியும், நெல்லையும் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதுபோன்ற எந்த பாதிப்பும் இந்த முறை ஏற்படக்கூடாது என்பதற்காக முன்னேற்பாடுகள் நடவடிக்கைளில் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை மற்றும் அதைச்சுற்றிய பகுதிகளில் ஒவ்வொரு வருடமும் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் சீராக மேற்கொள்ளப்பட்டதன் விளைவாக கனமழை கொட்டிய நேரங்களிலும் வெள்ள நீர் விரைவாக வடிந்தது. பொதுவாக வடகிழக்கு பருவமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றன. எனவே பருவமழைக்கு முன்னதாக இந்த மாவட்டங்களில் உள்ள நீர்வழித்தடங்களை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு அதிகபட்சமாக₹20 கோடி வரை ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. ஆனால் இந்த நிதியில் போதியளவில் தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. அதனால் குடியிருப்புகள், சாலைகள் உள்ளிட்ட இடங்களில் தேங்கும் வெள்ளம் வடிவதற்கு காலதாமதம் ஏற்படுகிறது. எனவே கூடுதல் நிதியை ஒதுக்க ேவண்டும் என நீர்வளத்துறை வாயிலாக தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டு வந்தது. அதை ஏற்று இம்மாதம் 15ம் தேதிக்குள் மேல் தொடங்க உள்ள வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிக்கு₹35 கோடி அரசு கடந்த பிப்ரவரி மாதம் ஒதுக்கீடு செய்தது. வடகிழக்கு பருவமழைக்கு முன்னதாக நகரப்பகுதிகள் மற்றும் அதையொட்டி உள்ள புறநகர்ப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் இருந்து, ஆகாயத்தாமரை போன்ற நீர்வாழ் தாவரங்களை அகற்றுவதற்கு ஏதுவாக வருடாந்திர நடவடிக்கை பணிகளை நீர்வளத்துறை தொடங்கி முடிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் இந்தாண்டு₹35 கோடியில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பருவமழை முடிவும் வரை மழை வெள்ள நீர் தொடர்ந்து தடையின்றி செல்வதை உறுதி செய்யும் என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது : ஏறத்தாழ 250 கிலோ மீட்டர் தூரம் வரையிலான பெரிய நீர்வழித்தடங்கள்மற்றும் அதன் உபரிப் பாதைகள், இதன் மூலம் சீரமைக்கப்படும். மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், ஏற்கெனவே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் ஓட்டோரி நீரோடை, விருகம்பாக்கம் – அரும்பாக்கம் கால்வாய் மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயை சுத்தம் செய்வதற்கான தனித்திட்டமாக₹3.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. பாலாறு, கிருஷ்ணா குடிநீர் திட்டம், ஆரணியாறு, கொள்ளிடம், வெள்ளாறு வடிநிலங்களில் 167 இடங்களில் தூர்வாருதல், கரைகளை பலப்படுத்துதல் உள்ளிட்ட வெள்ள தடுப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் பணிகளை நிறைவடைந்தாலும் டிசம்பர் 31ம் தேதி வரை கண்காணிக்கப்பட்டு வரும். இவ்வாறு கூறினர்.

time-read
1 min  |
October 09, 2024
செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு
Dinakaran Chennai

செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புக்காக இயற்பியலுக்கான நோபல் பரிசு இருவருக்கு அறிவிப்பு

2024ம் ஆண்டுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த அறிவியலாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
October 09, 2024
தொடரை வெல்ல இந்தியா முனைப்பு
Dinakaran Chennai

தொடரை வெல்ல இந்தியா முனைப்பு

இந்தியா – வங்கதேசம் மோதும் 2வது டி20 போட்டி, டெல்லி அருண் ஜெட்லி அரங்கில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.

time-read
1 min  |
October 09, 2024
பெய்ரூட் மீது தாக்குதல் ஹிஸ்புல்லா முக்கிய தளபதியை கொன்றது இஸ்ரேல்
Dinakaran Chennai

