CATEGORIES
Kategoriler
விஜய் கட்சியால் திமுக கூட்டணிக்கு பாதிப்பில்லை
நடிகர் விஜயின் தலைவர் கட்சியால் திமுக கூட்டணிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் பயணிகள் விரைவு ரயில் சோதனை ஓட்டம்
பாம்பன் புதிய ரயில்வே பாலத்தில் 3 பெட்டிகளுடன் பயணிகள் விரைவு ரயிலை 90 கி.மீ. வேகத்தில் இயக்கி வியாழக்கிழமை சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் மிரட்டல் பேச்சு: விசிகவினர் மீது வழக்கு
வன்னியர் சங்கம், பாமக நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக விசிகவினர் 7 பேர் மீது புவனகிரி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு மான நஷ்டஈடாக ரூ.1.10 கோடி வழங்க உத்தரவு
கொடநாடு வழக்கில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொடர்புபடுத்தி பேச, ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநரான கனகராஜின் சகோதரர் தனபாலுக்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்றம், ரூ.1.10 கோடியை மான நஷ்டஈடாக வழங்கவும் உத்தரவிட்டது.
பேராசிரியர் செல்வராசனுக்கு கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது
சென்னை, நவ. 7: சென்னை பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பேராசிரியர் மா.செல்வராசனுக்கு, கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கப்பட உள்ளது.
கூட்டுறவு சங்கங்கள் மூலம் தடையின்றி பயிர்க் கடன் - உரங்கள்
கூட்டுறவு சங்கங்கள் மூலம் தங்கு தடையின்றி பயிர்க் கடன்கள், உரங்கள் வழங்கப்பட்டு வருவதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.
திமுகவை அழிக்க நினைப்பவர்களுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பர்
உதயநிதி ஸ்டாலின்
சட்டக் கல்லூரிகளில் காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் உள்ள அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள இணை பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
3 ஆண்டுகளில் நிரப்பப்பட்ட 18,460 மருத்துவப் பணியிடங்கள்
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 18,460 மருத்துவப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
3, 5, 8 வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு இல்லை சிஐஎஸ்சிஇ அதிகாரி விளக்கம்
சிஐஎஸ்சிஇ அதிகாரி விளக்கம்
செகந்திராபாத்துக்கு இன்று சிறப்பு ரயில்
சாத் மற்றும் கார்த்திகை ஏகாதசி பண்டிகையை முன்னிட்டு விழுப்புரத்தில் இருந்து செகந்திராபாத்துக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
உயர் கல்வி பயில நிதித் தடைகள் நீக்கம்; பிரதமருக்கு ஆளுநர் பாராட்டு
மாணவர்கள் உயர் கல்வி பயில நிலவும் நிதித் தடைகளை நீக்க வித்யாலஷ்மி திட்டத்தைக் கொண்டு வந்த பிரதமருக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பாராட்டு தெரிவித்துள்ளார்.
போட்டித் தேர்வுக்கான பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்
போட்டித் தேர்வுக்கான பயிற்சி பெற தகுதியுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்தார்.
அஸ்தினாபுரத்தில் மின்வாரியத்துக்கு சொந்தமான அரை ஏக்கர் நிலம் மீட்பு
குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தில் ஆக்கிரமிப்பில் இருந்த தமிழ்நாடு மின்வாரியத்துக்குச் சொந்தமான ரூ. 20 கோடி மதிப்புள்ள 52 சென்ட் நிலம் வருவாய்துறை மற்றும் காவல்துறை உதவியுடன் வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
சென்னையில் தொடர் மழை: சாலையில் விழுந்த மரங்கள் அகற்றம்
சென்னையில் ளிரவு முதல் பெய்த தொடர் மழை காரணமாக சாலையில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டன.
நெற்குன்றம் வீட்டுவசதித் திட்டம்: ஐஏஎஸ் உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கான முன்பணத் தொகை உயர்வு
சென்னை, நவ. 7: சென்னை நெற்குன்றம் வீட்டுவசதித் திட்டத்தின் கீழ் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப் பணி அதிகாரிகள், மாநில அரசுப் பணி அதிகாரிகளுக்கான முன்பணத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
குப்பைகளை ‘செல்வமாக்கும்’ திட்டம்: சிஎஸ்ஐஆர் இயக்குநர் ஜெனரல் விளக்கம்
பல்வேறு வகையான குப்பைகளை மறுசுழற்சி செய்து அதை செல்வமாக்கும் திட்டத்தை சிஎஸ்ஐஆர் ஆராய்ச்சி நிறுவனம் செயல்படுத்தி வருகிறது என சிஎஸ்ஐஆர் இயக்குநர் ஜெனரல் கலைச்செல்வி தெரிவித்தார்.
திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழா வியாழக்கிழமை மாலை லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணதிர வெகு விமரிசையாக நடைபெற்றது.
சென்னை முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் வியாழக்கிழமை சூரசம்ஹாரம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
அரசுப் பணி தேர்வு நடைமுறை தொடங்கிய பிறகு விதிகளை மாற்ற முடியாது
'அரசுப் பணிக்கான பணியாளர் தேர்வு நடைமுறைகள் தொடங்கிய பிறகு, அந்தத் தேர்வு விதி முறைகளில் மாற்றம் மேற்கொள்ள முடியாது' என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைப்பு
மாநில அரசுகளுக்கு அமித் ஷா வேண்டுகோள்
தமிழகத்தில் நவ.13 வரை கனமழை நீடிக்கும்
தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (நவ.8) முதல் நவ.13 வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
11 மாவட்டங்களில் இன்று மழை வாய்ப்பு
தமிழகத்தில் வியாழக்கிழமை (நவ.7) 11 மாவட்டங் களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் முகக் கவசம் அணிய சுகாதாரத் துறை அறிவுறுத்தல்
தமிழகத்தில் டெங்கு காய்ச்சலுடன் பருவகாலத்தில் பரவும் இன்‘ஃ’ப்ளூயன்ஸா தொற்றும் தீவிரமடைந்து வருவதால் பொது மக்கள் முகக்கவசம் அணிந்து வெளியே செல்லுமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
கமலா ஹாரிஸ் தோல்வி: சோகத்தில் துளசேந்திரபுரம்
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றிவாய்ப்பை இழந்தது, அவரது பூர்விக கிராமமான மன்னார்குடியை அடுத்த துளசேந்திரபுரம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இன்று சூரசம்ஹாரம்: திருச்செந்தூரில் பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர்.
மருத்துவக் காப்பீட்டின் கீழ் ஆயுஷ் சிகிச்சை பெற நடவடிக்கை
பாரம்பரிய மருத்துவ சிகிச்சைகளை மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் தடையின்றி பெறுவதற்கான நடவடிக்கையை மத்திய ஆயுஷ் துறை முன்னெடுத்துள்ளது.
மீம்ஸ்களில் முன்னிலை பெற்ற எலான் மஸ்க்
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பின் வெற்றி தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியான மீம்ஸ்களில் அமெரிக்க தொழிலதிபரும் 'எக்ஸ்' வலைதள நிறுவனருமான எலான் மஸ்க் முன்னிலை பெற்றது தெரியவந்துள்ளது.
டிரம்ப்புக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து
அமெரிக்காவின் 47-ஆவது அதிபராகத் தேர்வாகியுள்ள டொனால்ட் டிரம்ப்புக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
வெற்றி பெற்ற 6 இந்திய வம்சாவளியினர்
அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு நடத்தப்பட்ட தேர்தலில் இந்திய வம்சாவளியினர் 6 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.