பெய்ரூட் மீது தாக்குதல் ஹிஸ்புல்லா முக்கிய தளபதியை கொன்றது இஸ்ரேல்

பெய்ரூட் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டார்.

time-read
1 min  |
October 09, 2024
Dinakaran Chennai

சொந்த பயன்பாட்டுக்காக நிதியை பயன்படுத்தியதாக நடவடிக்கை கல்வி அறக்கட்டளை பதிவு ரத்து எதிர்த்து வழக்கு

சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை

time-read
1 min  |
October 09, 2024
Dinakaran Chennai

பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு 234 தொகுதிகளுக்கும் தொகுதி பார்வையாளர்கள் நியமனம்

திமுக தலைமை கழகம் அறிவிப்பு

time-read
1 min  |
October 09, 2024
கேரளாவில் இருசக்கர வாகனங்களில் 4 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம்
Dinakaran Chennai

கேரளாவில் இருசக்கர வாகனங்களில் 4 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம்

கேரளாவில் இருசக்கர வாகனங்களில் 4 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
October 09, 2024
Dinakaran Chennai

கேரள நிதியமைச்சருக்கு முஸ்லிம் மாணவி கை கொடுத்ததால் சர்ச்சை எந்த மத நம்பிக்கையும் அரசியலமைப்பு சட்டத்தை விட உயர்ந்தது அல்ல - கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு

கடந்த சில மாதங்களுக்கு முன் கோழிக்கோட்டில் ஒரு தனியார் சட்டக் கல்லூரியில் நடந்த விழாவில் கேரள நிதியமைச்சர் பாலகோபால் கலந்து கொண்டார்.

time-read
1 min  |
October 09, 2024
தொலைந்து போன காவிரியின் துணை நதிகள்
Dinakaran Chennai

தொலைந்து போன காவிரியின் துணை நதிகள்

‘பொன்னி நதி’யான காவிரிக்கு சங்க இலக்கிய பாடல்கள் ஏராளம் உண்டு. ‘ஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி, வாய்க்காவா மழவர் ஓதை வளவன் தன் வளனே வாழி காவேரி’, ‘தான் பொய்யா மலைத்தனைய கடற்காவிரி’ என்பன போன்ற பாடல்கள் கல்வெட்டுகளில் அழியாத இடம் பெற்றுள்ளது.

time-read
2 mins  |
October 09, 2024
ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை தொடங்கி வைத்ததால் கட்சி பொறுப்புகளில் இருந்து தளவாய்சுந்தரம் எம்எல்ஏ நீக்கம்
Dinakaran Chennai

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை தொடங்கி வைத்ததால் கட்சி பொறுப்புகளில் இருந்து தளவாய்சுந்தரம் எம்எல்ஏ நீக்கம்

குமரியில் நடந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை தொடங்கி வைத்த தளவாய்சுந்தரத்தை மாவட்ட செயலாளர், அமைப்பு செயலாளர் பொறுப்புகளில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம், கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவர். தற்போது கன்னியாகுமரி எம்எல்ஏவாக உள்ள தளவாய்சுந்தரம், குமரி கிழக்கு மாவட்ட செயலாளராகவும், அதிமுக மாநில அமைப்பு செயலாளராகவும் இருந்தார்.

time-read
1 min  |
October 09, 2024
₹1,00,000 கோடி வர்த்தக இலக்கை நோக்கி...
Dinakaran Chennai

₹1,00,000 கோடி வர்த்தக இலக்கை நோக்கி...

1980க்கு பிறகு தொடர்ச்சியான வளர்ச்சியை கண்டு வந்த திருப்பூரின் பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி 2014ம் ஆண்டு ஒன்றியத்தில் பாஜ அரசு பொறுப்பேற்ற பின்பு அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, கொரோனா ஊரடங்கு, பருத்தி தட்டுப்பாடு, நிலையில்லாத நூல் விலை உயர்வு, கன்டெய்னர் தட்டுப்பாடு உள்ளிட்டவற்றின் காரணமாக நிலை குலைந்தது.

time-read
1 min  |
October 09, 2024
அப்டேட் ஆகிறது 'சிசிடிஎன்எஸ்’
Dinakaran Chennai

அப்டேட் ஆகிறது 'சிசிடிஎன்எஸ்’

குற்றவாளிகளை பிடிக்க, தகவல் சேகரிக்க கூடுதல் தொழில்நுட்பம்

time-read
1 min  |
October 09, 2024
மழைக் காலத்தின்போது அதிகாரிகள் செல்போனை சுவிட்ச்ஆப் செய்தால் கடுமையான நடவடிக்கை - அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை
Dinakaran Chennai

மழைக் காலத்தின்போது அதிகாரிகள் செல்போனை சுவிட்ச்ஆப் செய்தால் கடுமையான நடவடிக்கை - அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை

மழைக்காலங்களில் அதிகாரிகள் செல்போனை “சுவிட்ச்ஆப்” செய்து வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

time-read
1 min  |
October 09, 2024
தாம்பரம் விமானப்படை தளத்தில் சாகச நிகழ்ச்சிகள் நிறைவு இந்திய விமானப்படையின் சேவை உலக நாடுகளுக்கும் தேவைப்படுகிறது
Dinakaran Chennai

தாம்பரம் விமானப்படை தளத்தில் சாகச நிகழ்ச்சிகள் நிறைவு இந்திய விமானப்படையின் சேவை உலக நாடுகளுக்கும் தேவைப்படுகிறது

விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் அமர் பிரீத் சிங் பேச்சு

time-read
1 min  |
October 09, 2024
தொழிலாளர்கள் பக்கம் முதல்வர் இருக்கிறார் வாக்குறுதியை ஏற்று உடனடியாக வேலைக்கு திரும்ப வேண்டும்
Dinakaran Chennai

தொழிலாளர்கள் பக்கம் முதல்வர் இருக்கிறார் வாக்குறுதியை ஏற்று உடனடியாக வேலைக்கு திரும்ப வேண்டும்

சாம்சங் ஆலை தொழிலாளர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்

time-read
1 min  |
October 09, 2024
Dinakaran Chennai

பள்ளிக்கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு - ஐகோர்ட் உத்தரவு

தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது 50% இடங்களை நேரடியாகவும் 48%இடங்களை இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கியும், 2% இடங்களை தகுதிபெற்ற அமைச்சுப் பணியாளர்கள் மூலமும் நிரப்ப வேண்டும் என்று கடந்த 2007ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

time-read
1 min  |
October 09, 2024
தமிழகம் முழுவதும் வரும் 15ம் தேதி இடங்களில் 1000 சிறப்பு மருத்துவ முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
Dinakaran Chennai

தமிழகம் முழுவதும் வரும் 15ம் தேதி இடங்களில் 1000 சிறப்பு மருத்துவ முகாம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

தமிழகம் முழுவதும் வரும் 15ம் தேதி 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
October 09, 2024
நீர்நிலைகளாக மாறும் கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானம் புதிய குளம் அமைக்கும் பணியை தொடங்கிய சென்னை மாநகராட்சி
Dinakaran Chennai

நீர்நிலைகளாக மாறும் கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானம் புதிய குளம் அமைக்கும் பணியை தொடங்கிய சென்னை மாநகராட்சி

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக இருந்தது கிண்டி ரேஸ் கோர்ஸ். 160 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் குதிரை பந்தயம் நடத்த ஏதுவாக 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் கடந்த 1945ம் ஆண்டு வழங்கப்பட்டது.

time-read
2 mins  |
October 09, 2024
₹71.37 கோடியில் புதுப்பிக்கப்பட்ட மெரினா நீச்சல் குளம் திறப்பு
Dinakaran Chennai

₹71.37 கோடியில் புதுப்பிக்கப்பட்ட மெரினா நீச்சல் குளம் திறப்பு

மெரினா கடற்கரையில் ரூ.1.37 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட மெரினா நீச்சல் குளத்தினை, தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு நேற்று திறந்து வைத்தார்.

time-read
1 min  |
October 09, 2024
தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் வசூலிக்கும் கட்டணத்தை சரிபார்க்க நிர்ணயக்குழுவுக்கு தடையில்லை
Dinakaran Chennai

தனியார் சிபிஎஸ்இ பள்ளிகளில் வசூலிக்கும் கட்டணத்தை சரிபார்க்க நிர்ணயக்குழுவுக்கு தடையில்லை

சென்னையில் செயல்பட்டு வரும் ஆசான் நினைவு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவி, கடந்த 2018-19ம் ஆண்டு முதல் 2020-21ம் ஆண்டு வரை 76 ஆயிரத்து 275 ரூபாய் கட்டண பாக்கி வைத்துள்ளார்.

time-read
1 min  |
October 09, 2024
தலைமைச் செயலகத்திற்கு வரக்கூடிய தபால்கள் மின்னணு மயமாக்கல் திட்டம்
Dinakaran Chennai

தலைமைச் செயலகத்திற்கு வரக்கூடிய தபால்கள் மின்னணு மயமாக்கல் திட்டம்

தமிழ்நாடு தலைமைச் செயலகத்திற்கு வரக்கூடிய தபால்கள் அனைத்தும் மின்னணு மயமாக்கல் செய்யப்படும் என்றும், பெரும்பாலும் காகிதப் பயன்பாடு குறைக்கப்படும் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
October 09, 2024
Dinakaran Chennai

சட்டீஸ்கரில் நடந்த பளுதூக்கும் போட்டியில் தங்கம் உட்பட 14 பதக்கங்கள் குவிப்பு

வீரர்களுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் பாராட்டு

time-read
1 min  |
October 09, 2024
Dinakaran Chennai

ஒன்றிய அரசை கண்டித்து ஆசிரியர்கள் இன்று கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை ஒன்றிய அரசு வழங்க மறுப்பதை கண்டித்து, ஆசிரியர்கள், அமைச்சுப் பணியாளர்கள் சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.

time-read
1 min  |
October 09, 2024
Dinakaran Chennai

தொலைதொடர்பு துறையில் வேலைவாய்ப்பு பிஎஸ்என்எல் - உற்பத்தியாளர் அமைப்புக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

தொலை தொடர்பு துறையில் வேலை வாய்ப்பை அதிகரிக்கவும், பொது மக்களிடம் அதிநவீன தகவல் தொடர்பை கொண்டு சேர்க்கும் வகையிலும் பிஎஸ்என்எல் மற்றும் அகில இந்திய உற்பத்தியாளர்கள் அமைப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

time-read
1 min  |
October 09, 2024
வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த பொறுப்பு அமைச்சர்கள் நெல்லைக்கு கே.என்.நேரு, கோவைக்கு செந்தில்பாலாஜி நியமனம்
Dinakaran Chennai

வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்த பொறுப்பு அமைச்சர்கள் நெல்லைக்கு கே.என்.நேரு, கோவைக்கு செந்தில்பாலாஜி நியமனம்

முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

time-read
1 min  |
October 09, 2024
70வது தேசிய திரைப்பட விருதுகள் ‘திருச்சிற்றம்பலம்’ படத்துக்கு விருது வழங்கினார் ஜனாதிபதி
Dinakaran Chennai

70வது தேசிய திரைப்பட விருதுகள் ‘திருச்சிற்றம்பலம்’ படத்துக்கு விருது வழங்கினார் ஜனாதிபதி

இந்திய திரைப்படங்களையும், கலைஞர்களையும் உற்சாகப்படுத்தி கவுரவிக்கும் விதமாக, ஆண்டுதோறும் ஒன்றிய அரசால் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது.

time-read
1 min  |
October 09, 2024